கட் டுப்பாடா இருங்கள்.ஆனால் கட்டுப்பாட்டுக்குள் இருக்காதீர்கள் (Oct. 13, 2024)

canada
Informed by : நா. மகேசன்
Contributed by : Elango veluppillai
Card image cap

கட்டுப்பாடாக இருங்கள், ஆனால் கட்டுப்பாட்டுக்குள் இருக்காதீர்கள்

பல பேர்களின் ஆதரவுடன், அவர்களின் கருத்து உள்வாங்கலுடன் நான் இதை எழுதி உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். என்னை யார் கீழே தள்ள நினைக்கின்றார்களோ, அவர்கள்தான் என்னை உயர்த்தி விடுகிறார்கள். என் கட்டுப்பாடு இல்லாத செயற்பாடுகள், நான் இதை எனக்கு உதாரணமாகச் சொல்கின்றன.. இது உங்கள் எல்லோருக்கும் பொருந்தும்.
நான் விரும்பிய காரியத்தைச் செய்வதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது என்று தவறான எண்ணம் எல்லோருக்கும் இருக்கின்றது. ஒருவர் ஆசைப்படுவது எல்லாம் எப்பொழுதும் அடைய முடிவதில்ல. பல நேரங்களில் மதிப்புக்களின் உயர்வுகளையும், கட்டுப்பாட்டின் நன்மைகளையும் மற்றவர்கள் புரிந்து கொள்வது அவ்வளவு இலகுவானது இல்லை. மாற்று வழிகளில் செய்தால் இது சுலபமாகவும், செளகரியமாகவும் இருக்கலாம் என்று கூட தோன்றலாம். சிலநேரங்களில் கட்டுப்பாடு இல்லாமல் இயங்குவது எம்மை எப்படி கீழே தள்ளும் என்பதற்கு நான் ஒரு உதாரணம் சொல்கின்றேன். இரு சவாரி மாட்டுக் கன்றுகளை கயிற்றால் கட்டி விற்பனை செய்பவர் கொடுக்கிறார், அதை வாங்கியவர் கொண்டுவரும் போது அவைகள் வேகமாக நடந்து வருகின்றன. அவர் கயிற்றின் நீளத்தை மீண்டும் விட்டுக் கொடுக்கின்றார். அவை இன்னும் வேகமாக நடக்கின்றன. அதன் பிறகு கயிறு முடிந்து விடுகின்றது. இவர் யோசித்தார் இந்த மாடுகளின் வேகத்தைக் கட்டுப் படுத்துவது இந்தக் கயிறுதானே, இந்தக் கயிற்றை விட்டு விட்டால் மாடுகள் இன்னும் வேகத்தில் செல்லும் என்று கயிற்றை விட்டு விட்டார். மாடுகள் ஓடிச் சென்று விட்டன. இப்போது என்ன நடந்தது, மாடுகள் தொலைந்து விட்டன. மாடுகளை இவருக்குச் சொந்தமாக கட்டுப்படுத்தி வைத்திருந்தது கயிறு, கயிற்றை விட்டு விட்டார். என்ன நடந்தது கட்டுப்பட்டை இழந்தார், மாடுகளையும் இழந்தார். இதில் இருந்து நாம் புரிந்து கொள்ளும் உண்மை என்ன. கட்டுப்பாடாக நாம் சமுதாயத்திலிருந்தால் மதிப்பையும் கெளரவத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.
நான் சுதந்திரமாக வாழ விரும்புகிறேன் என்று சட்டதிட்டங்களை மதிக்காது அவைகளைக் கடைப்பிடிக்காமல் வாழ்ந்தால் என்ன நடக்கும், நடுவீதியில் நடந்து சென்றால் என்ன நடக்கும் எனக்கு விபத்து நடக்கும். கட்டுப்பாடு இல்லாமல் அளவிற்கு அதிகமாக மது அருந்தினால் என்ன நடக்கும். மறுநாள் தலைவலியால் வருந்தவேண்டி இருக்கும். வீதி ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்காமல் நாம் வாகனத்தை ஓட்டினால் விபத்திற்கு உள்ளாகி விட வேண்டிவரும். கட்டுப்பாடு இல்லாமல் உணவு உண்டால் அதிக நோய்களை எதிர் கொள்ள வேண்டிவரும். இதனால்தான் நாங்கள் கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்று சொல்கின்றேன்.
ஆனால் கட்டுப்பாட்டுக்குள் இருக்காதீர்கள் என்று நான் சொல்கின்றேன் இதன் அர்த்தம் …

More

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா குளிர்கால ஒன்று கூடல் -2024 (Oct. 13, 2024)

canada
Informed by : IMV OSA Canada
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா
குளிர்கால ஒன்று கூடல் -2024

எமது குளிர்கால ஒன்றுகூடல் வரும் மார்கழி மாதம் 25ம் திகதி (December 25th, 2024, Christmas Day) அன்று மாலை 5 மணியிலிருந்து 12 மணி வரை BABA Banquet Hall இல் நடாத்துவதாக 22-09-2024 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விழாவிற்கான உங்கள் வருகையை செயற்குழு உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டு Nov 30th திகதியிற்கு முன்னர் உறுதிப்படுத்தி கொள்ளவும்.
அத்துடன், கலை நிதிகழ்சசியில் பங்குபற்ற விரும்பும் பிள்ளைகளின் பெயர் மற்றும் நிகழ்ச்சி விபரங்களையும் Nov 30th திகதியிற்கு முன்னர் அறியத்தரவும். நிகழ்ச்சிகளை 6-7 பேர் கொண்டசிறு குழுக்களாகவும், ஒரு பிள்ளை ஒரு நிகழ்ச்சியில் மட்டும் பங்குபற்றுமாறும் அமைப்பது விரும்பத்தக்கது.
இவ்வருடகலை நிதிகழ்ச்சியில் பங்குபற்றும் சிறுவர்களிற்கான நினைவுப்பரிசில்களை அன்பளிப்பு செய்ய விரும்புவார்களும் செயற்குழு உறுப்பினர்களுடன் தொடர்புகொள்ளவும்.
தயவு செய்து கடைசி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே உங்கள் வருகையை உறுதிப்படுத்தினால், நிகழ்ச் சிகளை ஒழுங்கு செய்யும் செயற்குழுவினர்க்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இதற்கான கட்டணம் :
Family with kids under 21 years - $100
Single (above 21 years old ) - $50

நன்றி
செயற்குழு

More

மரண அறிவித்தல் (Aug. 26, 2024)

canada
Informed by : ஞானசேகரன்
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

யாழ் அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தைப் புகுந்த இடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி சந்தையனார் 22.08.2024 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சந்தையனார் அவர்களின் ஆருயிர்த் துணைவியாரும், ஞானசேகரன் (சேகர்) அவர்களின் பாசமிகு தாயாரும், லோஜினி (லோஜி) அவர்களின் அன்பு மாமியாரும், பொற்சிலம்பம்மாள் (இலண்டன்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ஆறுமுகசாமி (கனடா), நடராஜா (அவுஸ்திரேலியா), வேற்பிள்ளை (இலண்டன்), சிவசிதம்பரேசன் (கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும் காலஞ்சென்றவர்களான கந்தையனார், மகேஸ்வரி மற்றும் இரத்தினசிங்கம், தேவகி (இலண்டன்), மஹாசரோஜினிதேவி (கனடா) யோகசோதீஸ்வரி (அவுஸ்திரேலியா), சொர்ணாம்பிகை (இலண்டன்), தேன்மொழி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், இராசமணியின் (இலங்கை) அன்புச் சகலியும், காலஞ்சென்ற சிவகோசாரியார் (சிவாஜி) வாணி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும், நாவரசன் (அயர்லாந்து), கிரிதரன் (இலண்டன்), சிலம்புச்செல்வி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் பெரிய தாயாரும், கணேஸ்வரன் (இலண்டன்), வசந்தா (இலண்டன்), பிருந்தா (கனடா), பிரஷாந்தன் (கனடா), விஜயரூபன் (அவுஸ்திரேலியா), சாந்தரூபன் (அவுஸ்திரேலியா), துவாரகா (இலண்டன்), தீபன் (இலண்டன்), அர்ச்சுனா (கலிபோர்னியா) ஆகியோரின் அன்பு பெரிய மாமியும், சிவா, சகானா, சாயி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்
ஞானசேகரன் ( Segar ) (647) 294-1941
லோஜினி ( Loji ) (416) 315-0654
நிகழ்வுகள்:

திருவுடல் பார்வைக்கு/ Viewing

August 31st, 2024 (Saturday) between 5:00pm – 9:00pm

திருவுடல் பார்வை மற்றும் இறுதிக்கிரியை/ Viewing & Cremation

September 1st, 2024 (Sunday) between 8:00am – 11:00am

Ajax Crematorium & Visitation Centre
#384 Finlay Ave, Ajax, ON L1S 2E3

More

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா (Aug. 3, 2024)

canada
Informed by : IMV-OSA Committee
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

கோடைகால ஒன்று கூடல் -2024
தமிழர்களின் மிகையான பண்புகளில் விருந்தோம்பல் மிக முக்கியமானதொன்றாகும். ஆண்டாண்டு தோறும் நடைபெறும் எமது கோடைகால ஒன்று கூடலில் பிரதானமான நோக்கமாக இருப்பது, வந்தோரை, விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்பதும், விருந்தோம்பலும் ஆகும்.
அதற்கமைய இந்த ஆண்டும் காலையில் மூட்டிய அடுப்பு காலை உணவு, மதியம் BBQ - கோ ழிப்புக்கை, மாலை நேர தேநீர் -சிற்றூண்டி, இறுதியாக இடியப்ப mix என தொடர்ந்து வேலை செய்து கொண்டுதான் இருந்தது. அந்த உன்னதமான செயலுக்கு தொடர்ந்தது தமது பங்களிப்பினை வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களிற்கு முதலில் நன்றி சொல்லக் கடைமைப்பட்டுள்ளோம்.
எமது கோடைகால ஒன்று கூடலை விழாவாக மாற்றி காணுவது வருடாவருடம் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். இம்முறையும் சனிக்கிழமை காலை 7 மணிக்கு COSTCO shopping இல் ஆரம்பித்து அதைத்தொடர்ந்து மாலையில் marinate செய்வதில் நிறைவடைந்து. மீண்டும் மறுநாள் காலையில் இவ்வளவு பொருட்களையும் park இற்கு எடுத்துச்சென்று பின்னர் மாலையில் திரும்ப கொண்டுவர உதவிய அனைத்து நண்பர்களிற்கும் நன்றிகள்.
ஒன்று கூடலை மேலும் இலகுவாக்க, இனிமையாக்க உதவிய திரு.திருமதி. மகேந்திரம் - மைதிலி தம்பதி (விளையாட்டுப் பரிசில்கள் - Water Bottles), திரு.திருமதி.பரமசிவம் - செந்தில்ரூபி தம்பதி (Ice Cream) திரு.திருமதி. ஸ்ரீ சிவகாசிவாசி - சிவலோஜினி தம்பதி (கோழிப்புக்கை), திரு.திருமதி.பிரசன்னா - தேனுகா தம்பதி (Cake), , திரு.சின்னத்துரை (சோளம்), மற்றும் S.P. Importers (Nelli Crush) அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். இவைகள் மட்டுமல்லாது மேலும் பல உணவு வகைகளையும் கொண்டுவந்த அனைத்துள்ளங்களிற்கும் நன்றிகள்.
கோடைகால ஒன்று கூடலிற்கு வருகைதந்த சிறார்களை மகிழ்விக்க, "Fun Games மற்றும் Soccer போன்ற விளையாட்டுக்களை அவரவர் வயதிற்கேற்ப சரியான ஒழுங்கமைப்புடன் தொடர்ச்சியாக நடாத்திய இளைய சமுதாயத்தினருக்கு (Youths ) மிவும் நன்றிகள்.
இறுதியாக, ஒன்று கூடலிற்கு வருகை தந்து சிறப்பித்த எமது ஆங்கில ஆசிரியர் திரு.ஸ்ரீதரன் அவர்களிற்கும்
நன்றிகள் பலகோடி!

நன்றி
செயற்குழு

More

Mr. S.Sritharan Master visits summer get together in canada (July 30, 2024)

canada
Informed by : Webadmin
Contributed by : Elango veluppillai
Card image cap

கனடாவை தளமாகக் கொண்ட இடைக்காடு மகா வித்தியாலயத்தின் “பழைய மாணவர் சங்கத்தின்” செயற்குழு உறுப்பினர்களே,

நேற்று, ஜூலை 28, 2024 அன்று நடைபெற்ற, ஒன்றுகூடுதலை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து, பாராட்டு மற்றும் பரிசுகள் அடங்கிய நினைவுச் சின்னத்தை வழங்கி என்னைக் கெளரவித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்றைய தினம் என் வாழ்வில் ஒரு சிவப்பு எழுத்து தினம். ஆசிரியரின் பங்கை ஒரு விவசாயியுடன் ஒப்பிட்டு, இடைக்காடு மகாவித்தியாலயத்தில் எனது முன்னாள் சகாக்களுடன் சேர்ந்து நான் இந்த நாளில் விதையாக விதைத்ததை இந்த நாளில் அறுவடை செய்கிறேன் என்று கூற விரும்புகிறேன். அந்த பள்ளிக்கூடம். விளைச்சலில் எனது பங்கை எடுத்துக் கொண்டு, இந்த அழகிய நாட்டில், மதிப்புமிக்க கல்விப் பணிகளாலும் மகிழ்ச்சியான வாழ்க்கையாலும் ஆசீர்வதிக்கப்பட்ட, எனது கடந்தகால மாணவர்களாகிய உங்கள் அனைவரையும், இந்த அழகிய நாட்டில் பூக்களைப் போல மகிமையுடன் மலருவதைக் காண்பதில் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இலங்கையில் இதுவரை நான் சேவையாற்றிய அனைத்துப் பாடசாலைகளிலும் இடைக்காடு மகா வித்தியாலயம் எனது கண்மணியாக என் இதயத்தில் நிலைத்து நிற்கிறது. இந்தக் கூற்றுக்கு பங்களிக்கும் காரணிகள்: இடைக்காடு மகா வித்தியாலயத்தில் நான் கற்பித்த காலத்தில், பள்ளி மாணவர்கள் ஒழுக்கமாகவும், படிப்புடனும் இருந்தனர்; அவர்கள் A/L & O/L பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளை உருவாக்கி, பாடசாலைக்கு பெயர் சம்பாதித்திருந்தனர்; பள்ளியின் எனது முன்னாள் சகாக்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு ஒத்துழைத்து, தோழமை உணர்வுடன் பணியாற்றினர்.

அதுமட்டுமல்லாமல், செல்வம் படைத்த பெற்றோர்கள், நலம் விரும்பிகள், திரு.நமசிவாயம் போன்ற பரோபகாரிகளால் பள்ளிக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வசதிகள் செய்து கொடுப்பதற்காக, “பழைய மாணவர்கள். இப்பாடசாலையின் அபிவிருத்திக்கு முதுகெலும்பாக விளங்கும் கனடாவை தளமாகக் கொண்ட இடைக்காடு மகா வித்தியாலயத்தின் 'சங்கம்' சிறப்புடன் குறிப்பிடத் தக்கது.

பல ஆண்டுகளாக அறிஞர்களையும் வல்லுனர்களையும் உருவாக்கிய இந்தப் பள்ளியின் ஆசிரியராக இருந்ததில் நான் பெருமைப்படுகிறேன்.

இந்தச் சங்கத்தின் செயற்குழுவில் அக்கறையுள்ள அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ். ஸ்ரீதரன்
உங்கள் முன்னாள் ஆசிரியர்

Dear members of the working committee of the “Old Students’ Association” of Idaikkadu Maha Vidyalayam, based in Canada,

I thank you all concerned in organizing the get together, held yesterday, …

More

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா கோடைகால ஒன்று கூடல் -2024! (July 20, 2024)

canada
Informed by : IMV OSA Canada
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா
கோடைகால ஒன்று கூடல் -2024!
கடந்த 13-07-2024 ஞாயிறு அன்று நடைபெற்ற ஒன்று கூடல் பற்றிய திட்டமிடல் பொதுக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்டணம் :
குடும்பம் - $ 60
முதியோர் குடும்பம் - $ 40
தனிநபர் -$ 30
நேரம்:
Sunday July 28, காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
நிகழ்ச்சி:
காலை உணவுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி மதியம் BBQ , மாலை தேநீர் மற்றும் சிற்றுண்டியுடன் தொடர்ந்து
இரவு உணவுடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.
மத்திய உணவுக்கு முன்னர், சிறுவர்களுக்கான Soccer நடைபெறும்.
மத்திய உணவுக்கு பின்னர், சிறுவர்களுக்கான வினோத விளையாட்டுக்கள், ஓட்டம், கயிறு இழுவை போன்றவையம், பெரியவர்களுக்கான
விளையாட்டுக்களும் நடைபெறும்.

இடம்:
Port Union & Lawson Road இல் அமைந்துள்ள Adams Park, Picnic Area D & Shelter

சிறப்பு விருந்தினர்:
திரு: சு. ஸ்ரீதரன்
ஓய்வுநிலை இடைக்காடு மகா வித்தியாலய ஆங்கில ஆசிரியர் (1975 to 1993)
அனைவரும் வருகை தந்து, சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் !
நன்றி
செயற்குழு!

More

கோடைகால ஒன்று கூடல் -2024 (June 25, 2024)

canada
Informed by : IMV-OSA Committee
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா
கோடைகால ஒன்று கூடல் -2024
எமது கோடைகால ஒன்றுகூடல் வரும் ஆடி மாதம் 28ம் திகதி (July 28, 2024) ஞாயிறு அன்று காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை Port Union & Lawson Road இல் அமைந்துள்ள Adams Park, Picnic Area D & Shelter இல் நடாத்துவதாக என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்று கூடல் பற்றிய திட்டமிடல் பொதுக்கூட்டம் திரு.பொ .உதயணன் இல்லத்தில் (126 Keeler Blvd ), 13-07-2024 Saturday அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் வருகை தந்து, தமது ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் !

நன்றி
செயற்குழு

More

மரண அறிவித்தல் (June 18, 2024)

uk
Informed by : Manoharan
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

திருமதி சுமதி மனோகரன்

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி சுமதி மனோகரன் அவர்கள் நேற்று திங்கள் கிழமை (17/06/2024) இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சின்னதம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் மனோகரன்(ராசன்) அவர்களின் பாசமிகு மனைவியும் ஆரணி, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், செல்வவனஜா(Australia), பவானி(Australia), சுசீலா(Swiss) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
Live stream : https://www.youtube.com/live/8CpS4oyF8No

Funeral Plans
On Sunday 23.6.2024
Funeral rituals/Puja from 7.00am to 9.00am at
Belmont Community Hall, Kenton Lane, Belmont, Harrow HA3 8RY.
And then proceed to St Marylebone Crematorium, East End Road, N2 0SE for 10.00am.

Funeral live streaming Service
23/06/2024 Sunday
Starts at
07:00 am UK
08:00 am Swiss, France & Germany
11:30 am Sri Lanka
02:00 am Toronto
04:00 pm Melbourne, Sydney

தகவல் மனோகரன் (கணவர்) : +44 7983027454

More

மரண அறிவித்தல்: (June 13, 2024)

canada
Informed by : ராகவன் வினாசித்தம்பி
Contributed by : Elango veluppillai
Card image cap

மரண அறிவித்தல்:
திரு. வினாசித்தம்பி தாமு அவர்கள்.
மாசார், பளையைப் பிறப்பிடமாகவும் , இடைக்காடு, மற்றும Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு வினாசித்தம்பி தாமு அவர்கள் ஆனி மாதம், 13 ம் திகதி, 2024 அன்று இயற்கை எய்தினார். அன்னார் கண்மணி அவர்களின் அன்பு கணவரும், அன்னார் மாசாரைச் சேர்ந்த தாமு- சின்னம்மா அவர்களின் மூத்த மகனும் , இடைக்காட்டைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை - தங்கம்மா ஆகியோரின் மருமகனும், மற்றும் சியாமளா, உமா, காலம் சென்ற தயாளன்(கண்ணன்), ராகவன், ராகினி,காலம் சென்ற சிவகுமார், விஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், மற்றும நித்தியானந்தன் ,துரை, பவானி, சிவசக்தி, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இத்தகவலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் அன்னாரின் குடும்பத்தினர் துயரத்துடன் அறியத்தருகின்றனர்

இறுதிக்கிரிகைகள் Ajax crematorium & visitation centre இல் நடைபெறும்.

பார்வைநேரம்:
June 16,2024 ஞாயிறு அன்று மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணிவரை.
இறுதிக்கிரிகைகள்:
June 17,2025 திங்கள் அன்று மாலை 1மணியிலிருந்து மாலை 4
மணிவரை.
நடைபெறும் இடம்: 384 Finley Ave, Ajax, ON L1S 2E3.

தகவல்: ராகவன் வினாசித்தம்பி
T.P No: 647 202 9644.

More

எல்லோரும் இந்த ஒன்றைத்தான் முதன்மையாக விரும்புவார்கள். (June 11, 2024)

canada
Informed by : நா. மகேசன். கனடா
Contributed by : Elango veluppillai
Card image cap

எல்லோரும் இந்த ஒன்றைத்தான் முதன்மையாக விரும்புவார்கள்

நாம் எல்லோரும் ஒர் உண்மையான கருத்தை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.. அது என்ன?. மக்கள் எல்லோரும் என்னை விரும்ப வேண்டும் என்பதுதான் எவ்வாறாயினும் மக்கள் என்னை விரும்பி இருக்கிறார்களா?, இல்லையா என்பது பற்றி எனக்கு அக்கறை இல்லை என்று சொன்னால் அவர் நேர்மறையில் எதிர்மறையாகப் போகிறார் என்றுதான் அர்த்தம். அவர் உண்மையைக் கூறவில்லை என்று அர்த்தம்.
பிறரால் பாராட்டப்பட வேண்டும் என்பது மனிதனின் முதன்மையான விருப்பமாகும். பிறரால் நான் மதிக்கப்பட வேண்டும், பிறருக்கு நான் உதவி செய்ய வேண்டும் என்ற மனித குலத்தின் அடிப்படையான குணமாகும். நீங்கள் எவரிடமும் கேளுங்கள், நீங்கள் எதனை உயர்வாக மதிக்கிறீர்கள் என்று. நான் பிரபலமாக மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்றுதான் விடைவரும். வயது முதிர்ந்தவர்கள் இதைத்தான் முதன்மையாக விரும்புவார்கள். நாங்கள் பொதுப்பணி செய்தவர்களை உயர்வாக மதிக்க வேண்டும், அவர்களுக்கு உகந்த மரியாதை கொடுக்க வேண்டும்.
நீங்கள் பிரபலமாக வரவேண்டும் என்றால் நீங்கள் இயல்பாக இருங்கள். நீங்கள் பிரபலமாக கடுமையான முயற்சி எடுத்தால் நீங்கள் அதனை அடைவதற்கான வாய்ப்புக்களைக் குறைத்துக் கொள்வீர்கள். அவரிடம் ஏதோ ஒரு திறமை இருக்கின்றது என்று மற்றவர்கள் கூறும்படியாக மனிதனாக வாழுங்கள். இப்படியானால் மக்கள் உங்களை பெரிதும் மதிப்பார்கள், விரும்புவார்கள்.
எப்படி ஆனாலும் நீங்கள் மக்கள் உங்களை விரும்பும் படியாக வைத்து இருக்க முடியாது என்று நான் எச்சரிக்கையாகச் சொல்வேன். சில மக்களுக்கு இயல்பாகவே உங்களைப் பிடிக்காமல் போகலாம். இது மனித குலத்தின் வித்தியாசமான பண்பு. இதற்கு என்ன காரணம் உங்களிடம் உள்ள ஏதோ ஒன்று அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இதனால் அவர்களுக்கு உங்களைப் பிடிக்கவில்லை. சில நேரங்களில் சிலரிடம் எங்களுக்கு திடீர் என விருப்பம் வருகின்றது அல்லது வெறுப்பு வருகின்றது. இது ஒரு குழப்பமான உண்மைதான். உங்களில் ஒருவருக்கு விருப்பம் இல்லை என்றால் நீங்கள் அவர்களை உதறித்தள்ளி, விலகி நடவுங்கள் என்று இதிகாசங்கள் கூறும் முதன்மை உண்மைகளில் ஒன்று. இருந்தாலும் சில கொள்கைகளை, நீங்கள் கடைப்பிடித்தால் உங்களை மற்றவரகள் மதிப்பவராக மாற்றப்படலாம்.
விசுவாசமானவராக இருங்கள்
பழகுவதற்கு சாதாரணமாக இருங்கள்.
இனிமையாக மற்றவர்களுடன் பழகுங்கள். .
மற்றவர்களின் மனதைத் திருப்திப்படுத்தும் மனப் பக்குவம் கொண்டு இருங்கள்.
இவைகளை கடைப்பிடித்து திறமைசாலியாக முன்னேறுங்கள். பிறர் தன்னை விரும்பவில்லை அல்லது நான் மற்றவர்களுக்குத் தேவையில்லை என்ற எண்ணம் ஒரு தனி மனிதனுக்கு எல்லாவற்றையும் விட அதிக கவலை தரும் விடயமாகும். நீங்கள் பிறரால் எந்தளவிற்கு விரும்பப் படுகின்றீர்களோ, எந்த அளவிற்கு …

More

திரு ஜெயஶ்ரீ கிருஷ்ணர் இறைபதம் அடைந்தார் (June 4, 2024)

australia
Informed by : மனைவி, பிள்ளைகள்
Contributed by : Sengo Vel
Card image cap

அன்னை மடியில். 08/.03./1958
இறைவன் அடியில். 04/06/2024

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் சிட்னி, அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு ஜெயஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள் 04/06/2024 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார் .

அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமிர்தஞானம் மற்றும் சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட மருமகனும், ஞானசுஜேதாவின் அன்புக் கணவரும், ஜெசீதா, ஸ்ரீராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெயகுமரபதி, காலஞ்சென்ற ஜெயராணி, மற்றும் ஜெயகாந்தன், ஜெயசந்திரன், ஜெயரூபன், ஜெயக்குமார், ஜெயஇந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், ஞானதிலீபன், ஞானபிரபா, பொன்மணிதேவி, காலஞ்சென்ற யோகிராஜ், மற்றும் சுபத்திரா, சிவபாக்கியம், பவானி, வனஜா, ராஜலோஜினி, தீபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவராசாவின் அன்புச் சகலனும், பிரியதர்ஷினி, கௌரிசங்கர், திருச்செந்தூரன், அமிர்தா, அமிர்ஷன் ஆகியோரின் அன்பு மாமாவும், துஷ்யந்த், தர்ஷிகா, கிருத்திகா, தர்மிகா, சர்மிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், டின்சியா, கம்சியா, தசராம், தயானி, யோபினி, ஜெலோசன், ஜஸ்மிகா, சிவலக்‌ஷன், சுவேதிகா, சுலக்‌ஷனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார் .

அன்னாரின் பூதவுடல் 09/06/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி தொடக்கம் 10:00 மணி வரை Magnolia Chapel, Macquarie Park Cemetery and Crematorium (Corner of Delhi Rd & Plassey Rd), North Ryde NSW 2113 இல் பார்வைக்கு வைக்கப்பட்டு 10:00 மணி தொடக்கம் 11:45 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு:
ஞானசுஜேதா - +61 469 425 453
ஜெசீதா - +61 423 325 021
ஸ்ரீராம் - +61 402 368 004

More

மரண அறிவித்தல் (May 3, 2024)

canada
Informed by : suhir Kandaswamy
Contributed by : Elango veluppillai
Card image cap

Balasaraswathy srishanmuganathan
Born - 1940 - 01 - 20
Death - 2024 - 05 - 02
VISITATION : Sunday May 5, 2024 From 2:00 pm to 3:30 pm At Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham , ON L3R 5G1 SERVICE : Sunday May 5, 2024 From 3:30 pm to 5:15 pm At Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1 CREMATION & WITNESSING Sunday May 5, 2024 @ 6:00 pm At Highland Hills Crematorium 12492 Woodbine Avenue Markham, ON L0H 1G0

More

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா (April 14, 2024)

canada
Informed by : IMV OSA Canada
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

எமது சங்கத்தினால் இடைக்காடு மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவினை திறம்பட நடத்துவதற்கும், அனைத்து பாடசாலை
கட்டுமானங்களை புனர்நிர்மாணம் செய்யவும், கல்வி அடைவு மட்டத்தினை மேம்படுத்தவும், இரண்டு மாடிகள் கொண்ட பிரதான உள்ளக
அரங்கம் அமைப்பதற்கும் நிதி சேகரிப்பு நடைபெறுவது நீங்கள் யாவரும் அறிந்ததே.
அதன் பிரகாரம் நாம் இது வரை மூன்று கட்டங்களில் மொத்தமாக ரூபா 4,136,000 இனை பழைய மாணவர் சங்க வங்கி கணக்கிற்கு அனுப்பி
வைத்துள்ளோம்.
நான்காம் கட்டமாக ரூபா 3,575,000 வருகின்ற வாரத்தில் அனுப்பி வைக்கப்படும். இத்துடன், நன்கொடை அளிப்பதாக உறுதியளித்தவர்களின்
தொகை அண்ணளவாக ரூபா 1,500,000 ஆகும்.
Summary:
Money Sent - 4,136,000 LKR
Money on hand
(To be deposited on the week of Apr15th) - 3,575,000 LKR
Confirmed Donation - 1,500,000 LKR
Total - 9,211,000 LKR
இது வரை காலமும்,
- விழா பற்றிய பாதாகை காட்சிப்படுத்துதல்
- தரம் 1 இற்கான திறன் வகுப்பு அமைத்தல்
என்பன நிறைவேற்றப்பட்டுள்ளன
தற்போது,
- இலவச மதிய உணவு சமையல் அறை திருத்தவேலை
- பழைய இரு மாடி கட்டிட திருத்த வேலைகள்
நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன
வருகின்ற நாட்களில்,
- ஏப்ரல் 15/16 ம் திகளில், நமசிவாய மண்டப திருத்த வேலைகள் ஆரம்பமாகும்.
- கனடா வாழ் பழைய மாணவர் ஒருவர் "பாடசாலையின் அனைத்து நீர் குழாய் இணைப்பு" செயற்திட்ட மொத்த செலவுகளையும் (975,370 LKR) தாமே பொறுப்பேற்பதாக முன் வந்துள்ளார் அதற்கான ஒப்புதலும் நூற்றாண்டு விழா செயற்குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி
செயற்குழு

More

வாழ்க்கை என்றால் என்ன ? (April 3, 2024)

canada
Informed by : நா. மகேசன்
Contributed by : Elango veluppillai
Card image cap

ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது உங்கள் உடல், உள்ளங்களில் இருந்து தீய சிந்தனைகளை வெளியேற்றி விடுங்கள், இல்லை காலி செய்து விடுங்கள் கொள்கை. நித்திரை இல்லை என்பது எல்லோரையும் ஆட்சி செய்கின்றது. இதற்கு என்ன காரணம். பழைய பிரச்சனைகள், பழைய தீமைகளை
சங்கடங்கள், சச்சரவுகள் இல்லாத மனங்கள் சக்தியைப் பெருக்கும்.,இது எனது மீளாய்வு செய்வதுதான். எனது தந்தை சிறு வயதில் சொன்னது ஒன்று எனக்கு ஞாபகம் வந்தது. அது என்ன!. இன்றைய நினைவுகளை மறவுங்கள் நாளை புதிய சிந்தனைகள் உருவாகும் என்று. நான் மனது நிறைய பிரச்சனைகளோடு படுக்க சென்றால் இரவில் நித்திரை வருமா? விடை, நிச்சயமாக இல்லை என்பதுதான். மாறுபட்ட மனதில் தான் பல முன்னேற்றமான எண்ணங்கள் உருவாகும், எண்ணங்களை மாற்றுவதற்குப் பயிற்சி தேவை. ஆசுவாசமான மனதை உருவாக்குவதன் மூலம் அமைதியைப் பேணலாம்.
வாழ்க்கை என்றால் என்ன ? வாழ்க்கையின் ஒரு பகுதி பிரச்சனைதான் என்று கூறுவார்கள். இதற்குத் தீர்வு என்ன? உங்களது பிரச்சனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் மன ஆறுதல் கிடைக்கும் என்பதா? இல்லவே இல்லை உங்களது பிரச்சனைகளை நீங்கள் அதிகரிக்கின்றீர்கள் என்றுதான் அர்த்தம். இதற்கு என்னதான் தீர்வு, நான் சொல்வேன் பிரார்த்தனைதான் என்று, சிறிய பிரச்சனை என்றால் சிறிய பிரார்த்தனை செய்யுங்கள். பெரிய பிரச்சனை என்றால் நீண்ட பிரார்த்தனை செய்யுங்கள். உயிர் நண்பன் என்றாலும் பரம இரகசியங்களை அவருக்குக் கூறிவிடாதீர்கள், ஏன் என்றால் அவர் எனது எதிரியாக மாறும்போது எனது பரம இரகசியங்களை மற்றவர்களுக்குக் கூறிவிடுவார். ஞாபகத்தில் வைத்து இருங்கள் வெறுப்பு, விரக்தி, தோல்வி, நட்டம், ஏமாற்றம், பகைமை இவை போன்றவற்றின் கூட்டுத்தொகைதான் பிரச்சனைகள். அமைதி நிறைந்த மனதைப் பெறுவதற்கு வழி, அதைக் காலி செய்வதற்குப் பயிற்சி செய்வதுதான்.
மனதைக் காலி செய்வதன் மூலம் மனம் காலியானபோது அதில் வேறு ஒன்று சென்று நிரப்ப முற்படும், இதைத் தடுப்பதற்கு நீங்கள் நல்ல சிந்தனைகள் , நல்ல எண்ணங்களால் மனதை நிரப்பி விடுங்கள். இல்லையேல் பழைய நினைவுகள் உள்ளே புகுந்து உங்கள் மனதில் குடிகொண்டுவிடும். இதைத் தவிர்ப்பதற்கு உங்கள் மனதில் புதிய எண்ணங்களையும், சிந்தனைகளையும் உறுதியுடன் பாதுகாத்து நிரப்பிக் கொள்ளுங்கள், இதை வலிமைப் படுத்தி விடுங்கள். இதனால் பழைய சிந்தனைகள் தோல்வி அடைந்து, உங்கள் மனதை விட்டு விலகிச் சென்று விடை பெற்று விடும்.
உங்கள் மனங்களை உறுதியாக வைத்து இருப்பதற்கு இரண்டு முக்கியமான விடயங்களைக் கடைப்பிடியுங்கள்.
எதுவும் உங்களை தொந்தரவு செய்ய …

More

யாழ்ப்பாணம் இடைக்காடு மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழா (March 20, 2024)

canada
Informed by : வே.இளங்கோ
Contributed by : Elango veluppillai
Card image cap

யாழ்ப்பாணம் இடைக்காடு மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழா
1926-2026 புலம்பெயர் மாணவர்களின் பங்களிப்புடனான நூற்றாண்டு விழா
யாழ்ப்பாண மக்களின் கல்விச் செயற்பாட்டில் முன்னோடியாகத் திகழும் முன்னணி பள்ளிக்கூடங்களில் ஒன்றாக பன்னெடுங்காலமாக திகழ்ந்து பல கல்விமான்களையும் அறிஞர்களையும் உருவாக்கிய யாழ் இடைக்காடு மகாவித்தியாலயம் தனது நூற்றாண்டு விழாவை எதிர்வரும் 2026ல் சிறப்புறக் கொண்டாட உள்ளது தாங்கள் அனைவரும் அறிந்ததே.
1975ல் எமது பாடசாலையின் பொன்விழாவினை 3 தினங்கள் சிறப்பாகக் கொண்டாடியது போல் நூற்றாண்டு விழாவினையும் அதைவிடச் சிறப்பாக கொண்டாடுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்.
பன்னெடுங்காலமாக நாம் அனைவரும் எம் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளில் கவனம் செலுத்தினோமேயன்றி பாடசாலைகளின் பௌதிக செயற்பாடுகளில் கவனம் செலுத்தாமல் விட்டதனால் எமது பாடசாலையின் கட்டிட மின்னியல் நீர் வழங்கல்ää மலசல கூட மற்றும் கூரைப்பகுதிகள் போன்ற பௌதிக நிலை மிகவும் பழுதுபட்டு பெரியதோர் திருத்த வேலையை வேண்டி நிற்கின்றது.
எமது பாடசாலைகளின் பௌதிக வளத்துக்கு வலுச்சேர்த்து நிற்கும் அமரர் நமசிவாயம் அவர்களின் தன்னிகரில்லா அன்பளிப்பு மூலம் நிறுவப்பட்ட இரண்டு மாடிக் கட்டடமே ஐம்பது வருடங்களையும் தாண்டி உள்ளதால் அதற்கு சில அவசர திருத்த வேலைகளைச் செய்யவேண்டியுள்ளது. காலத்திற்கு காலம் செய்ய வேண்டிய திருத்த வேலைகளை நாம் செய்யாது விடின் அது பாவனைக்கே உதவாத நிலையை அடைந்துவிடும். வெள்ளம் வந்த பின் அவலப்படுவதை விட வெள்ளம் வருமுன் அதனை சீர்செய்வதே புத்திசாலித்தனமாகும். இன்னமும் நாம் தாமதிப்போமானால் எமது பாடசாலைக் கட்டடத்தை நாம் இழக்க வேண்டி ஏற்படலாம்.
அடுத்து எம் முன்னால் உள்ள கேள்வி இதைச் செய்வது யார் என்பதே தற்போதைய மாணவர்களின் பெற்றோரா? அல்லது பழைய மாணவர்களா? அன்றி புலம்பெயர்ந்து வாழும் நாங்களா? தாயகத்தில் உள்ள உறவுகள் இதனைச் செய்வதற்கு தயாராக இருந்தபோதும் அவர்களின் பொருளாதார வளம் போதுமானதாக இல்லை. புலம்பெயர் உறவுகளான எம்மிடம் அவர்கள் இதற்கான உதவியை எதிர்பார்த்து நிற்பது இயல்பானதே அதனைச் செய்யவேண்டிய கடமையும் பொறுப்பும் எம்மிடம் உள்ளதை நாம் மறுப்பதற்கில்லை. அது கடமையும் கடனும் கூட மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று அவர்களைப் பார்ப்பதை விட நாம் எமது கடமையைச் செய்யும்போது எடுத்த கருமம் செய்மையாய் நிறைவேறும். எமது நூற்றாண்டு விழாவும் சிறப்புற நடந்தேறும்.
அண்மையில் எமது முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு கூட அவர்களினுடைய ஊதியத்தை வழங்க முடியாது கலங்கி நின்றவேளை புலம்பெயர் உறவுகளான எமது நன்கொடை அவர்களது பிரச்சினையை செவ்வனவே தீர்த்து வைத்தது. அவ்வாறு இவ்வேளையிலும் …

More

இடைக்காடு பழைய மாணவர் சங்கம் - கனடா விசேட பொதுக்கூட்டம் (Feb. 28, 2024)

canada
Informed by : IMV-OSA Committee
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

இடைக்காடு பழைய மாணவர் சங்கம் - கனடா
விசேட பொதுக்கூட்டம்
இடைக்காடு மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா விசேட செயற்குழு, கனடா பழைய மாணவர் சங்கம் மற்றும் அதன் நிதி சேகரிப்பு குழுவுடன் கலந்துரையாடல் ஒன்றினை கடந்த ஞாயிறு (18-02-2024) அன்று ஏற்படு செய்திருந்தது.
இதன்போது ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற நிலை பற்றியும், புதிய "இரண்டு மாடிகள் கொண்ட பிரதான உள்ளக அரங்கம்" அமைப்பது பற்றியும் ஆராயப்பட்டது. இவை பற்றிய உங்கள் கருத்துக்களை உள்வாங்கவும், தற்போதைய நிதி சேகரிப்பு நிலைமை பற்றி விளக்கவும், எதிர் வரும் ஞாயிறு (03-03-2024) பிற்பகல் 3:00 மணியளவில் திரு.திருமதி .உதயணன் சத்தியதேவி இல்லத்தில் இவ் விசேட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பழைய மாணவர்கள், அங்கத்துவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் இதில் தவறாது கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்!
இடம்:
126 Keeler Blvd
Toronto,M1E 4K9.
நேரம்: 3:00 PM
நாள்: Sunday March 3, 2024

நன்றி!
செயற்குழு
இ.ம.வி ப.மா.ச -கனடா

More

MANY A SLIP BETWEEN CUP AND LIP (Feb. 20, 2024)

canada
Informed by : நா. மகேசன் கனடா.
Contributed by : Elango veluppillai
Card image cap

MANY A SLIP BETWEEN CUP AND LIP

என்னால் முடியாதது ஆறே ஆறுதான், என்னாலயோ இல்லை உங்களாலயாவது முடியாது. உங்களால் மட்டுமல்ல உலகத்தில் உள்ள ஒருவராலும் முடியாது அது என்ன ? இதுதான் அது.
1. தாய் தந்தையரை தெரிவு செய்ய முடியாது.
2. நான் ஆணாகவோ, பெண்ணாகவோ பிறப்பதை தெரிவு செய்ய முடியாது.
3. எந்த மதத்தில் பிறப்பேன் என்பதை தெரிவு செய்ய முடியாது.
4. எந்த இனத்தில் பிறப்பேன் என்பதை தெரிவு செய்ய முடியாது.
5. எந்த கலாச்சாரம், பண்பாடு என்பதை தெரிவு செய்ய முடியாது.
6. எந்த நாட்டில் பிறப்பேன் என்பதை தெரிவு செய்ய முடியாது.
இந்த ஆறையும் தவிர நாங்கள் எல்லோரும் எல்லாம் செய்யலாம் என்ற மன பக்குவம் வர வேண்டும்.
முன்னேற்றத்தைப் பொறுத்தவரை முன் யோசனையுடன் சில ஆபத்துக்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கின்றது. ஆபத்துக்களை எதிர் கொள்வது என்பது பொறுப்பு இல்லாமல் நடந்து கொள்வது என்று அர்த்தம் இல்லை. சிலர் இதை கண்மூடித்தனமான நடத்தை என்று நினைத்து விடுகிறார்கள். இவர்கள் எதற்கும் துணிந்து முடிவு எடுக்காமலும், முயற்சி எடுக்காமலும் கடைசியில் தோல்வியைத் தழுவிக் கொண்டு தங்களின் துர் அதிஸ்டம் என்று குறை கூறுவார்கள்.
எதிர்ப்புகளை எதிர் கொள்வது ஒப்புமைக்கு உடன்பாடு உடையது. இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இது ஒரு முயற்சியின் வடிவமாகவும் இருக்கலாம்., திறமையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். பொறுப்பு உள்ள எதிர்ப்புக்களை எதிர் கொள்ளும் பொழுது அது எமக்கு பலத்தையும் மன வலிமையையும், தைரியத்தையும் தரும் எதையும் செய்யாத மனிதன் எந்த தவறுகளையும் செய்வதே கிடையாது, ஆனால் அவர்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பதே பெரும் தவறு என்பதை உணர்வதே இல்ல. துணிந்து முடிவு எடுக்காமல் இருப்பதால் பல சந்தர்ப்பங்களை ,தலைக்கு மேல் போனாலும் நாங்கள் எட்டிப் பிடிப்பதே இல்லை. இதுவே எமக்கு பழக்கமாகி பல சந்தர்ப்பங்களை இழந்து வாழ்க்கையில் பின்னடைவை சந்தித்து வருகின்றோம். முன் யோசனையுடன் ஆபத்துக்களை எதிர் கொள்ளுங்கள். முன் யோசனை இல்லாமல் ஆபத்துக்களை எதிர் கொள்பவர்கள் இருட்டில் விளக்கை அணைத்துவிட்டு செல்வதற்கு ஒப்புவமையாகும்.
இனி விடயத்திற்கு வருவோம் சந்தர்ப்பங்கள் எப்பொழுதும் கூடிய பகுதி ஒருமுறைதான் வரும்.நழுவ விடாதீர்கள் இதற்கு நான் வாசித்த ஒரு உதாரணக்கதையை உங்களுக்கு உவமானம், உவமேயம் ஆகக் கூறுகின்றேன் இந்தியாவிலே நீர், நில வளமற்ற ஓர் கிராமத்தில் ஓர் குடும்பம் லவ்கிக வாழ்வு வாழ்ந்து வந்தது. அவர்கள் அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்வு நடத்தி வந்தனர். அவர்களுக்கு முதலில் ஒரு பெண்குழந்தை …

More

யா/ இடைக்காடு ம .வி - நூற்றாண்டு விழா (2026) செயற்திட்டங்கள் (Jan. 7, 2024)

canada
Informed by : செயற்குழு
Contributed by : Selva Ratnasabapathy

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா பொதுக்கூட்டம் – 2024 (Dec. 28, 2023)

canada
Informed by : செயற்குழு
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

இவ்வருடத்துக்கான (2023) நிறைவு பொதுக்கூட்டமும், வரும் வருடத்துக்கான (2024) முதலாவது பொதுக்கூட்டம் எதிர் வரும் சனி 30-12-2023
அன்று உப-செயலாளர் இல்லத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நடப்பு வருட பொருளாளர் மற்றும் செயலாளர் அறிக்கை
சமர்ப்பித்தலும் , 2024ம் ஆண்டு சொயற்குழு பொறுப்பேற்றல் மற்றும் எமது வருங்கால செயற்திட்டங்களபற்றிய ஆலோசனை
திட்டங்கள் கலந்துரையாடப்படவுள்ளது. அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் வருகைதந்து சிறப்பிக்குமாறு
வேண்டிக்கொள்கிறோம்!
புதிய செயற்குழு விபரம்:
தலைவர் : திரு.செல்வராஜ் இரத்தினசபாபதி
உப-தலைவர் : திரு.கணேசமூர்த்தி கந்தசாமி
செயலாளர்: திரு.சிவபாலன் வேலுப்பிள்ளை
உப-செயலாளர் : திரு.உதயணன் பொன்னையா
பொருளாளர்: திரு.நாகேஸ்வரமூர்த்தி தம்பு
உப-பொருளாளர் : திரு.சிவஞானரூபன் சிவஞானசுந்தரம்
செயற்குழு உறுப்பினர்:
1. செல்வி. சாருஜா அருணகிரி
2. செல்வி.சரண்யா உதயணன்
3. செல்வன்.சஜீசன் நாகேஸ்வரமூர்த்தி
4. செல்வன். சுஜிதன் நவகுமார்
5. செல்வன். நிந்துயன் தர்மலிங்கம்
காப்பாளர்கள்:
திரு.கேசவமூர்த்தி சபாரத்தினம்
திரு. நல்லதம்பி சிதம்பரப்பிள்ளை
தாயக இணைப்பாளர்
பேராசிரியர் திரு.சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை
இடம் : 126 Keeler Blvd, Scarborough
திகதி : 30-12-2023
நேரம் : 2:00 PM
நன்றி

More

இடைக்காடு பழைய மாணவர் சங்கம் - கனடா சிறப்பு பொதுக்கூட்டம்- (Dec. 19, 2023)

canada
Informed by : IMV-OSA-Canada
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

இடைக்காடு பழைய மாணவர் சங்கம் - கனடா
சிறப்பு பொதுக்கூட்டம்
எமது பாடசாலை யா/இடைக்காடு மகா வித்தியாலயம், தனது 100வது ஆண்டினை 2026 ம் (1926 - 2026) ஆண்டில் நிறைவு செய்யவுள்ளது.
இந்நிகழ்வை பாடசாலை சமூகம், பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து ஓரு இனிய விழாவாக நடாத்த முன்வந்துள்ளது.
அதன் பிரகாரம் கடந்த விஜயதசமி அன்று (24-10-2023) பாடசாலை அதிபரால் "நூற்றாண்டுவிழா பிரகடனம்" வைபவரீதியாக வெளியிடப்பட்டுள்ளது .
அதன் அடுத்த கட்டமாக 3-12-2023 அன்று நூற்றாண்டுவிழாவிற்கான விசேட செயற்குழு அதிபர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவினை திறம்பட நடத்துவதற்கும், அனைத்து பாடசாலை கட்டுமானங்களை புனர்நிர்மாணம் செய்யவும், கல்வி அடைவு மட்டத்தினை மேம்படுத்தவும் - கனடா பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணை மற்றும் ஆலோசனைகளையும் நாடியுள்ளனர்.
இது எங்களின் உரிமையும் - கடமையுமே!
அதிஷ்டவசமாக, கிளையின் தாயக இணைப்பாளர் பேராசிரியர் க. சின்னத்தம்பி அவர்கள் Dec 23 to Dec 27 வரை கனடா வருகின்றார்.
இந்த வேளையில் பேராசிரியருடன் இணைந்து நூற்றாண்டுவிழா பற்றிய சிறப்பு பொதுக்கூட்டம் ஒன்றினை நடத்த செயற்குழு முன்வந்துள்ளது. இச் செயற்திட்ட பொதுக்கூட்டம் எதிர்வரும் 25ம் திகதி (Monday ) 3.00,மணி அளவில் திரு.திருமதி .உதயணன் சத்தியதேவி இல்லத்தில் நடைபெற உள்ளது.
பழைய மாணவர்கள், அங்கத்துவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் இதில் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்!
இடம்:
126 Keeler Blvd
Toronto,M1E 4K9.
நேரம்: 3:00 PM
நாள்: Monday Dec 25, 2023
நன்றி!

