முன்பள்ளி செல்லும் மாணவர்களுக்கு காலத்துக்க்கு ஏற்ற கல்வி அளித்தல்.
நிதி உதவி : இடைக்காடு மக்கள்
Contact:idaikkadu_preschool@gmail.com
பொருளாளர்: க. சஞ்ஜீவன் 0770449244
அம்பாள் முன்பள்ளி🌺
🌷பொதுக்கூட்டம் -ஆடி2023💐
🏫இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளியின் பொதுக்கூட்ட நிகழ்வு.
☀காலம் - 29/07/2023(சனிக்கிழமை)
⭐இடம் - இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளி.
☀நேரம் - காலை 9.00
-நிர்வாகம்-
இடைக்காடு புவனேஸ்வரி
அம்பாள் முன் பள்ளி
ஆடி - 2023
முன்பள்ளி சிறார்களுக்கான. ஒரு வாரகாலத்துக்கு தேவையான சத்துமா செலவீனம் அண்ணளவாக 5000/=செலவாகிறது.அச் செலவுத் தெகையினை சுற்றுலாவிற்கு தாங்கள் வழங்கிய நிதி பங்களிப்பின் மிகுதியில் இருந்து வழங்கினோம் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.
🙏🙏🙏
நன்றி
-நிர்வாகம்-
🙅இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளி🌺
🌷பொதுக்கூட்டம் -ஆடி2023💐
🏫இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளியின் பொதுக்கூட்ட நிகழ்வு.
☀காலம் - 29/07/2023(சனிக்கிழமை)
⭐இடம் - இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளி.
☀நேரம் - காலை 9.00
🌸🌺 நிகழ்ச்சி நிரல் 🎀♦
1) இறைவணக்கம் - 9.05 - 9.08Am
2) தலைமையுரை - 9.10 - 9.20Am
3) செயலாளர் அறிக்கை - 9.20 - 9.25Am
4) கணக்கறிக்கை வாசித்தல் 9.25 -9.50 Am
5)நிதி ஆளுகைக்குழு தலைவர் உரை - 9.50 -9.55Am
6) புதிய நிர்வாகத் தெரிவு 9.55 -10.20Am
7) புதிய நிர்வாக தலைவர் உரை - 10.20 -10.25Am
8) புதிய நிர்வாக செயலாளர் நன்றியுரை. 10.25 -130Am
9) பழைய நிர்வாகத்தினரிடம் இருந்து புதிய நிர்வாகத்தினர் ஆவணங்களைப் பொறுப்பேற்றல்.
10) புதிய நிர்வாக அங்கத்தவர்கள் குழு புகைப்படம் எடுத்தல்.
நன்றி
🙏
-நிர்வாகம்-
Moreஇடைக்காடு புவனேஸ்வரி
🏫அம்பாள் முன்பள்ளி 28.02.2023
💐 சுற்றுலா நிகழ்வு💐
- மாசி 2023 -
🔯புறப்படும் திகதி - 11/02/2023(சனிக்கிழமை )
📢புறப்படும் நேரம் - காலை 6.30
🚒புறப்படும் இடம் - இடைக்காடு மகாவித்தியாலய நுழைவாயில் முன் பக்கம்
🚩செல்லும் இடங்களும் உத்தேச நேரங்களும்
1) முன்பள்ளி - றீச்சா பயணம் >காலை6.30 -7.15am
2) 🚗றீச்சா பார்வை (சிறார்கள் மகிழகம்) [ 7.15 -11.30 am ]
3) றீச்சா - இயக்கச்சி உணவு அருந்தல் பயணம் [ 11.30 -12.00am ]
4) 🚚இயக்கச்சியில் உணவு அருந்தல் [ 12.00 -1.00pm ]
5) இயக்கச்சி உணவகம் - ஆனையிறவு பயணம் [ 1.00 - 1.15pm ]
6) 🚢ஆனையிறவு உப்பளம் பார்வை [ 1.15 - 2.00pm ]
7) ஆனையிறவு ,பரந்தன் ஊடாக - சங்கு பிட்டி பாலம் பயணம் [ 2.00 -2.30pm ]
8) சங்கு பிட்டி பாலம் பார்வை [ 2.30 -3.00 pm ]
10)சங்குபிட்டி பாலம் - பூநகரி மின் காற்றாலை பயணம் [3.15 -3.30 pm ]
09) 🌇பூநகரி மின் காற்றாலை பார்வை [3.30 - 4.15 pm ]
11) 🏠 பூநகரி - இடைக்காடு புவனேஸ்வரி அம்மன்முன் பள்ளி பயணம் [ 4.15 - 5.00 Pm ]
(இது உத்தேச நேரம் )
⭐றீச்சாவை தவிர மற்ற இடங்கள் பார்வை இடல் மட்டுமே.
