இடைக்காடு புவனேஸ்வரி அம்மன்முன்பள்ளியின் வளர்ச்சிக்காக புலம் பெயர் வாழ் எம்மவர்கள் வழங்கிய நிதி அன்பளிப்பு மூலம் பல அபிவிருத்தி

By க.சஞ்சீவன்.( இடைக்காடு ) on Feb. 9, 2022

Card image cap

இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் முன்பள்ளியின் வளர்ச்சிக்காக புலம் பெயர் வாழ் எம்மவர்கள் வழங்கிய நிதி அன்பளிப்பு மூலம் பல அபிவிருத்திப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையை ஒளிப் படங்கள் மூலம் காணலாம். மழலைச் செல்வங்கள் மிகவும் உற்சாகத்துடன் தமது கற்றலை பெறுவதுடன் , சமூகம் சார்ந்த பிற செயல்பாடுகளுக்கான பயிற்சியையும் ( சந்தை ) பெற்று வருவதனையும், அங்கு பணிபுரியும் அற்பணிப்பான ஆசிரியப் பெண்மணிகளும், அதன் நிதி ஆளுகைக்குழுவின் அற்பணிப்பான செயல்பாட்டினாலும் முன்பள்ளியானது மக்களின் நன் மதிப்பினைப் பெற்றுள்ளது. அதிக அளவிலான பிள்ளைகள் இணைந்து கற்றலைப் பெற்றுவருகின்றனர். இதற்கு நிதி வழங்கிய அத்துணை அன்புள்ளங்களுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகள். புலம் பெயர் தேசங்களில் எம்மவர்கள் பல நூறு இருந்த போதிலும் ஒரு சில அன்பர்கள் மட்டுமே இவ்வாறான செயல் பாடுகளுக்கு தமது பங்களிப்பினை நல்கி வருகின்றனர். இதுவோர் வருந்தத்தக்க விடயமாகும். எல்லோரும் தமது பங்களிப்பிணை நல்குவார்களேயானால் மிகச் சிறப்பான பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். இனி வருங்காலங்களிலாவது எல்லோருடைய பங்களிப்பினை எதிர் பார்க்கிறோம்.
நிதிவழங்கிய அன்பர்களுக்கான, நிதி ஆளுகைக்குழுவின் பற்றுச் சிட்டைகள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. Covid – 19 காரணமாக பற்றுச் சிட்டைகளை தற்போது நேரில் வழங்க முடியாத நிலையில் உள்ளோம் என்பதனை மிக்க மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம். சந்தர்ப்பம் கிடைக்கும்போது உரியவர்களிடம் பற்றுச் சிட்டைகள் வழங்கப்படும்.
மீண்டும் நிதி வழங்கிய அத்துணை அன்புள்ளங்களுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஒற்றுமையே பலம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

வே. இளங்கோ
நிதி ஆளுகைக் குழு சார்பாக.