idaikkadu News (Oct. 19, 2021)
Informed by : க. சஞ்சீவன்
Contributed by : Sengo Vel
Card image cap

மேலதிக விபரங்களுக்கு கீழேயுள்ள தொடர்பை அழுத்தவும்.

More
idaikkadu Obituary (Oct. 1, 2021)
Informed by : Webadmin
Contributed by : Sengo Vel
Card image cap

மரண அறிவித்தல்
திரு கணபதிப்பிள்ளை ஆறுமுகசாமி
ஓய்வு நிலை தொழில்நுட்ப வியலாளர்.மன்னார் மாந்தை உப்பளம்
இடைக்காடு அச்சுவேலி
கணபதிப்பிள்ளை ஆறுமுகசாமி நேற்று 30.09.2021 இறைபதம் அடைந்தார்.
அன்னார் தங்கமணியின் ஆருயிர்க் கணவனும் கௌசிதரன் கிசோதரன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும் ஆவார்.
எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி

More
idaikkadu News (Sept. 25, 2021)
Informed by : Bavan
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

The talented young girls from our village who recently graduated from their universities cutting the cake with pride.
Congratulations! Your hard work, sacrifices and dedication have been rewarded!

Arani Manoharan BSc Accounting and Finance (Parents: Manoharan - Sumathy)
Aruvi Jeyakanthan BSc Mathematics with Actuarial Science (Parents: Jeyakanthan - Akila)
Manasha Sivaparan BSc Economics and Business Finance (Parents: Sivaparan - Shanthy)
Bhawana Vettivel BSc (Hons) Orthoptics (Parents: Vettivel – Jeyavathany)
Thevani Sivakumar BSc Mathematics with Statistics (Parents: Sivakumar – Nagalogini)
Thiviya Balakumar MPharm Master of Pharmacy (Parents Balakumar – Sivamalar)

More
idaikkadu News (Sept. 14, 2021)
Informed by : க. வீரசிவாகரன். (வீரா)
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் முன்பள்ளி

செயற்குழு கூட்ட தீர்மானங்கள்
18-09-2021 சனிக்கிழமை இடம்பெற்ற இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் முன்பள்ளி செயற்குழு கூட்டத்தில் பின்வரும் முடிபுகள் எடுக்கப்பட்டன.
சிறப்பாக இயங்கி வந்த இடைக்காடு கலை இலக்கிய மன்றம் covid -19 காரணமாக பிள்ளைகளின் வரவில் ஏற்பட்ட குறைவும் மற்றும் பிற காரணிகளாலும் நிதிப் பற்றாக் குறைவு ஏற்பட்டதால் அதனைத் தொடர்ந்து நடாத்த சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து அதனை இயக்குவதற்கான நிதிக் கோரிக்கை ஒன்றை கலை இலக்கிய மன்ற செயற்குழு இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் முன்பள்ளியிடம் முன் வைத்துள்ளது. அதனை ஆராய்ந்த செயற்குழு புலம்பெயர்ந்து வாழும் நிதி ஆளுமைக் குழு உறுப்பினர்களிடம் கலந்துரையாடி, முன்பள்ளிக்கு கிடைக்கும் வட்டிப் பணத்தில் ஆசிரிய வேதனம், மற்றும் பிற செலவுகள் தவிர்த்து மேலதிகமாக உள்ள பணத்தில் ரூபா பத்தாயிரம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன் பள்ளியில் அமைக்கப்பட்ட தண்ணீர் தாங்கிக்கு சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப மூடி போடுதல்.
முன்பள்ளிக்கான பற்றுச் சிட்டையில் முன்பள்ளியின் அடையாளமாக முத்திரையை ( LOGO ) பதிப்பது.அதன் பின் சரியான பற்றுச் சிட்டையை நிதி வழங்குனர்களுக்கு வழங்குதல்.
நன்றி
செயற்குழு- இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் முன்பள்ளி
14-09-2021

More
idaikkadu Obituary (Aug. 30, 2021)
Informed by : Webadmin
Contributed by : Sengo Vel
Card image cap

இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளியின் நிதி ஆளுகைக் குழுவின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த திரு கந்தையா வல்லிபுரம் அவர்கள் இன்று 29.08.2021 இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை முன்பள்ளி நிர்வாகம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்

More
idaikkadu Obituary (Aug. 12, 2021)
Informed by : Webadmin
Contributed by : Sengo Vel
Card image cap

இடைக்காட்டை பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட இரவீந்திரன் இராசலிங்கம் எம்மை விட்டு பிரிந்துள்ளார்.

மேலதிகவிபரங்கள் பின்னர் வெளியிடப்படும்

More
idaikkadu News (July 26, 2021)
Informed by : க.சஞ்சீவன்.( இடைக்காடு )
Contributed by : Elango veluppillai
Card image cap

விளையாட்டு உபகரணுத்துக்கான மதிப்பீடு.இவ் நிதியினை அரசாங்கம் வழங்குகின்றது

More
idaikkadu Obituary (July 15, 2021)
Informed by : Rajini Arunagiri
Contributed by : Elango veluppillai
Card image cap

மால்வளவு இடைக்காட்டை பிறப்பிடமாகவும் சல்லிகலட்டியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இதயகுமார் 15.07.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் அமரர்கள் சின்னத்தம்பி, வள்ளியம்மையின் இளைய மகனும், அமரர்கள் கிருஷ்ணர், வள்ளிப்பிள்ளையின் அருமை மருமகனும், சிவ ஈஸ்வரியின் ஆருயிர்க் கணவரும் ஆவர்.

அன்னார் அமரர்கள் சத்திவேல், சத்தியபாமா, தருமராசா, சரஸ்வதி, சரோஜா, மற்றும் காந்திமதியின் அன்புச் சகோதரனும், சிவராசா, ஜீவபாஸ்கரி, அமரர் கந்தசாமி, சபாரத்தினம், கனகரத்தினம், வல்லிபுரம், கந்தசாமி, அமரர்களான சுப்பிரமணியம், வேல்முருகு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவர்.

மேலும் அன்னார் கிரிஜா, பவானி, ரஜனி, தனுஜா, தாரணி, கிருஷ்ணபவன், கோகிலா, கல்பனா, கருணா, தெய்வமோகனா, நிவேதா, அஸ்வினி, அரவிந், ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமாவும், வஜிதா, சிவரூபன், அமரர் சிவானந்தம் ஆகியோரின் பாசமிகு பாசமிகு சித்தப்பாவும் ஆவர்.

அன்னா ஈ மைக்கிரியை 15.07.2021 அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல் குடும்பத்தினர்.

மனைவி சிவ ஈஸ்வரி:
0094 766513816

More
idaikkadu News (July 4, 2021)
Informed by : admin
Contributed by : Sengo Vel
Card image cap

புவனெஸ்வரி அம்மன் பாலர் பாடசாலை பற்றிய குறும் படத்தை பார்க்க கீழேயுள்ள தொடர்பை அழுத்தவும்.

More
idaikkadu News (July 1, 2021)
Informed by : Narayanapillai Swaminathan
Contributed by : Elango veluppillai
Card image cap