🚉கட்டண விபரம்
🌺மேற்படி இடங்கள் சென்று வர
பஸ் கட்டணம் 40,000/=
☀வரும் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் அறவிடப்படும்
(உ+ம்) 50 சீற் ÷ 40000 = 800/=
☀5வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு றீச்சா நுழைவுக் கட்டணம் 300/=
(மற்றையவர்களுக்கு இலவசம்)
☀பொருளாதார இடரை கருத்தில் கொண்டு தவிர்க்க முடியாத காரணத்தால் அவரவர் தமது உணவு, பானங்களுக்கு தாமே பணம் செலுத்தி பெற்றுக் கெள்ளவும்.
☀வரும் சிறார்களுக்கு குடிநீர் வசதி, பணிஸ் என்பன வழங்கப்படும்.💦🍔
☀பெற்றோர்கள் வரும் ஒழுங்கில் ஆசனத்தில் அமரமுடியும்.
☀குறித்த நேரத்திற்க்கு பயணம் ஆரம்பிக்கப்படும் .
😥அதனால் ஏற்படும் அசெளகரியங்களுக்கு தாங்களே பொறுப்பாளிகள்.
☀மதிய உணவு (மரக்கறி) தேவைப் படுபவர்கள் முற்கூட்டியே அனுசா ரீச்சரிடம் பதிவு செய்யவும்.
🍴🍝 குறிப்பு -🎀 …
Moreஇடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன் பள்ளி
📠 நிர்வாகக் கூட்டம்
- 2022 ஆனி -
இடம் - புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளி மண்டபம்.
# திகதி - 12/06/2022(ஞாயிற்றுக் கிழமை)
நேரம் - பி.ப2.30 -பி.ப3.30 வரை
🌺விடயம் 🌺
1) நடை பெற்ற கலைவிழா பற்றியது.
2) கலை விழாச் செலவு விபரம் மற்றும் ஏனைய அபிவிருத்தி தொடர்பாக செலவாகும் நிதி நிலமை தொடர்பாக கலந்துரையாடல்.
3) மாதர் சங்கத்திற்கும் முன் பள்ளிக்கும் இடையிலான எல்லைக்கு அத்திவாரத்துடன் கம்பி வலை வேலி அமைத்தல்.
4)சிறு திருத்த வேலைகள் செய்தல். மலசலகூட பாதுகாப்பு மதிற் சுவர் அமைத்தல்.(சிறுவர் பாது காப்பை உறுதிப் படுத்துவதற்காக)
5)சிறுவர் அசையா விளையாட்டு உபகரணங்களை தற்காலிகமாக இடம் மாற்றல்.
6)நீர்க்குழாய் இணைப்பு வேலைகள் .
7) முன் பள்ளியை பசுமைப் படுத்தல்திட்டம்.(மரக் கன்றுகள் நடல்.
8) முன் பள்ளிக்கான முகாமைத்துவ அணி தொடர்பாக கலந்துரையாடல்.
9)அரசியல் கட்சியினர் (அங்கயன் அணி சார்பாக திரு த.ஜீவாகரன் அவர்கள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்தல்.
10)ஏனைய விடயங்கள்
👉 குறிப்பு - அனைத்து அங்கத்தவர்களும் தவறாது கலந்து கொள்ளவும்.