More

நீத்தார் நினைவுகள் - அமரர் கணபதிப்பிள்ளை வைரமுத்து (Dec. 16, 2023)

canada
Informed by : பொன் கந்தவே ல்
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

உலகில் பிறப்பெடுத்த மனிதர் எவருமே என்றோ ஒருநாள் இவ்வுலகை விட்டுத்தானே போகவேண்டும் என்னும்
பொதுவிதிக்கேற்ப, இன்றுவரை எம்மத்தியில் எம்மில் ஒருவராக, எம்மோடு ஒருவராக வாழ்ந்துவந்த
கணபதிப்பிள்ளை வைரமுத்து இன்று எம்முடன் இல்லை . எம் தாயக மண் இடைக்காட்டில் பிறப்பெடுத்து எம்
மக்களுடன் மக்களாக அவர்களுடன் நகமும் சதையுமாக வாழ்ந்து புலம் பெயர்ந்து இக்கனடிய மண்ணி ல்
24 வருடங்களாக தன் உறவுகளுடன் வாழ்ந்து வந்த அற்புத ஜீவன் செல்லவேண்டிய இடத்துக்கு
சென்று விட்டார்.
ஆம், சின்னையா போஸ்மாஸ்டர் என எல்லோராலும் அழைக்கபட்ட கணபதிப்பிள்ளை வைரமுத்துவை
தெரியாத எவருமே எம்மூரில் இருக்கமாட்டா ர்கள். விவசாயத்தையே ஜீவனோபாயமாகக்கொண்ட எமது
கிராமத்தில் அவரும் ஓர் விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும் எமக்கு ஒரு தபாலகத்தின்
முக்கியத்துவத்தை அறிந்த அவரது தந்தையார் தனது சொந்தமுயற்சியால் அமைக்கப்பட்ட உப
தபாலகத்தில் தனது மகனான வைரமுத்துவையே தபாலதிபராக்கி மக்ளுக்கு சேவயாற்ற வைத்தது
எத்தனை பெரியகாரியம்.
எமது கிராமம் மிகச்சிறியதுதான். எம்மை விடபெரியகிராமங்கள் பல தபாலக வசதியின்றி இருந்தபோதும் எம்
கிராமத்திகென ஒரு தபாலகத்தினை உருவாக்கிய அமரர் கணபதி ப்பிள்ளை யின் முயற்சி
பாராட்டப்படவே ண்டியதே .
வி ஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்துவி ட்ட இன்றைய காலகட்டத்தி ல் தபாலகத்தின் தேவை
குறைந்துவிட்டபோதிலும் அன்றய காலகட்டத்தி ல் கைத்தொலைபே சி என்றால் என்னவென்றே தெரியாத
காலகட்டத்தில் பொதுத் தொலைத்தொடர்பு சாதனமாக தபாலகங்களே செயற்பட்டு வந்தன. தபாலக சேவை
மக்கள் மத்தி யி ல் அத்தியாவசிய சேவையாகவே செயற்பட்டுவந்தது. தபால் அதிபர் சேவையும் மக்கள்
மத்தியில் தவி ர்க்கமுடியா த பணியாகவே கருதப்பட்டுவந்தது.
வெ றுமனே முத்திரை விற்பதும் தந்தி அடிப்பதும்தான் அதன் சேவை அன்று. பணம் அனுப்புவது,
பணச்சேமிப்பு,தேசிய சேமிப்பு வங்கி யின் முகவராக செயற்படல், அரச ஓய்வூதி யம் வழங்கல்,
வறியோருக்கா ன மாதா ந்த கொடுப்பனவு வழங்கல்,அரச வர்த்தமானி வழங்கல், அரசாங்க பரீட்சைக்குத்
தோற்றுவோருக்கு தபாலக அறிமுக அட்டை வழங்கல் இன்னொரன்ன அதன் சேவைகள் முக்கியமானது,
இதி லிருந்தே ஒரு தபாலதிபரி ன் சேவை எவ்வளவு பொறுப்பானது, முக்கியமானது என்பதை நாம்
அறிந்துகொள்ளலா ம்.
ஆம், இவ்வாறு பொறுப்பா ன சேவையை 1953ம் ஆண்டுமுதல் 1990ம் ஆண்டு வரை எவ்வித குறை
குற்றமுமின்றி ஆற்றிய அமரர் வைரமுத்துவை எப்படிப்பா ராட்டினா லும் அது மிகையா கா து. அவர் காலை
எட்டு மணிக்கே கடமைக்குவந்து விடுவா ர் மதிய உணவுவேளை போக மீதி வேளை கடமை யி ல் சமூகமாகி
இருப்பதை காணலா ம்.
அப்போதெல்லம் இபோதுபோல் தேசிய அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை க.பொ .த. போன்ற
அரசாங்க பரீட்சைகளுக்கு தோற்றுவதானால் தபால் அதிபரினால் கையப்பம் இடப்பட்ட தபாலகத்தா ல்
வழங்கப்படும் அடையாள அட்டையே சமர்ப்பிக்கப்படல் வேண்டும். …

More

மரண அறிவித்தல் (Dec. 11, 2023)

canada
Informed by : குடும்பத்தினர்
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

அமரர் கணபதிப்பிள்ளை வைரமுத்து (ஓய்வுநிலை உபதபாலதிபர், இடைக்காடு)

இடைக்காடு மாரியந்தனையைப் பிறப்பிடமாக கொண்டவரும் இடைக்காடு, கனடா ஆகிய இடங்களை வதிவடங்களாக கொண்டிருந்தவருமான அமரர் கணபதிப்பிள்ளை வைரமுத்து (ஓய்வுநிலை உபதபாலதிபர், இடைக்காடு) அவர்கள் தனது 98ஆவது வயதில் இன்று 11/12/2023 திங்கள்கிழமை கனடாவில் இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை,சிலம்பாத்தை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான பொன்னையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பொன்னம்மா, செல்லம்மா, முருகேசு மற்றும் வேலுப்பிள்ளை, இராசம்மா ஆகியோரின் அன்புச்சகோதரரும் தெய்வானையின் பாசமிகு கணவரும், கணேஸ்வரன் (இலங்கை), சிவமங்கை(Canada), பொன்னீஸ்வரன்(Canada), தனேஸ்வரன் (DenmarK),பவன்(UK), யோகாம்பிகை (Canada) ஆகியோரின் பாசமிகு தந்தையும் சூரியகுமாரன், சந்திராதேவி, வசந்தமலர், திருஞானவதி(வாணி), கெளதமி, சதீஸ்குமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் சதீஷ்+வினோதினி, ரதீசன்+ கீர்த்தனா, சிந்துசா, செந்தூரன், கிருஷன், கம்ஷா, Dr.மீரா, மிதுஷா, ஹரி, ஹரிணி, சதுசன் சகிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆரன், எழினி ஆகியோரின் அன்பு பூட்டனும் காலஞ் சென்றவர்களான மாணிக்கம், செல்லம்மா, நமசிவாயம், கணபதிப்பிள்ளை, இராசலட்சுமி, மற்றும் சத்தியலட்சுமி காலஞ்சென்றவர்களான கதிர்காமு செல்லத்துரை(VCO), செல்லம்மா, இராசம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புமைத்துனரும் காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பாலசிங்கம் ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்

Viewing & Cremation
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave
ONL1S 2E3
பார்வைக்கு
Saturday: 16/12/23 5.00pm-9.00 pm
கிரியை/தகனம்:
Sunday 17/12/23 8:00am- 11:00am

Web stream details

Visitation: 2023-12-16 5.00 PM - 9.00 PM (Canada time), UK 10:00 - PM - 2.00 AM, Sri Lanka 3:30 AM- 7:30 AM
Service: 2023-12-17 8:00 AM- 11:00 AM (Canada Time) UK 1:00 PM - 4:00 PM Sri Lanka 6:30PM- 9:30PM

https://app.funerallive.ca/funerals/ACVC-Vyramuthu-Kanapathipillai-2023-12-11

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணேஸ்வரன்(Sri Lanka): +94 777140859
சிவமங்கை(Canada): +1 4388754164
பொன்னீஸ்வரன்(Canada): +1 416 4096521
தனேஸ்வரன்(Denmark):+45 42273108
பவன்(UK): +44 7944050423
யோகா(Canada): +1 514 7488676
சதீஸ்(Australia): + 61 469890697
ரதீசன்(Australia): + 61 469812717

More

திருமதி.கனகசபை திலகவதி (Nov. 5, 2023)

canada
Informed by : Indhu Saba
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

தொடர்புகளுக்கு:
வீடு - குடும்பத்தினர் - 4167559299
றேணுகுமார் -மகன் - 4164183026
கீத்தகுமார் -மகன் - 4168258699
சிவகுமார் - மகன் - 4168172664
பிறேமா -மகள் - 6473086467
பிறிந்தா -மகள் - 4162687405
இரத்தினாவதி -சகோதரி - 94242226703
ஸ்ரீஸ்கந்தராஜா -சகோதரன் - 61421833369

More

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா (Nov. 5, 2023)

canada
Informed by : செயற்குழு
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா
குளிர்கால ஒன்று கூடல் -2023

எமது குளிர்கால ஒன்றுகூடல் வரும் மார்கழி மாதம் 26ம் திகதி (December 26th, 2023) அன்று மாலை 5 மணியிலிருந்து 12 மணி வரை BABA Banquet Hall இல் நடாத்துவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விழாவிற்கான உங்கள் வருகையை கீழ் உள்ள எதாவது ஒரு செயற்குழு
உறுப்பினருடன் தொடர்புகொண்டு Nov 30th திகதியிற்கு முன்னர் உறுதிப்படுத்தி கொள்ளவும்.
அத்துடன், இம்முறை சிறுவர்களிடக்கான கலை நிகழ்சசிகள் நடாத்துவது என தீமானிக்கப்பட்டுள்ளது. கலை நிதிகழ்சசியில் பங்குபற்ற
விரும்பும் பிள்ளைகளின் பெயர் மற்றும் நிகழ்ச்சி விபரங்களையும்
Nov 30th திகதியிற்கு முன்னர் அறியத்தரவும். நிகழ்ச்சிகளை சிறு சிறு குழுக்களாக அமைப்பது விரும்பத்தக்கது.
இதற்கான கட்டணம் :
Family with kids under 21 years - $100
Single (above 21 years old ) - $50

செயற்குழு உறுப்பினர் விபரம்:
தலைவர் : திரு.தம்பு நாகேஸ்வரமூர்த்தி
உப-தலைவர் : திரு.பொன்னையா உதயணன்
செயலாளர்: திருமதி. கங்காதேவி நல்லதம்பி
உப-செயலாளர் : திரு.சிவஞானரூபன் சிவஞானசுந்தரம்
பொருளாளர்: திரு.பார்த்திபன் கந்தவேல்
உப-பொருளாளர் : செல்வன். கபிலன் இரத்தினசபாபதி
பொதுக்குழு உறுப்பினர்கள்:
1.திருமதி. கீர்த்தனா அஜித்குமார்
2: திருமதி. அனுஷா சுதர்சன்
3.செல்வன்.துஷியன் நவகுமார்
4.செல்வன். ரிஷிபன் அருணகிரி
5.செல்வன். சிந்துயன் உதயணன்
நன்றி
செயற்குழு

More

எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள், எப்பொழுதும் குற்றம் குறையே சொல்லிக் கொண்டே இருப்பார்கள். (Oct. 12, 2023)

canada
Informed by : நா. மகேசன். கனடா.
Contributed by : Elango veluppillai
Card image cap

எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள், எப்பொழுதும் குற்றம் குறையே சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

பலருக்குள் சிலர் எந்த இடம், எந்த சந்தர்ப்பம் என்றுகூட பார்க்காமல் குற்றம், குறை கூறத் தொடங்குவார்கள். நீங்கள் உறவினர்களாக இருந்தாலும் சரி நண்பராக இருந்தாலும்சரி, உங்களின் எதிர்பக்கமே அவர்கள் பேசுவார்கள்.
இவர்களுக்கு மற்றவர்களைப் பற்றி குற்றம் குறை சொல்வதையே பகுதிநேர தொழிலாக் கொண்டிருப்பார்கள். இவர்கள் உயர்ந்த விமர்சகர்கள், இவர்கள் ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சமூகத்திலும் குற்றம் சொல்வார்கள் .இவர்கள் ஒவ்வொரு விடயங்களிலும் எவ்வளவு பிழைகள் இருக்கின்றது என்று இந்த ஜென்மம் முழுவதும் குறைகூறிக் கொண்டே இருப்பார்கள். இவர்களை சமுதாய விசமிகள் என்றுகூட கூறலாம்.
இப்படிப்பட்டவர்களால் இவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு மனவிரக்தியும், வெறுப்பும் தான் வரும். – நோய்போல எதிர்மறை செய்திகளைப்பரப்பி, ஒற்றுமை இல்லாத சமுதாயத்தையும் உருவாக்கிவிடுவார்கள் இவர்கள் எப்போதும் பொதுப்பணிகள், சமூகப்பணிகள் செய்பவர்களின் குறைகளைத்தான் முதன்மைப்படுத்துவார்கள். ஆனால் அவர்கள் 1000 க்கு மேற்பட்ட நல்ல விடயங்களை செய்து இருப்பார்கள் அதனை முதன்மைப்படுத்த மாட்டார்கள். அவர் செய்த சிறு தப்பைத்தான் முன்னிலைப்படுத்தி பேசுவார்கள். தப்பு என்பது அறியாமல் செய்வது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எதிர்மறை சிந்தனைகள் தரும் தீமைகள்.
சமுதாயத்தில் குழப்பத்தை உருவாக்கும்.
மற்றவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும்.
அர்த்தமற்ற வாழ்க்கையை உருவாக்கும்.
மற்றவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
தீய சிந்தனைகள் கொண்டவர்கள் தங்களை எப்படி மாற்றிக் கொள்வது. மாற்றம் என்பதை ஏற்றுக் கொள்வது சிரமம்தான். அது நன்மை பயக்குமோ, அல்லது தீமை பயக்குமோ, அதைக் கடைப்பிடிப்பது என்பது கடினம்தான். ஏன் நீங்கள் ஒன்றைச் செய்யப்போனால் சிலர் சொல்வார்கள், ஊருடன் ஒத்துப்போ. நீ உந்தவிடயத்தை எப்போது அறிந்தாய், அதனைப்பற்றி உனக்கு என்ன தெரியும். அதுவெல்லாம் சரிவராது என்று பல கருத்துக்களைக்கூறி உங்கள் முயற்சிக்குத் தடைக்கற்களைப் போட்டு மறித்து விடுவார்கள். இதற்கு நான் ஒரு உதாரணக் கதையை சொல்லுகின்றேன். அமெரிக்காவிலே ஒருவர் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து விடுதலை பெற்று வெளியே வந்தார். அவரால் வெளிச்சத்தைப் பார்க்க முடியவில்லை, சொந்தக்காரர்களை அறிய முடியவில்லை. அவர் சிறைச்சாலை அதிகாரிகளுக்குச் சொன்னாராம் நீங்கள் என்னை மறுபடியும் சிறைச்சாலைக்குள் அடைத்துவிடும்படி. இப்படித்தான் நாங்கள் மாற்றங்களை, மாற்றுவது என்பது சற்று சிரமம்தான். ஆனால் மாறிவிடுவார்கள்.
நாம் சிறுவயதில் இருந்தே சிந்தனையை உருவாக்கிக் கொள்கின்றோம். அதுவே நம் வாழ்நாள் முழுவதும் ஆட்சி செய்கின்றது. நாம் சிறு வயதிலேயே நல்ல சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டால் அதுவே வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கின்றது. ஆனால் நாம் எதிர்மறை சிந்தனை கொண்டவர்களாக இருந்தால் அதை மாற்ற முடியாது என்று அர்த்தம் …

More

கனடாவில் தமிழ் எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் பேச்சு (Oct. 12, 2023)

canada
Informed by : பொன் கந்தவேல்
Contributed by : Elango veluppillai
Card image cap

கனடாவில் தமிழ் எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் பேச்சு

கனடாவில் இலக்கியத்தோட்டம் என்னும் அமைப்பை நடாத்திவரும் உலறிந்த இலங்கை எழுத்தாளர் திரு அ. முத்துலிங்த்தின் அழைபின்பேரில் பிரபல எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் இலக்கையத்தில் அறம் என்னும் தலைப்பிலான பேச்சு இம்மாதம் 21 திகதி மாலை நடைபெறவுள்ளது. விபரம் கீழுள்ள அழைப்பிதழில் காணலாம்.
இன்நிகழ்வில் கலந்துகொண்டு பயனடையுமா|று அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.

அன்புடன்,
பொன் கந்தவேல்
11.10.2023

More

மரண அறிவித்தல் (Sept. 21, 2023)

canada
Informed by : மு. குகன் (மகன் )
Contributed by : Elango veluppillai
Card image cap

மரண அறிவித்தல்
திரு கணபதிப்பிள்ளை முருகேசு ( ஓய்வுநிலை காவற்துறை உத்தியோகத்தர்) கனடா ,வின்சரில் அவரது மகளின் இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இறைபதமடைந்தார்.
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் இடைக்காடு, கனடா ஆகியவற்றை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை முருகேசு கனடா ,வின்சரில் இறைபதமடைந்தார்.
அன்னார் கலம்சென்ற ராசலட்சுமியின் ( தங்கா)அன்புக் கணவரும், குகன், வளர்மதி ( மதி ), பானுமதி ( ராஜி) ஆகியோரின் அன்புத் தந்தையும், வளர்மதி, ரவீந்திரன், குமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும், சரண்யா, கபில், வீணா, சனுஜன், வேந்தன், தருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். .

அன்னரின் இறுதிக்கிரியைகள் 25 – 09 -2023 திங்கட்கிழமை வின்சரில் கீழே தரபட்டுள்ள இடத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் ; பிள்ளைகள்
மகன் ; - 519 566 6242
மகள் ;- 647 679 3841
பார்வைக்கு ; 24- 09 -2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 3-00 8-00 வரை
3260 DOUGALL AVE, WINSOR, ON, N9E 1S8
கிரியைகள் / தகனம்;35- 09- 2023திங்கட்கிழமை காலை 9-00 முதல் 12
வரை

பஸ்சில் பிராயணம் செய்ய விரும்புவோர்
பொ. உதயன் உடன் தொடர்பு கொள்ளவும்
647 297 6552

More

பணக்காரராக வாழுங்கள், ஆனால் பணக்காரர் மாதிரி பாசாங்கு செய்யாதீர்கள் (Sept. 8, 2023)

canada
Informed by : நா. மகேசன் கனடா.
Contributed by : Elango veluppillai
Card image cap

பணக்காரராக வாழுங்கள், ஆனால் பணக்காரர் மாதிரி பாசாங்கு செய்யாதீர்கள்

உலகத்திலேயே வாழ்வதற்கு மிகவும் அபாயகரமான விடயம் எது என்றால் பணக்காரர் போல் பாசாங்கு செய்வதும், வரவுக்கு மிஞ்சி செலவு செய்வதும்தான். ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால் கோடானுகோடி மக்கள் வறுமைப்பட்டுப் போவதற்கு இது ஒரு முக்கியமான காரணமாக அமைகின்றது.
இன்றைய சமுதாயத்தில் வறட்டுக் கெளரவமே தலைவிரித்து ஆடுகின்றது. பணக்காரர்களிடம் மட்டும் இல்லாது சாதாரண பாமர மக்களிடமும் இது பரவிவிட்டது. இவர்கள் தங்களை பணக்காரர்களாக பாசாங்கு செய்வதற்கு முயற்சிக்கிறார்கள். வருமானம் வருமுன்பே செலவு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்கள் மற்றவர்களின் கண் பார்வைக்காக தங்களின் கண்களால் பார்க்க மறந்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கடன் என்ற பாதாளத்திற்கு காலடி எடுத்துவைக்க ஆரம்பித்துவிடுவார்கள். இவ்வாறு மற்றவர்களின் மதிப்பைப் பெறவிரும்பி தங்களின் மதிப்பையே பலி கொடுத்து விடுகின்றார்கள். இவர்கள் பணக்காரர் போல் நடிக்க ஆரம்பித்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
நாகரீகம் நாகரீகம் என்று சொல்லி பலர் தங்கள் பணத்தை காலி செய்துவிடுகிறார்கள். ஒருவனுடைய உடல் அழகைவிட அவன் உள அழகே மேலானது உலகத்திலே உள்ள பெரும் பாலான மக்கள் தங்களின் குறைந்த வருமானத்தை அதிகரிக்காமல் அதற்குப் பதிலாக அதை மறைக்கவே முயற்சிக்கிறார்கள். இதற்காக கடன் பட்டு கடன் என்ற முதலையின் வாயில் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் தங்களைப் பற்றி சிந்திப்பதே இல்லை. மற்றவர்களின் மூளை மூலமாக சிந்திக்கிறார்கள். இவர்கள் முன்னால் பார்த்துக் கொண்டு பின்புறமாக நடப்பவர்கள். எனவே இவர்கள் தங்களைத் தாங்களே பாதாளத்திற்குக் கொண்டு செல்கின்றார்கள். இல்லாததை இருப்பதுபோல் பாசாங்கு செய்வதுதான் இக்காலத்தில் முதன்மை வகிக்கின்றது. இப்படி நடிக்கப்போய் தங்களின் வாழ்க்கையை போலியான வாழ்க்கையாக மாற்றி விடுகிறார்கள்.
ஒவ்வொரு மனிதனும் விரும்புவது தான் பிறரால் மதிக்கப் படவேண்டும் என்று, அது வரவேற்கத்தக்கதுதான். அதற்காக போலியாக நடிக்க வெளிக்கிட்டால் அது இருந்த மதிப்பையும் எடுத்துவிடும். பணக்காரர்கள் போன்று பாசாங்கு செய்வதற்காக பலர் வீண் செலவு செய்து பணத்தை அழிக்கின்றார்கள். இதுவே நீர்க்குமிழி போல் அழிந்து விடுகின்றது. இதனால் இவர்கள் எல்லாவற்றையும் பலிகொடுத்து விடுகிறார்கள்.
அமைதி. 2. கெளரவம். 3. உண்மை. 4. ஒழுக்கம். 5. மகிழ்ச்சி.
இவை எல்லாம் இவர்களை விட்டு பீரங்கி வேகத்தில் ஓடி விடுகின்றது. இதனால் நிம்மதி இழந்துதுன்பம் என்ற நிலைக்கு கொண்டுபோய் விடுகின்றது. இந்தப் பொய் வேசத்தினால் உலகில் எத்தனை தற்கொலைகள் நடக்கின்றன.தங்கள் பொய் மதிப்பைக் காட்டுவதற்காக தங்கள் இன்னுயிரை இழக்கின்றார்கள்.

இவ்வாறு ஒருவன் …

More

பண்புடன் வாழுங்கள், ஆனால் பண்பை எதிர்பார்த்து இருக்காதீர்கள். (Aug. 10, 2023)

canada
Informed by : நா. மகேசன். கனடா
Contributed by : Elango veluppillai
Card image cap

பண்புடன் வாழுங்கள், ஆனால் பண்பை எதிர்பார்த்து இருக்காதீர்கள்.

பண்பு என்பது அழகான நடத்தை. நாம் எல்லோரும் பண்புடன் வாழ வேண்டும். பண்பு என்பது நமது வார்த்தையிலும், செயலிலும், நடத்தையிலும் இருந்து வெளிப்படுகின்றது. பண்பு என்பது பணிவான பேச்சிலும் நேர்மையான செயலிலும், நீதியான நடத்தையிலும் உருவாகின்றது. இது நாம் ஒவ்வொருவரிடமும், மற்றும் பிறரிடமும் செலுத்தும் நன்றி உணர்வின் வெளிப்பாடு ஆகும். பண்பு என்பது நல்ல செயல்களை பரஸ்பரம் மாற்றிக் கொள்வது என்று அர்த்தம் அல்ல. ஏன் என்றால் இது கொடுக்கல் வாங்கல் விடயம் அல்ல. நல்லதொரு பண்பை எதிர் செயலால் சிதைக்கவோ, அழிக்கவோ முடியாது. அன்பு, பரிவு, பொறுமை என்பவற்றை திருப்பிக் கொடுக்க முடியாது.
பண்பு எமக்கு எதைக் கற்றுக் கொடுக்கின்றது. நண்பர்கள், உறவினர்கள் மற்றுமுள்ளவர்களுடனும் அன்பைத் தருகின்றது, நாங்கள் எல்லோரும் பல நேரங்களில் மனைவி, நண்பர்கள், உறவினர்கள், சுற்றத்தார் போன்றவர்களுடன் நாங்கள் பண்பாக பழக மறந்து விடுகின்றோம். பண்பு என்பது குணநலத்தையும், மன நலத்தையும் உருவாக்கும். பண்புகளில் முக்கியமானதொன்று எங்களின் வார்த்தைதான். நான் என்ற அகம்பாவம் பண்பு அற்ற நிலையில் இருந்துதான் உருவாகின்றது. நல்ல பண்பை நாம் கடைப்பிடித்தால் நன்றியும் பணிவும் நம்மிடம் உருவாகும். இயற்கையாகவே நமது பேச்சுக்களில் இனிமையும் மகிமையும் இருக்கும்.
பண்பு என்பது ஒவ்வொருவரினதும் வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும். பண்பை நாம் ஒரு சிறு புன்னகை மூலமோ, நன்றி என்ற வார்த்தையின் மூலமோ, ஒரு பாராட்டு மூலமோ வெளிப்படுத்தலாம். உங்களுக்கு ஒருவர் பரிசில்களை வழங்கினால் அந்த பரிசில்களைவிட கொடுத்தவர் தான் முக்கியம் பெறுகின்றார். ஆனால் உங்களை ஒருவர் அவமதிப்பு செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள், அவரைவிட்டு விலகிச் செல்வீர்கள், சற்று நேரம் யோசித்து பின் உங்களது வாழ்வில் நல்ல விதமாக பாதிப்பை ஏற்படுத்தியவர்களை, நினைவு கூர்ந்து பாருங்கள், நண்பர்களாக இருக்கட்டும், உறவினர்களாக இருக்கட்டும், அவர்கள் கூடிய நேரத்தை உங்களுக்காக செலவழித்து இருப்பார்கள். இவர்கள் தங்கள் பண்பின் காரணமாக செய்தார்களே தவிர நன்றிக்காக அல்ல!. பண்பாக வாழ்வதற்கு தியாக உணர்வு வேண்டும்.