உங்களுக்குத் தெரியுமா?
இடைக்காடடடு கிராமத்தின் விவசாய இயந்திரமயமாக்கலின் முன்னோட்டிகள்.
1970ம் ஆண்டு சிறிமாவோ அம்மையாரின் திறந்த சந்தை வாய்ப்பினால் யாழ் விவசாயிகளின் பணம் புழக்கம் அதிகரித்தது.
இதனால் விவசாய இயந்திரங்களின் அறிமுகம் அதிகரித்தது.
மண்ணை உள் கை உழவு வண்டிகள் வாங்கப்பட்டன.Hand tractors or Two wheel tractors.
1. முதலாவது லார்ட் மாஸ்டரை ஓய்வு நிலை தபாலதிபர் திரு சுப்பர் சிதம்பரம் பிள்ளை அவர்கள் அறிமுகம் செய்தார்.
அதே வகையான ஒரு லார்ட் மாஸ்டரை அவரின் மைத்துனர் திருக.கணபதிப்பிள்ளை(சிவலை) அவர்கள் வாங்கினார்.
2.அடுத்ததாக ஒரு மிற்சுபிசி இயந்திரத்தை திரு வே. கணபதிப்பிள்ளை (கொழுந்துக்காரன்) அவர்கள் வாங்கினார்.
3. மூன்றாவதாக எனது தம்பி நா.இ. ஈஸ்வரன் அவர்கள் ஒரு இசக்கி உழவு வண்டியை வாங்கினார். நான் களுத்துறையில் பணியாற்றிய 1972ம் ஆண்டு இருவரும் கொழும்பு சென்று இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தில் வாங்கி சுமையுந்து மூலம் வீட்டிற்கு க் கொண்டு வந்தோம்.
4. நாலாவதாக பலர் குபோட்டா உழவு வண்டியை வாங்கினனர்.
சரி இவற்றிற்கிடையே உள்ள வேறுபாடு யாது?.
லாண்ட் மாஸ்டர் , மிற்சுபி இரண்டும் மண்ணெயில் இயங்கும் மண் கிளறி வகை (Tillers)
வகையைச் சார்ந்தது. அவற்றின் சில்லுகளைக் கழற்றி விட்டு மண் கிளறியை Tillers
பொருத்த வேண்டும்.
மற்றைய இரண்டும் இசக்கி குபோட்டா வண்டிகள் டீசல் எண்ணெயில் இயங்குபவை.
சில்லுகளைக் இவற்றால் அதன் பின் மண் கிளறியை அல்லது கலப்பையை Tillers or Plough தொகுதியை பொருத்தி உழலாம்.
இவற்றுடன் சுமை ஏற்றும் பெட்டியைப் பொருத்தலாம்.
இசக்கி நீரினால் குளிரூட்டும் Water cooled எந்திரத்தை க் கொண்டது. இயந்திரத்தின் மேற்பகுதியில் திறந்த நிலையில் உள்ள கிண்ணம் Hopper உள்ளது.
குபோட்டா வளிக் குளிரூட்டி Air cooled உடையது.
இவை எல்லாவற்றிலும் குபோட்டா பல அனுகூலங்களை க் கொண்டுள்ளதால் இன்றும் பல விவசாயிகளின் உள்ளம்கொள்ளை கொண்டது.
கொழுந்துக்காரன் வே.கணபதிப்பிள்ளை எனது மாமா. வர்த்தக நோக்கில் பாரிய அளவில் வெற்றிலைக் கொடியை பயிரிட்டமையால் கொழுந்துக்காரன் என அன்பாக அழைக்கப்பட்டார். கலகலப்பானவர். சமூக சேவகர்.
ஓமம் வளர்க்காத குருக்கள் இல்லாத எனது திருமணத்தை நடாத்தி வைத்தார்.
எம் முன்னோர்களைப் போற்றுவோம்.

More
idaikkadu News (June 28, 2021)
Informed by : செயலாளர்
Contributed by : Elango veluppillai
Card image cap

சமூகத்தொற்று நோய் காரணமாக கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டிருக்கின்ற பொழுதிலும் முன்பள்ளிச் சூழல் இடையிடையே மூன்று ஆசிரியர்களும் இணைந்து துப்பரவுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த காலங்களில் தவணை விடுமுறை முடிந்து பாடசாலை ஆரம்பிக்கும் போது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணனந்து இவ் துப்பரவு பணிகளை செய்து வருவது வழமை..
இடர்காலத்திலும் முன்பள்ளி சூழலை துப்பரவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்படும் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதுடன்..முன்பள்ளியில் சில மாற்றங்களை கொண்டுவருவதற்காகவும் மற்றும் இவ் இடர் நிலமையிலும் பொருளாதாரரீதியில் மிகவும் நலிவுற்ற அவ் மூன்று ஆசிரியர்களுக்குமான கொடுப்பனவுகளை தடையின்றி மேற்கொள்வதற்காகவும் எம்மோடு இணைந்த புலம்பேர் உறவுகளை இத் தருணத்தில் மீண்டும் நன்றியுடன் நினைவுகூறுகின்றோம்

செயலாளர்

( தகவலுக்காக பதிவு செய்யப்பட்டது)

More
idaikkadu Obituary (June 20, 2021)
Informed by : ஆறுமுகம் ஆறுமுகம்
Contributed by : Elango veluppillai
Card image cap

மரண அறிவித்தல்

சிவகுரு ஆறுமுகம் (கணக்காளர்)

1949 .03 .02 - 2021. 06.20 )

இடைக்காட்டை பிறப்பிடமாகவும் கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சோதி என்று அழைக்கப்படும் சிவகுரு ஆறுமுகம் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் ஆறுமுகம் ( பெரியவர்) குழந்தையார் ஆகியோரின் மகனும் காலம்சென்றவர்களான சிவபாக்கியம், கிருஷ்ணவேணி, சரசுவதி மற்றும் கந்தசாமி , பொன்ராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்அவுட்றி( Audrey) அவர்களின் கணவரும் சஞ்சீவ் அவர்களின் பாசமிகு தந்தையும் நிலுக்சி அவர்களின் மாமனாரும் ஆவார் . அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இன்று கண்டியில் நடைபெற்றது .

தகவல் - ஆறுமுகம் ஆறுமுகம் 077. 6624464

More
idaikkadu Obituary (June 15, 2021)
Informed by : E.V.Murugaiah
Contributed by : Elango veluppillai
Card image cap

திருமதி. வேலுப்பிள்ளை நாகம்மா

தமிழ் ஈழம் இடைக்காட்டுடை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. வேலுப்பிள்ளை நாகம்மா இன்று மண்ணுலகை விட்டு நீர்துள்ளார்.

அன்னார் அமரர்கள் முருகேசு சின்னாச்சி ஆகியோரின் மகளும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை இன் அன்பு மனைவியும்.

அமரர்கள் சின்னப்பிள்ளை, வேலுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, பெரியதம்பி, மாணிக்கம், வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரியும்.

திரு.முருகுப்பிள்ளை இன் பாசமிகு தாயாரும், சத்திஎஸ்வரி இன் அருமை மாமியாரும்.

பகீரதன்,யசோதரன், அமரர் வாசுகி, திலீபன் ஆகியோரின் அப்பாம்மாவும்.சிவதர்ஷினி இன் பேத்தியும், டர்மிகா வின் பூட்டியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

முருகுப்பிள்ளை.0776872589

More
idaikkadu News (June 11, 2021)
Informed by : கந்தசாமி முருகவேல்
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காடு அன்பர்கள் பெருமளவு பங்களிப்பு செய்கிறார்கள் மகிழ்ச்சி

கந்தசாமி முருகவேல்

More
idaikkadu Obituary (May 27, 2021)
Informed by : Webadmin
Contributed by : Elango veluppillai
Card image cap

கண்ணீர் காணிக்கை

More
idaikkadu Obituary (May 24, 2021)
Informed by : Suja Kesan
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் இரத்தினசோதி அவர்கள் 21/05/2021 வெள்ளிக்கிழமை இடைக்காட்டில் இறைபதமடைந்தார்.
அன்னார் இரத்தினசோதியின் அன்பு அன்பு மனைவியும் காலஞ்சென்ற கந்தசாமி, மற்றும் சண்முகநாதன், தனேஸ்வரன்(UK), ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் சுகந்தினி, காலஞ்சென்ற மகிந்தன், மற்றும் சுயாந்தினி(UK), நிசாந்தன் (கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், லம்போதரன், கேதீஸ்வரன்(UK), கோபிகா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் இடைக்காடு சாமித்திடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுயாந்தினி கேதீஸ்வரன்(மகள்): UK+44 7958398497

More
idaikkadu News (May 23, 2021)
Informed by : இடைக்காடு முன்பள்ளி நிர்வாகம்
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காட்டினை சேர்ந்த திரு. வேலுப்பிள்ளை கணேசலிங்கம்( அப்பன்) என்பவர் முன்பள்ளி தற்காலிக கூரையின் மேல் வெப்பத்தை தனிக்க போடுவதற்காக 400 க்கும் அதிகமான பனை ஒலைகளை அன்பளிப்பாக தனது பொறுப்பில் வெட்டி அடுக்கப்பட்டுள்ளது அதை விரைவில் வெப்பத்தை தனிக்கும் நோக்கில் கூரையின் மேல் அவரது பொறுப்பிலையே அடுக்கப்படவுள்ளது சமகாலத்தில் முன்பள்ளியின் பெற்றோராகவும் ஒர் சமூக செயற்பாட்டாளராக காணப்படுகின்ற அவ் நல் உள்ளத்திற்க்கு நிர்வாகம் ,மற்றும் பெற்றோர் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்

தகவலுக்காக பகிர்கின்றோம்

More
idaikkadu News (May 10, 2021)
Informed by : கல்வி கரங்கள்
Contributed by : Elango veluppillai
Card image cap

: பாடசாலைக் கல்வியை பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் வைகாசி மாதம் 2017 இல் "கல்விக்கரங்கள்" அமைப்பு உருவாக்கப்பட்டது. கல்விகற்பதற்காக பொருளாதார ரீதியில் இடர்படுகின்ற மாணவர்களுக்கு உதவுவதும், அதன்மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர் சதவீதத்தை அதிகரிப்பதும் இக்கல்வி திட்டத்தின் நோக்கமாக அமைகிறது. அதன் அடிப்படையில் இவ் அமைப்பிற்சகான திட்டங்கள், யாப்புகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த காலத்தில் கல்விகரங்கள் வேண்டுகோளுக்குகமைய புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட நிதியிலிருந்து பெறப்படும் வட்டிப்பணம் மாதாந்தம் மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஆரம்ப, இடைநிலை, உயர்தர பிரிவுகளில் கல்விபயிலும் 17 மாணவர்கள், 2020 இல், இதன்மூலம் பயன்பெறுகிறார்கள். ஆர்வமுள்ள கொடையாளர்கள் எமது அமைப்போடு தொடர்புகொள்ளவும்.