நன்றி🙏
- செயலாளர் -
நன்றி நவிலல்🙏
🔈அமரர்களான நாகலிங்கம் - தங்கரத்தினம் ஞாபகார்த்தமாக அவர்களது பேரன் குடும்பம் திரு.திருமதி கேதீஸ்வரன் (லண்டன்)அவர்களால் வழங்கப்பட்ட பெறுமதியான கற்றல் சாதனம்(BOX SET) மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதுடன்.நாமும் பெருமகிழ்வடைவதுடன். முன் பள்ளி சமூகத்தின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
🌷நாட்டின் பேரிடர் நிலமையிலும் பலத்த சிரமத்தின் மத்தியில் குறித்த சாதனத்தை முன்பள்ளி சமூகத்திடம் கையளித்த திரு திருமதி சரவணபவான் தம்பதிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
🌴முன்பள்ளியை அழகும் பசுமையாக்கும் திட்டத்தின் அடிப்படையில்
ஆலோசனை , நிதி அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கும் இடைக்காடு நம்பிக்கை நிதியத்தினருக்கும் எமது முன்பள்ளி சமூகத்தின் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
நன்றி
🙏🙏🙏
இவ்வண்ணம்
-முன் பள்ளிச்சமூகம்-
💐மழலைகளின் கலைநிகழ்வும் பரிசளிப்பு விழாவும் - 2022 (வைகாசி )🌷
மேற்படி தினத்திற்க்கு தாமாக முன்வந்து உதவிய
👫திரு திருமதி - சிறீ சத்தியானந்தம் (சுவிஸ்)
அவர்கள் 40 முன்பள்ளி மாணவர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்கியதுடன்.கடந்த வருடம் (2021) சிறார்களுக்கான
60 ,000/= பெறுமதியான கதிரை,மேசைகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
💁திரு திருமதி - முத்துலட்சுமி சிறீஸ்கந்தராஜா (ஓய்வு பெற்ற ஆசிரியர்) இடைக்காடு -25000 ரூபாவினை முன் பள்ளி வளர்ச்சிக்கென பெருளாளரிடம் கையளித்திருந்தார்.
👱திரு இளையதம்பி மகேசன் அவர்கள் ஊடாக அவரது சகேதரர் லண்டனை சேர்ந்த இளையதம்பி செல்வகுமாரன் என்பவர் மறைந்த பெற்றோர்களான அமரர் சுவாமிநாதர் இளையதம்பி நினைவாக
35800/=பெறுமதியான 25 செட் சிறுவர்களுக்கான கெளரவிப்பு சீருடை மற்றும் அதனை பாதுகாத்து வைப்பதற்கான பிளாஸ்ரிக் பெட்டி ஒன்றினையும் சேர்த்து கடந்த வருடம் முன் பள்ளிக்கு கையளித்தனர்.
🌺நாட்டின் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக பயன் படுத்த முடியாமையால் போக அதனை 2022 பரிசுத்தின விழாவில் முதன் முதலாக பயன் படுத்தப்பட்டது.
🍂மேற்படி நன்கொடைகளை கொடுத்து உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் முன் பள்ளி சமூகம் நன்றிகளை தெரிவிப்பதுடன்.
👉அவர்களும் அவர்களது உறவுகளும் ஆரோக்கியமாகவும், சகல செளபாக்கியதுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பாராக!
-நன்றி-
Moreஇடைக்காடு புவனேஸ்வரி அம்மன் முன்பள்ளி
செயற்குழு கூட்ட தீர்மானங்கள்
18-09-2021 சனிக்கிழமை இடம்பெற்ற இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் முன்பள்ளி செயற்குழு கூட்டத்தில் பின்வரும் முடிபுகள் எடுக்கப்பட்டன.
சிறப்பாக இயங்கி வந்த இடைக்காடு கலை இலக்கிய மன்றம் covid -19 காரணமாக பிள்ளைகளின் வரவில் ஏற்பட்ட குறைவும் மற்றும் பிற காரணிகளாலும் நிதிப் பற்றாக் குறைவு ஏற்பட்டதால் அதனைத் தொடர்ந்து நடாத்த சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து அதனை இயக்குவதற்கான நிதிக் கோரிக்கை ஒன்றை கலை இலக்கிய மன்ற செயற்குழு இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் முன்பள்ளியிடம் முன் வைத்துள்ளது. அதனை ஆராய்ந்த செயற்குழு புலம்பெயர்ந்து வாழும் நிதி ஆளுமைக் குழு உறுப்பினர்களிடம் கலந்துரையாடி, முன்பள்ளிக்கு கிடைக்கும் வட்டிப் பணத்தில் ஆசிரிய வேதனம், மற்றும் பிற செலவுகள் தவிர்த்து மேலதிகமாக உள்ள பணத்தில் ரூபா பத்தாயிரம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன் பள்ளியில் அமைக்கப்பட்ட தண்ணீர் தாங்கிக்கு சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப மூடி போடுதல்.