பண்பு அற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதைப் பார்க்கலாம்.
பொய் சொல்லத் தயங்க மாட்டார்கள்.
மற்றவர்களை ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
ஒருவர் மன ஆறுதலுக்காக தன் ஆதங்கங்களை கூறி னால் அதை மற்றவர்களுக்குக் கூறி ஏளனம் செய்வார்கள்
மற்றவர்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இருப்பார்கள்.
நண்பர்கள் உறவினர்களாக இருந்தாலும், வேறு ஒருவர் மூலம் தங்களது எண்ணங்களை நடத்தி முடிப்பார்கள்.
தங்களுக்கு பொழுது போகாவிட்டால் மற்றவர்களுக்கு தொலைபேசி எடுத்து சாக்குப் …

More

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா கோடைகால ஒன்று கூடல் -2023! (July 4, 2023)

canada
Informed by : செயற்குழு!
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா
கோடைகால ஒன்று கூடல் -2023!
கடந்த 18-06-2023 ஞாயிறு அன்று நடைபெற்ற ஒன்று கூடல் பற்றிய திட்டமிடல் பொதுக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட் டணம் :
குடும்பம் - $60
தனிநபர் -$30
நேரம்:
Sunday July 30, காலை 9:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை
நிகழ்ச்சி:
காலை உணவுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி மதியம் BBQ , மாலை தேநீர் மற்றும் சிற்றுண்டியுடன் தொடர்ந்து
இரவு உணவுடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.
மத்திய உணவுக்கு முன்னர், சிறுவர்களுக்கான Soccer நடைபெறும்.
மத்திய உணவுக்கு பின்னர், சிறுவர்களுக்கான வினோத விளையாட்டுக்கள், ஓட்டம், கயிறு இழுவை போன்றவையம், பெரியவர்களுக்கான
விளையாட்டுக்களும் நடைபெறும்.
இறுதியாக வளமை போல் Canadian Boys vs Idaikkadu Boys (?) Soccer Game நடைபெறும்.
இடம்:
Neilson Park (1555 Neilson Rd, Finch & Neilson )

சிறப்பு விருந்தினர்:
திரு: சி. வர்ணகுலசிங்கம் (வர்ணம் Sir)
இளைப்பாறிய இடைக்காடு மகா வித்யாலயா பௌதிகவியல் ஆசிரியர் (1982 to 1986)
அனைவரும் வருகை தந்து, சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் !
நன்றி
செயற்குழு!
பிற்குறிப்பு:
கடந்த 3 வருடங்களாக COVID காரணமாக அங்கத்துவப்பணம் சேகரிப்பு நடைபெறவில்லை.
அங்கத்துவப்பணம் செலுத்த விரும்புவர்கள் பொருளாளரிடம் அன்றைய தினம் park செலுத்தலாம்
என்பதனை நன்றிகளுடன் அறியத்தருகின்றோம் !

More

முடிவுகள் எடுப்பது எப்படி,எப்படி எடுப்பது முடிவுகள். (June 23, 2023)

canada
Informed by : நா. மகேசன் கனடா.
Contributed by : Elango veluppillai
Card image cap

முடிவுகள் எடுப்பது எப்படி,எப்படி எடுப்பது முடிவுகள்.

பலபேரின் வேண்டுகோளுக்கு இணங்கி பலபேரின் கருத்துக்களை உள்வாங்கி, உங்கள் எல்லோரின் அனுசரணையுடன் இதனை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.
எத்தனையோ ஆற்றல் படைத்தவர்கள் தனிப்பட்ட முறையிலோ அன்று பொதுவான முறையிலோ முக்கியமான விடயங்களில் முடிவுகள் எடுக்கத் தெரியாமல்தான் தோற்றுப் போயிருக்கிறார்கள். ஒரு விடயத்தை செய்யலாமோ, அல்லது செய்ய வேண்டாமோ என்று முடிவு எடுப்பது ஒரு திறமையான ஆற்றல். முடிவு எடுக்கும் திறமையைக் கற்றுக் கொண்டால் தனிப்பட்ட முறையிலோ அல்லது சமூகத்திற்கோஅவர்களின் முடிவுகள் உயர்ந்த நிலைக்கு கொண்டுபோய்விடும். முடிவு எடுப்பது என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான பகுதியாகும். சாதனையாளர்கள் எல்லாம்தங்கள் அபரிதமான முடிவுகள் எடுக்கும் திறமையினால்தான் அவர்கள் தங்கள் திறமைகளை நிஜமாக்கியிருக்கிறார்கள். முடிவுகளை நான் மூன்றாக வகைப்படுத்துகின்றேன்.
அவசர முடிவுகள்
இப்போதைக்குத் தேவையில்லாத முடிவுகள்.
ஒரு காலமும் தேவையில்லாத முடிவுகள்.
காலம், நேரம், பயன்பாடு என்ற மூன்றையும் வைத்து இவைகளைத் தீர்மானிக்கலாம். இது மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கு, சமூகப் பணியாளர்களுக்கும் பொருந்தும். சில முடிவுகள் மற்றவர்களின் ஏவலினாலோ,அல்லது பொறாமையினாலோ நான் செய்தால் நான் நிரந்தரமான கெளரவத்தை இழந்து, எனது நற்பெயரையும் சீரளித்துவிடும். ஒரு முடிவை எடுக்கும்போது மற்றவர்கள் ஏன் இதை எனக்கு கூறுகிறார்கள் என்றும், இதனால் எனக்கு நல்ல பெயர் வருமா அல்லது நிரந்தரமான தீய பெயர் வருமா என்று சற்று சிந்தித்து செயல்படுத்துங்கள். முடிவு என்பதற்குப் பொருள் இறுதி என்பதே1.ஆதனால் அதற்கு தொடக்கம் என்று ஒரு வினா இருக்கின்றது என்பதையும் ஞாபகத்தில் வைத்து இருங்கள். இதன் அர்த்தம் என்ன. பிழையான முடிவு என்றால் அதனை தொடங்காமல் இருங்கள் எல்லோரும் சொல்வார்கள். மெளனம் என்றால் சம்மதம் என்று. அது அப்படி இல்லை. தேவையில்லாத முடிவு என்றால் சிலர் மெளனமாக இருப்பார்கள்.
ஒரு செயலைச் செய்வதற்கு சரியாக ஆராய்ந்து, அதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உரிய வழிகளை ஆராய்ந்து, அதை சரியான முறையில் நிறைவேற்றுங்கள். ஒரு முடிவை எடுப்பதற்கு அதன் தேவையையும் பயன்பாட்டையும் அதன் வலிமையையும் அறிந்து முடிவை எடுங்கள். முடிவுகளின் தன்மையைக் கொண்டு அதனை மூன்றாக வகுக்கலாம்.
1. ஆம், இல்லை என்ற முடிவு.
2. இவற்றில் ஒன்று
3. தேவையான முடிவு. ( நிற்பந்தங்களுடன் ). இந்த முடிவுகளை, வரையறை செய்வது இந்த மூன்றும்தான். துரித முடிவு, நிதானமான முடிவு ,தாமத முடிவு. ஒரு நாட்டின் கட்டங்கள் திட்டங்கள் அந் நாட்டின் பாராளுமன்றத்தில்தான் ஜனநாயக முறையில் தீர்மானிக்கப் படுகின்றது. ஆனால் இதற்கு நேர் எதிர் …

More

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா கோடைகால ஒன்று கூடல் -2023 (June 9, 2023)

canada
Informed by : செயற்குழு
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா
கோடைகால ஒன்று கூடல் -2023
மூன்று வருட இடைவெளியிற்கு பின்னர் ,அனைவரும் ஆவலுடன் எதிர்பார்தத கோடைகால ஒன்றுகூடல் வரும் ஆடி மாதம் 30ம் திகதி (JULY 30, 2023) ஞாயிறு அன்று காலை 10 மணியிலிருந்து மாலை 8 மணி வரை Neilson Park (1555 Neilson Rd) இல் நடாத்துவதாக என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்று கூடல் பற்றிய முதலாவது திட்டமிடல் பொதுக்கூட்டம் திரு.பொ .உதயணன் இல்லத்தில் (126 Keeler Blvd ), 18-06-2023 ஞாயிறு அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் வருகை தந்து, தமது ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் !

நன்றி
செயற்குழு!

More

நீத்தார் நினைவு -- அமரர் கதிகாமு தனிகாசலம் (June 4, 2023)

canada
Informed by : பொன். கந்தவேல்
Contributed by : Elango veluppillai
Card image cap

யாழ் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் தனது பாலிய பருவத்தில் இடைகாடு மகாவிதியாலயத்தில் கல்விகற்று தனது வாலிபகாலத்தில் கிளினொச்சி இராமனாதபுரத்தில் சிறந்ததோர் விவசாயியாகவும் வாழ்ந்த அமரர் கதிகாமு தனிகாசலம் அவர்கள் புலம் பெயர்ந்து கனடிய மண்ணில் குடும்பத்துடன் வாழும்காலத்தில் தனது 83வது வயதில் 03.05. 2023 அன்று இறைபதம் அடந்தார்.

இடைக்காடு மகாவித்தியாலயத்தில் தன் கல்வியைக் கற்றுத்தேறிய அவர் தன் குடும்பத்தவராலும் சக மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் விரும்பப்டும் ஒரு மாணவராகவும் கல்வி விளையாட்டு பாட்டு நடனம் நாடகம் முதலான கலை நிழகழ்ச்சிகளிலும் சிறந்துவிளங்கும் ஓர் மாணவனாகவும் தன்னை அடையாளபடுத்திக் கொண்டார். அக்காலத்தில் உணவு உற்பத்தியைப் பெருக்கும் நோக்குடன் கிளினொச்சி இராமனாதபுரம் பகுதியில் தன் குடும்பத்டுக்கு வழங்கப்பட்ட குடியேற்றத்திட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் தன் அபார உளைப்பின்மூலம அப்பகுதியில் முன்னேற்றகரமான ஓர் விவசாயியாகத்திகழ்ந்துவந்தார். அங்கு ஆசிரியராகக் கடமையாற்றிவந்த் கண்ணம்மா என்பவரை த வாழ்கைத்துணையாகத் தெரிவுசெய்து அதன் விளைச்சலாக இனிதாக ஓர்பெண் மகவைப்பெற்று தன் இல்லறத்தை இனிதே நடாத்திவந்தார்.

எம் நாட்டுப்பிர்ச்சகனை நாளுக்குநாள் மோசமடைந்து வரும்காலை 80 துகளின் பிற்பகுதியில் குடும்பத்தாருடன் கனடிய நாட்டுக்கு குடிபெயர்ந்து தனது வாழ்வினை நடாத்திவந்தார்.

கனடிய மண்ணில் இருக்கும்போதும் அவர் தனது செயற்பாடுகள் தனியே ஊதியத்துக்கன வேலையுடன் நின்றுவிடாது கதை கட்டுரை சஞ்சிகைகள் நாடகங்கள் முதலான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு தனது திறமைகளை மக்கள் மத்தியிலும் கொண்டுசென்றார். தன் வாழும் காலத்தில் ஊர் மக்கழுடனும் நண்பர்கலுடனும் தன்னாலான உதவிகள் அனைத்தும் செய்து யாவராலுனம் மதிக்கும் ஒரு மனிதராகவும் வாழ்ந்துவந்தார்.

உலகிமல் பிறந்த அனைவரும் என்றோ ஒருநாள் போய்த்தானெ ஆகவேண்டும் என்னும் விதிக்கேற்ப தனது 82வது அகவையில் இவ்வுலகை நீத்து விண்ணகம் சென்ற அவர் நற்கதி அடைவது திண்ணமே.

தான் வாழும் பகாலத்தில் அன்பான மணைவி, பாசமுள்ள மகள் மருமகன் என்றும் துணை நிற்கும் உறவினர் உலகத்தார் என அவர் வாழ்ந்த வாழ்வு பூரணமான வாழ்வே.

வைய்யத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்

உறையும் தெய்வத்த்துள் வைக்கப்படும் - குறள்

More

மரண அறிவித்தல் (May 10, 2023)

canada
Informed by : மகள்
Contributed by : Elango veluppillai
Card image cap

மரண அறிவித்தல்
திருமதி ஆறுமுகம் ( ஓய்வுநிலை புகையிரத தலைமைக் காவலர் ) சின்னம்மா கனடாவில் 08-05-2023 திங்கட்கிழமை இறைபதமடைந்தார்.
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், அத்தியடி, ரொரண்டோ-கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம் சின்னம்மா கனடாவில் இறைபதமடைந்தார்.
அன்னார் காலம் சென்ற ஆறுமுகம் ( ஓய்வுநிலை புகையிரத தலைமைக் காவலர் ) அவர்களின் அன்பு மனைவியும்,, தவமணியின் அன்புத் தாயாரும், திரு சிவகுமார் அவர்களின் அன்பு மாமியும், , கார்த்திகா, கஜேந்திரன் ஆகியோரின் அன்புப் பாட்டியுமாவார் ஆவார்.
மேலும் அன்னார் காலம் சென்றவர்களான செல்லம்மா, நாகம்மா, சரஸ்வதி, மற்றும் இலட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலம் சென்றவர்களான குமாரசாமி, சுப்பிரமணியம் மற்றும் முத்துக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துணியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் ; மகள். ; 647 609 4902 ( H0ME )

விபரம்;
VISITATION ;
14 – 05-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10-30 ----12-30 மணி வரை
SERVICE
14 – 05 – 2023 ஞாயிற்றுக்கிழமை 12-30 --- 2-00 மணிவரை
PLACE; CHAPEL RIDGE FUNERAL HOME
8911 WOODBINE AVE. MARKHAM, ON , L3R 5G1.

CREMATION;
AT ;- 14 05 2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 3-00 மணி

HIGHLAND HILLS CREMATORIUM.
12492 WOODBINE AVE, GORMLEY, ON, L0H 1G0.

More

மரண அறிவித்தல் (May 3, 2023)

canada
Informed by : Bavani Sivananda
Contributed by : Elango veluppillai
Card image cap

மரண அறிவித்தல்

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு கதிர்காமு தணிகாசலம் ( இரா தணி ) இன்று கனடாவில் இறைபதமடைந்தார்.
அன்னார் கண்ணம்மாவின் அன்புக் கணவரும், பவானியின் அன்புத் தந்தையும், சிவானந்தாவின் அன்பு மாமனாரும், ஓவியா, மதுகன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை வியாழக்கிழமை 04-05-2023 மாலை 5-00 மணிக்கு இடம் பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் ; குடும்பத்தினர். ; 905 305 0762 ( H0ME )
Bavani Sivananda (மகள்) 647 389-9504

விபரம்;
VISITATION ;
04 – 05 – 2023 – THURSDAY -1.30 PM TO 3.00 PM
SERVICE 04-05-2023 , - THURSDAY – 3.00 PM TO 4.30 PM.
PLACE; CHAPEL RIDGE FUNERAL HOME
8911 WOODBINE AVE. MARKHAM, ON , L3R 5G1.

CREMATION; 04-05- 2023 THURSDAY -5.00 PM
AT
HIGHLAND HILLS CREMATORIUM.
12492 WOODBINE AVE, GORMLEY, ON, L0H 1G0.

More

திரு முருகையா சிவலிங்கம் இறைபதமடைந்தார். (April 23, 2023)

swiss
Informed by : சரவணபவான்
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

திரு முருகையா சிவலிங்கம் இறைபதமடைந்தார்.

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் (Swiss) இனை வதிவிடமாகவும் கொண்ட திரு முருகையா சிவலிங்கம் 22-04-2023 அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் உமாராணியின் அன்புக் கணவரும், நரேஸ், நவியா, நவிஸ் ஆகியோரின் அன்புத்தந்தையும்,
காலம் சென்ற முருகையா- உருக்குமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான கந்தையா நடராசா , நடராசா சீதமணி ஆகியோரின் மருமகனும்,
சிவபாக்கியம், சிவராணி, சிவலட்சுமி, சிவனொளிபாதம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சிவனேசன், ரகுநாதன், சரவணபவான், சுபத்திரா மற்றும் உதயகுமார், உத்தரகோசமங்கை, உதயராணி,உதயச்சந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,
காலம் சென்ற நாகேஸ்வரமுத்து, காலம் சென்ற குணதாசன் , பிறேமளா, சுகுணா ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும்,
சர்சன், யாதவன், சரண்யன், யதுசா, யதுர்சன், அனிதா, திவானி, விதுசா ஆகியோரின் மாமனாரும்
காவியன், நிலவன் ஆகியோரின் பெரியப்பாவும்
சஞ்யீவன், சுயந்தன்,சோபிகா, கோகிலா, குகாயினி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் செவ்வாய்க்கிழமை (25.4.2023) அன்று Friedhofstr. 26, 4127, Birsfelden இல் பிற்பகல் 15:00 தொடக்கம் 17:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்படுகின்றது.
புதன்கிழமை (26.4.2023) அன்று இதே இடத்தில் கிரிகை பிற்பகல் 13:00 தொடக்கம் 17:00 மணி வரை நடைபெறவுள்ளது. இவ் அறிவித்தலை உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : சரவணபவான்

More

இடைக்காடு வளலாய் நலன்புரிச்சங்கம் UK செயற்குழு உறுப்பினர்கள் 2023-2025 (March 26, 2023)

uk
Informed by : Rajeethan
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

செயற்குழு உறுப்பினர்கள் 2023-2025

தலைவர்: திரு ரஜீதன் கிருஷ்ணமூர்த்தி
உபதலைவர்: திரு கேதீஸ்வரன் கிருஸ்ணானந்தன்
செயலாளர்: திரு கேதீஸ்வரன் பொன்னம்பலம்
உபசெயலாளர்: திருமதி சுகுணா உதயச்சந்திரன்
பொருளாளர்: திருமதி சுமங்கலி ஸ்கந்தகுமார்
உபபொருளாளர்: திரு வெற்றிவேல் பாலசிங்கம்

1. திருமதி சுஜாந்தினி கேதீஸ்வரன்
2. திருமதி வாகினி ரஜீதன்
3. திருமதி சஸ்மிதா கிரிதரன்
4. திருமதி வாசுகி விஜயகுமார்
5. திருமதி கௌசலா செல்வக்கதிரமலை
6. திரு. காந்தலிங்கம் கந்தசாமி
7. திரு.ரவீந்திரன் கந்தையா
8. திருமதி யாழினி ஆனந்தவடிவேல்
9. திரு ஆறுமுகசாமி கதிர்காமு
10. திருமதி சிவகாமி செல்வக்குமாரன்

இளைஞர் அணி உறுப்பினர்கள்

1. யதுர்சன் சரவணபவான்
2. அனந் ஆறுமுகசாமி
3. காருஜன் காந்தலிங்கம்
4. அரன் ஆறுமுகசாமி
5. ரமணன் தங்கவேல்
6. அனிதா சரவணபவான்
7. அமிர்தா ஞானதிலீபன்
8. ஆர்த்தி ஆறுமுகசாமி
9. சரண்யா செல்வக்குமாரன்
10. ஆரணி மனோ

More

சரியானதை சரியாகச் செய்தால், சரியாக வரும். பிழையானதை சரியாகச் செய்தாலும் பிழையாகத்தான் வரும். சரியானது எது, பிழையானது எது. (March 21, 2023)

canada
Informed by : நா. மகேசன் கனடா.
Contributed by : Elango veluppillai
Card image cap

சரியானதை சரியாகச் செய்தால், சரியாக வரும். பிழையானதை சரியாகச் செய்தாலும் பிழையாகத்தான் வரும். சரியானது எது, பிழையானது எது.

எல்லோரையும் நேசிப்பது சிலருக்கு இயற்கையாகவே அமைந்துவிடும். அவர்களுக்கு எல்லோரிடமும் நண்பர்களாக இருப்பதற்கு எதுவித தடைகளும் இருப்பது இல்லை. ஆனால் எல்லோருக்கும் இயல்பாகவே நல்ல குணம் அமைந்துவிடாது, பிழையான குணங்களால் அவரைவிட்டு உறவுகள், நண்பர்கள் விலகிப் போகும் நிலை ஏற்படும். இதற்கு என்ன செய்ய வேண்டும். நான் என்னை சரியான மரியாதைக்கு உரியவனாக்கிக் கொள்வேன்.
நான் 2013 அம்மாவின் ஆத்மகிரியைக்காக தாயகம் சென்று இருந்தேன். அப்போது என் நண்பர் வீட்டில் ஒரு செடி செழித்து வளர்ந்து இருந்தது. ஆனால் ஒரு பூவையும் காணவில்லை. நான் சொன்னேன் செடியில் இலைகளை அகற்றி விடும்படி, அவர் அகற்றிவிட்டார். இரண்டு மாதங்களின்பின் அச்செடி நன்றாக பூத்துக் கொழித்து இருந்தது. இதில் இருந்து நாம் அறியும் உண்மை என்ன, சாத்தியம் இல்லாததை நாங்கள் அகற்றிவிட வேண்டும். சாத்தியமான விடயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
ஒரு மனிதன் தன் குணங்களில் தேவையில்லாததை அகற்றிவிட்டால் போதும், அவனைச் சுற்றி எல்லோரும் வலம் வருவார்கள். வீட்டிற்கு வருபவர்களை வரவேற்பதுதானே இளைஞர்களுக்கு அழகு. இளைஞர்கள் பொதுப்பணி செய்பவர்களை அநுசரிப்பதுதானே அவர்களுக்குப் பெருமை, இளைஞர்கள்தான் ஊரை வழி நடத்திச் செல்பவர்கள், இவர்கள் என்ன செய்ய வேண்டும். முன்னர் பொதுப்பணி செய்தவர்களை மதிக்க வேண்டும், அவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும், அவர்களைக் கனம் பண்ண வேண்டும்.
நான் செல்வேன் நல்லவர்களுக்கு தானாகவே நன்மைகள் வரும், எப்படி, ஒரு ஏழை வயோதிபரின் கதை, இதை என் தந்தை 74 ம் ஆண்டு சொன்னார். எல்லோரும் ஒரு குளத்தில் நீராடுவார்கள். ஒருநாள் அந்த இடத்திற்குப் போகும் வழியில் மரம் ஒன்று வீழ்ந்து கிடந்தது. பலர் மாற்று வழிகளில் சென்றார்கள். சிலர் மரத்தின்மேல் ஏறிச் சென்றார்கள். ஆனால் ஒரு முதியவர் அம் மரத்தினை அகற்ற முயன்றார். அப்போது மரத்தின் கீழ் பகுதியில் பணப்பை ஒன்று இருந்தது. இதில் இருந்து நாம் அறியும் உணமை என்னவெனில் மற்றவர்களுக்கு நன்மைகளைச் செய்யும் போது எமக்கும் நன்மைகளே வந்து சேரும்.
நல்லமனமும், பொதுப் பணி செய்பவர்களுக்கும் எப்போது நல்லதே நடக்கும் என்பார்கள். அதைவிட நல்ல மனிதர்களின் நன்மை, தீமைகளுக்கு வருபவர்களையும், ஆதரவு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கையையும் கொண்டு அவர்களின் மகிமையையும் பொதுநல நோக்கும் எல்லோருக்கும் புலப்படும். மனிதனுக்கு எது பெருமை, தவறுகளை ஒப்புக் கொள்வது, இப்படித்தான் இருக்க வேண்டும் உண்மைகளை சொல்ல எப்பவும் …

More

நீதியாகவும் நியாயமாகவும் வாழ்வது எப்படி ? (Feb. 6, 2023)

canada
Informed by : நா. மகேசன். கனடா.
Contributed by : Elango veluppillai
Card image cap

நீதியாகவும் நியாயமாகவும் வாழ்வது எப்படி ?
சில சமயங்களில் நீதி வெல்வது இல்லை. .ஆனால் அது நிலைத்து நிற்கும். அநீதி வெல்வது போல் தோன்றும், ஆனால் நிலைத்து நிற்பது இல்லை. நீதி என்றால் அது உண்மையின் வெளிப்பாடு. அநீதி என்றால் அது பொய்யின் வெளிப்பாடு. பொய் சொல்பவர்கள் தங்கள் பக்கம் அதிக ஆட்களை வசியப்படுத்தி வைத்திருப்பார்கள். தொடர்ந்து ஆட்களுடன் கதைத்துக் கொண்டே இருப்பார்கள். முதலில் பொதுவாக கதைத்து பின் தனிப்பட்ட ஒருவரையோ அல்லது ஒரு அமைப்பையோ குறைகூற தொடங்குவார்கள். நீங்களே அவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள். அநீதியை செய்பவர்கள் தொடர்ந்து ஆட்களுடன் பரப்புரைகளை செய்து கொண்டே இருப்பார்கள். சிலகாலங்களிலேயே இவரின் வார்த்தையில் உண்மை இல்லை என்று மக்கள் முடிவு கட்டி விடுவார்கள், இவர்களைப் புறம்தள்ளி விடுவார்கள். இவர்கள் ஒருவிடயத்தை தொடங்குவார்கள் ஆனால் நிறைவேற்றி முடிக்க மாட்டார்கள் இடை நடுவில் கைவிட்டு விடுவார்கள்.
நேர்மை என்பது நீதியின் வெளிப்பாடு கடமை என்பது நியாயத்தின் வெளிப்பாடு. நேர்மை என்பது திறந்த மனதையும், நம்பிக்கையையும், ஒளிவு மறைவு இன்மையையும் நல்ல பண்பையும் ஊற்றாகக் கொண்டது. தனக்கும் பிறருக்கும் நன்மையைச் செய்கின்றது. நீதி என்பது உள்ளார்ந்த குணத்தில் இருக்கின்றதே தவிர, வெளிப்படை நடத்தையில் இருப்பது இல்லை. பொய் மிகவும் வேகமானதாக இருக்கும். ஆனால் பொய் சொல்பவர்கள் பட்டம் பெற்றதும் இல்லை. அவர்களுக்குச் சிலை வைத்ததும் இல்லை. ஆனால் மக்கள்தான் இவர்களுக்குப் பட்டம் சூட்டுவார்கள்.
ஒருவர் முன்னேறுவதற்கு நீதியை விட்டுக் கொடுத்தால் அது நியாயமாகுமா? அல்லது குறுக்கு வழிகளைப் பயன்படுத்தினால் அதி பயன் தருமா? ஒருவர் குறுக்கு வழியில் முன்னேறலாம், அது நிம்மதியையும் நிறைவையும் தருமா? அவர் மகிழ்ச்சியாக வாழ முடியுமா? ஒருவர் ஒரு பொதுப் பணிகளைச் செய்வதைவிட அதில் நீதியாக இருப்பதே நியாயமானது.