கடந்தகால கணக்கறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

"சமூகத்தின் விழிப்புக்கு கல்வியே மூலதனம்”

தொடர்புகளுக்கு

த.கிருபாகரன் (தலைவர்):- +94-718422397
செ.செல்வவேல்(செயலாளர்):- +94-772105354
ச.சுலக்சன்(பொருளாளர்):- +94-779440461
-நன்றி-

More
idaikkadu News (May 5, 2021)
Informed by : Swaminathan Master
Contributed by : Elango veluppillai
Card image cap

GCE A/L Results Idaikkadu

More
idaikkadu News (April 28, 2021)
Informed by : செயற்குழுவும், விசேட செயலணியும்.
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலை
இன்று (18-04-2021)காணொளி மூலமாக நடைபெற்ற செயற்குழு கூட்ட அறிக்கை,
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர்பாடசாலையின் நிர்வாக செயற்குழுவின் தலைவர்,
செயலாளர், பொருளாளர் ஆகியோருடன் விசேட செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து இன்று
நடாத்திய கலந்துரையாடலின் பிரகாரம், அங்குள்ள நிர்வாக செயற்குழுவின் தலைவர்,
செயளாளர், பொருளாளர் ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக பின்வரும் முடிவுகள்
எடுக்கப்பட்டன, அவற்றை அங்குள்ள நிர்வாக செயலணி நிறைவு செய்வார்கள்.
1. பாலர் பாடசாலை ஆசிரியை ஒருவர் விபத்தில் சிக்கியதால் ஏற்கனவே தெரிவு
செய்யப்பட்ட மூன்றாவது ஆசிரியர் 19-04-2021 திங்கள் முதல் தனது கடமையை
பெறுப்பேற்கிறார், ஆசிரியர்கள் மூவருக்குமான ஊதியம் நிரந்தர வைப்பில் இருந்து
கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தில் இருந்து ரூபா 30000-00 தில் அவர்களின்
சேவைக்கால அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும்.
2. மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கான வண்ணக் கடதாசிகள் போன்ற பொருட்களை
வாங்கவும், போட்டொ பிரதி எடுத்தல் போன்ற தேவைகளுக்கு அதே வட்டிப் பணத்தில்
5000-00 வழங்கப்படும்,
3. மாணவர்களின் விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படும், விளையாட்டு
உபகரணங்களும் திருத்தியமைக்கப்படும்.
செயற்குழுவும், விசேட செயலணியும்.
18-04-2021
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலைக்கான நிதி சேகரிப்பு
மொன்றியல் வாழ் அன்பர்கள் வழங்கிய நிதி விபரம். பகுதி -1
1. செந்தில்ரூபி பரமசிவம் 500-00
2. மைதிலி மகேந்திரன் 500-00
3. பிரசாந்தி கஜன் 500-00
4. வனிதா மகிபன் 200-00
5. சுபா குகதாசன் 200-00
6. வதனி ஈஸ்வரதம்பையா 100-00
7. சுபத்திரா ஜெயகாந்தன் 100-00
8. வனஜா ஜெயகுமார் 200-00
9. கஜனி ஜெகநாதன் 400-00
10. சாந்தரூபி ஞானவேல் 100-00
அல்பேட்டா, கனடா
11. கிருத்திகா ரத்னவேல் 500-00
ரொரன்ரோ ,கனடா
12. சந்திரமதி வரதராஜன் 100-00
13. புனிதவதி கணேசன் 100-00
14. மோகனா ஈஸ்வரமூர்த்தி 250-00
15. நிவசா ஜெயகுமார் 500-00
16. நாகேஸ்வரி சுரேஸ் 100-00
17. சுமித்திரா சத்தியநாராயணன் 500-00
18. சுபத்திரா சிவனொளிபாதம் 100-00
19. லோஜி ஞானசேகரம் 100-00
20. தயாளினிதேவி கருணாகரன் 500-00
21. மொழி வேல் 50-00
22. சிவலோஜினி சிறிசிவகாசிவாசி 100-00
23. சுரேன் பரமேஸ்வரன் 100-00
24. பத்மாவதி நவகுமார் 500-00
25. செல்வதி பார்த்தீபன் 100-00 ----------- 6400-00
---------------------------------------------------------------------------
ரொரன்ரோ கனடா
1. தம்பிமுத்து கதிரமலை 500-00
2. மோகனா கேசவமூர்த்தி 500-00
3. வசந்தமலர் பொன்னீஸ்வரன் 500-00
4. முருகேசு குகன் 500-00
5. சுகி இளங்கோ 500-00
6. அனுசா சுதன் 500-00
7. சுபத்திரா கந்தையா 500-00
8. முத்துலட்சுமி சிவலிங்கம் 500-00
9. அரவிந்தன் மகேசன் 250-00
10. ரவீந் மகேசன் 250-00
11. பரமேஸ்வரி கந்தவேல் 200-00
12, குகமலர் இடைக்காடர் 200-00

13. பவானி கணேசமூர்த்தி 200-00
14. சிவரூபி செல்வராஜ் 200-00
15. கமலினி முருகேசமூர்த்தி 200-00
16. கஜானி தனஞ்செயன் 200-00
17. விஜயலட்சுமி கந்தையா 200-00
.18. விழி ரகுநாதன் 100-00
19. பிறேமா சுப்பிரமணியம் 100-00
20. சத்தியதேவி உதயணன் 100-00
21. சிவசக்தி சின்னராசா …

More
idaikkadu Obituary (April 20, 2021)
Informed by : தெய்வமணி –ரூபன் – மகள் ,கனடா
Contributed by : Elango veluppillai
Card image cap

மரண அறிவித்தல்
வினாசித்தம்பி வேலாயுதபிள்ளை இறைபதமடைந்தார்.
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி வேலாயுதபிள்ளை
இன்று 20—04-2021 செவ்வாய் இரவு இறைபதமடைந்தார்.
அன்னார் தங்கத்தின் அன்புக் கணவரும், தெய்வநாயகி ( கனடா ) ,தெய்வராணி ( இலங்கை ),
தனேஸ்வரன் ( அவுஸ்ரேலியா), விக்கினேஸ்வரன் (லண்டன் ), தெய்வமணி (கனடா)
ஆகியோரின் அன்புத் தந்தையாரும், தர்மலிங்கம், ஈஸ்வரன், ஜானகி, சங்கீதா, சிவஞான ரூபன்
ஆகியோரின் அன்பு மாமனாரும், கவிதன், நிந்துயன், கிருஷியா, ஜினோஜா, பிறேமிகா, மேனகன்,
மதுனன், மீனயா, சுகேஷ், நீவிகா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
மேலும் அன்னார் தெய்வானைப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, சிவசுப்பிரமணியம்
ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 21-04-2021 புதன்கிழமை முற்பகல் 10-00 மணிக்கு
இடைக்காட்டில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில்
தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் ; தெய்வமணி –ரூபன் – மகள் ,கனடா ; 416 286 6567
தொடர்புகளுக்கு;
தெய்வநாயகி ; 905 471 3160
தெய்வராணி ; 011944170376
தனேஸ்வரன் ; 61438001313
விக்கினேஸ்வரன் ; 011449405560971
தெய்வமணி ; 4162866567 / 416 566 6523 / 647 923 6523

More
idaikkadu News (April 3, 2021)
Informed by : நிதி ஆளுகைக்குழு
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலை
கிடைக்கப் பெற்ற நிதியினை கையாள்வதற்கான உத்தேச செயற் திட்டம்.
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாடசாலை நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக் கிணங்க , இடைக்காடு இணையம் அதற்கான முன் முயற்சிகளை மேற்கொண்டு புலம்பெயர் வாழ் எம் உறவுகளுடன் தொடர்பு கொண்டதன் பயனாக ,கனடா, லண்டன், சுவிஸ் ,டென்மார்க் போன்ற நாடுகளில் வாழும் எம் உறவுகள் கணிசமான நிதியினை வழங்கி உதவியிருக்கிறார்கள். முதலில் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள். இனி கிடைக்கப் பெற்ற நிதியினை எவ்வாறு மிகக் கவனத்துடன் பாவிப்பது என நாம் ஓர் திடமான திட்டத்துடன் செயலாற்றுவது அவசியமாகும். எனெனில் இதுவே இறுதியாக கிடைக்கும் நிதியாகும். இதற்கு மேல் எம்மால் இன்னொருமுறை நிதி சேகரிப்பில் ஈடுபட முடியாது, மக்களாலும் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்க முடியாது, எனவே கிடைக்கப் பெற்ற நிதியினை நீண்ட காலத்திற்கு பயன் படும் முறையில் அதற்கான திட்ட வரைபு ஒன்றை நாம் உருவாக்கி அதனை செயல் படுத்த வேண்டியது அவசியமாகும்.

இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலை
இன்றைய கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கான முன்மொழிவுகள்.
1. இடைக்காட்டில் உள்ள விசேட கல்வியை பெற்றுக் கொண்ட பெண் பிள்ளை ஒருவரை தெரிவு செய்து அவருக்கு பாலர்பாடசாலை சம்பந்தமான மூன்று மாதகால விசேட பயிற்சி ஒன்றினை எமது செலவில் வழங்கல். அவர் இரண்டு வருட காலம் கட்டாயமாக இப் பாலர் பாடசாலையில் பணி புரிதல் அவசியம். அத்துடன் மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தினையும் செயற்படுத்தல் வேண்டும்.
2. மாணவர்களுக்கு கல்வி மட்டும் கற்பித்தலுடன்நிற்காது, சுற்றாடல் அறிவியல் போன்ற விடயங்களுக்கான சுற்றுலாவுடன் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் வேறு பாலர் பாடசாலை மாணவர்களுடன் இணைந்து பயனுள்ள விடயங்களை பகிர்ந்து கொள்ளல்
3. மாணவர்களுக்கான சீருடை ஒன்றினை அவர்களுக்கு வழங்கல். புற களப் பயிற்சிக்கான வளங்களை பெற்றுக் கொடுத்தல். வர்ணம் தீட்டுதல். மாதிரி வடிவங்களை பொருத்துதல், வடிவமைத்தல் போன்றவை.
4. பழுதடைந்திருக்கும் வெளிக்கள விளையாட்டு உபகரணங்களை திருத்தியமைத்தல்.
5. கிடைக்கப் பெற்ற நிதியினை அதியுயர் வட்டியை பெறுவதற்காக 60 வயதிற்கு மேற்பட்ட மூவரை தெரிவு செய்து அவர்களின் பெயரில் வைப்பில் இடப்படுகிறது. அவர்களின் மனமுவந்த ஒத்துழைப்பிற்காக மாதாமாதம் அவர்களுக்கு ஒரு சிறு தொகை பணத்தினை கிடைக்கப் பெறும் வட்டியில் இருந்து வழங்கல்.
மேற்படி அலோசனைகளை பாலர் பாடசாலை நிர்வாக செயற்குழுவும், இடைக்காட்டில் உள்ள விசேட செயற்குழு உறுப்பினர்களும் கூடி அவற்றை முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்து புலம்பெயர் விசேட செயற்குழுப்பினர்களுடன் இணைந்து அவற்றை செயற்படுத்தப்படும்
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் …

More
idaikkadu School (March 27, 2021)
Informed by : வே. இளங்கோ.
Contributed by : Elango veluppillai
Card image cap

பணி ஓய்வு பெறும் ஆசிரியரின் சேவையை மதிப்போம். வாழ்த்துவோம்.
திருமதி தெய்வமலர் தர்மகுலசிங்கம்.
இரசாயனவியல் ஆசிரியை.
இடைக்காடு ம.வியிலும் புத்தூர் ஶ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியிலும் 32 வருடங்கள் அர்ப்பணிப்பான சேவை ஆற்றி தனது 55 ஆவது வயதில் பணி ஓய்வு பெறும் எனது மாணவி திருமதி தெய்வமலர் தர்மகுலசிங்கம் அவர்களை வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகிறேன்.
பணியை செவ்வனே செப்பனே செய்து முடித்த திருப்தியில் திகழும் திலகமே!! வாழ்த்துக்கள்.. சந்தோஷமும் கூட.ஓய்வுகாலத்திலும் ஏதோ ஒரு வழியில் உங்கள் சேவை தொடரும் என்ற நம்பிக்கையுடன்...🙏🙏

More
idaikkadu News (Feb. 23, 2021)
Informed by : வே. இளங்கோ.
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலையின் நிதியுதவிக் கோரிக்கை.
உலகெங்கும் பரந்து வாழும் எம் அன்பு உறவுகளே!
மேற்படி விடயம் தொடர்பாக இடைக்காடு இணையத்தில் நாம் குறிப்பிட்டதற்கமைய இத்தொகையானது இலங்கையிலுள்ள வங்கியில் வைப்பில் இடப்பெற்று அதில் இருந்து கிடைக்கும் வட்டியை எடுத்துத்தான் அவர்களுக்கான ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

இதுவரை காலமும் முன்பள்ளியானது எம்மிடம் எந்தவொரு நிதிக் கோரிக்கையையும் வைக்கவில்லை, தற்போதைய சூழ்நிலையில் அவர்களால் இதனைத் தவிர வேறு வழி அவர்களுக்கு இருக்கவில்லை. நாமும் தொடர்ந்து வருடாவருடம் நிதி சேகரிப்பில் ஈடுபடமுடியாது, இதுவே முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றோம் , எனவே கணிசமான தொகை ஒன்றை வைப்பில் இடுவதன் மூலம் மீண்டும் ஒரு நிதிக் கோரிக்கை எழாதவாறு செய்ய வேண்டும் என்பதே எமது முடிவாகும்,
அப்படி சிறந்து
விளங்கிய பாலர் பாடசாலை covid-19 காரணமாக செயல்படாததால் அங்கு பணியாற்றும்
ஆசிரியப் பெருந்தகைகளுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும்
வேதனைக்குரிய விடயமாகும்.
இரண்டு ஆசிரியர்கள் 8000-00 ரூபா ஊதியத்தில் கடமையாற்றினார்கள். பிள்ளைகளின் வரவு
அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும், மற்ற இரு ஆசிரியைகளின் விடுமுறை நாட்களை ஈடு
செய்யவும், மற்றும் மூன்றாவது ஆசிரியையின் குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு
மூன்றாவது ஆசிரியை நியமிக்கப்பட்டார், அரசினால் இரு ஆசிரியர்களுக்கு 6000-00 ரூபாவுடன்,
நிர்வாகத்தால் வழங்கப்படும் 8000-00 சேர்த்து 14000-00 உம், மூன்றாவது ஆசிரியைக்கு 8000-00
ம் வழங்கப்படுகிறது, எனவே மாதம் 24000-00 தேவைப்படுகின்றது, பிள்ளைகளின் பெற்றாரால்
வழங்கப்படும் நிதி நாளாந்த நடைமுறைச் செலவிற்குதான் போதுமானதாக உள்ளது.
இந் நிலை நீடிக்குமாயின் அந்த ஆசிரியர்கள் அதனைவிட்டு விலக நேரிடும், அவ்வாறு அவர்கள்
விலகினால் எம் இளம் சிறார்களின் கல்வி பாதிக்கப்படும், மாணவச்செல்வங்களும் பிறிதொரு
இடத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும், இவ்வாறான நிலைமை தொடருமானால் இந்த
பாலர் பாடசாலை கைவிடப்பட வேண்டிய நிலை உருவாகும். இதனால் பாதிக்கப்படுவது எமது
சந்ததியினராகும்
அதனை புலம் பெயர் மக்களாகிய நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?,
இல்லையாயின் நாம் அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் அதற்கான நிதிக்
கோரிக்கையை அவர்கள் விடுத்துள்ளார்கள் ,இணைப்பை பார்க்கவும்.
எனவே புலம் பெயர் உறவுகளே!
உங்கள் நாடுகளில் நீங்கள் இணைந்து நிதியினை சேகரித்து e transfer ஊடாக அவர்களுக்கு அனுப்பி
உதவுமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.

தொடர்புகளுக்கு;
இ. செல்வறாஜ் 647 407 8358. kapilan@rogers.com
வை பொன்னீஸ்வரன் 416 409 6521. vponnes@hotmail.com
நா. மகேசன் 416 949 1815
வே. இளங்கோ 416 909 1107. elangovelupillai@gmail.com
ச. பரமசிவம் 1 514 617 3150
நா. மகேந்திரம் 1 514 886 8659
சி. குணம் (சுவிஸ் ) …

More
idaikkadu Obituary (Feb. 22, 2021)
Informed by : Mrs Viji Seelan
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

நல்லதம்பி சரஸ்வதி(கண்ணம்மா)