முன்பள்ளிக்கான பற்றுச் சிட்டையில் முன்பள்ளியின் அடையாளமாக முத்திரையை ( LOGO ) பதிப்பது.அதன் பின் சரியான பற்றுச் சிட்டையை நிதி வழங்குனர்களுக்கு வழங்குதல்.
நன்றி
செயற்குழு- இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் முன்பள்ளி
14-09-2021
சமூகத்தொற்று நோய் காரணமாக கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டிருக்கின்ற பொழுதிலும் முன்பள்ளிச் சூழல் இடையிடையே மூன்று ஆசிரியர்களும் இணைந்து துப்பரவுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த காலங்களில் தவணை விடுமுறை முடிந்து பாடசாலை ஆரம்பிக்கும் போது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணனந்து இவ் துப்பரவு பணிகளை செய்து வருவது வழமை..
இடர்காலத்திலும் முன்பள்ளி சூழலை துப்பரவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்படும் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதுடன்..முன்பள்ளியில் சில மாற்றங்களை கொண்டுவருவதற்காகவும் மற்றும் இவ் இடர் நிலமையிலும் பொருளாதாரரீதியில் மிகவும் நலிவுற்ற அவ் மூன்று ஆசிரியர்களுக்குமான கொடுப்பனவுகளை தடையின்றி மேற்கொள்வதற்காகவும் எம்மோடு இணைந்த புலம்பேர் உறவுகளை இத் தருணத்தில் மீண்டும் நன்றியுடன் நினைவுகூறுகின்றோம்
செயலாளர்
( தகவலுக்காக பதிவு செய்யப்பட்டது)
Moreமுன்பள்ளி அபிவிருத்தி செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இனிதே நிறைவடைந்திருக்கின்றன
1 - விளையாட்டு உபகரணங்கள் சீர்ப்படுத்தல் வர்ணம் பூசுதல்,தளபாடங்கள் வர்ணம் பூசுதல்,முன்பள்ளியின் கீழ் தளத்திற்கு வர்ணம் பூசுதல்,கரும்பலகை வர்ணம் பூசுதல்
2- குடிநீர் குழாய்கள் சீரமைத்தல்
முக்கிய் இவ் இரு செயற்பாடுகளையும் திரு.முருகவேல் சேர் அவர்களால் பொறுப்பேற்று செயற்படுத்தப்பட்டது
3- மாணவர்களுக்கு ஈர்ப்பான சில காட்சிப்படுத்தும் பதாதைகள்
4- மண்டப திரைச்சீலை மற்றும் கதவு யன்னல்களுக்கான திரை சீலை
இவ் இரு வேலைகளையும் முன்பள்ளி செயலாளர் அவர்களால் பொறுப்பெடுத்து செயற்படுத்தபட்டது
5- வாசல் படிகள் சீரமைத்தல் மற்றும் சில சீமெந்து வேலைகள்
இவ் வேலையை முன்பள்ளி பொருளாளர் அவர்களால் பொறுப்பேற்று செய்யப்பட்டது
6- சறுக்கு விழும் இடத்திற்கு தற்போது தேவையான அளவுக்கு இரண்டு உரப்பை கடற்கரை மண் பொருளாளர்,செயலாளர் ஆகிய இருவரால் மோட்டார் சைகிளில் ஏற்றிவந்து நிரப்பப்பட்டுள்ளது
7- ஆசிரியர் சம்பளம் அவர்களது சேவைக்காலத்திற்கு ஏற்ப
1ம் ஆசிரியர் 10,000 ( 2000/=அதிகரித்தது)
2ம் ஆசிரியர் 9,000/=( 1,000/= அதிகரித்த)
3ம் ஆசிரியர் - புதியவர் 8,'000/=
இச் முடிவு நிதி ஆளுகை குழு பிரதிநிதிகள் மற்றும் முன்பள்ளி நிர்வாக கலந்துரையாடலில் ஆலோசித்து முடிவாக்கப்பட்டது
நான் ஆரம்பத்தில் இருந்து கூறிவரும் " கிராமத்தில் உள்ள உறவுகளின் பங்களிப்பு என்ற கருத்துக்கு அமைய"