நீங்கள் ஒரு செயலைச் செய்யும்போழுது உங்களுக்கு உள்ளேயே சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்.
1. நான் செய்யும் செயல் எனக்கே சரியாக இருக்கின்றதா அல்லது மக்களுக்குச் சரியாகத் தோன்றுமா ?
2. நான் செய்யும் செயலால் எனக்கும் சமூகத்திற்கும் நன்மை கிடைக்குமா?
3. பொது நீதியாகவோ அல்லது சமூக நீதியாகவோ எனக்கோ அல்லது சமூகத்திற்கோ பாதிப்பை ஏற்படுத்துமா?
நீதியும் நீதியின்மையும் பொதுவாக எல்லோரும் செய்ய அது அவர்களுக்கு பழக்கமாகி விடுகின்றது. சிலர் நீதியின்மையில் தேர்ச்சி பெற்று நீதியான முகத்துடன் பொய் சொல்ல முடியும், இவர்களை இனம் காண்பது அரிது. மற்றவர்கள் இவர்கள் சொல்வது பொய் என்று அறியமுடியாத அளவிற்குப் பொய் சொல்வார்கள். ஆனால் இவர்கள் …

More

சங்கடங்கள், சச்சரவுகள், சஞ்சலங்கள், சண்டைகள் இவைகளில் இருந்து விடுபடுவது எப்படி ? (Jan. 5, 2023)

canada
Informed by : N.Makesan
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

சங்கடங்கள், சச்சரவுகள், சஞ்சலங்கள், சண்டைகள் இவைகளில் இருந்து விடுபடுவது எப்படி ?

More

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா பொதுக்கூட்டம் - 2023 (Dec. 29, 2022)

canada
Informed by : Selva
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா
பொதுக்கூட்டம் - 2023

இவ்வருடத்துக்கான (2022) நிறைவு பொதுக்கூட்டமும் வரும் வருடத்துக்கான (2023) முதலாவது பொதுக்கூட்டமும் எதிர் வரும் ஞாயிறு 1-1-2023 அன்று உப-தாலைவர் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் வருகைதந்து சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்!

இடம் : 126 Keeler Blvd, Scarborough
திகதி : 1-1-2023
நேரம் : 2:30 PM

நன்றி
செயற்குழு

More

நாங்கள் பிள்ளைகளை எப்படி வளர்த்தோம், எப்படி வளர்க்கின்றோம் (Dec. 24, 2022)

canada
Informed by : நா. மகேசன். கனடா.
Contributed by : Elango veluppillai
Card image cap

நாங்கள் பிள்ளைகளை எப்படி வளர்த்தோம், எப்படி வளர்க்கின்றோம், எப்படி வளர்ப்போம். கழுகு மாதிரியா ?. கங்காரு மாதிரியா ?.

மனிதனின் வாழ்க்கைமுறை இரண்டு வகைப்படும்.
1. குடும்ப வாழ்க்கை.
2. கூட்டுக் குடும்ப வாழ்க்கை.
குடும்ப வாழ்க்கைக்கு கழுகையும், கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு கங்காருவையும் உதாரணமாக எடுத்து உவமாயம் உவநேயத்துடன் இதனை எழுதுகின்றேன். உயர்திணையில் உள்ள மனிதர்களின் பிள்ளை வளர்ப்பை எழுதுவதற்கு என் மனதில் எண்ணம் தோன்றவும் இல்லை. இதை மனிதரை உதாரணம் காட்டி எழுத என் சிந்தனை இடம் கொடுக்கவும் இல்ல. குடும்ப வாழ்க்கைக்கு கழுகையும், கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு கங்காருவையும் எடுத்துக் கொள்கிறேன். இதற்கு ஒரு பறவையையும், ஒரு விலங்கையும் எடுத்துக் கொள்கிறேன்.
சரி முதலில் குடும்ப வாழ்க்கையைப் பார்ப்போம். கழுகு ஆணும், பெண்ணும் ஒன்றாகத்தான் வாழும். மிகவும் அன்பாகவும் ஒற்றுமையாகவும் வாழும். இவைகளிடம் கருத்து வேற்றுமை உருவாவது இல்லை. சரி இவை இரண்டும் தங்கள் வாரிசை எப்படி வளர்க்கும் என்பதைப் பார்ப்போம். மிகவும் கவர்ச்சியாக இருக்கும். முதலில் மிகவும் பாதுகாப்பான இடத்தில் கூடு கட்டும். எப்படி கூடு கட்டும்
1. முதலில் பெரிய நீளமான முட்களைப் போடும்
2. மரக் கொப்புகளைப் போடும்
3. இலைகளைப் போடும்
4. தும்புகளைப் போடும்
5. கடைசியாக பஞ்சைப் போட்டு முட்டை இடும்.
முட்டை இட்டு குஞ்சு பொரித்து 20 ம் நாள் பஞ்சை நீக்கி விடும். அதன் பிறகு ஒவ்வொன்று ஒவ்வொன்றாக நீக்கி விடும் ஆனால் கழுகு குஞ்சுகள் மிகவும் சோம்பேறி. தாய் தந்தையர் கொடுக்கும் உணவை உட்கொண்டுவிட்டு நன்றாக உறங்கும். தாய் தந்தையருக்கு எப்படி பிள்ளைகளை வளர்ப்பது என்பது தெரியாதா ?. நன்றாகத் தெரியும். அதனால்தான் நான் முன்பு கூறியது போல் கூட்டைக் கட்டும். கூட்டில் எல்லாவற்றையும் நீக்கிவிட்டபின் கடைசியில் மிஞ்சுவது நீளமான முட்கள்தான் கூட்டில் கழுகு குஞ்சு இருக்க முடியாது முட்கள் குத்தும். இதனால் கூட்டின் கரைக்கு வரும். வந்தவுடன் வெளியில் விழாமல் இருக்க சிறகை முதலில் அசைத்சு தன்னை கூட்டில் இருந்து விழாமல் பாதுகாத்துக் கொள்ளும். இறகுகளை அடித்து தங்களது இறகுகளைப் பலப்படுத்தியதை அறிந்த கழுகு குஞ்சை பறக்க பழக்கும். ஆனால் குஞ்சு பழகுவதே இல்லை. தாய் தந்தையர் கொடுக்கும் உணவை உண்டு வாழத்தான் விரும்பும்
ஓர்நாள் தாய்பறவை தன் குஞ்சை காலால் தூக்கி கொண்டுபோய் மிகவும் உயரத்தில் கொண்டுபோய் கையை விடும். ஆனால் குஞ்சு நிலத்தில் விழமுன் ஏந்திவிடும். இப்படி பலமுறை செய்தபிறகு குஞ்சுக் …

More

அசோகன் தம்பி அவர்கள் காலமானார் (Dec. 12, 2022)

canada
Informed by : Selva
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

பிறப்பு - 28-09-1964
இறப்பு - 12-12-2022

பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் Whitby, Ontario, CANADA வை வதிவிடமாகவும் கொண்ட அசோகன் தம்பி அவர்கள் 12-12-2022 அன்று Whitby, Ontario வில் காலமானார். அன்னார் காலம் சென்றவர்களான தம்பிமுத்து தம்பி (இடைக்காடு) கமலா தம்பி (அல்வாய்) ஆகியோரின் கனிஷ்டா புத்திரனும் , காலம் சென்றவர்களான தம்பையா சிவநாயகம்( உரும்பிராய் ) லங்காதேவி சிவநாயகம் (உடுவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும், சுபத்திரிக்காவின் அன்புக் கணவரும் , நவீனின் பாசமிகு தந்தையும், திருமதி தமயந்தி Hermit , இராகவன் , முரளீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், கிரிதரன் சிவநாயகம் (சுவிற்சலாந்து) காலம் சென்ற சந்திரிக்கா சிவநாயகம் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும், தரணிக்கா கிரிதரனின் (சுவிற்சலாந்து) சகலரும், காலம் சென்ற முத்தாம்பிகை செந்தில்குமரன் (கனடா), திருமதி இந்திராணி விஜிதாம்பரம் (கனடா) ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவர்.

Visitation :17-12 2022
Chapel Ridge Funeral Home
5 pm to 9 pm

18-12 2022
Chapel Ridge Funeral Home
12:30 pm to 1:30 pm

Rituals: 18-12 2022
Chapel Ridge Funeral Home
1:30 pm to 3:00 pm

Cremation: 18-12 2022
3:30 pm @ 12492 Woodbine Ave,
Gromley, Ontario
தகவல்:
நவீன் -மகன் -647-205-2008
சுபத்திரிக்கா அசோகன் -மனைவி - 647-298-3234
கிரிதரன் -மைத்துனர் - +41-76 440 4963 (Switzerland )

More

மரண அறிவித்தல் (Dec. 8, 2022)

canada
Informed by : மகள் சுகந்தி
Contributed by : Elango veluppillai
Card image cap

மரண அறிவித்தல்
திருமதி இராசமணி செல்லத்துரை இறைபதமடைந்தார்.
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராசமணி
செல்லத்துரை நேற்று 07- 12-2022 புதன்கிழமை இரவு தனது மகள் சுகி இளங்கோ அவர்களின்
இல்லத்தில் இறைபதமடைந்தார்.
அன்னார் காலம்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும், சுகந்தி, சுதர்சன்
ஆகியோரின் அன்புத்தாயாரும், இளங்கோ, அனுசா ஆகியோரின் அன்பு மாமியாரும், தினேஸ்,
மிரோசன், நிதோசன், தர்சன், சயினா, ஆகியோரின் அன்புப் பாட்டியும் ,சிரோஜினி, நிசான், ஜரா
ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
மேலும் அன்னார் காலம் சென்ற அருளம்மா, நல்லம்மா (மனோன் ) ஆகியோரின் அன்புச்
சகோதரியுமாவார்.
தகவல் ; மகள் சுகந்தி ; 647 – 533 – 5165/ 647 666- 1337
தொடர்புகளுக்கு
சுதர்சன் – மகன் – 416-919- 9074
இளங்கோ – மருமகன் – 416 -909- 1107
பார்வைக்கு ; ஞாயிறு 11- 12 - 2022 - மாலை ; 6-00 --- 9-00
கிரியைகள், தகனம் ; திங்கள் 12-12 - 2022 ; 11-00AM ---- 1-00PM
இடம்;
LOTUS FUNERAL AND CREMATION CENTRE INC.
121 CITY VIEW DR, ETOBICOKE ,ON , M 9 W 5 A 8.

More

நாங்கள் பிள்ளைகளை எப்படி வளர்த்தோம், எப்படி வளர்க்கின்றோம், எப்படி வளர்ப்போம். கழுகு மாதிரியா ?. கங்காரு மாதிரியா ?. (Dec. 7, 2022)

canada
Informed by : நா. மகேசன். கனடா.
Contributed by : Elango veluppillai
Card image cap

நாங்கள் பிள்ளைகளை எப்படி வளர்த்தோம், எப்படி வளர்க்கின்றோம், எப்படி வளர்ப்போம். கழுகு மாதிரியா ?. கங்காரு மாதிரியா ?.

மனிதனின் வாழ்க்கைமுறை இரண்டு வகைப்படும்.
1. குடும்ப வாழ்க்கை.
2. கூட்டுக் குடும்ப வாழ்க்கை.
குடும்ப வாழ்க்கைக்கு கழுகையும், கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு கங்காருவையும் உதாரணமாக எடுத்து உவமாயம் உவநேயத்துடன் இதனை எழுதுகின்றேன். உயர்திணையில் உள்ள மனிதர்களின் பிள்ளை வளர்ப்பை எழுதுவதற்கு என் மனதில் எண்ணம் தோன்றவும் இல்லை. இதை மனிதரை உதாரணம் காட்டி எழுத என் சிந்தனை இடம் கொடுக்கவும் இல்ல. குடும்ப வாழ்க்கைக்கு கழுகையும், கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு கங்காருவையும் எடுத்துக் கொள்கிறேன். இதற்கு ஒரு பறவையையும், ஒரு விலங்கையும் எடுத்துக் கொள்கிறேன்.
சரி முதலில் குடும்ப வாழ்க்கையைப் பார்ப்போம். கழுகு ஆணும், பெண்ணும் ஒன்றாகத்தான் வாழும். மிகவும் அன்பாகவும் ஒற்றுமையாகவும் வாழும். இவைகளிடம் கருத்து வேற்றுமை உருவாவது இல்லை. சரி இவை இரண்டும் தங்கள் வாரிசை எப்படி வளர்க்கும் என்பதைப் பார்ப்போம். மிகவும் கவர்ச்சியாக இருக்கும். முதலில் மிகவும் பாதுகாப்பான இடத்தில் கூடு கட்டும். எப்படி கூடு கட்டும்
1. முதலில் பெரிய நீளமான முட்களைப் போடும்
2. மரக் கொப்புகளைப் போடும்
3. இலைகளைப் போடும்
4. தும்புகளைப் போடும்
5. கடைசியாக பஞ்சைப் போட்டு முட்டை இடும்.
முட்டை இட்டு குஞ்சு பொரித்து 20 ம் நாள் பஞ்சை நீக்கி விடும். அதன் பிறகு ஒவ்வொன்று ஒவ்வொன்றாக நீக்கி விடும் ஆனால் கழுகு குஞ்சுகள் மிகவும் சோம்பேறி. தாய் தந்தையர் கொடுக்கும் உணவை உட்கொண்டுவிட்டு நன்றாக உறங்கும். தாய் தந்தையருக்கு எப்படி பிள்ளைகளை வளர்ப்பது என்பது தெரியாதா ?. நன்றாகத் தெரியும். அதனால்தான் நான் முன்பு கூறியது போல் கூட்டைக் கட்டும். கூட்டில் எல்லாவற்றையும் நீக்கிவிட்டபின் கடைசியில் மிஞ்சுவது நீளமான முட்கள்தான் கூட்டில் கழுகு குஞ்சு இருக்க முடியாது முட்கள் குத்தும். இதனால் கூட்டின் கரைக்கு வரும். வந்தவுடன் வெளியில் விழாமல் இருக்க சிறகை முதலில் அசைத்சு தன்னை கூட்டில் இருந்து விழாமல் பாதுகாத்துக் கொள்ளும். இறகுகளை அடித்து தங்களது இறகுகளைப் பலப்படுத்தியதை அறிந்த கழுகு குஞ்சை பறக்க பழக்கும். ஆனால் குஞ்சு பழகுவதே இல்லை. தாய் தந்தையர் கொடுக்கும் உணவை உண்டு வாழத்தான் விரும்பும்
ஓர்நாள் தாய்பறவை தன் குஞ்சை காலால் தூக்கி கொண்டுபோய் மிகவும் உயரத்தில் கொண்டுபோய் கையை விடும். ஆனால் குஞ்சு நிலத்தில் விழமுன் ஏந்திவிடும். இப்படி பலமுறை செய்தபிறகு குஞ்சுக் …

More

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா (Nov. 7, 2022)

canada
Informed by : செயற்குழு
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

Update - Nov -07-2022
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா
குளிர்கால ஒன்று கூடல் -2022
பலரினதும் விருப்பத்திற்கமைய, எமது குளிர்கால ஒன்றுகூடல் வரும் மார்கழி மாதம் 26ம் திகதி (December 26th, 2022) அன்று மாலை 6 மணியிலிருந்து 12 மணி வரை BABA Banquet Hall இல் நடாத்துவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்விழாவிற்கான தங்கள் வருகையை ஏற்கனவே உறுதிப்படுத்திய அனைவரிற்கும் நன்றிகள். மேலும் வருகைதர விரும்புவர்கள், உங்கள் வருகையை கீழ் உள்ள இலக்கங்களுடன் அல்லது எதாவது ஒரு செயற்குழு உறுப்பினருடன் தொடர்புகொண்டு Nav 30ம் திகதியிற்கு முன்னர் உறுதிப்படுத்தி கொள்ளவும்.

அத்துடன், இவ்விழா பற்றிய திட்டமிடல் பொதுக்கூட்டம் திரு.பொ .உதயணன் இல்லத்தில, 20-11-2020 ஞாயிறு
அன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெற உள்ளது. அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.

இதற்கான கட்டணம் :
Family with kids under 21 years - $60
Seniors Family - $40
Single (above 21 years old ) - $30

உதயன் - 647-297-6552
ரூபன் - 416-566-6523
செல்வா - 647-407-8358

செயற்குழு உறுப்பினர் விபரம்:
தலைவர் : திரு.தம்பு நாகேஸ்வரமூர்த்தி
உப-தலைவர் : திரு.பொன்னையா உதயணன்
செயலாளர்: திருமதி. கங்காதேவி நல்லதம்பி
உப-செயலாளர் : திரு.சிவஞானரூபன் சிவஞானசுந்தரம்
பொருளாளர்: திரு.பார்த்திபன் கந்தவேல்
உப-பொருளாளர் : செல்வன். கபிலன் இரத்தினசபாபதி
பொதுக்குழு உறுப்பினர்கள்:
1.திருமதி. கீர்த்தனா அஜித்குமார்
2: திருமதி. அனுஷா சுதர்சன்
3.செல்வன்.துஷியன் நவகுமார்
4.செல்வன். ரிஷிபன் அருணகிரி
5.செல்வன். சிந்துயன் உதயணன்

நன்றி
செயற்குழு

More

ஆறுமுகம் சிவகுமார் (Sept. 22, 2022)

uk
Informed by : Selva
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, மற்றும் பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவகுமார் அவர்கள் 16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு,திருதி ஆறுமுகம், ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,நாகலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,அருண், திவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,சூரியகுமார்(சூரியன்- கனடா), சந்திரகுமார்(சாந்தன்- சுவிஸ்), காலஞ்சென்றவர்களான ராசகுமார்(ராசன்), தயாளகுமார்(குமார்) மற்றும் ஜீவகுமார்(ஜீவன் - லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜெயரூபி(ஜெயந்தி- கனடா), சிவமலர்(சுவிஸ்), நளாயினி(லண்டன்), ராஜலோஜினி(சுவிஸ்), சிவலோஜினி(கனடா), சுதர்சன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சுவாதி, ஆருதி, யதூஷ், மெளனிகா, நிவேதா, நிருசன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,யஸ்மிகா, ஜெலோஜன், சியாமி, மீரா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,நிகேஷ், அனோஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 25 Sep 2022 9:00 AM - 11:00 AM
Belmont Community Hall Kenton Ln, Stanmore, Harrow HA3 8RZ, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 25 Sep 2022 12:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
நாகலோஜினி - மனைவிMobile : +447796209817 சூரியகுமார் - சகோதரன்Mobile : +19059481752 சந்திரகுமார் - சகோதரன்Mobile : +41788463032 ஜீவகுமார் - சகோதரன்Mobile : +447537954696

ANGEL FUNERAL Angel funeral is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Late Sivakumar Arumugam's Funeral
Time: Sep 25, 2022 09:00 AM London

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/89147077345?pwd=cDhxa2tSR1JsVXluUmNEcXRKRkFHUT09

Meeting ID: 891 4707 7345
Passcode: 930999
One tap mobile
+19292056099,,89147077345#,,,,*930999# US (New York)
+12532158782,,89147077345#,,,,*930999# US (Tacoma)

Dial by your location
+1 929 205 6099 US (New York)
+1 253 215 8782 US (Tacoma)
+1 301 715 8592 US (Washington DC)
+1 309 205 3325 US
+1 312 626 6799 US (Chicago)
+1 346 248 7799 US (Houston)
+1 386 347 5053 US
+1 564 217 2000 US
+1 646 931 3860 US
+1 669 444 9171 US

More

கண்ணீர் அஞ்சலி (Sept. 16, 2022)

uk
Informed by : குடும்பத்தினர்
Contributed by : Elango veluppillai
Card image cap

கண்ணீர் அஞ்சலி

More

பயம் என்றால் என்ன, பயத்தை எப்படி எதிர் கொள்வது, பயத்தை வெற்றி கொள்வது எப்படி (Sept. 9, 2022)

canada
Informed by : நா. மகேசன்.
Contributed by : Elango veluppillai
Card image cap

பயம் என்றால் என்ன, பயத்தை எப்படி எதிர் கொள்வது, பயத்தை வெற்றி கொள்வது எப்படி

பயம் எப்படி வரும், இப்படித்தான் ஏதேனும் ஒரு புதிய செயலில் இறங்கும்போழுது இயல்பாக ஏற்படும் உணர்வாக அதை நினைத்துக் கொள்ளுங்கள். அது உங்களை பின்னடைவாக கொண்டு சென்று விடுமோ என்று நீங்கள் எண்ணலாம். இதை எல்லோரும் அனுபவிக்கின்றார்கள் என்பதை பலரும் உணரத் தவறி விடுகின்றார்கள். உதாரணத்திற்கு பார்ப்போம் பெரிய தொழில் அதிபர்கள், பிரபல பாடகர்கள் போன்றவர்கள் முதல் முதல் ஒரு செயலைச் செய்யும் பொழுது நடுங்கத்தான் செய்கிறார்கள். ஒரு புதிய செயலில் நீங்கள் இறங்கும் போழுது பயப்படுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்வதில் எந்தவித அச்சமும் கொள்ளாதீர்கள்
1. எதிர்காலத்தில் வரும் பயத்தை எதிர்கொள்வதற்கு சிறந்தவழி எது, அதுதான் நிகழ்காலத்தில் அதிக அக்கறை காட்டுவது.
2. பயத்தை நீக்குவதற்கு சிறந்தவழி அதை எதிர் கொள்வதுதான்.
3. ஒவ்வொரு முயற்சியிலும் உங்கள் சவாலை எதிர் கொள்ளுங்கள், அது உங்களது பயத்தை நீக்கும்.
பயத்தை எதிர் கொள்ளும் பிரச்சனைகளுக்கு நீங்கள் மிக அருகில் இருந்தால் அது பொதுப்பணிகளிலோ, சமூகப் பணிகளிகளிலோ பின் அடைவைத்தான் ஏற்படுத்தும். ஆனால் அதை உயர்ந்த நோக்கத்துடனும், மனவலிமையுடனும் பார்க்கும்போது, அவை சிறிய பிரச்சனையாகத்தான் தோன்றும். பழைய பயத்துடன் உங்கள் பிரச்சனையை தொடர்ந்து எண்ணிக் கொண்டிருந்தால், நீங்கள் உங்களுக்கே குழிதோண்டிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றுதான் நான் சொவேன், அது உங்கள் மனதில் ஆழமாகத் தோன்றி அதில் இருந்து மீழ முடியாதா அழவிற்கு கொண்டுபோய் சேர்த்து விடும். இதற்குப் பதிலாக நீங்கள் புதிய சிந்தனைகளில் விடைகளைக் காண முயற்சியுங்கள். இதில் இருந்துவரும் பயமில்லாத துணிச்சலான நல்ல விடைகளைக் கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
பலர் பயத்தை தனித்துவமான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள், அது தவறாகப் போகுமோ, அதில் கவனம் செலுத்தினால், அது மோசமான எதிர் விளைவுகள் ஏற்படாமல் தடுக்கும் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால் அது அப்படி செயற்படுவது இல்லை பயம் என்பதூங்கள் முன்னேற்றத்தில் விரயம். அது உங்கள் வலிமையைக் குறைத்து துன்பத்தில் தள்ளிவிடும் பாருங்கள் நீங்கள் பயப்பட்ட செயல்களில் எத்தனை விடயங்கள் உங்களுக்கு நடந்து இருக்கின்றன, பெரும்பாலும் நான் சொல்வேன் மிக்க் குறைவாகத்தான் என்று பயத்தை எதிர் கொள்ளும் மன உறுதி இருந்தால் அவர்கள் இன்னும் பயத்தின் எண்ணிக்கையை குறைத்து இருக்கலாம்.
சிலர் பயத்தினால் முயற்சி செய்வதில்லை, பயிர் செய்தால் மழைஅழிக்கும், விலங்குகள் விடாது, பயிர் செய்தால் செலவுகள் அதிகமாகும், நட்டம் வரும். விளைச்சலை லாபத்திற்கு விற்க முடியாது, என்று தங்களுக்குத் …

More

திரு. கருணாமூர்த்தி கிருஷ்ணவேலாயுதம் (கணேஷ்) (Aug. 11, 2022)

canada
Informed by : Bala Periyathamby
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

அன்னையின் மடியில் : ஆனி 24, 1970
ஆண்டவன் அடியில் : ஆவணி 11, 2022

இடைக்காட்டைய் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. கருணாமூர்த்தி கிருஷ்ணவேலாயுதம் (கணேஷ்) அவர்கள் 11.08.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் கிருஷ்ணவேலாயுதம்- பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சதாசிவம் - சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவநந்தினியின் அன்பு கணவரும், ஐதுசா, அபிஷா, கருண் ஆகியோரின் அன்பு தந்தையுமாவார்.
மேலும் இவர் சுதா, மகிந்திரராசா(அப்பு), கீதா, ஆகியோரின் பாசமிகு சகோதரரும், பாலசுப்பிரமணியம், சரிகா, அருள்வாசன், ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Funeral:
Location: Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham, On, L3R 5G1
Visitation: Saturday, 20th August 2022 from 5:00 pm to 9:00 pm
Service: Sunday, 21st August 2022 from 10:00 am to 1:00 pm

தொடர்புக்களுக்கு.
சிவநந்தினி.647-834-1513
அப்பு. 041792887143
சுதா. 061420547348
கீதா. 041768180678
பாலா. 416-505-4608

Click the below link for live streaming

More

எந்த நேரத்தில் எந்த வேலை செய்ய வேண்டும் (July 21, 2022)

canada
Informed by : நா. மகேசன்
Contributed by : Elango veluppillai
Card image cap

எந்த நேரத்தில் எந்த வேலை செய்ய வேண்டும், அதே நேரத்தில் அந்த வேலையை செய்ய வேண்டும்