தோற்றம்: 10/01/1936 மறைவு: 22/02/2021

காளி கோவிலடி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி சரஸ்வதி(கண்ணம்மா) அவர்கள் இன்று 22/02/2021 திங்கள்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-கதிராசி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற நல்லதம்பியின் அன்பு மனைவியும் நடராசா, சோமசுந்தரம், திருநாவுக்கரசு, நல்லம்மா, சின்னப்பு, சின்னம்மா, கந்தசாமி, இலக்குமிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும் பேபி வத்சலா, ஸ்ரீராகவன், ஸ்ரீதரன், சசிகலா, காலஞ்சென்றவர்களான ஸ்ரீநிவாசகன், உதயசங்கர் (இந்தி) மற்றும் சத்தியகலா, விஜிதகலா, ஆறுமுகஸ்ரீ,, சிவராம் (வசந்தி) ஆகியோரின் அன்புத்தாயாரும், பரமேஸ்வரன், இந்திராணி, காலஞ்சென்ற பவானி மற்றும் ஸ்ரீமனோகரன், ஜெயந்தா உதயகுமார், ஜெயசீலன், மிசேல் (Michelle) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் நாளை 23/02/2021 செவ்வாய்க்கிழமை இடம்பெற்று பூதவுடல் இடைக்காடு சாமித்திடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு;
விஜி, சீலன்: + 44 1793 542564
சசி: +49 151 29768806
சத்தியகலா: +41 794361838
ஸ்ரீராகவன்:+45 71322667
ஸ்ரீதரன்(சிவா)+33 751236363
சிவராம்: +39 3496245646
ஆறுமுகஸ்ரீ: +44 7990726609

More
idaikkadu News (Jan. 25, 2021)
Informed by : Yogeswari Sivapalan
Contributed by : Sengo Vel
Card image cap

கண்ணகை ஆழ்வார் ஆசிரியை100வது பிறந்த நாள் 17January 1921 -இடைக்காடு (மாதர்சங்கம்). ❤️இவர் சிறுவர் பாடசலை, தையல் வகுப்பு அன்பான ஆசிரியையாக கடமை ஆற்றினார்.
எங்கள் ஊர் மக்களுடன் அன்பானவராகவும் மிகவும் தெரிந்தவராகவும் அறியப்பட்டார். எங்களது உறவிரானதும் ஆசிரியையும் ஆசையம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இவர் மறைந்தாலும் இவருடைய புகழ் மறையாது.

எமது ஊரில் முதன்முதலாக முன்பள்ளியைத தொடங்கி நடத்தியவர். பெண்களுக்கு தையல் பழக்கியவர். மாதர் சங்கத்தை அங்குரார்ப்பணம் செய்து நடத்தியவர்.
நித்திய சாந்தி அளித்தருளும் இறைவா!ஓம் சாந்தி ஓம் சாந்தி
கண்ணகை உந்தன் பெயர்
என்றும்
கண்டதில்லை உன்கையில்
பொன்னகை – நாளும்
கண்டோம் உன் வதனத்தில்
புன்னகை

வெள்ளை மனதுடனும்
வெண்ணரைத் தலையுடனும்
வெண்ணிற உடையும் கொண்டு
அகர முதல எழுத்தும்
ஆத்திசூடியும்
மருதமலை மாமணியும்
எமக்களித்த ஔவை
நம் கரம் பிடித்து
விரல் மடித்து
கரும்பலகையிலும்
கற்பலகையிலும்
கன்னித்தமிழ் அளித்த
கலையரசி

பல்துலக்கி முகம் கழுவி
பாங்காய் மடியிருத்தி
பாடம் புகட்டிய
தமிழ்த்தாய்

நாம் பேசும் தமிழுக்கும்
எழுதும் எழுத்துக்கும்
ஏகபோக சொந்தக்காரி

அகரம் அறியவைத்த சிகரமே
எழுத்தறிவித்த தெய்வமே
ஏடுதந்த ஏந்தலே
என்றும் உன் நினைவு
எங்களுள் வாழும்

அன்னாரின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட அஞ்சலி
கவிதை உதவி_ வை. பவான்

More
idaikkadu Obituary (Jan. 16, 2021)
Informed by : Narayanapillai Swaminathan
Contributed by : Sengo Vel
Card image cap

மரண அறிவித்தல்
திருமதி சின்னத்தம்பி
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்தம்பி இன்று அதிகாலை காலமானார். இவர் அமரர் ஆசிரியர் சின்னத்தம்பியின் பாசமிகு மனைவியும் நித்தியானந்தன் பவானி அருந்ததி சுரமஞ்சரி கலையரசி அருள்மொழி சிவமலர் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்ஆவார். இறுதிக்கிரியைகள் இடைக்காட்டில் இன்று நடைபெற்றன.

நித்திய சாந்தி அளித்தருளும் இறைவா!ஓம் சாந்தி ஓம் சாந்தி

More
idaikkadu News (Jan. 14, 2021)
Informed by : வே. இளங்கோ.
Contributed by : Elango veluppillai
Card image cap

தை பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்

விடியற்காலை எழும்போதே
விளையும் நிலம் மனதில் கொண்டு….
தனித்து நின்று செய்யாமல்
தமிழர் கூடி ஒன்றினைந்து…
சேற்றில் காலை வைத்து என்றும்
சோற்றை நமக்குத் தருகின்ற
கண்ணில் காணும் கடவுள் என்றால்
உழவர் அன்றி உலகில் வேறு யார்…?
காலைக் கதிரவன் உதிக்கும் போதே
கவிழ்ந்த நெற்குளை நிமிர்ந்து ஆடும்
அழகு மணிகளால் அசைந்து பாடும்….
அவ்விளைந்த நெற்மணி வீடு சேற…
தைமகள் அவளைத் தாங்கிக் கொள்ள
மாக்கோலமிட்ட மண்மணப் பானை
மகிழ்ச்சியில் அவளை ஏந்திக் கொள்ள…
புத்தம்புதுப் பானையில் பால்போல
அவள் பொங்கி வர…
அவளைப் பார்க்க ஆசை கொண்டு
கொம்பு நிறைய பூ சுற்றி….
பட்டு வேட்டிக் கழுத்தில் கட்டி
நெற்றிச் சுட்டிப் பொட்டு வைத்து
எங்கள் வீட்டுச் செல்வமாக
ஏறுபூட்டி காளை நிற்க..
உழவு காக்கும் விவசாயி
உறக்கச் சொல்லிக் குலவையிட
பால்பானை மெல்லப் பொங்க
பொங்கலோ பொங்கல் என்று சொல்லி
தைமகளை வரவேற்போம்….

நன்றி
வரிகள்,
மாங்கனி சந்தோஷ்

More
idaikkadu News (Jan. 1, 2021)
Informed by : வே. இளங்கோ.
Contributed by : None
Card image cap

உலகெங்கும் பரந்து வாழும் எம் இடைக்காடு இணையத்தள வாசகர்கள் நண்பர்களுக்கு இனிய 2021 வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்,

வருகின்ற புத்தாண்டில் ” பழையன கழிதலும் புதியன புகுதலும் “ என்பதற்கிணங்க கடந்த வருட கசப்பான சம்பவங்கள், நிகழ்வுகள் யாவும் நீங்கி புத்துணர்வுடனும் உற்சாகத்துடனும் புதிய ஆண்டினை வரவேற்று ,வருகின்ற ஆண்டில் எல்லா நலன்களும் ,நல்வாழ்வு, சுபீட்சம், கல்வி, செல்வம். நோயற்றவாழ்வு, நல்லாரோக்கியம் என எல்லா சுகங்களும் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி எமது கருமங்களை தொடங்குவோம்,
கடந்த 15 ஆண்டுகளாக உங்களுடன் பயணித்து உங்களுக்கான சேவையில் நாமும் இணைந்து பல்வேறு தரப்பட்ட கட்டுரைகள் படங்கள், செய்திகள் , அறிவித்தல்கள், வாழ்த்து மடல்கள், போன்ற பயனுள்ள விடயங்களை இடைக்காடு இணையத்தில் பிரசுரித்தும், உங்களின் முக்கியமான அறிவித்தலை உலகெங்கும் பரந்து வாழும் எம் உறவுகளுக்கு உடனுக்குடன் எவ்வித தாமதமுன்றி கொண்டுபோய் சேர்த்தும் உங்களின் ஆக்கங்களை அவ்வப்போது பிரசுரித்து உங்களின் எழுத்தாற்றலை மேம்படுத்தும் விதமாக செயல்பட்டும் வந்திருக்கிறோம் என்பதில் நாம் பெருமிதமடைகிறோம்,
நடப்பு வருடத்தில் இதனை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இடைக்காடு இணையம் புதுப் பொலிவுடனும் புது வடிவத்திலும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் உங்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் என்பன இடம்பெறும் வகையிலும் புனரமைக்கப்பட்டு இன்று உங்கள் முன் வருகின்றது.
கடந்த 15 வருடங்களாக நீங்கள் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு இனி வருகின்ற காலங்களிலும் உங்களின் அன்பும் ஆதரவும் என்றும் கிடைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு புதிய வடிவத்திலான இணையத்தளத்தை இன்றிலிருந்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.

இந்த இணையத்திற்கான மென்பொருள் வடிவமைப்பிற்கு உதவி புரிந்த தர்சிகா முருகவேல் ( நியூ சீலந்த்து), ஓவிய வடிவமைப்பு செய்து தந்த வன்னியகுலசிங்கம் சின்னதம்பி (இத்தாலி) அவர்களுக்கு நன்றிகள்.

என்றும் உங்கள் பணியில்
வே. இளங்கோ.
கனடா
01-01-2021.