கிராமத்தை சார்ந்த மூத்த உறவுகளான திரு .முருகவேல் சேர் மற்றும் திரு.கதிர்காமநாதன் ( வைரம் ஐயா) ஆகிய இருவரும் என்ன கேட்டாலும் ( ஆலோசனை or வேலை) அதை ஆர்வத்தோடு செயற்படுத்துகின்ற தன்மை எமது நிர்வாகத்திற்க்கு உதவியாகவும் ஒர் பலமாகவும் உத்வேகமாகவும் காணப்பட்டமை ஒர் சிறப்பாகும்
கடந்த zoom meeting இல் செய்யவேண்டிய வேலைகளுக்கு மேலதிகமாக அனைவரும் ஆலோசித்து தேவை கருதி சில மேலதிக வேலைகளையும் செய்துள்ளோம்
இச் செயற்பாடுகளை செயற்படுத்திய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நிதி ஆளுகை குழு உறுப்பினர்கள் மற்றும் ஊக்கமூட்டும் கருத்துக்கள், ஆக்கபூர்வமான கருத்துக்கள், ஆலோசனைகள் வழங்கிய புலம்பெயர்ந்த இடைக்காடு உறவுகளுக்கும், நிதிப்பங்களிப்புக்கள் செய்த ஒவ்வொரு உறவுகளுக்கும் நெஞ்சாந்த நன்றிகள்
" ஒற்றுமையே பலம்"
செயலாளர்
க.வீரசிவாகரன்
( வீரா)
நன்கொடையாக வழங்கப்பட்ட நிதி விபர குறிப்புகள்
பிரித்தானியாவில் பெற்றுகொண்ட நிதி
£9850.00
இலங்கையில் பெற்றுகொண்ட நிதி
(U k அன்பர் அவர்களால் வழங்கப்பட்டது)
£354.61
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர்பாடசாலையின் வளர்ச்சிக்காக சுவிஸ் வாழ் எம்மவர்களால் வழங்கப்பட்ட நிதி விபரம்.
1. சிவசுப்பிரமணியம் பாஸ்கரன் 50-00
2. பெரியதம்பி சிவலிங்கம் 100-00
3. கந்தையா செந்தில்ராஜன் 100-00
4. சுப்பிரமணியம் உதயகுமார் 100-00
5. அருள்வாசன் சுவாமிநாதன் 100-00
6. கந்தையா கண்ணதாசன் 100-00
7. சிவசுப்பிரமணியம் சுயாகரன் 100-00
8. சிவனடியான் குணசீலன் 100-00
9. சின்னத்துரை தனேஸ்வரன் 50-00
10. கந்தசாமி ராஜ்குமார் 50-00
11. வேலுப்பிள்ளை ஜெயக்குமார் 50-00
12. கிளியக்கா 100-00
13. ஞானசேகரம் கவிதா 108.75
14. சிறிமனோகரன் ( ஜேர்மன் சசி 108.75
15. விதுன் காண்டீபன் 100-00
16. கிருஸ்ணர் ஜெயச்சந்திரன் 100-00
17. ஞானறதி சாந்தகுமார் 100-00
18. தர்சினி ஜெகதீஸ்வரன் 100-00
19. பாமதி வைரவநாதன் 100-00
20. றதிவதனி நற்குணசிங்கம் 100-00
21. மாதவன் இராசலிங்கம் 100-00
22. இளமுருகன் ஆறுமுகம் 100-00
23. சிற்றம்பலம் விக்னேஸ்வரன் 100-00
24. சிறிரமணன் 50-00
மொத்தநிதி சுவிஸ் பிராங் 2167.50
இலங்கை ருபா 504350.00
இடைக்காடு ஆரம்ப பள்ளி நிர்வாகம், எமது நிர்வாகத்தின் ஊடாக கோரிய நிதி உதவியை கருத்தில் கொண்டு தாமாகவே வலிந்து அள்ளி வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் எமது நிர்வாகம் சார்பாக உளப்பூர்வமாக நன்றிகள்.Govid 19 காரணமாக பொது நிகழ்வின் மூலம் ஒன்றிணைய முடியாத நேரத்தில் நிதி வழங்கல் மூலம் ஒன்றிணைந்தது ஒற்றுமையை வலுப்படுத்தி, நம்பிக்கையூட்டி ,மகிழ்ச்சி கரமான சூழலை உருவாக்கிய உறவுகளை வாழ்த்துகின்றோம்.
மேலும் நிதி வழங்கியவர்களின் விபர அட்டவணை கீழே உள்ளது. இதில் யாருடைய பெயர் தவறவிடப்பட்டு இருந்தால், அல்லது தொகையில் மாற்றம் இரூந்தால் ,அல்லது இதுபற்றிய வேறு கருத்துகள் இருப்பின் ,தயக்கம் இன்றி உடன் தொடர்பு கொள்ளவும்.