நாம் ஒவ்வொருவரும் மாபெரும் வாழ்க்கைப் பயணத்தை ஒவ்வொரு நாளும் எதிர் கொள்கிறோம். இந்த நேரத்தில் எங்கள் வாழ்க்கைப் பயணத்திற்கு உதவுபவர்களையும், ஆதரவு தருபவரையும் அணைத்துக் கொள்வோம். ஆனால் சிலர் ஆதரவு தர தயங்குவார்கள். அவர்கள் சகோதரர்களாக அல்லது உறவினர்களாக அல்லது நீண்டகால நண்பர்களாகவும் இருக்கலாம். ஆனால் இவர்கள் எதிர்த்தாலும், நீங்கள் உங்கள் மனதை சரியான உறுதியாகவும் நான் சரியாகத்தான் நடக்கிறேன் என்னும் மன உறுதியுடன் இருங்கள். பின் நீங்கள் வெற்றியடையும் பொழுது எதிர்த்தவர்களே உங்களுக்குச் சொல்வார்கள் நீங்கள் வெற்றியடையப் போகிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும் என்று.
நான் எடுக்கும் ஒவ்வொரு விடயத்திற்கும், நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பும், விமர்சனமும் செய்பவர்களை நான் என்ன செய்யலாம் என்று நீங்கள் உங்களுக்குள்ளேயே கேள்வி கேட்பதும் உண்டு. ஆனால் இப்படிப்பட்ட மனிதர்களிடம் பழகும்போது பக்குவமாகவும், அவதானமாகவும்,எச்சரிக்கையாகவும் இருப்பது முக்கியம். உங்கள் பொதுப் பணிகள், தனிப்பட்ட முன்னேற்றம் போன்றவற்றிற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக சிலர் இருப்பார்கள். ஆனால் இவர்களைப்பற்றி அவசர முடிவு எடுக்காதீர்கள். அவர்களை விட்டு விலகி நில்லுங்கள். அவர்கள் உங்கள் பக்கம் வரும்வரை காத்திருங்கள்.
நீங்கள் உங்களது பழைய நண்பர்களைப் புறக்கணிக்கத் தேவையில்லை, ஏன் அவர்கள் உங்களுக்கு நன்மை செய்வது என்று தீமையைச் செய்த்திருக்கலாம். உங்களை ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றி இருக்கலாம். தங்கள் தேவைக்காக உங்களுடன் நண்பர் வேசம் போட்டு இருக்கலாம். தன் சொந்த இலாபத்திற்காக உங்களை நண்பனாக பாவித்து இருக்கலாம். இப்படி பலர் இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு உண்மை நிலையை விளங்கப்படுத்தி அவர்களையும் சந்தர்ப்பவாதி என்ற நிலையில் இருந்து மாற்றிக் கொள்ளலாம்.
நான் சொல்வேன் நீங்கள் ஒரு விடயத்தை வெற்றிகரமாக செய்ய வேண்டும் என்றால் அந்த விடயத்தில் திறமை வாய்ந்த அல்லது திறமையானவர்களின் ஆலோசனையைக் கேட்க வேண்டும். அவர் சாதாரணமாகச் சொல்வார், அவரின் ஆலோசனையால் நாம் வெற்றியடையலாம், ஆனால் சிலரின் மனம் அதற்கு அனுமதிப்பது இல்லை. இதனால் இவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையில் பயணிக்காமல், இருந்த நிலையிலேயே இருக்கிறார்கள்.
வெற்றிகரமாகப் பொதுப்பணிகளையும் செய்பவர்களை பொதுவாக ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் ஆதரவு வழங்குவதையும் காண்கிறோம்.ஆனால் சில எதிர்ப்புக்கள் இருக்கத்தான் செய்யும் இது புறக்கணிக்கத்தக்கது. இதுவும் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சாதாரண விடயம் தான். என்னை யாரும் ஊக்குவித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பொதுப்பணிகள் சமூகப்பணிகள் செய்பவர்கள் சிந்திப்பதுண்டு. ஆனால் அவர்கள் ஏதோ ஒன்றால் ஊக்குவிக்கப் பட்டுள்ளனர் என்பதுதான் . ஆனால் …

More

திரு .நடராசா அன்னலிங்கம் இறைபதம் அடைந்தார் (July 5, 2022)

canada
Informed by : Uthayan
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

வதிரி - கரவெட்டியை பிறப்பிடமாகவும், கோயம்புத்தூர் - இந்தியாவில் வசித்தவரும், Toronto -Canada வை வதிவிடமாகவும் கொண்ட திரு. நடராசா அன்னலிங்கம் 04-07-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ் சென்றவர்களான திரு. திருமதி. நடராசா – அன்னபூரணிஅம்மா அவர்களின் அன்பு மகனும், திரு. திருமதி. பொன்னையா - வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும் சாமினியின் அன்பு கணவரும், இளநகையோன், இளமாறன் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.
மேலும் இவர் வடிவேல்முருகன், சசிதேவி, சச்சிதானந்தகுமார், முருகதாசன், சிவலோகநாதன், வைகுந்தநாதன் ஆகியோரின் அன்பு சகோதரரும், இராஜேஸ்வரி, பாலசுப்பிரமணியம், ரூத் மகிமலர், மீனாம்பிகை, சுகந்தி, மாலதி மற்றும் சுகந்தினி, சாந்தினி , வேற்செல்வன், உதயணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
Contact:
இளமாறன் (மகன்) 647-572-0196
வைகுந்தநாதன் (தம்பி) 647-867-6082
உதயணன்(மைத்துனன்) 647-297-6552
சிவம்(தம்பி) 416-857-2095

Viewing & Visitation:
Saturday July 9th – 5 pm to 9 pm
Service:
Sunday July 10th - 4 pm to 7 pm
Funeral Home:
Brampton crematorium & Visitation Centre
30 Bramwin Court
Brampton, ON L6T 5G2

More

கோடை கால ஒன்று கூடல் - 2022 IVWA - UK (June 29, 2022)

uk
Informed by : IVWA-UK
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

இடைக்காடு வளலாய் நலன்புரிச் சங்கம்

Date: 09-July-2022
Time: Football match:9.00Am-12.00pm
Get- together: 11.00Am-11.00pm
LOCATION:
SOUTH RUISLIP COMMUNITY CENTRE
DEANE PARK/LONG DRIVE Ruislip
HA4 0HS

*NOTE: new location; Free parking

கட்டண விபரம்
தனி நபர்: £20.00, குடும்பம்: £35.00

காற்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ளவிரும்பும் போட்டியாளர்கள் செயலாளர் திருமதி சுகுணா உதயச்சந்திரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் பெயர்களைப் பதிவு செய்யவும்.தொடர்பு இலக்கம் 07405747322
Please let secretary Suguna know if you want to participate in the football match this year so we can put your name down (07405747322). Thank you.
அனைத்து இடைக்காடு வளலாய் நண்பர்கள், உறவினர்கள் நலன்விரும்பிகளையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

நன்றி
நிர்வாகம்

More

மன அழுத்தம் என்றால் என்ன? அது எப்படி வருகின்றது. அது எங்களால? அல்லது மற்றவர்களால? (May 31, 2022)

canada
Informed by : நா.மகேஸ்வரன்
Contributed by : Elango veluppillai
Card image cap

மன அழுத்தம் என்றால் என்ன? அது எப்படி வருகின்றது.
அது எங்களால? அல்லது மற்றவர்களால?

உயிரினங்களிலே மனித இனம் உயர்ந்ததாக கருதப்படுகிறது. “மனம்” என்ற பெயரினாலும் “மானம்” என்ற பெயரினாலும் “மனிதன்” என்ற பெயரை பெற்றான்.

( விலங்குகளுக்கு இது இல்லை) ஒரு மனிதனின் மனதில் தோன்றுகின்ற எண்ணங்கள்தான் முன்னேற்றமும், பின்னேற்றமும் வருகின்றது. அவனுடைய முன்னேற்றத்துக்கும், பின்னேற்றத்திற்கும் காரணம் அவனே. அவனின் மனதில் தோன்றும் எண்ணங்கள் செயல்வடிவம் பெறும் பொழுது நன்மைகளோ தீமைகளோ ஏற்படுகின்றன.

மனதில் பல வகையான எண்ணங்கள் தோன்றும். அவற்றில் தீயவை எவை நல்லவை எவை என்று பகுத்து அறிவதே பகுத்தறிவு ஆகும் . மற்ற உயிரினங்களுக்கு இல்லாத சிந்திக்கும் ஆற்றலை மனிதன் பெற்றிருக்கின்றான்..இப்படிப்பட்ட மனதை ஆளும் சக்தி நமது மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு உண்டு. நாங்கள் தாழ்ந்த மனம் கொண்டால் தாழ்வு மனப்பான்மைக்கும் உயர்ந்த மனம் கொண்டால் உயர்ந்த மனப்பான்மைக்கும் ஏற்ப இதை தீர்மானிப்பது மனமே.

மனவலிமை இன்மை அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இதனால் முயற்சி தடைபடும் .இதனால் முன்னேற்றத்தையும் வெற்றியையும் இறந்து விடுவீர்கள். நெருப்பு ஆக்கவும் வல்லது. அழிக்கவும் வல்லது .அதே போல் தான் மன அழுத்தம் அழிக்கவே வல்லது. தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தங்கள் திறமையிலே சந்தேகம் வரும். பயம் ,கோவம், வேண்டாத கற்பனைகள் கீழ் நிலையில் இருப்பவர்களின் துன்பத்தையே சிந்திப்பது.விதை விதைக்க முன்பே விளைச்சலை எதிர்பார்ப்பது. ஆரம்பத்திலேயே நட்டத்தை பற்றி சிந்திப்பது. இது போன்ற காரணங்களினால் ஒரு மனிதனுக்கு மன அழுத்தம் ஏற்படுகின்றது.

மன அழுத்தம் மற்றவர்களால் ஏற்படுவது அல்ல . அது தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக்கொள்வது என்று நான் சொல்வேன். அது எப்படி? இப்படித்தான்

1

ஒருவன் தன்னை தாழ்வாக நினைத்து கொள்வதே மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம்.

2

தன்னால் இந்தச் செயலைச் செய்ய முடியாது.

3

தன்னால் படிப்பில் வெற்றி பெற முடியாது.

4

எத்தனை முறை படித்தாலும் கணிதம் வராது.

5

என்னால் மற்றவர்களைப் போல் முன்னேற முடியாது.

6

தரமாகவும் சரியாகவும் என்னால் வேலை செய்ய முடியாது.

இப்படியான மன அழுத்தம் கொண்டவர்கள் எப்படி ஒரு காரியத்தை செய்ய முடியும்? இப்படிப்பட்டவர்களுக்கு பயம் ஏற்படுகின்றது. பயம் என்னும் மன அழுத்தத்தைக் கூட்டும்.

1

என்னால் முடியும் இது உயர்ந்த மனம்.

2

என்னால் முடியாது இது தாழ்ந்த மனம்.

மன அழுத்தம் …

More

திருமதி செல்லம்மா செல்லையா இறைபதம் அடைந்தார். (May 14, 2022)

canada
Informed by : இந்திராணி - மகள்
Contributed by : Elango veluppillai
Card image cap

தோற்றம் : 20 MAR 1931 மறைவு: 12 MAY 2022

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா செல்லையா அவர்கள் 12-05-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,இந்திராணி, ஜெயராணி, சிவேந்திரன்(அப்பன்), றஞ்சினி(பேபி), சிவபாலன்(சிவா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற சிவகுமாரன், தேவரஞ்சன், குகப்பிரியா, இராமநாதன், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியும்,செந்தில்குமாரன் - ஜனா, லதானி- பிரசன்னா, லஜிதா- பிறையின், ஆர்த்திகா- தசாந், நிதுசா- மெளளிசன், கபிலன், நிலானி, நர்த்தனன், கிசோன், சஞ்ஜே, அருள்ராஜ், ரகுராஜ், சிவராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கோபி, ஜெசி, அர்யுன், லலிதா, லியா, கயிலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,காலஞ்சென்றவர்களான ஐயத்துரை, கனகலிங்கம் மற்றும் நல்லம்மா, நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பழனித்துரை, தங்கம், தையல்நாயகி, ஜெகநாதன், வைத்தியலிங்கம் மற்றும் இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

இந்திராணி - மகள்Mobile : +16475046514 ஜெயராணி - மகள்Mobile : +16475186991 சிவேந்திரன்(அப்பன்) - மகன்Mobile : +16478293944 றஞ்சினி(பேபி) - மகள்Mobile : +19056027873 சிவபாலன்(சிவா) - மகன்Mobile : +14168321548
பார்வைக்கு
Tuesday, 17 May 2022 5:00 PM - 9:00 PM
Wednesday, 18 May 2022 11:00 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை

Wednesday, 18 May 2022 11:30 AM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

More

வாக்குவாதம், விவாதங்கள் என்றால் என்ன ? வாக்குவாதம், விவாதத்தில் வெற்றி கொள்ளலாமா ? அதற்கு என்ன வழி!! (April 28, 2022)

canada
Informed by : மகேசன்
Contributed by : Elango veluppillai
Card image cap

வாக்குவாதம், விவாதங்கள் என்றால் என்ன ? வாக்குவாதம், விவாதத்தில் வெற்றி கொள்ளலாமா ? அதற்கு என்ன வழி!!

உறவுகளே !!

covid-19 இல் இருந்து உலக மக்கள் மெல்ல மெல்ல வெற்றி கொண்டு வரும் வேளையிலே,

‘’ கச்சிதமாக திட்டமிட்டால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம்’’,

முதலிலே வாதங்கள் பற்றி பார்ப்போம் உலகத்திலே உள்ள வாதங்கள் 82 வகைகள் ஆகும் .

அதனை மூன்றாக பிரிக்கலாம்.

உடலிலே வருவது

மனதிலே வருவது

வார்த்தையிலே வருவது

வாதம் என்ற பொருள் ஒரு உடலையோ அல்லது மனதையோ அல்லது வார்த்தையோ முடக்கிவிடும். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தவிர்க்க வேண்டியது.

சரி இனி வாதங்களை பார்ப்போம். உடலிலே வரும் வாதம் 80. இதற்கு மருந்துகள் உண்டு. இதை மருந்தால் மாற்றலாம். அடுத்து மனதிலே வரும் வாதம். இதை எண்ணத்தால் மாற்றலாம். அடுத்து வார்த்தையிலே வரும் வாதம். இதை வாக்குவாதம் என்பர். 81 வாதங்களை விடுத்து வாக்குவாதத்தை பார்ப்போம்.

சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள் கண், காது, பல் எல்லாவற்றுக்கும் மருத்துவர்கள் இருக்கிறார்கள்., ஆனால் நாக்குக்கு வைத்தியர்கள் இல்லை. அதேபோல் ஒரு விபத்தில் கண்கள் போகும், காது போகும், கை கால் உடையும் ஆனால் நாக்கு பாதுகாப்பாக இருக்கும். இந்த இரண்டு உதாரணங்களில் இருந்து இந்த நாக்கின் வலிமை புரியும். அப்படியானால் இந்த நாக்கில் இருந்து வரும் வார்த்தைகள் நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும். வார்த்தை வலிமை மிக்கது.

சரி ,இனி வாக்கு வாதங்களை பார்ப்போம், சிலரை வாக்குவாதம் செய்பவர்கள் என்றே அழைக்கலாம். அவர்களின் பேச்சிலும் செயலிலும் புரியும். வாக்குவாதங்கள், விவாதங்களை தடுப்பதன் மூலம் கவலை, கோபம் என்பனவற்றை தடுத்துவிடலாம். விவாதங்கள் வாக்குவாதங்கள் என்பதை வெல்வதற்கு அதற்கு ஒரே ஒரு வழி, அதை தவிர்ப்பது தான். விவாதம் என்ற சொல்லை நீங்கள் ஒரு பொழுதும் வெல்ல முடியாது. நீங்கள் வென்றாலும் தோல்வி அடைவீர்கள். தோற்றாலும் தோல்வி அடைவீர்கள். ஒரு விவாதத்தில் வெற்றி பெற்று ஒரு நண்பரையோ, ஒரு பதவியையோ,ஒரு சலுகைகளையோ இழந்து விட்டால் அதை நீங்கள் எப்படி வெற்றி என்ற இடத்தில் சேர்ப்பது?!.

விவாதித்தல் என்பது கல்லின் மேலே பயிர் செய்வது போன்றது. அல்லது தோற்கப் போகும் போர்க்களத்தில் சண்டை போடுவது போன்றது. வெற்றி பெற்றாலும் வார்த்தை பிரயோகங்கள் மன வெறுப்பை ஏற்படுத்திக்கொள்ளும்.

இதற்கு நான் எனக்கு நடந்த ஒரு உண்மை …

More

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் (April 14, 2022)

idaikkadui
Informed by : webadmin
Contributed by : Elango veluppillai
Card image cap

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

More

ஆறுமுகம் கிருஷ்ணவேலாயுதம் (April 9, 2022)

australia
Informed by : கணேஸ் (மகன் )
Contributed by : Elango veluppillai
Card image cap

அன்னை மடியில். 25.01.1942

ஆண்டவன் அடியில். 08.04.2022

இடைக்காட்டைய் பிறப்பிடமாகவும் நியூஸ்லாந்தைய் வதிவிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் கிருஷ்ண வேலாயுதம் அவர்கள் 08.04.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்ற பெரிய தம்பி. கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகனும், கருணாமூர்த்தி (கணேஸ் ), மகிந்திரராசா (அப்பு ), சுதா, கீதா, ஆகியோரின் பாசமிகு அப்பாவும், , சரிகா, பாலசுப்பிரமணியம், சிவநந்தினி, அருள்வாசன், ஆகியோரின் மாமனாரும், ஐதுசா, அபிஷா, கருண், மிலானி, கீதன், சயானா, அனயாஸ் ஆகியோரின் பேரனும் ஆவார்.

இறுதி கிரிகைகள் பின்னர் அறிவிக்கப்படும்.

Funeral
Date:Tuesday 19th April 2022
Viewing: 10Am-11AM
Rituals:11AM-12PM
Followed by cremation
Venue: Morrison Funerals
220 Universal Drive, Henderson
Auckland, New Zealand

தொடர்புக்களுக்கு.
பரமேஸ்வரி (மனைவி ) 06421 239 1587
கணேஸ் . 06478612740
அப்பு. 041792887143
சுதா. 061420547348
கீதா. 041768180678

More

நீத்தார் பெருமை (April 7, 2022)

canada
Informed by : நா.இ.ஈசுவரன்.
Contributed by : Elango veluppillai
Card image cap

நீத்தார் பெருமை
அமரர் வேலுப்பிள்ளை சுவாமிநாதன்
அமரர் சுவாமிநாதன் அவர்கள் எனக்கு மைத்துணர் முறையானவர். எனது தந்தையாரின் சகோதரியின் மகனாவார். அமரர்களான வேலுப்பிள்ளை – சின்னம்மா தம்பதிகளுக்கு மகனாக நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்து
கல்வி கற்று, இந்தியாவில் பொறியியல் துறையில் மின் பொறியிலாளராக தனது கடமையை ஆரம்பித்தார். சிறு வயதிலேயே தங்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொறுப்புடன் தன் குடுப்பத்தை பேணிக்காத்து வருபவராக வாழ்ந்து வந்துள்ளார் என்று எனது தந்தையார் எப்போதும் பெருமையுடன் கூறுவார். எனது பெற்றோரின் மீது அளவு கடந்த பாசமுள்ளவர். எந்த கருமத்தைத் தொடங்கினாலும் எனது தந்தையாரை அக் காரியங்களில் முன்நிறுத்தத் தவறுவதில்லை. தனது உறவுமுறையான அருளம்மா என்பவரை திருமணம் செய்த போதிலும் தன் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மனைவியின் ஊரான ஒட்டுசுட்டானில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டில் வாழாது இடைக்காட்டிலே வாழ்ந்து மறைந்துள்ளார்.
இளவயதில் கணவரை இழந்த இரு சகோதரிகளின் குடும்பத்தை, அவர்களின் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து கல்வி அறிவூட்டி அவர்களுக்கான குடும்ப வாழ்க்கையையும் அமைத்துக் கொடுத்துள்ளமையை எனது தந்தையார் எப்போதும் பெருமையுடன் எமக்குக் கூறுவார். அவருக்கு ஓர் நல்ல மனைவியாக அருளம்மா அவர்களும் வாழ்ந்து அவருக்கு முன்பே இறையடி சேர்ந்து விட்டார். பிள்ளைகள் மூவரும் நல்ல முறையில் புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். சுவாமிநாதன் அவர்கள் பிள்ளைகள் இருக்கும் நாடுகளுக்குச் சென்று சிலகாலம் அவர்களுடன் வாழ்ந்து இறுதிக் காலத்தில் தன் சொந்த வீட்டில் வாழ்ந்து அங்கேயே தான் இறக்க வேண்டும் என்னும் விருப்புடன் அவ்வாறே வாழ்ந்து இறையடி சேர்ந்து விட்டார்.
அவர் மிகுந்த இறைபக்தி மிக்கவர். தனது மனைவியுடன் இந்தியாவிலுள்ள பெரும்பாலான திருத்தலங்களுக்கு யாத்திரை சென்று வழிபாடு செய்ததுடன் முக்கிய தலங்களான திருக் கைலாசம், அமர்நாத், கேதார்நாத், பத்திரிநாத் ,காசி போன்ற தலங்களுக்குச் சென்றதுடன் தனது பேரப் பிள்ளைகளுக்கும் அத்தலங்களின் பெயரைச் சூட்டியுள்ளார்.
சரியான பராமரிப்பின்றி இருந்த இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தை பொறுப்பெடுத்து அறங்காவல் சபை ஒன்றை அமைத்து அதனை மிகத் திறம்பட உருவாக்கியுள்ளார். அது மட்டுமல்ல இடைக்காடு காசி விஸ்வநாதர் ஆலயம், காக்கைவளவு பெரியதம்பிரான் ஆலயம் , ஒட்டுசுட்டான் தான் தோன்றி ஈஸ்வரர் ஆலயத்திற்கும் பெருமளவு பங்களிப்பினை நல்கியுள்ளார். இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் ஆலய முன்றலிலும், ஒட்டுசுட்டான் ஆலய முன்றலிலும் பிரயாணிகள் நிழற்குடைகளையும் அமைத்துள்ளார். பாடசாலை மாதர்சங்கம் என்பவற்றிற்கான பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். குறிப்பாக இடைக்காடு மகா வித்தியாலய பொன்விழா , பழைய மாணவர் …

More

இடைக்காடு வளலாய் நலன்புரிச் சங்கம் – IVWA-UK (April 7, 2022)

uk
Informed by : IVWA
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

கோடைகால ஒன்றுகூடல் - 2022


Date: 09-july-2022 Saturday
Time:
Football match: 9.00 am-12.00pm
Get- together 11.00 am-11.00pm
Location:
SOUTH RUISLIP COMMUNITY CENTRE
DEANE PARK/LONG DRIVE Ruislip
HA4 0HS
*NOTE: new location
Free parking

கட்டண விபரம்
தனி நபர்:£20.00
குடும்பம் :£30.00
காற்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் போட்டியாளர்கள், செயலாளர் திருமதி உ.சுகுணா அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் பெயர்களை முற்கூட்டியே பதிவு செய்யவும் .
அலைபேசி இலக்கம் 07405747322
Please let secretary Mrs. Sukuna know if you want to participate in the football match this year so that we can put your name down (07405747322). Thank you.

தற்போதைய சூழ்நிலையில் உள்ளரங்க நிகழ்வுகளை நடத்துவதற்கான சாத்தியங்கள் குறைவாக உள்ளன. எனவே இவ்வெளியரங்க நிகழ்வை நண்பர்கள், உறவினர்களுடன் பெரும் நிகழ்வாகநடத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நாடுகிறோம்.

மேலதிக விபரங்களுக்கு

கி கேதீஸ்வரன் 07961929197
உ சுகுணா 07988620110
பா வெற்றிவேல் 07988620110
நன்றி

More

விமர்சனம் என்றால் என்ன ?. கேள்விகளின் அண்ணன் (Feb. 16, 2022)

canada
Informed by : நா. மகேசன்.
Contributed by : Elango veluppillai
Card image cap

விமர்சனம் என்றால் என்ன ?. கேள்விகளின் அண்ணன்
1. நியாயமாகவோ அல்லது நியாயம் இல்லாமலோ நாம் விமர்சிக்கப்படும் நேரம் வரும். இந்த உலகில்பெரியவர்கள், முன்னேற்றவாதிகள், சமூக சேவர்கள் எல்லோரும் விமர்சிக்கப்பட்டு இருக்கிறார்கள். நியாயமான விமர்சனம் சமூகத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். அதை ஒரு உயர்ந்த கருத்தாகவே எடுத்துக் கொள்ளலாம். நியாயமற்ற விமர்சனம், நியாயமற்ற கேள்விகள் மாறுவேடம் கொண்ட பாராட்டாகும். சராசரி மக்கள் முன்னேற்றவாதிகளையும், சமூகசேவை செய்பவர்களையும் வெறுக்கின்றார்கள். முன்னேற்றம் அடையாதவர்களையும், சமூக சேவை செய்யாதவர்களையும் யாரும் விமர்சிப்பதும் இல்லை., கேள்வி கேட்பதும் இல்லை.
2. நீங்கள் ஒன்றுமே செய்யாமல், ஒன்றுமே பேசாமல், ஒன்றுமே இல்லாமல் இருந்தால் நான் சொல்வேன் உங்களை ஒருத்தரும் விமர்சிக்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் ஒன்றுக்கும் இல்லாதவர்களாகி விடுவீர்கள்.