More
idaikkadu News (Dec. 28, 2020)
Informed by : நாராயணபிள்ளை ஈஸ்வரன்
Contributed by : None
Card image cap

விழி நீர் சொரிய
விம்மலுடன் என்
கண்ணீர் பூக்களை
காணிக்கையாக்குகின்றேன்
உறவால் நாம் இணைந்திருந்தாலும்
உள்ளத்தால்
எமை இணைத்தவள்
அன்னை புவனேஸ்வரியே
அதனால் தான் அவசரமாய்
அன்னை உனை அழைத்தாளோ!
ஆண்டுக்கு ஒரு முறை
அன்னையின் திருவிழா
அது பெருவிழா
வேட்டைத் திருவிழா
அது வேடிக்கைத் திருவிழா
ஆடிடும் இளைஞர் கூட்டம்
சேர்ந்தே ஆடிடுவாயே
இனி எப்போது காண்போம்
அந்த இனிய காட்சியை !
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை
அழைத்திடும் தொலைபேசி
அதிரும் குரல் அது
அன்பின் அடையாளம்
ஒருநாள் தவறின்
பதற்றமாய் வரும் அழைப்பு
என்ன சுகவீனமா என
உரிமையோடும் உறவோடும்
இனி யாரையா எனை கேட்பார் !

எல்லா விடையத்தைம்
என்னோடு பகிர்ந்து கொள்வாயே
இறுதிப் பயணத்தை மட்டும்
சொல்ல மறந்தாயோ
வருவேன் என்றுதானே
சொல்லி விட்டுப் போனாய்
வருவாய் என்றுதானே
நானும் காத்திருந்தேன்
எத்தனை பணிகள்
எமக்காய் அங்கே காத்திருக்க
எல்லாவற்றையும் செய்து
முடிப்போம் என்றாயே
இனி எப்படி செய்வது
ஏதுமறியாது தவிக்கின்றேன்
எழுந்து வரமாட்டாயா
என ஏங்குகின்றேன்
வரமாட்டாய் என
தெரிந்தும் என்மனம்
ஏங்குகின்றதே
என் செய்வேன்!
விண்ணுலகு ஏகிய வேந்தனே
உன் ஆன்மா நித்திய நிலைபெற
வேண்டி நின்றேன்
வேறேதும் வேண்டேன்!
நா.இ.ஈசுவரன்.
கனடா
27-12-2020.

More
idaikkadu Obituary (Dec. 28, 2020)
Informed by : ஜெயசீலன்
Contributed by : None
Card image cap

மரண அறிவித்தல்
வல்லிபுரம் இராஜலட்சுமி இறைபதமடைந்தார்
கொற்றவளவு இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்
கொண்ட வல்லிபுரம்
இராஜலட்சுமி 28-12-2020 திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் இறைபதமடைந்தார்.
அன்னார் காலம் சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும், ஜெயமங்களம், காலம்
சென்ற ஜெயபாலன், ஜெயவரதன், ஜெயசீலன் அவர்களின் அன்புத் தாயாருமாவார்,
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
உற்றார் ,உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் ;
ஜெயசீலன்:
Varthan-00447422788140
Seelan-0447962160462

More
idaikkadu Obituary (Dec. 27, 2020)
Informed by : கதிரமலை முகுந்தன்
Contributed by : None
Card image cap

திரு கதிரமலை அவர்களின் இறுதிக் கிரியைகள் covid -19 காரணமாக கனேடிய சட்டத்திற்கமைய குறிக்கப்பட்ட எண்ணிக்கையானவர்கள்
மட்டுமே பங்கு பற்ற முடியுமென்பதால் இந் நிகழ்வானது குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் பங்கு பற்றும் நிகழ்வாக நடைபெற உள்ளது. எனவே உறவினர்கள் ,நண்பர்கள் இந் நிகழ்வை நேரலை மூலம் பார்வையிட முடியும், அதனை பார்வையிட பின்வரும் இணைப்பை அழுத்தி பார்வையிடவும், இணைப்பில் உங்களது பெயர் மின்னஞ்சல் முகவரி குறிப்பிட வேண்டும், அப்போதுதான் பார்வையிட முடியும், நிகழ்வுகள் நாளை திங்கட்கிழமை 28-12-2020 காலை 8-30 முதல் 10-30 வரை இடம்பெறும்

More
idaikkadu Obituary (Dec. 26, 2020)
Informed by : கதிரமலை முகுந்தன்
Contributed by : None
Card image cap

செம்பிகலட்டி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரமலை தம்பிமுத்து அவர்கள்
26.12.2020 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான தம்பிமுத்து இலக்குமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான கைலாயப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பார்வதிப்பிள்ளையின் அன்பு கணவரும், முகுந்தன் (கனடா), காகுந்தன்(கனடா), தீபா(கனடா), சோபா(கனடா), ஆகியோரின் அன்புத்தந்தையும், சுகந்தினி, யமுனா, சுரேஷ்குமார், பாலகாந்தன், ஆகியோரின் அன்பு மாமாவும்,
நாகேஸ்வரி, தேவராசா, அமரர் நடராசா, மகேந்திராதேவி, சரஸ்வதி, அம்பிகாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரரும்,
சிவநாயகம், ராசம்மா, கந்தசாமி, தெய்வநாயகி, ஆறுமுகசாமி, முருகானந்தவேல், செல்வநாதன், சரஸ்வதி, சிவமலர் ஆகியோரின் மைத்துனரும்,
கோபாலகிருஷ்ணர் சிவகாந்தன்,, இளையதம்பி, கமலேஸ்வரி, விஐயலட்சுமி, ராசாத்தி, மல்லிகாதேவி, மகாலட்சுமி, குருமூர்த்தி ஆகியோரின் சகலனும்,
நாவலன், நிலவன், நிரூபினி, கவீன், ராணியன், ரம்மியன், மாதங்கி, கிருசாந், கவிசன், சாம்பவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு_
முகுந்தன் +1 4167715930.
காகுந்தன் +1 4165608490.
தீபா, பார்வதி +1 4164906281.
சுரேஸ்குமார் +1 4162949764.
சோபா +1 4166092193
காந்தன் +1 4168072193.

More
idaikkadu News (Dec. 25, 2020)
Informed by : webadmin
Contributed by : None
Card image cap

யா/ இடைக்காடு மகா வித்தியாலயத்தில் ஆரம்பப் பிரிவுத் தலைவதராக நீண்ட காலம் பணியாற்றி இன்று அரச பணியில் இருந்து ஓய்வு பெறும் ஆசிரியை தெய்வமணி தம்பு அவர்களை வாழ்த்துவதில் பெரு மகிழ்வடைகின்றேன். ஓய்வு பெறும் காலத்தில் தரம் 5 பரீட்சையில் உயர் சித்தி வீதத்தையும் வெட்டுப் புள்ளிற்கு மேல் உயர் எண்ணிக்கையையும் பெற்றமை இறைவனே அவரது அர்ப்பணிப்பான 9ஏவையை ஆசிர் வதிப்பது போல் உள்ளது.
21.12.2020 திங்கட்கிழமை தனது மணி விழாவை மயமிக எளிமையாகக் கொண்டாடும் ஆசிரியைகரகு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.... உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறேன்.....

More
idaikkadu News (Dec. 25, 2020)
Informed by : நாராயணபிள்ளை சுவாமிநாதன்
Contributed by : None
Card image cap

செல்வி நிதர்சனா குணபாலசிங்கம் அவர்களினால் எமது இடைக்காடு மகாவித்தியாலய அன்னை பெருமையடைகிறாள்.
எமது வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை கற்று உயர்தரப் பரீட்சைநில் 3A உடன் மாவட்ட நிலை முதலாம் இடத்தையும் பெற்று கொழும்பு பல்கலையின் சட்டத்துறை மாணவியாகச் சேர்ந்து கல்வி கற்றார். இறுதிப் பரீடசையில் சட்டமானி இரண்டாம் வகுப்பு மேற்பிரிவு பட்டத்தைப் பெற்றுள்ளார்.
அவர் Bachelor of Law LLB சட்டமானி என்ற பட்டத்தைப் பெற்று வித்தியாலயத்தின் முதலாவது சட்டமானி என்ற பெருமையைபர பெற்றுள்ளார்.
நாம் அனைவரும் அவரை உளமார வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துக்கள் மேன் மேலும் நல்ல நிலை அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்

More
idaikkadu Article (Dec. 23, 2020)
Informed by : Nagamuthu Mahesan
Contributed by : None
Card image cap

இறையருளில் மாப்பாணி கந்தசாமி.
எமது வாழ்நாளில் பல தரப்பட்ட மனிதர்களுடன் பயணித்திருப்போம் . எமது உள்ளூரில்
பல மனிதர்களின் நோக்கம் அல்லது செயற்பாடுகள் சமூக முன்னேற்றம் சார்ந்ததாகவே இருந்ததை பலரின் செயற்படுகளின் மூலம் கண்டுள்ளோம்.இந்த வகையில் நான் அவதானித்த கற்றுணர்ந்த மாப்பாணியாரைப் பற்றி இங்கு எழுத விளைகின்றேன் .