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கம்(UK),
சுவிஸ் நிதி ஆளுகை குழு
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலை
இன்று (18-04-2021)காணொளி மூலமாக நடைபெற்ற செயற்குழு கூட்ட அறிக்கை,
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர்பாடசாலையின் நிர்வாக செயற்குழுவின் தலைவர்,
செயலாளர், பொருளாளர் ஆகியோருடன் விசேட செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து இன்று
நடாத்திய கலந்துரையாடலின் பிரகாரம், அங்குள்ள நிர்வாக செயற்குழுவின் தலைவர்,
செயளாளர், பொருளாளர் ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக பின்வரும் முடிவுகள்
எடுக்கப்பட்டன, அவற்றை அங்குள்ள நிர்வாக செயலணி நிறைவு செய்வார்கள்.
1. பாலர் பாடசாலை ஆசிரியை ஒருவர் விபத்தில் சிக்கியதால் ஏற்கனவே தெரிவு
செய்யப்பட்ட மூன்றாவது ஆசிரியர் 19-04-2021 திங்கள் முதல் தனது கடமையை
பெறுப்பேற்கிறார், ஆசிரியர்கள் மூவருக்குமான ஊதியம் நிரந்தர வைப்பில் இருந்து
கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தில் இருந்து ரூபா 30000-00 தில் அவர்களின்
சேவைக்கால அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும்.
2. மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கான வண்ணக் கடதாசிகள் போன்ற பொருட்களை
வாங்கவும், போட்டொ பிரதி எடுத்தல் போன்ற தேவைகளுக்கு அதே வட்டிப் பணத்தில்
5000-00 வழங்கப்படும்,
3. மாணவர்களின் விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படும், விளையாட்டு
உபகரணங்களும் திருத்தியமைக்கப்படும்.
செயற்குழுவும், விசேட செயலணியும்.
18-04-2021
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலைக்கான நிதி சேகரிப்பு
மொன்றியல் வாழ் அன்பர்கள் வழங்கிய நிதி விபரம். பகுதி -1
1. செந்தில்ரூபி பரமசிவம் 500-00
2. மைதிலி மகேந்திரன் 500-00
3. பிரசாந்தி கஜன் 500-00
4. வனிதா மகிபன் 200-00
5. சுபா குகதாசன் 200-00
6. வதனி ஈஸ்வரதம்பையா 100-00
7. சுபத்திரா ஜெயகாந்தன் 100-00
8. வனஜா ஜெயகுமார் 200-00
9. கஜனி ஜெகநாதன் 400-00
10. சாந்தரூபி ஞானவேல் 100-00
அல்பேட்டா, கனடா
11. கிருத்திகா ரத்னவேல் 500-00
ரொரன்ரோ ,கனடா
12. சந்திரமதி வரதராஜன் 100-00
13. புனிதவதி கணேசன் 100-00
14. மோகனா ஈஸ்வரமூர்த்தி 250-00
15. நிவசா ஜெயகுமார் 500-00
16. நாகேஸ்வரி சுரேஸ் 100-00
17. சுமித்திரா சத்தியநாராயணன் 500-00
18. சுபத்திரா சிவனொளிபாதம் 100-00
19. லோஜி ஞானசேகரம் 100-00
20. தயாளினிதேவி கருணாகரன் 500-00
21. மொழி வேல் 50-00
22. சிவலோஜினி சிறிசிவகாசிவாசி 100-00
23. சுரேன் பரமேஸ்வரன் 100-00
24. பத்மாவதி நவகுமார் 500-00
25. செல்வதி பார்த்தீபன் 100-00 ----------- 6400-00
---------------------------------------------------------------------------
ரொரன்ரோ கனடா
1. தம்பிமுத்து கதிரமலை 500-00
2. மோகனா கேசவமூர்த்தி 500-00
3. வசந்தமலர் பொன்னீஸ்வரன் 500-00
4. முருகேசு குகன் 500-00
5. சுகி இளங்கோ 500-00
6. அனுசா சுதன் 500-00
7. சுபத்திரா கந்தையா 500-00
8. முத்துலட்சுமி சிவலிங்கம் 500-00
9. அரவிந்தன் மகேசன் 250-00
10. ரவீந் மகேசன் 250-00
11. பரமேஸ்வரி கந்தவேல் 200-00
12, குகமலர் இடைக்காடர் 200-00
13. பவானி கணேசமூர்த்தி 200-00
14. சிவரூபி செல்வராஜ் 200-00
15. கமலினி முருகேசமூர்த்தி 200-00
16. கஜானி தனஞ்செயன் 200-00
17. விஜயலட்சுமி கந்தையா 200-00
.18. விழி ரகுநாதன் 100-00
19. பிறேமா சுப்பிரமணியம் 100-00
20. சத்தியதேவி உதயணன் 100-00
21. சிவசக்தி சின்னராசா …
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலை
கிடைக்கப் பெற்ற நிதியினை கையாள்வதற்கான உத்தேச செயற் திட்டம்.