நியாயமற்ற விமர்சனம், நியாயமற்ற கேள்விகள் இரண்டு காரணங்களால் வருகின்றது
1.அறியாமை ;- அறியாமையில் இருந்து விமர்சனம், அல்லது கேள்விகள் இருந்தால் அதற்கு விளக்கம் கொடுப்பதன் மூலம் அதனை திருத்திவிடலாம்.
2. பொறாமை ;- முன்னேற்றத்தில், சமூக சேவையில் விமர்சனம், கேள்விகள் வந்தால் அதனை மாறுவேடத்தில் வந்த பாராட்டாக ஏற்றுக் கொள்ளுங்கள். நியாயம் இல்லாத விமர்சனம், கேள்விகள் வந்தால், கேள்வி கேட்பவர்கள் நீங்கள் இருக்கும் இடத்தில் இருப்பதற்கு விருப்பப்படுகிறார்கள் என்பதுதான். கனிந்த மரத்திற்கே கல்லெறி விழும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
உண்மையான விமர்சனத்தை அல்லது கேள்விகளை, ஏற்றுக் கொள்ளும் திறமை இல்லாமல் இருந்தால், அது தாழ்வான சுய மதிப்பின் வெளிப்பாடே ஆகும். விமர்சனத்தை கேள்விகளை ஏற்றுக் கொள்வதற்கான சில விதி முறைகள்.
1. உண்மையான சிந்தனையோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.
2. அதில் இருந்து அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
3. அவர்களின் கேள்விகளுக்கும் விமர்சனத்திற்கும் நீதியான பதிலைக் கூறுங்கள்.
4. நல்ல விமர்சனத்தையும், நன்மை பயக்கக்கூடிய கேள்விகளையும் கேட்பவர்களுடன், மரியாதையுடனும்,நன்றியுடனும் இருங்கள். ஏன் என்றால் அவர்கள் உங்களது உண்மை நிலையை உணர்ந்தவர்கள்.
5. உயர்ந்த குணம் உள்ளவர்கள் நல்லவித விமர்சனத்தையும் , கேள்விகளையும் ஏற்றுக் கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள். வெறுப்பு அடைய மாட்டார்கள்.
பெரும்பாலான மக்களிடமுள்ள உணர்வு என்னவென்றால் முன்னேற்றவாதிகளையும், சமூக சேவை செய்பவர்களையும் பாராட்டுவதே அவர்களின் விருப்பமுமாகும்.

நா. மகேசன்.

More

பெற்றோர்கள் என்றால் வரைவிலக்கணம் என்ன? பிள்ளைகள் பெற்றோரின் கடமை என்ன? பிள்ளைகளின் பொறுப்பு என்ன? பகுதி 2 (Dec. 28, 2021)

canada
Informed by : நா . மகேஸ்வரன் கனடா
Contributed by : Elango veluppillai
Card image cap

பிள்ளைகள் பிறந்து ஆறாவது வார காலத்தில் இருந்தே தங்களைப் பார்த்து
ஆரவாரப்படுபவர்களையும், பரிவு காட்டுபவர்களையும் புன்னகைப்பூ இருப்பதையும் பார்த்து
அதிக ஆர்வம் காட்டுவார்கள். தங்கள் பெற்றோரின் அன்பு கிடைக்காத பிள்ளைகள் தங்கள்
உறவுமுறைகளில் ஏதோ தவறு இருப்பதாக உணர்வார்கள். அது என்ன விடயம் என்று
தடுமாறுவார்கள். பொதுவாக பெற்றோர்கள் பிள்ளைகளை தண்டிக்கும் போதும் கண்டிக்கும்
போதும் தான் அவர்களின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பார்கள். ஆனால் அன்பை
வெளிப்படுத்துவதற்கு எப்போதாவதுதான் பார்க்கின்றோம்.

இரண்டாவது முறை அரவணைப்பு மூலம் அன்பை வழிகாட்டுதல். ஒரு பிள்ளையை தினமும்
அரவணைப்பதின் மூலம் அவர் ஆரோக்கியமானஇருப்பதற்கும் அவர்களது வளர்ச்சிக்கு தேவை
என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பிறந்ததிலிருந்து ஆண்பிள்ளைகளும் பெண்
பிள்ளைகளும் ஒரு வருடத்துக்கு அன்பை பெறுகின்றனர். பின்னர் ஆண்பிள்ளை குறைவான
அன்பையே பிறக்கின்றது. ஏனென்றால் ஆண்பிள்ளை அதிக அன்பை கொடுத்தால் அவர்கள்
பலவீனமாக வாழ்வார்கள் என்ற அவநம்பிக்கை பெற்றோர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. இது
முற்றிலும் தவறு.

ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஊட்டச்சத்து எவ்வளவு முக்கியமோ அதேபோல் அவர்களுடன்
நாங்கள் செலவு செய்யும் நேரமும் முக்கியம். பிள்ளைகளுடன் கூடுதல் நேரத்தை செலவிட்டாலும்
செலவிடும் நேரத்தை தரமானதாக இருத்தல் மேலும் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன்
அதிக நேரத்தை செலவிடுவதில்லை அப்பொழுது பிள்ளைகள் கூடுதல் நேரத்தை தங்கள்
நண்பர்களுடன் நேரத்தை செலவு செய்ய முற்படுவார்கள். அப்போது நண்பர்களின்
ஆலோசனையும் ஒப்புதலையும் அனுமதித்து அதன் படி நடக்கத் தொடங்குவார்கள். நல்ல
நண்பர்களாக இருந்தால் நல்லவர்களையும் தீயவர்களையும் தீயவற்றை இசை மாற்றப்படுவார்கள்
மிகவும் அவதானமாக இருங்கள். அவர்களின் நண்பர்கள் யார் என்று நீங்கள் வரையறை செய்து
அவர்களை கண்காணித்து கொள்வது பெற்றோரின் மிக முக்கியமான பொறுப்பு என்று நான்
சொல்வேன்.

பிள்ளைகளுக்கு அன்பு, ஆதரவு, அரவணைப்பு, மதிப்பு இவற்றை நீங்கள் போதிய அளவு
கொடுக்க வேண்டும்., இல்லை என்றால் உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இடைவெளி
பெரிதாக போகும் இதனால் உங்களது அறிவுரைகளையும் பரிந்துரைகளையும் சமுதாயத்தில்
உள்ள கண்ணோட்டத்தையும் நிராகரிக்க தொடங்குவார்கள். இலையுதிர்காலம் போல்
அவர்களுடைய வாழ்வு உதிர்ந்து போய் விடும்.

பிள்ளைகளின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு சில பெற்றோர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.,
ஆனால் எதிர்மறையான விமர்சனங்களில் சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும், மன
விரக்தியையும் ஏற்படுத்தி அவர்களை மழுங்கடித்துவிடும். சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு
பூரணமான அன்பையும் சுயமரியாதையை கொடுப்பது இல்லை. ஏன் பெற்றோரின் மனம் அதற்கு
அனுமதிப்பதில்லை. ஏன் ஏனென்றால் பெற்றோர்கள் இருவரும் அன்பாக வாழ்வது இல்லை.
இப்படிப்பட்டவர்களை எப்படி நாம் வரையறை செய்வது?! இவர்கள் ஒன்றாக இருந்து உணவு
உண்ண மாட்டார்கள், காரில் போகும்போது வெளிக்காட்சிகளில் பார்த்து ரசிப்பார்கள்,
கணவனுடன் பகிர்ந்து உரையாட வேண்டிய விடயங்களை சகோதரர்களுடன் பரிசீலனை
செய்வார்கள், கணவனைப் பற்றி பெற்றோருக்கு சொல்வார்கள், டிவி பார்த்துக்கொண்டு
இருப்பார்கள், கணவன் வீடு வந்ததும் டிவி நிறுத்திவிட்டு அறைக்குச் …

More

பெற்றோர்கள் என்றால் வரைவிலக்கணம் என்ன? பிள்ளைகள் பெற்றோரின் கடமை என்ன? பிள்ளைகளின் பொறுப்பு என்ன? பகுதி 1 (Dec. 24, 2021)

canada
Informed by : நா . மகேஸ்வரன் கனடா
Contributed by : Elango veluppillai
Card image cap

பெற்றோர்கள் என்றால் வரைவிலக்கணம் என்ன? பிள்ளைகள் பெற்றோரின் கடமை என்ன?
பிள்ளைகளின் பொறுப்பு என்ன?

ஆதரவு தரும் அன்பு உள்ளங்களே!!!
கனடாவில் புதிய அரசும் புதிய ஆட்சிகளும் உருவாக்கப் பெற்று Covid-19 தாக்கங்களின்
சூழ்நிலைக்கு ஏற்ப நாமும் அவைகளுக்கு பாதுகாப்பாகவும், சுகாதாரத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட
வெளியே செல்லும் செயல்களிலும் நமது வேலையும் கடமைகளும் பிள்ளைகளை வளர்ப்பதில்
இருக்கின்ற சிரமங்கள் அனைத்தையும் செவ்வனே செய்து கனடிய வாழ்வியலில் குளிர்காலத்தை
எதிர்பார்த்து வாழ்வை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.
மேலும் இங்கே பலருடைய வேண்டுதலுக்கிணங்க என்னால் முடிந்த கற்றுக்கொண்ட
விடயங்களை உங்களோடு முடிந்த அளவில் பகிர்ந்து கொள்ள முனைகின்றேன். என்றும் உங்கள்
ஆதரவுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் நன்றி.

உலகத்தில் உள்ள உயிரினங்களை நான்கு வகைப்படுத்தலாம் அவை நுண்ணுயிர்கள், பிராணிகள்,
தாவரங்கள், விலங்கினங்கள். முன் மூன்றையும் விடுத்து விலங்குகளை எடுத்துக்கொண்டால்
விலங்குகளில் இருந்து மனிதன் எவ்வாறு வேறுபடுகின்றன?! எல்லா விலங்குகளும் குறுக்கே வளர
மனிதன் உயரவே வளர்கிறான்., இதனால் மனிதனின் வாழ்க்கை உயர்ந்து . எல்லா
விலங்கினங்களின் குட்டிகளும் தாயுடன் வாழும்., ஆனால் மனிதனின் குழந்தைகள் தாயுடனும்,
தந்தையுடனும் வாழும் இந்த வேறுபாடு மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகிறது.

இனி பெற்றோர்கள் என்ற வரைவிலக்கணத்தை பார்ப்போம். நான் என் எண்ணத்தை மாற்றலாம்,
செய்யலை மாற்றலாம், வேலையை மாற்றலாம், வீட்டை மாற்றலாம், வாகனத்தை மாற்றலாம்,
விரும்பினால் மனைவியையும் மாற்றலாம்., ஆனால் பெற்றோர் என்ற சொல்லை மாற்ற முடியாது.
ஏன்? என் பிள்ளைக்கு நாங்கள் தான் பெற்றோர்கள். இதிலிருந்து உங்களுக்கு பெற்றோரின்
வலிமை புரியும். இதுதான் வரைவிலக்கணம்.

இறைவனின் ஆசீர்வாதத்துடனும், எங்கள் இருவரின் அணைப்பிலும் நாங்கள் நிரந்தரமான
உறவுக்கு அடியெடுத்து வைக்கிறோம். உலகத்திலேயே உயர்ந்த செல்வமும் முதன்மையானதும்
எங்கள் இருவரின் வரிசை நிலைநாட்டவும் வரும் பெரும் செல்வம் தான் பிள்ளைகள்.

பிறக்கும்போது எல்லா பிள்ளைகளும்சமம் தான் . ஆனால் நாங்கள் எப்படி நல்ல பெற்றோர்கள்
ஆவது என்பதை பற்றி பார்ப்போம். சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உடமையாக
பார்க்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் தங்கள் சொல்படி நடக்கும் போது தான் அவர்கள் தங்கள்
பிள்ளைகள் முறையாக நடந்து செல்வதாக நினைக்கிறார்கள்.

எங்கள் பிள்ளைகளை இந்த உலகுக்கு கொண்டு வந்தது நாங்கள் இருவருமே. அவர்களை வளர்த்து
பராமரித்து பெரியவர்கள் ஆக்குவது எங்கள் இருவரது பொறுப்பே. வளரும் போது எங்களுடன்
வாழும் பிள்ளைகளை பராமரித்து நேசிப்பதும் தமது பொறுப்பே. சிலகாலம் தான் எங்களுடன்
வாழும் பிள்ளைகள். எங்களின் எதிர்பார்ப்புக்கு அடிபணியச் செய்வது எங்கள் செயல்
அல்ல.அவர்களின் தனித்தன்மைக்கும் தனித்துவத்திற்கு வளர்த்து கொள்வதற்கும் ஊக்குவிப்புதே
எமது பொறுப்பு.

என் பிள்ளை என்ன வா ஆவான் எப்படி வாழ்வான் என்று யாராலும் கூற முடியாது. ஆனால்
அவன் எப்படி வருவான் எப்படி ஆவான் …

More

பணம் (Oct. 8, 2021)

canada
Informed by : N. Mahesan
Contributed by : Elango veluppillai
Card image cap

பணம்

பணம் என்றால் என்ன ? பணத்தின் வேலை என்ன ? பணம் எப்படி எங்களிடம் வரும் ? பணத்தை நாம் எப்படி சேமிப்பது ?

சொந்தங்களே!!!

வாலிப குடும்ப வாழ்வில் நான் ஊகித்துக் கொண்ட, மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட, அவற்றினூடாக எனது இயல்பான தேடுதல் ஊடாக, அனுபவங்களின் ஊடாக பணம் பற்றிய எனது கருத்தாக்கத்தை உங்கள் முன் வைக்கின்றேன். ஆதரவுக்கு மகேசனின் நன்றிகள்.

பணம் என்றால் என்ன பானமா? இல்லை பண்டமாற்றில் இருந்து வந்த குறைபாடுகளை பண்ணோடு சீர் செய்த பானமே பணம் என்ற பெயரைப் பெற்றது. இல்லாதவனுக்கு இவ்வுலகம் இல்லை.அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை என்றார் புலவர் வள்ளுவர். பூரிப்பு உண்டாகாது, புகழ் கிட்டாது, பெருமை தங்காது, உறவுகள் கொண்டாடது, சிறப்பு சேராது, வாழ்க்கை வற்றிய நதி போல் ஆகிவிடும் . பணம் இல்லாதவன் பிணம் என்றும் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பழமொழியும் தோன்றியது., இதிலிருந்து பணத்தின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம். ஈட்டி எறிந்த தூரம் தான் செல்லும்., பணம் பாதாளம் வரை போகும்., என்று சொல்வார்கள்.

இனி பணத்தின் வேலையை பார்ப்போம்.

பணம் படைத்தவன் எங்கு வாழ விரும்புகிறானோ அங்கு வாழலாம்.எதைப் பெற விரும்புகிறானோ அதை பெறலாம். குடும்பத் தொல்லைகள் இல்லாமல் வாழலாம். ஒருவருக்கு அடிபணியாமல் வாழலாம். கவலையற்று வாழலாம். நினைத்த இடத்துக்குச் செல்லலாம். அறிவு கல்வி பெறலாம். சமூகசேவைகள் செய்யலாம்.உணவை சுவைத்து சுவைத்து சாப்பிடலாம்.

அப்பப்பாடா பணம் இல்லாதவன் பாடா!! ஈன்ற தாயும் மதியாள்., இல்லாளும் மதியாள்., “அவர்” என்ற வார்த்தை “அவன்” என்று மாறும். அழுக்கில் வாழ்கின்றான் , உணவின்றி வாழ்கின்றான், உரிமை அற்று தவிக்கின்றான் . நோயினால் நெளின்றான், வறுமை, துன்பம், துயரம் அவனை செத்து பிடுங்கி விடும். பணம் இல்லாதவன் வாழ்வு, பயனற்ற வாழ்வு என்று ஆகிவிடும். பணம் இல்லாதவன் வேறு வழியில்லாது கடன் படுகின்றான். கடன் பட்டவன் வாழ்வோ கஷ்டமான வாழ்வு ஆகிவிடும் அவன் வார்த்தையும் சபை ஏற்காது., சொல்லுக்கும் பெறுமதி இருக்காது.

மகிழ்ச்சியான வாழ்வுக்கு மூன்று அடிப்படை உணவு, உடை, உறைவிடம். பணம் படைத்தவர்க்கு இந்த மூன்றும் பெற்று இன்பமாக வாழலாம். ஒரு பிச்சைக்காரனிடம் ஒருத்தர் கேட்டார் உன்னிடம் பணம் வந்தால் என்ன செய்வாய் என்று,. அவன் சொன்னான் மண் பானையை எறிந்துவிட்டு பொற்குடம் வாங்குவேன் என்று. இதிலிருந்து நாம் புரிந்து …

More

Saba - Indu's daughter Nirusha is getting Married- Sep 2, 2021 (Sept. 2, 2021)

canada
Informed by : Indumathy
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

Hello to my relations,

We want to inform you all of the wonderful news that our daughter, Nirusha is getting married on 2nd September 2021. Due to covid restrictions, we are limited in capacity for the wedding, and we'd like to express our apologies that we couldn't extend the invite.
Thank you for your understanding. We hope to meet you all soon when the time is right.
Many thanks,
Indumathy & Sabanathan

You are invited to Thinesh & Nirusha’s Virtual Wedding 🙏🏽
Date: Thursday September 2nd 2021
Time: 9am EST
Join Zoom Meeting
Meeting ID: 993 2478 3076
Passcode: 432578

More

மச்சங்களும் அதன் பலன்களும் (Aug. 24, 2021)

canada
Informed by : N. Mahesan
Contributed by : Elango veluppillai
Card image cap

மச்சங்களும் அதன் பலன்களும்

தற்போது கனடாவில் தேர்தல் திருவிழா ஆரம்பமாகி இருக்கும் சூழ்நிலையில் covid-19 தாக்கத்தின் பாதிப்புகளும் குறைவதுமாக பின்னர் கூடுவதும் ஆக அதை கட்டுப்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது மாக தினந்தோறும் நமது வாழ்க்கையை மென்மேலும் துன்ப படுத்திக்கொண்டு அனைத்து துயரங்களையும் துன்பங்களையும் கடந்து வாழ்க்கை என்னும் பாதையிலே நீண்ட தூர பயணத்தை பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் இப்போது நமது முன்னோர்களான சித்தர்கள் சில கருத்துக்களை வாழ்வியலுக்கு விட்டுச் சென்ற காரணத்தை எனது அறிவியலோடு அலசி ஆராய்ந்து கருத்துக்களை உங்கள் முன் அனைவருக்கும் வைக்கின்றேன். இவ்வண்ணம் நன்றியுடன் மகேஸ்.

நமது சித்தர்கள் உடலில் தோன்றுகின்ற மச்சங்களை அடிப்படையாக வைத்து மனிதர்களுடைய குணா அம்சங்களையும் அதன் பலாபலன்களையும் நமக்காக அருளிச் சென்றிருக்கிறார்கள்.

உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் துயரங்களும் துன்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன , குறிப்பாக சிலருக்கு போராட்டமாகவே வாழ்க்கை அமைகின்றது.

மனிதர்களின் குணங்களை காட்டுவது அவர்கள் உடம்பில் இருக்கும் மச்சங்கள் ஆகும். மச்சங்கள் பற்றிய நமது முன்னோர்கள் எழுதிச் சென்ற குறிப்புகளை பற்றி குறிப்பாக பார்ப்போம்.

மச்சங்கள் கருப்பு நிறத்தில் அல்லது பழுப்பு நிறத்திலோ அல்லது சிவப்பு நிறத்திலோ சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ காணப்படுகின்றன

மச்சங்கள் பொதுவில் ஆண்களுக்கு ஒரு மாதிரியாகவும் பெண்களுக்கு இன்னொரு மாதிரியாகவும் பல வளங்களை கொடுப்பதாக சித்தர்கள் எழுதியுள்ளார்கள் சித்தர்களில் இடைக்காட்டு சித்தரின் கருத்தை நான் உங்கள் முன் வைக்கின்றேன்.

நெற்றியில் மச்சம்

தைரியம், பிறருக்கு பணிந்து போகாத தன்மை.பொறாமை குணம் கொண்டவர்கள்.

கண்கள்

அதிக நண்பர்கள், பெரும்புகழ், இறையருளில் நாட்டா.

புருவம்

வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் ஊதாரித்தனமான செலவாளியாக இருப்பார்.

மூக்கில்

இறையருளில் அதிக நாட்டம் இரக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

உதட்டில்

அதிக செல்வம் ,அறிவில் உச்ச நிலை அடைதல், கலைகளில் அதிக நாட்டம்.

கன்னம்

ஏற்றத்தாழ்வான வாழ்க்கை வசீகரமான உடலமைப்பு பிறருக்கு உதவுகின்ற மனப்பான்மை.

வலது கண் கீழே

தந்தையை அவமதித்தல்

நாடி

பிறரைப் பற்றி உண்மைக்கு புறம்பாக புறம் கூறுதல் மற்றவர்களின் வாழ்க்கையில் இடையூறுகளை செய்கின்ற கீழ்த்தரமான குணம் கொண்டவர்கள்.

செவிகள்

பெற்றோரிடமும் கணவரிடமும் மிகவும் அன்பாகவும் சாதுர்யமாகவும் இருப்பார்கள் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் பாசமாக இருப்பார்கள்

நாக்கில்

தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். அனேகமாக இவர்கள் அறிஞர்களாக கலைஞர்களாக தத்துவ ஞானிகளாக விஞ்ஞானிகளாக இருப்பதற்கு சாத்தியங்கள் …

More

இடைக்காடு பற்றிய முகப்புத்தகத்தில் வெளியான தகவல்... (July 29, 2021)

canada
Informed by : webadmin
Contributed by : Sengo Vel
Card image cap

இடைக்காடு பற்றிய முகப்புத்தகத்தில் வெளியான தகவல், பார்பதற்கு More Button ஐ அழுத்தவும்.

More

Mr. Rajaratnam 31st Memory (July 25, 2021)

canada
Informed by : N. Mahesan
Contributed by : Elango veluppillai
Card image cap

Amidst the billions of men and women that have roamed this world, their existence can be forever remembered by their influence, innovation, and inspiration. The late Mr. Rajaratnam portrayed those characteristics, along with his passion of guiding young students to become successful individuals. His intelligence, leadership, and professionalism has gratefully impacted many people’s lives in Idaikkadu. We have been blessed to have a wonderful principal, and will always be remembered as one of the best principals in Idaikkadu Maha Vidyalam.

~N. Mahesan

More

ஆடிப்பிறப்பு (July 17, 2021)

canada
Informed by : திலகம்இராமகிருஸ்ணன்
Contributed by : Elango veluppillai

ஆடிப்பிறப்பு === தமிழ்மக்கள்வழி இயற்கைவழி எல்லா உயிரினங்களின் வீடாகிய தாயாகிய பூமித்தாய் தன்னைத்தானே சுற்றி இரவு பகல் என ஒரு நாள் உண்டாகச்செய்து உயிரினங்கள் உண்டு உறங்க வழிசமைத்து பன்னிரண்டு மாத த்தில் சூரியனையும் சுற்றி வருகிறது,சூரியன் ஒவ்வொருமாதமும் நகர்கிறது, ஒவ்வொரு தமிழ்மாத முதல்நாள் சூரியன் நகர்கிறது, ஆடி முதல்நாள் (16. 4, 21)சூரியனும் நகர்கிறார்,எங்கள் பூமித்தாய் நீள்வட்டப்பாதையில் சுற்றிவந்து நாளைக்கு ஆடி ஆடி திரும்பி தனது புத்தாண்டுப் புள்ளியை அடைந்து தைமாதப் புத்தாண்டுஅன்று அடுத்த சுற்றைத் தொடங்கும்,இப்படியே உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது,நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் பகுத்தறிவால் அறிந்து நடைமுறைப்படுத்தி வாழ்ந்து வந்துள்ளார்கள், எனவே உலகதாயின் ஆடி ஆடி திரும்பி வரும் நாளாகிய ஆடிப்பிறப்பான நன்நாளை இனிப்பான கூழ் காச்சிக் குடித்தும் = இனிப்பான கொழுக்கட்டை அவித்துச் சாப்பிட்டும் கொண்டாடுவோம், உலக மக்கள எல்லோருக்கும் ஆடிப் பிறப்பு வாழ்த்துக்கள், ஆடிப்பிறப்பு நாளில் எல்லோரும் சண்டை சச்சரவின்றி சந்தோசமாக இருக்க வேண்டும், சண்டை சச்சரவுப்பட்டால் ழு ஆடி அதாவது ஏழு ஆடிவரும்வரை நிம்மதிஇன்றி வாழ்வார்கள், ஆடி மாதம் உ லக சக்தியை வணங்கி வாழவேண்டியமாதம், திலகம் இராமகிருஸ்ணன்,

More

சாக்கு போக்கு பேசாதீர்கள். (July 15, 2021)

canada
Informed by : நா.மகேஸ்வரன்
Contributed by : Elango veluppillai
Card image cap

சாக்கு போக்கு பேசாதீர்கள்.
அன்பு உறவுகளே!!!
எமது உறவுகளின் இழப்புக்களும் அவையினால் ஏற்படுகின்ற துயரங்களையும்
தாங்கிய சூழ்நிலையில் உலக கொடிய நோயில் இருந்து உலகம் சற்று வெற்றி
நடைபோட்டு வருகின்ற இந்த நேரத்திலே தொடர்ந்தும் எனது பணியையும் எனது
சிந்தனை தெளிவையும் உங்கள் முன் எழுத விழைகின்றேன்.
சாக்குப் போக்கு என்ற சொல்லுக்கு பல வகையான அர்த்தங்கள் இங்கு
காணப்படுகின்றது. இருப்பினும் இந்த தெளிவற்ற உண்மைக்குப் புறம்பான
கருத்தை நான் சொல்ல விழைகின்றேன் என்பதில் எனது அறிவுக்கும் மனதுக்கும்
நன்கு அறிந்து இதை ஒரு சமூக சீர்கேடு அல்லது சீர்கெட வைக்கின்ற ஒரு போக்கு
பாங்கு ஒரு மனிதனிடம் குறிப்பாக தனி மனிதர்களிடம் அதிகமாகவே
காணப்படுகின்றது.
“யாருக்கும் சொல்லாதீர்கள் என்று எனது பேச்சு துவங்கினால் அங்கே
சாக்குப்போக்கு என்ற குழந்தை பிறக்கின்றது” என்று நினைத்துக்
கொள்ளுங்கள்.உங்களோடு சேர்ந்து சாக்குப்போக்கு பேசுபவர்கள், நீங்கள்
இல்லாதபோது உங்களைப் பற்றியும் பேசுவார்கள். சாக்குப் போக்கும்
பொய்க்கு நெருங்கிய தொடர்பு உண்டு.
இப் மனப்பாங்கு உடையவர்கள் மற்றவர்கள் கூறும் கருத்துக்களை அவசரத்தில்
எதையோ கேட்டுவிட்டு பின்னர் ஆசுவாசமாக அதற்கு பல வகையான
உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை உருவாக்கி ஒன்றை பத்தாகி அதை
மற்றவர்களுக்கு கூறுவார்கள்., இவர்களுடைய கவனம் எதிலுமே மற்றவர்களை
தவறாக கூறுவதாகவே இருக்கின்றன. ஏனென்றால் அவர்களுடைய மனது
எப்பொழுதுமே தன்னை முதன்மைப்படுத்திய மற்றவர்கள் நல்ல முறையிலோ
அல்லது உயர்நிலையில் இருப்பதை விரும்ப மாட்டார்கள். விரும்புவதும்
இல்லை. எப்பொழுதுமே நான் தான் எல்லாத்தையும் முதன்மை என்று சொல்லி
மிகவும் கீழ்த்தரமான மனநோயாளியாக இவர்கள் இருக்கின்றார்கள்.
சாக்குப்போக்கு பேசுபவர்களை சற்று அவதானமாக பாருங்கள் அவர்கள்
நேரடியாகவோ அல்லது தெளிவாகவும் எதையுமே கூறமாட்டார்கள். குறிப்பாக
மற்றவர்களுடைய விஷயங்களில் கவனமாக இருப்பார்கள். ஒரு விஷயத்தை
தவறாக கூறி ஒரு உருப்படி இல்லாத செயலில் இவர்கள் தமது செயல்களை
கருத்தோடு இருப்பார்கள். எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று
பலவகையான கருத்துக்களை தெளிவாகச் சொல்லி முடிப்பார்கள். ஆனால்
இவர்கள் தான் நமது சமூகத்தின் முதன்மையான மனிதர்களாக தெரிவார்கள்,
வெளிப்படையாக இவர்களைப் பார்க்கும் போது இவர்கள் நல்லவர்க தங்களை
காட்டிக் கொள்வார்கள். உண்மை என்னவென்றால் இவை அனைத்துக்கும்
மாறுபட்டவர்கள். அவர்களுடைய மனநிலையும் அவர்களுடைய செயல்களும்
எதிர்மறையாகவே இருக்கும். மேலோட்டமாகப் பார்க்கும்போது அவர்கள்
நல்லவர்களாகவே மற்றவர்களுக்கு தென்படுவார்கள். தாங்கள்
ஒழுக்கமானவர்கள் ஆகவும் எந்த வகையான தீய பழக்கவழக்கங்கள்
இல்லாதவர்களாகவும் வெளிப்படையாக காண்பிப்பார்கள் ஆனால் இதன்
மறுபக்கம் அவர்கள் வீட்டில் அதிகமாகவே இருக்கும்.
சாக்குப்போக்கு பேசுபவர்களும் சரி அல்லது கேட்பவர்களும் சரி மற்றவர்களை
இழிவுபடுத்தி அவர்களை அவமானப்படுத்தி சமூகத்தின் சீரழிவை
உருவாக்குகிறார்கள் என்பது எனது கருத்தாகும்.