புலம் பெயர்ந்த இங்கே கை தூக்கி விடுபவர்களை விட தள்ளிக் கீழே விழ வைப்பவர்களே அதிகம்.இதில் இருந்து சற்று மாறுபட்டவராக எமது உள்ளூர்காரர் மாப்பாணியார் இருந்துள்ளார்.எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து சமூக சேவைகளினூடாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதைய எமது உள்ளூர் வீதிகள் கிரவல் ஒழுங்கையாக,ஒற்றையடி மண் பாதையாக கை ஒழுங்கையாக பற்றையும் பூடுகளுமாய் இருக்கும்.மாரி காலத்தில் ஓய்வாக இருக்கும் நேரத்தில் கிராம வாலிபர்களின் முயற்சியால் உள்ளூர்காரர் அனைவரும் இணைந்து சிரமதான முறையில் ஈடுபடுவோம். அப்போதெல்லாம் மாப்பாணியார் துப்பரவில் ஈடுபடும் எமக்கு உணவு தேநீர்,வடை,அவல் என்று சிற்றுண்டிகளை அளித்து ஊக்கமளிப்பார் .
இவை மட்டுமல்ல பல வாலிபர்களுக்கு சுய வேலை வாய்ப்புகளுக்கு தன்னாலான பல உதவிகளை செய்து கொடுத்துள்ளார். அன்றைய கால கட்டத்தில் எமது விவசாய விளை பொருட்களை இடைத் தரகர்கள் இன்றி நேரடியாக மொத்த வியாபாரிகளுக்கு தகுந்த விலைக்கு பொருட்களை விற்று தந்தார் மேலும் விளை பொருட்களை தகுந்த பெறுமதிக்கு வேண்டி அவைகளை நியாய விலைக்கு விற்பனை செய்து புதிய முயற்சிகளை உருவாக்கினார். மேலும் தனது விளை நிலங்களில் கரணைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சாமி, குரக்கன், சணல், ,தக்காளி, வாழை போன்ற பயிர்களை செய்து இப்படியும் லாபம் பெறமுடியும் என்பதனை நிரூபித்தவர் மாப்பணியார் ஆவர் .

சூழ் நிலைக்குஏற்ப மாட்டுப்பண்ணைகளை உருவாக்கி பால், நெய், எரு போன்ற புதிய முயற்சிகளைத் தொடர்ந்தார்.

உள்ளூரில் நடைபெறும் மானம்பூ திருவிழாவில் புவனேஸ்வரி அம்பாள் கிராம வலம் வரும் போது மாப்பாணியாரின் வீட்டுக்கு முன்னால் பெரு விழாவே கோலம் காணும். அனைவருக்கும் மன நிறைவுடன் பல வகையான சிற்றுண்டிகளை மன மகிழ்ந்து இறை அன்புடன் உபசரிக்கும் பாங்கினை நான் பார்த்திருக்கிறேன் .

பின்னாளில் அம்பாளின் அதி பக்தியினால் அவ் ஆலயத்தில் வெகு நீண்ட காலமாக பொருளாளராக இருந்து ஆலய வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார்.
அக் காலா கட்டத்தில் தன் சுய முயற்சியால் மாலை கட்டும் நுணுக்கங்களைக் கற்று அதிலும் தேர்ச்சியாளர் ஆனார். இவரின் இறையருளை நானும் மெய் மறந்து பார்த்திருக்கின்றேன். இவரின் மகத்தான சேவைகளை எமது கிராமம் பெற்ற காலத்தில் நானும் அவர் காலத்தில் …

More
idaikkadu News (Dec. 23, 2020)
Informed by : ஈஸ்வரன் நாராயணபிள்ளை
Contributed by : None
Card image cap

நிகழ்வுகளின் நினைவுகள்--3 -- இடைக்காடு சனசமூக நிலையம் –1976
வெள்ளிவிழா மண்டப திறப்பு விழாவும் ---தரிசிக்கும் மருந்தகமும்.
எமதூரில் மருத்துவமனை இல்லாமை ஓர் நீண்ட குறைபாடாக விளங்கி வந்துள்ளது, மருத்துவ தேவைகளுக்கு மக்கள் பக்கத்தில் உள்ள அச்சுவேலி கிராமிய வைத்தியசாலைக்கோ அல்லது வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கோ தான் போக வேண்டியிருந்தது. அதற்கும் நாம் பேருந்தில் செல்வதானால் அச்சுவேலி தொண்டமானாறு பிரதான வீதிக்கு நடந்து சென்றுதான் போகவேண்டியிருந்தது. அதனால் வயது முதிர்ந்தோர் பெரிதும் சிமப்பட்டார்கள் எமதூரில் அடிக்கடி விசக்கடி பாதிப்பு ஏற்படுவதுண்டு. இக்குறைபாட்டை முழுமையாக தீர்க்க முடியாவிடினும் ஓரளவிற்காவது சரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் 1974 ல் நான் இடைக்காடு சன சமூக நிலைய செயலாளராக செயல்பட்டபோது சன சமூக செயற்குழு தீர்மானித்தது, அச் சமயத்தில் பத்தைமேனி- இடைக்காடு கிராம சேவக பிரிவிற்கான பொதுச் சுகாதாரப் பரிசோதகராக PUBLIC HEALTH INSPECTOR கதிரிப்பாயைச் சேர்ந்த பிறைசூடி அவர்கள் ( அவரின் இயற்பெயர் கந்தையா என நினைக்கிறேன்). நியமிக்கப் பட்டார். அச்சுவேலி பகுதிக்கு அச்சுவேலியை சேர்ந்த பிரத்தியோக வகுப்புக்களை நடாத்தும் சத்தியமூர்த்தி ஆசிரியரின் சகோதரர் அவரின் பெயர் வேதமூர்த்தி என நினைக்கிறேன் .எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. பொது சுகாதார பரிசோதகர் வேதமூர்த்தி அவர்கள் அச்சுவேலிப் பகுதிக்கு கடமையாற்றினாலும் இடைக்காட்டிற்கும் பெரிதும் உதவிசெய்திருக்கிறார் , திரு பிறைசூடி அவர்கள் மிகவும் எளிமையானவராகவும் பழகுவதற்கு இனிமையானவராகவும், உயர்ந்த கம்பீரமான தோற்றமும் கடமையுணர்வும் கொண்டவராக இருந்தார். அதுமட்டுமன்றி பக்கத்தூரான கதிரிப்பாயை அவரது வாழ்விடமாகவும், அக்கிராமத்திற்கே சேவையாற்றும் வாய்ப்பும் கிடைத்தமை எமக்கும் சாதகமாக அமைந்தது. கடமை நிமித்தம் அவர் அடிக்கடி இடைக்காட்டிற்கு வருகை தருவதுடன் சன சமூக நிலையத்திற்கும் வந்து எம்முடன் உரையாடுவது வழக்கம். காலையில் அச்சுவேலிக்குச் சென்று மரக்கறி வாங்கினாலும் வாழைப்பழம் வாங்க இடைக்காட்டிற்குத் தான் வருவார்.
அவருடன் நாம் இது பற்றி கலந்துரையாடினோம். எனது சகோதரர் மருத்துவர் கந்தசாமி அவர்கள் இந்த விடயத்தில் தனது அனுபவங்களை எமக்கு ஆலோசனைகளாக வழங்கினார், அவர் கண்டாவளை அரசினர் மருந்தகத்தில் கடமையாற்றியபோது வாரத்தில் இரு நாட்கள் முரசுமோட்டைக்கும் ,கல்வெட்டித் திடலுக்கும் மதியத்திற்குப் பின் சென்று சிகிச்சை அளிப்பது வழக்கம் ,அதனை தரிசிக்கும் மருந்தகம் VISITING DISPENSARY என்பர். நான் அதனை பிறைசூடி அவர்களுடன் கலந்துரையாடும் போது நினைவூட்டினேன், அவர் யாழ் மாவட்ட சுகாதார பணிப்பாளருக்கு D.H.S ஓர் விண்ணப்பம் ஒன்றை எழுதிக் கொண்டு வருமாறும் ஓர் நாள் அவரை போய் சந்தித்து பேசுவோம் என்றார். நானும் அதற்கிணங்க …

More
idaikkadu Obituary (Dec. 14, 2020)
Informed by : Sakthivel Sathiyamoorthy
Contributed by : None
Card image cap