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாடசாலை நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக் கிணங்க , இடைக்காடு இணையம் அதற்கான முன் முயற்சிகளை மேற்கொண்டு புலம்பெயர் வாழ் எம் உறவுகளுடன் தொடர்பு கொண்டதன் பயனாக ,கனடா, லண்டன், சுவிஸ் ,டென்மார்க் போன்ற நாடுகளில் வாழும் எம் உறவுகள் கணிசமான நிதியினை வழங்கி உதவியிருக்கிறார்கள். முதலில் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள். இனி கிடைக்கப் பெற்ற நிதியினை எவ்வாறு மிகக் கவனத்துடன் பாவிப்பது என நாம் ஓர் திடமான திட்டத்துடன் செயலாற்றுவது அவசியமாகும். எனெனில் இதுவே இறுதியாக கிடைக்கும் நிதியாகும். இதற்கு மேல் எம்மால் இன்னொருமுறை நிதி சேகரிப்பில் ஈடுபட முடியாது, மக்களாலும் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்க முடியாது, எனவே கிடைக்கப் பெற்ற நிதியினை நீண்ட காலத்திற்கு பயன் படும் முறையில் அதற்கான திட்ட வரைபு ஒன்றை நாம் உருவாக்கி அதனை செயல் படுத்த வேண்டியது அவசியமாகும்.
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலை
இன்றைய கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கான முன்மொழிவுகள்.
1. இடைக்காட்டில் உள்ள விசேட கல்வியை பெற்றுக் கொண்ட பெண் பிள்ளை ஒருவரை தெரிவு செய்து அவருக்கு பாலர்பாடசாலை சம்பந்தமான மூன்று மாதகால விசேட பயிற்சி ஒன்றினை எமது செலவில் வழங்கல். அவர் இரண்டு வருட காலம் கட்டாயமாக இப் பாலர் பாடசாலையில் பணி புரிதல் அவசியம். அத்துடன் மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தினையும் செயற்படுத்தல் வேண்டும்.
2. மாணவர்களுக்கு கல்வி மட்டும் கற்பித்தலுடன்நிற்காது, சுற்றாடல் அறிவியல் போன்ற விடயங்களுக்கான சுற்றுலாவுடன் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் வேறு பாலர் பாடசாலை மாணவர்களுடன் இணைந்து பயனுள்ள விடயங்களை பகிர்ந்து கொள்ளல்
3. மாணவர்களுக்கான சீருடை ஒன்றினை அவர்களுக்கு வழங்கல். புற களப் பயிற்சிக்கான வளங்களை பெற்றுக் கொடுத்தல். வர்ணம் தீட்டுதல். மாதிரி வடிவங்களை பொருத்துதல், வடிவமைத்தல் போன்றவை.
4. பழுதடைந்திருக்கும் வெளிக்கள விளையாட்டு உபகரணங்களை திருத்தியமைத்தல்.
5. கிடைக்கப் பெற்ற நிதியினை அதியுயர் வட்டியை பெறுவதற்காக 60 வயதிற்கு மேற்பட்ட மூவரை தெரிவு செய்து அவர்களின் பெயரில் வைப்பில் இடப்படுகிறது. அவர்களின் மனமுவந்த ஒத்துழைப்பிற்காக மாதாமாதம் அவர்களுக்கு ஒரு சிறு தொகை பணத்தினை கிடைக்கப் பெறும் வட்டியில் இருந்து வழங்கல்.
