இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலையின் நிதியுதவிக் கோரிக்கை.

By வே. இளங்கோ. on Feb. 23, 2021

Card image cap

இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலையின் நிதியுதவிக் கோரிக்கை.
உலகெங்கும் பரந்து வாழும் எம் அன்பு உறவுகளே!
மேற்படி விடயம் தொடர்பாக இடைக்காடு இணையத்தில் நாம் குறிப்பிட்டதற்கமைய இத்தொகையானது இலங்கையிலுள்ள வங்கியில் வைப்பில் இடப்பெற்று அதில் இருந்து கிடைக்கும் வட்டியை எடுத்துத்தான் அவர்களுக்கான ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

இதுவரை காலமும் முன்பள்ளியானது எம்மிடம் எந்தவொரு நிதிக் கோரிக்கையையும் வைக்கவில்லை, தற்போதைய சூழ்நிலையில் அவர்களால் இதனைத் தவிர வேறு வழி அவர்களுக்கு இருக்கவில்லை. நாமும் தொடர்ந்து வருடாவருடம் நிதி சேகரிப்பில் ஈடுபடமுடியாது, இதுவே முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றோம் , எனவே கணிசமான தொகை ஒன்றை வைப்பில் இடுவதன் மூலம் மீண்டும் ஒரு நிதிக் கோரிக்கை எழாதவாறு செய்ய வேண்டும் என்பதே எமது முடிவாகும்,
அப்படி சிறந்து
விளங்கிய பாலர் பாடசாலை covid-19 காரணமாக செயல்படாததால் அங்கு பணியாற்றும்
ஆசிரியப் பெருந்தகைகளுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும்
வேதனைக்குரிய விடயமாகும்.
இரண்டு ஆசிரியர்கள் 8000-00 ரூபா ஊதியத்தில் கடமையாற்றினார்கள். பிள்ளைகளின் வரவு
அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும், மற்ற இரு ஆசிரியைகளின் விடுமுறை நாட்களை ஈடு
செய்யவும், மற்றும் மூன்றாவது ஆசிரியையின் குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு
மூன்றாவது ஆசிரியை நியமிக்கப்பட்டார், அரசினால் இரு ஆசிரியர்களுக்கு 6000-00 ரூபாவுடன்,
நிர்வாகத்தால் வழங்கப்படும் 8000-00 சேர்த்து 14000-00 உம், மூன்றாவது ஆசிரியைக்கு 8000-00
ம் வழங்கப்படுகிறது, எனவே மாதம் 24000-00 தேவைப்படுகின்றது, பிள்ளைகளின் பெற்றாரால்
வழங்கப்படும் நிதி நாளாந்த நடைமுறைச் செலவிற்குதான் போதுமானதாக உள்ளது.
இந் நிலை நீடிக்குமாயின் அந்த ஆசிரியர்கள் அதனைவிட்டு விலக நேரிடும், அவ்வாறு அவர்கள்
விலகினால் எம் இளம் சிறார்களின் கல்வி பாதிக்கப்படும், மாணவச்செல்வங்களும் பிறிதொரு
இடத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும், இவ்வாறான நிலைமை தொடருமானால் இந்த
பாலர் பாடசாலை கைவிடப்பட வேண்டிய நிலை உருவாகும். இதனால் பாதிக்கப்படுவது எமது
சந்ததியினராகும்
அதனை புலம் பெயர் மக்களாகிய நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?,
இல்லையாயின் நாம் அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் அதற்கான நிதிக்
கோரிக்கையை அவர்கள் விடுத்துள்ளார்கள் ,இணைப்பை பார்க்கவும்.
எனவே புலம் பெயர் உறவுகளே!
உங்கள் நாடுகளில் நீங்கள் இணைந்து நிதியினை சேகரித்து e transfer ஊடாக அவர்களுக்கு அனுப்பி
உதவுமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.

தொடர்புகளுக்கு;
இ. செல்வறாஜ் 647 407 8358. kapilan@rogers.com
வை பொன்னீஸ்வரன் 416 409 6521. vponnes@hotmail.com
நா. மகேசன் 416 949 1815
வே. இளங்கோ 416 909 1107. elangovelupillai@gmail.com
ச. பரமசிவம் 1 514 617 3150
நா. மகேந்திரம் 1 514 886 8659
சி. குணம் (சுவிஸ் ) 41 79 607 5093 guna7000@hotmail.com
இ .பவன் (லண்டன்) 44 77 18117674
கேதீஸ் (லண்டன்) 44 7961 929197
க. சஞ்சீவன்(பொருளாளர்) 01194 77 044 9244
Commercial Bank Atchuvely. Account No: 8006843195