திருமதி வேலுப்பிள்ளை பொன்னம்மா

தோற்றம் : 10/03/1927
மறைவு : 13/12/2020

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்
கொண்ட திருமதி வேலுப்பிள்ளை பொன்னம்மா அவர்கள் 13/12/2020 (ஞாயிற்றுக் கிழமை) அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான ஆறுமுகம் – செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான கணபதிப்பிள்ளை – தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும் அமரர் வேலுப்பிள்ளையின் அன்பு மனைவியும் சின்னம்மா(இலங்கை) , பாக்கியவதி (மணி,கனடா ) ஆகியோரின் அன்புச் சகோதரியும் செல்வ ராஜேஸ்வரி (அவுஸ்திரேலியா), அபித ஈஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும் அமரர் சத்தியமூர்த்தி, சபாரத்தினம் ஆகியோரின் அன்பு மாமியாரும் சக்திவேல் , சத்தியநாராயணன், பிரபாகரன், சத்தியா , பானுஜா, கௌசிகா, ஹம்சா ஆகியோரின் பேத்தியாரும் ஐங்கரன், கபிலன் , ஓவியா, கதிரன், அகரன் , நதி, சங்கரி, சரண்யா, சிறிராம், சிவராம், சாய்ராம், சஜிராம், அசானா, அனிஷ், அகரன், முகிலன் ஆகியோரின் அன்புப் பூட்டியாரும் தனலட்சுமி (வசந்தி), சுகந்தினி , அமரர் சிறிதரன், நிர்மலா, முரளிதரன், கங்காதரன், வித்தியாதரன் (சங்கர்), செந்தில்வேல், செந்தில்ரூபி , செந்தில்வாணன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

தொடர்புகட்கு :

சக்திவேல் (அவுஸ்): + 642-8807-5976
சத்தியநாராயணன்(கனடா ) + 1 416 577 5000
கங்காதரன் (இலங்கை) - 94-77-603-0063

More
idaikkadu Obituary (Nov. 26, 2020)
Informed by : சுரேஷ்
Contributed by : None
Card image cap

திரு.கந்தையா கணபதிப்பிள்ளை (ஓய்வுபெற்ற பிரதம தபால் அதிபர்) பிறப்பு : Dec .15.1924 உதிர்வு: Nov .26 2020

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும்
வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற பிரதம தபால் அதிபர் திரு.கந்தையா கணபதிப்பிள்ளை இன்று (Nov .26-2020) வியாழக்கிழமை ஹற்றனில் (Sri Lanka ) சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான கந்தையா – சிலம்பாத்தை தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்ற மயில்வாகனம் – லட் சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் நாகம்மாவின் அன்புக் கணவரும் ரோகினிதேவி (America) , சியாமளா (Hatton ) , சோமாஸ்கந்தா(Canada ), நாகேஸ்வரி (Canada ), அருள்மொழி (Canada ) அருள்மோகன் (Canada ) ஆகியோரின் அன்புத் தந்தையும்
முத்துவேல்,சிவகுமார்,சுரேஷ்,கிருஸ்னானந்தவேல்,விஜயகலா, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமனும் சுஜா-அமலன், கஜந்தன், தினேசன், துவாரகா, நிருஜன், சிஜானி , பிரசானி, ஜீவிதன் , சதுர்சன் மிதுர்சா , யதுர்சா ஆகியோரின் அன்புப் பேரனும் அஸ்மி, விகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் காலம் சென்றவர்களான சின்னம்மா,செல்லம்மா,பொன்னம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலம் சென்றவர்களான ராமசாமி பண்டிதர், வேலுப்பிள்ளை, வேலுப்பிள்ளை, சரவணமுத்து, சிவசுப்பிரமணியம், சிவகாமி அம்மை, கதிரவேலு, அன்னபாக்கியம் ஆகியோரின் மைத்துனரும் சபாரத்தினம் (அமரர்), ராஜகுலசிங்கம்(அமரர்), மற்றும் வள்ளியம்மை,பரமேஸ்வரி ஆகியோரின் சகலனுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் Hatton இல் நாளை வெள்ளிக்கிழமை (Nov 27-2020) நடைபெறும் . இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

பிள்ளைகள்

ரோகினி ( மகள் – USA ) 920- 4263168

சியாமளா (மகள் -Srilanka ) 051-2223390

சோமாஸ் (மகன்- Canada) 416-2994946

நாகேஸ்வரி (மகள் -Canada ) 905-2015769

அருள்மொழி (மகள் -Canada ) 416-2899163

அருள்மோகன் (மகன் -Canada ) 416-2890727

More
idaikkadu Obituary (Nov. 9, 2020)
Informed by : ஞானஸ்ரீ
Contributed by : None
Card image cap

யாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் சங்கரப்பிள்ளை அவர்கள் 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை
அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலுப்பிள்ளை சங்கரப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
விஜயஸ்ரீ, ஸ்ரீவிக்னேஷ் (ஈசா), லங்கராசா (கணேஷ்) , ஞானஸ்ரீ (ரதி) ஆகியோரின் பாசமிகு தாயும் ,
சரவணபவானந்தன் , மகேந்திரராசா , கேதீஸ்வரி (வானதி) , இந்திரகாந்தன் ஆகியோரின் மாமியாரும்
பிரவீணா, கேசிகன், சோபனன், ஹரீஸ், ஹரீனா, தருண் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு…
ஞானஸ்ரீ - மகள்
+14162390163

விஜயஸ்ரீ - மகள்
+94772968845

More
idaikkadu Obituary (Nov. 7, 2020)
Informed by : N. Swaminathan
Contributed by : None
Card image cap

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கல்வியங்காட்டை வதிவிடமாகவும்கொண்ட பேராசிரியர் கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி
அவர்களின் அன்பு மனைவி சின்னத்தம்பி நாகம்மா அவர்கள் தனது 81வது வயதில் இறைபதம் அடைந்தார்.
இவர் சிகா சிவகுமார், கருணா சின்னத்தம்பி, தேவா ராஜ்குமார், கங்கா சின்னத்தம்பி ஆகியோரின் பாசமிகு தாயாரும் நல்லையா சிவகுமார், கிருபாசக்தி கருணா, நவரட்ணராஜா ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், தேனுகா,திவ்யன், ஓவியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் விதுஷா, பவுனுஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் , காலஞ்சென்றவர்களான இராசம்மா,தெய்வானை(சின்னக்கா),கதிராசி (பொன்னம்மா) சின்னப்பு தம்பிராசா, சின்னப்பு நல்லையா ஆகியோரின் இளைய சகோதரியும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம்,பெரியதம்பி ஆகியோரின் மைத்துனியும், கதிராசி தம்பிராசா,இராசேஸ்வரி நல்லையா ஆகியோரின் மச்சாளும் ஆவார்.
இறுதிக் கிரியைகள் இன்று கல்வியங்காட்டில் நடை பெறும்

More
idaikkadu Obituary (Nov. 6, 2020)
Informed by : Roopan (UK)
Contributed by : None
Card image cap

திருமதி கமலாம்பிகை சற்குணம் (வயது 76)
பிறப்பு: 14 MAY 1944 இறப்பு: 05 NOV 2020

யாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும்,ஆவரங்காலை
வசிப்பிடமாக கொண்டிருந்தவரும், தற்போது கனடாவை வதிவிடமாக கொண்டவருமான கமலாம்பிகை சற்குணம் அவர்கள் 05-11-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சற்குணம் அவர்களின் அன்பு மனைவியும்,குகரூபன்(பிரித்தானியா), ரூபவல்லி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற தேவநாயகம், திலகவதி, பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நாகேஸ்வரமூர்த்தி, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ராமகிருஸ்ணன், கமலாதேவி, கமலாதேவி, விஜயலக்ஸ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும், இராஜாம்பிகை, சர்வானந்தா, தயானந்தா, வசந்தாதேவி, காலஞ்சென்ற கபிலன், சுகிர்தா, தர்மசீலன், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமியும்,அனுசுயா, அனுரதன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,அபிசா, அமிசா, அகிசா, சசிசன், தீபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 08 Nov 2020 3:00 PM - 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Sunday, 08 Nov 2020 5:00 PM - 6:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Sunday, 08 Nov 2020 7:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரூபன் Mobile : +447900004977
ரூபி Mobile : +14163356371
திலகம் Mobile : +17184548993
பொன்னம்பலம் Mobile : +94766248326
சர்வா Mobile : +14168787552
மனோ Mobile : +14164732261

More
idaikkadu News (Oct. 29, 2020)
Informed by : S. Selvavel
Contributed by : None
Card image cap

யா/ இடைக்காடு ம.வி
பல்கலைக்கழகத் தெரிவு 2019
1.ஶ்ரீ வடிவேலு தயாபன் பொறியியல் மொறட்டுவ
2.முருகையா பிருந்தாபன் கணணி விஞ்ஞானம் கொழும்பு
3. ரகுநாதன் சரண்யன் தகவல் தொழில்நுட்பம் களனி
4. நிவேதிகா சிவஞானசீலன் சித்த மருத்துவம் யாழ்ப்பாணம்

மேற்படி மாணவர்களின் சாதனையைப் பாராட்டுவதோடு எமது உளம் கனிந்த வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றோம்.. மேலும் பல வெற்றிப் படிகள் தாண்ட வாழ்த்துகிறோம்.

More