மேற்படி அலோசனைகளை பாலர் பாடசாலை நிர்வாக செயற்குழுவும், இடைக்காட்டில் உள்ள விசேட செயற்குழு உறுப்பினர்களும் கூடி அவற்றை முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்து புலம்பெயர் விசேட செயற்குழுப்பினர்களுடன் இணைந்து அவற்றை செயற்படுத்தப்படும்
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் …
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலையின் நிதியுதவிக் கோரிக்கை.
உலகெங்கும் பரந்து வாழும் எம் அன்பு உறவுகளே!
மேற்படி விடயம் தொடர்பாக இடைக்காடு இணையத்தில் நாம் குறிப்பிட்டதற்கமைய இத்தொகையானது இலங்கையிலுள்ள வங்கியில் வைப்பில் இடப்பெற்று அதில் இருந்து கிடைக்கும் வட்டியை எடுத்துத்தான் அவர்களுக்கான ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
இதுவரை காலமும் முன்பள்ளியானது எம்மிடம் எந்தவொரு நிதிக் கோரிக்கையையும் வைக்கவில்லை, தற்போதைய சூழ்நிலையில் அவர்களால் இதனைத் தவிர வேறு வழி அவர்களுக்கு இருக்கவில்லை. நாமும் தொடர்ந்து வருடாவருடம் நிதி சேகரிப்பில் ஈடுபடமுடியாது, இதுவே முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றோம் , எனவே கணிசமான தொகை ஒன்றை வைப்பில் இடுவதன் மூலம் மீண்டும் ஒரு நிதிக் கோரிக்கை எழாதவாறு செய்ய வேண்டும் என்பதே எமது முடிவாகும்,
அப்படி சிறந்து
விளங்கிய பாலர் பாடசாலை covid-19 காரணமாக செயல்படாததால் அங்கு பணியாற்றும்
ஆசிரியப் பெருந்தகைகளுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும்
வேதனைக்குரிய விடயமாகும்.
இரண்டு ஆசிரியர்கள் 8000-00 ரூபா ஊதியத்தில் கடமையாற்றினார்கள். பிள்ளைகளின் வரவு
அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும், மற்ற இரு ஆசிரியைகளின் விடுமுறை நாட்களை ஈடு
செய்யவும், மற்றும் மூன்றாவது ஆசிரியையின் குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு
மூன்றாவது ஆசிரியை நியமிக்கப்பட்டார், அரசினால் இரு ஆசிரியர்களுக்கு 6000-00 ரூபாவுடன்,
நிர்வாகத்தால் வழங்கப்படும் 8000-00 சேர்த்து 14000-00 உம், மூன்றாவது ஆசிரியைக்கு 8000-00
ம் வழங்கப்படுகிறது, எனவே மாதம் 24000-00 தேவைப்படுகின்றது, பிள்ளைகளின் பெற்றாரால்
வழங்கப்படும் நிதி நாளாந்த நடைமுறைச் செலவிற்குதான் போதுமானதாக உள்ளது.
இந் நிலை நீடிக்குமாயின் அந்த ஆசிரியர்கள் அதனைவிட்டு விலக நேரிடும், அவ்வாறு அவர்கள்
விலகினால் எம் இளம் சிறார்களின் கல்வி பாதிக்கப்படும், மாணவச்செல்வங்களும் பிறிதொரு
இடத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும், இவ்வாறான நிலைமை தொடருமானால் இந்த
பாலர் பாடசாலை கைவிடப்பட வேண்டிய நிலை உருவாகும். இதனால் பாதிக்கப்படுவது எமது
சந்ததியினராகும்
அதனை புலம் பெயர் மக்களாகிய நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?,
இல்லையாயின் நாம் அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் அதற்கான நிதிக்
கோரிக்கையை அவர்கள் விடுத்துள்ளார்கள் ,இணைப்பை பார்க்கவும்.
எனவே புலம் பெயர் உறவுகளே!
உங்கள் நாடுகளில் நீங்கள் இணைந்து நிதியினை சேகரித்து e transfer ஊடாக அவர்களுக்கு அனுப்பி
உதவுமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.
தொடர்புகளுக்கு;
இ. செல்வறாஜ் 647 407 8358. kapilan@rogers.com
வை பொன்னீஸ்வரன் 416 409 6521. vponnes@hotmail.com
நா. மகேசன் 416 949 1815
வே. இளங்கோ 416 909 1107. elangovelupillai@gmail.com
ச. பரமசிவம் 1 514 617 3150
நா. மகேந்திரம் 1 514 886 8659
சி. குணம் (சுவிஸ் ) …