இந்த மனநிலை உள்ளவர்கள் அவர்களுடைய பேச்சில் இருந்தே அவர்களுடைய
மனநிலை தெள்ளத் தெளிவாக தெரிந்துவிடும். நீதிக்கு மாறானது. இது
இன்னொருவரின் மனதையும் மழுங்கடித்து, வாழ்க்கையை நிம்மதி இல்லாத
நம்பிக்கை துரோகம் ஆக மாற்றி விடும். தீய நோக்கம் உடையது. …

More

Idle Talk, Rumors and Gossiping (July 9, 2021)

canada
Informed by : நா . மகேஸ்வரன் கனடா
Contributed by : Elango veluppillai
Card image cap

Idle Talk, Rumors and Gossiping

Does my conversations with others begin with “Don’t tell anyone?”
It is important to note that people who engages in idle talk with you, will also talk idly about you. Spreading rumors and lying are closely related. A rumor listens in haste and repeats at leisure. A rumor never minds his own business because he does not have a mind nor a business. A rumor is concerned with what he overhears rather than what he hears. Idle talk is essentially the art of saying nothing in a way that leaves nothing unsaid. A famous quote states, “Small people talk about other people, mediocre people talk about things, and great people talk about ideas.”
Rumors can lead to slander and defamation of character. People who listen to rumors are equally as guilty as those who spread such rumors. A gossiper usually gets caught in his own mouth trap. Rumors ruins lives, break hearts and is malicious. It is hard to track down simply because it has no face or name. It can topple governments, damage reputations, ruin careers, wreck marriages, and cause headaches and sleepless nights.
The next time we indulge in gossiping, we need to ask ourselves:
• Is it kind and gentle?
• Is it necessary?
• Is it the truth?
• Do I say positive things about others?
• Am I spreading rumors?
• Can I maintain confidentiality?
• Do I enjoy and encourage others to spread rumors?
It is important to refrain from gossiping. Also, remember that small talk comes out of …

More

கமலா தம்பி அவர்கள் 28-06-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார் (June 28, 2021)

canada
Informed by : Selva
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலா தம்பி அவர்கள் 28-06-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தம்பிமுத்து தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,தமயந்தி, இராகவன், முரளீதரன், அசோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பத்மாவதி டெல்விஸ் அவர்களின் அன்புச் சகோதரியும்,Harmeet, தயாராணி, Lucy, சுபத்திரிக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரசிகா, Angud, தன்யா, திமோதி, மலிசா, கரோலினா, நவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,Aden அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
Wednesday, 30 Jun 2021 11:00 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Wednesday, 30 Jun 2021 12:30 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Wednesday, 30 Jun 2021 2:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
அசோகன் - மகன்
Mobile : +14162581054Phone : +19054301865

More

மரணஅறிவித்தல் (June 21, 2021)

canada
Informed by : Webadmin
Contributed by : Elango veluppillai
Card image cap

அன்னை மடியில்:
25-11-1934
ஆண்டவன் அடியில்:
21-06-2021
அமரர்.கந்தையா இராசரத்தினம்
பளை இயக்கச்சியை பிறப்பிடமாகவும், இடைக்காடு அச்சுவேலியை புகுந்த இடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.கந்தையா இராசரத்தினம் அவர்கள் 21-06-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். இவர் அளுத்கம, யா/ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரி ஆகிய இடங்களில் ஆசிரியராகவும் ஞானாசாரியார், இடைக்காடு மகா வித்தியாலயம், பூநகரி மகாவித்தியாலயம் ஆகிய இடங்களில் அதிபராகவும், மன்னாரில் வட்டாரக் கல்வி அதிகாரியாகவும் (CEO), கொழும்பில் கல்வி அமைச்சு நிர்வாகியாகவும், Ethiopia, Zambia, South Africa (Transkei) இல் Head of Science Department இலும் பணியாற்றினார்
அன்னார் காலம் சென்றவர்களான கந்தையா சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான செல்வத்துரை நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும், சிவேஸ்வரியின் அன்புக் கணவரும், உதயநாயகி, செல்வரத்தினம், காலம் சென்ற நவரத்தினராசா ஆகியோரின் பாசமிகு அண்ணாவும், சீதாலக்ஷ்மி, மீனலோஜினி, காலம் சென்ற சுந்தரவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும், நாகநந்தினி, நாகநளினி, நாகநிமலினி ஆகியோரின் பாசமிகு அப்பாவும், தயாபரன், இளம்சென்னி, வள்ளுவன் ஆகியோரின் அன்பு மாமாவும், சரண்யா, தரண்யா, மயூரி, அனுஜன், திவ்யா,அகல்யா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,ஷியாமின் பாட்டாவும், அகிலன், நகுலன், சுமதி ஆகியோரின் மாமாவும், விசாகன், நிசாந்திகா, நிசாந், சுசித்ரா, ஜானகி, அகிம்சதாசன் ஆகியோரின் பெரியப்பாவும் கவிதா, ஜனகன்,கரிமா ஆகியோரின் மாமாவும், அனித்தா,ஆகாஷ்,கஸ்தூரி, அசோக், நிலா,ரோஜா, கீதா, அபினயன், கரிகாலன், டெக்காட், கேலிப், ஐரிஸ், ஆகியோரின் தாத்தாவும், சிவமங்களவதி, சிவமலர், நடராசபதி, சிவயோகராணி, சிவமனோகரி, சிவயோகேஸ்வரி மற்றும் காலம் சென்றவர்களான கதிர்காமசுந்தரலிங்கம், சிவபாக்கியவதி, சிவசோதிமதி, சன்னிதிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சோதிமுருகேசு, இராஜேஸ்வரி , சிவரஞ்சனி, சிறீதரன், சிவபாலன், கணேசலிங்கம் மற்றும் காலம் சென்றவர்களான பொன்னம்மா, துரைசிங்கம், சிதம்பரநாதன்,சண்முகபாரதி ஆகியோரின் சகலனும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் Covid -19 காரணமாக கனேடிய சட்டத்திற்கமைய குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களுடன் நடைபெற வேண்டும் என்பதால், இந் நிகழ்வானது குடும்ப உறவுகள் மட்டும் பங்கு பற்றும் நிகழ்வாக நடைபெறஉள்ளது. இந் நிகழ்வினை உறவினர்கள், நண்பர்கள் நேரலை மூலம் பார்வையிட முடியும். இதன் விபரம் பின்னர் அறிய தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
பார்வைக்கு:
Thursday 24-06-2021
12:00pm – 2:00pm
St. John’s Dixie Chappal
737 Dundas St. E
Mississauga, Ontario
கிரியை:
Thursday 24-06-2021
2:00pm – 3:00pm
St. John’s Dixie Chappal
737 …

More

மரண அறிவித்தல் (June 11, 2021)

uk
Informed by : Suba (Canada)
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

பாலசுதர்சினி கிரிதரன்
பிறப்பு : 04/04/1976 இறப்பு : 06/06/2021

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாலசுதர்சினி கிரிதரன்(ராஜி) இன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார். அன்னார் திரு பாலசுப்பிரமணியம் (பாலா மாஸ்ரர்)காலம் சென்ற சுகிர்தலட்சுமி தம்பதியரின் அன்பு மகளும் காலம் சென்ற சற்குணநாதன் நேசரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகளும் கிரிதரனின் அன்பு மனைவியும் சதுர்த், சானிகா,சஞ்சிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும், பாலசுதாயினி (ராதை) பாலசுதாயன் (மாயா) அவர்களின் அன்பு சகோதரியும், கனகேஸ்வரன், வாசுகி, சுபாஜினி, தபோதினி, நளாயினி, சசிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், மேசிகா, கேசிகன், ஆதவன், பிரணவி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ரிஷிகர், சுரபி,ரஷிகா,வினுஜன் ஆரணி, அபிஷன், ஆருஜன், பவிசனன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 12 Jun 2021 11:00 AM - 3:00 PM
Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom
ANGEL FUNERAL Angel funeral is inviting you to a scheduled Zoom meeting.

Topic: T/L BALASUTHARSHINI KIRITHARAN. VIEWING 12th JUNE 202111:00AM TO 3:00PM. ANGEL FUNERAL DIRECTORS SOUTHHALL
Time: Jun 12, 2021 11:00 AM London

Join Zoom Meeting
https://zoom.us/j/93538446878?pwd=Qi9Gczd6U1YxTWluNEkzUTdydGdMZz09

Meeting ID: 935 3844 6878
Passcode: 552452
Find your local number: https://zoom.us/u/aceaPNXMfN

கிரியை
Sunday, 13 Jun 2021 1:30 PM - 3:30 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

தகனம்
Sunday, 13 Jun 2021 4:00 PM
Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

தொடர்புகளுக்கு
கிரிதரன் - கணவர் Mobile : +447951966813
பாலசுப்பிரமணியம் - தந்தை Mobile : +94770872948
மாயா - சகோதரர் Mobile : +94770872948
சுபாஜினி - மைத்துனி Mobile : +15144654138
தபோதினி - மைத்துனி Mobile : +16478033005
நளாயினி - மைத்துனி Mobile : +61424185099
சசிகரன் - மைத்துனர் Mobile : +33651774175
பாலசுதாயினி(ராதை) - சகோதரி Mobile : +94770872948

More

பாலசுதர்சினி கிரிதரன் - Viewing (June 11, 2021)

uk
Informed by : Kiri
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

ANGEL FUNERAL Angel funeral is inviting you to a scheduled Zoom meeting.

Topic: T/L BALASUTHARSHINI KIRITHARAN. VIEWING 12th JUNE 2021 11:00AM TO 3:00PM. ANGEL FUNERAL DIRECTORS SOUTHHALL
Time: Jun 12, 2021 11:00 AM London

Join Zoom Meeting
https://zoom.us/j/93538446878?pwd=Qi9Gczd6U1YxTWluNEkzUTdydGdMZz09

Meeting ID: 935 3844 6878
Passcode: 552452
Find your local number: https://zoom.us/u/aceaPNXMfN

Use same Meeting ID and Passcode for Sunday
1.15pm to 5.00pm

More

முன்பள்ளிஅபிவிருத்திசெயற்திட்டம் (June 6, 2021)

srilanka
Informed by : க. வீரசிவாகரன். (வீரா)
Contributed by : Elango veluppillai
Card image cap

முன்பள்ளி அபிவிருத்தி செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இனிதே நிறைவடைந்திருக்கின்றன
1 - விளையாட்டு உபகரணங்கள் சீர்ப்படுத்தல் வர்ணம் பூசுதல்,தளபாடங்கள் வர்ணம் பூசுதல்,முன்பள்ளியின் கீழ் தளத்திற்கு வர்ணம் பூசுதல்,கரும்பலகை வர்ணம் பூசுதல்

2- குடிநீர் குழாய்கள் சீரமைத்தல்

முக்கிய் இவ் இரு செயற்பாடுகளையும் திரு.முருகவேல் சேர் அவர்களால் பொறுப்பேற்று செயற்படுத்தப்பட்டது

3- மாணவர்களுக்கு ஈர்ப்பான சில காட்சிப்படுத்தும் பதாதைகள்

4- மண்டப திரைச்சீலை மற்றும் கதவு யன்னல்களுக்கான திரை சீலை

இவ் இரு வேலைகளையும் முன்பள்ளி செயலாளர் அவர்களால் பொறுப்பெடுத்து செயற்படுத்தபட்டது

5- வாசல் படிகள் சீரமைத்தல் மற்றும் சில சீமெந்து வேலைகள்
இவ் வேலையை முன்பள்ளி பொருளாளர் அவர்களால் பொறுப்பேற்று செய்யப்பட்டது

6- சறுக்கு விழும் இடத்திற்கு தற்போது தேவையான அளவுக்கு இரண்டு உரப்பை கடற்கரை மண் பொருளாளர்,செயலாளர் ஆகிய இருவரால் மோட்டார் சைகிளில் ஏற்றிவந்து நிரப்பப்பட்டுள்ளது

7- ஆசிரியர் சம்பளம் அவர்களது சேவைக்காலத்திற்கு ஏற்ப
1ம் ஆசிரியர் 10,000 ( 2000/=அதிகரித்தது)

2ம் ஆசிரியர் 9,000/=( 1,000/= அதிகரித்த)

3ம் ஆசிரியர் - புதியவர் 8,'000/=

இச் முடிவு நிதி ஆளுகை குழு பிரதிநிதிகள் மற்றும் முன்பள்ளி நிர்வாக கலந்துரையாடலில் ஆலோசித்து முடிவாக்கப்பட்டது

நான் ஆரம்பத்தில் இருந்து கூறிவரும் " கிராமத்தில் உள்ள உறவுகளின் பங்களிப்பு என்ற கருத்துக்கு அமைய"

கிராமத்தை சார்ந்த மூத்த உறவுகளான திரு .முருகவேல் சேர் மற்றும் திரு.கதிர்காமநாதன் ( வைரம் ஐயா) ஆகிய இருவரும் என்ன கேட்டாலும் ( ஆலோசனை or வேலை) அதை ஆர்வத்தோடு செயற்படுத்துகின்ற தன்மை எமது நிர்வாகத்திற்க்கு உதவியாகவும் ஒர் பலமாகவும் உத்வேகமாகவும் காணப்பட்டமை ஒர் சிறப்பாகும்

கடந்த zoom meeting இல் செய்யவேண்டிய வேலைகளுக்கு மேலதிகமாக அனைவரும் ஆலோசித்து தேவை கருதி சில மேலதிக வேலைகளையும் செய்துள்ளோம்

இச் செயற்பாடுகளை செயற்படுத்திய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நிதி ஆளுகை குழு உறுப்பினர்கள் மற்றும் ஊக்கமூட்டும் கருத்துக்கள், ஆக்கபூர்வமான கருத்துக்கள், ஆலோசனைகள் வழங்கிய புலம்பெயர்ந்த இடைக்காடு உறவுகளுக்கும், நிதிப்பங்களிப்புக்கள் செய்த ஒவ்வொரு உறவுகளுக்கும் நெஞ்சாந்த நன்றிகள்

" ஒற்றுமையே பலம்"

செயலாளர்
க.வீரசிவாகரன்
( வீரா)

More

ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கை (May 31, 2021)

canada
Informed by : பொன் கந்தவேல்
Contributed by : Elango veluppillai
Card image cap

ரொறன்ரோ பல்கலைகழகம்
ஸ்காபரோ
04 பங்குனி 2021

தலைவர்,
யா/இடைக்காடு மகாவிதியாலய பழைய மாணவர் சங்கம்
ஸ்காபரோ
கனடா.

ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கைக்கு இடைக்காடு பழைய மாணவர் சங்கத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 12,650 கனடிய டொலர்கள் உதவுதொகைக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

தங்களது உதவுதொகை எமது இலக்கான மூன்றுமில்லியன் டொலர்களை அடைவதற்கு எமக்கு ஊக்கமளிப்பதுடன் எதிர்காலத்தில் அமையவிருக்கும் ரொறன்ரோ பல்கலைகழக தமிழ் இருக்கைமூலம் எமது தழிழ் மொழியின் வளர்ச்சி, அதன் பாரம்பரியம் போன்றவற்றை உலகெங்கும் பரப்புவதற்கும் அது சம்பந்தமாக ஆராய்ச்சி செய்வதற்கும் உறுதுணையாய் அமையும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை.

ரொறன்ரோ தமிழ் இருக்கை தனக்கானதோர் இலட்சிய நோக்குடன் எம் சமுதாய நலன்களை முன்னிறுத்தி உரிய இலக்கினை அடைவதற்கு உம்போன்ற இலட்சிய நோக்க்ம் கொன்டோரால் இது சாத்தியமாக உள்ளது. மேலும் எமது அடுத்த தலைமுறையினர் உலகின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கும் புதிய கண்டுபிடிப்புகளை காண்பதற்கும் வழிகாட்டிநிற்கும்.

இது தொடர்பான கேள்விகள் ஏதவது இருக்குமாயின் எதுவித தயக்குமுமின்றி எம்முடன் எமது மின்னஞ்சல்மூலமோ 647 601 4579 என்ற இலக்க தொலைபேசிமூலமோ தொடர்புகொள்ளமுடியும் என்பதையும் எதிர்காலத்தில் தமிழ் நிகழ்ச்சி தொடர்பாக தங்களை சந்திப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.
தங்கள் தாராள மனப்பாங்கிற்கு மீண்டும் எமது நன்றிகள்,

உண்மையுள்ள,
ஒப்பம்.....(செலஸ்ரி றிச்சாட்)
அபிவிருத்திப் பணிப்பாளர்
ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக நிதிப்பங்களிப்பு

மேற்படிபல்கலைகழகத்தில் தழிழ் இருக்கை ஒன்றினை நிறுவதற்குத்தேவையான மூன்று மில்லியன் டொலர்களைத் திரட்டுவதற்கான பல்கலைகழகச் சமூகம் எமது உதவியை நாடி நின்றபோது, இடைக்காடு பழைய மாணவர்களான நாமும் எமதுஊர்மக்களும் உவந்தளித்த உதவுதொகை 12,650 டொலர்களையிட்டு தாம் மிகவும் மகிழ்வடைவாதாக்வும் அதற்காக இடைக்காடு பழைய மாணவர் சங்கத்தைப் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர். நிதி சேகரிப்பில் முன்னின்றுளைத்த ரொறன்ரோ பகுதியில் திரு சு. நவகுமாரும் மொன்றியல் பகுதியில் திரு பரமசிவமும் மனதுவந்தளித்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆங்கிலக்கடிதமும் அதன் தமிழ் ஆக்கமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தேவையான மூன்றுமில்லியன் தொகையும் தற்போது சேகரிக்கப்பட்டுவிட்டது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியே. இருக்கை அமைப்பத்தற்கான நடவடிக்கைகள் ஆரப்பிக்கப்பட்டுள்ளன எனவும் தெரியவந்துள்ளது.

அன்புடன்
பொன் கந்தவேல்
28.5.2021

More

வானம் என்றால் என்ன !!! (May 17, 2021)

canada
Informed by : நா.மகேசன்
Contributed by : Elango veluppillai
Card image cap

வானம் என்றால் என்ன !!!
தேனிலும் இனிய தமிழ்மொழியில் பல அரிய பெரிய ஓலைச்சுவடிகளும்,
ஓட்டுபிரதிகள் உள்ளன இவை யாதவர்கள் சித்தர்கள்.
நீங்கள் இரவில் எழுந்து தலை நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்தால் பல அரிய
பெரிய விண்வெளி காட்சிகளை காணலாம். முழுமதி, விண்மீன்கள், நட்சத்திர
மண்டலங்கள், கிரகங்கள் கூட்டங்கள், இவைகளெல்லாம் எம்மை சுற்றி
இருப்பதையும் நாம் அதற்கு மேல் நிற்பது போலவும் தோன்றும்.
இந்த மேல் பகுதியில் நமக்கு தெரிவது உதயமாகி இருப்பதாகவும்., தெரியாமல்
கீழ்ப்பகுதியில் இருப்பதை அஸ்தமனமாகி இருப்பதாகவும் கூறுகின்றோம்.
சூரியனை நாங்கள் இரவில் காண முடியாது. அது எங்கும் போகவில்லை.
பூமியின் கீழ் பகுதியில் இருப்பதினால் நமக்குத் தெரிவதில்லை. இந்த சூரியனும்
சுற்றியுள்ள கிரகங்களும் மேற்கிலிருந்து கிழக்காக சுற்றிவருகின்றன.
உண்மையில் சூரியன் மேற்கே உதித்து கிழக்கே மறைகிறது. ஆனால் நாம் அதை
கிழக்கே உதித்து மேற்கே மறைவதாக கூறுகின்றோம். உண்மை அதுவல்ல.
உதாரணமாக நாங்கள் ஒரு பேருந்தில் போகும் போது நாங்கள் திரும்பிப்
பார்த்தால் மரங்கள் வீதிகள் ஓடுவது போல் தோன்றும் அதுபோல்தான் சூரியனும்
மேற்கே உதித்து கிழக்கே மறைகிறது. இது ஒரு பிரம்மை.
சூரியனுக்கு நீள் வட்டப்பாதையில் புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், குரு, சனியும்
சுற்றுவதை காணலாம் . இந்தக் கோள்கள் துணைக்கோள்கள் ஆக பல
சந்திரன்கள் கொண்டுள்ளது. பூமிக்கு ஒரு சந்திரன். செவ்வாய்க்கு இரண்டு
சந்திரனும். குருவும் 16 சந்திரனும். சனிக்கு 18 சந்திரனும். இப்படி 46 சந்திரன்கள்
உள்ளதாக சித்தர்கள் கூறுகிறார்கள். 9 கோடி தூரத்தில் சூரியன் உள்ளதாகவும்,
சனி 80 கோடி மைல் தூரத்தில் உள்ளதாகவும் சித்தர்கள் கூறுகிறார்கள். இதை
இவர்கள் எவ்வாறு கணித்தார்கள் ? இரு கணக்குகளை நான் உதாரணமாக
தருகின்றேன்.
இன்றைய முறை
97
93
------
291
273
--------
9021
சித்தர் முறையை பாருங்கள்

100 றை பொதுவாக வைத்து அதிலிருந்து விகுதியை கழித்தல் வேண்டும்
97 - 100 -----> 3
93 - 100 -----> 7
-----------------------------------------
9021

100 றை பொதுவாக வைத்து அதிலிருந்து விகுதியை கூட்டல் வேண்டும்
109 - 100 ----> 9
104 - 100 -----> 4
-------------------------------------------
11336

நன்றி வணக்கம்
நா.மகேசன்

More

இடைக்காடு ஆரம்ப பள்ளிக்காக நன்கொடையாக வழங்கப்பட்ட நிதி விபர குறிப்புகள் (May 7, 2021)

uk
Informed by : இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கம்(UK)
Contributed by : Elango veluppillai
Card image cap

நன்கொடையாக வழங்கப்பட்ட நிதி விபர குறிப்புகள்
பிரித்தானியாவில் பெற்றுகொண்ட நிதி
£9850.00
இலங்கையில் பெற்றுகொண்ட நிதி
(U k அன்பர் அவர்களால் வழங்கப்பட்டது)
£354.61
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர்பாடசாலையின் வளர்ச்சிக்காக சுவிஸ் வாழ் எம்மவர்களால் வழங்கப்பட்ட நிதி விபரம்.

1. சிவசுப்பிரமணியம் பாஸ்கரன் 50-00
2. பெரியதம்பி சிவலிங்கம் 100-00
3. கந்தையா செந்தில்ராஜன் 100-00
4. சுப்பிரமணியம் உதயகுமார் 100-00
5. அருள்வாசன் சுவாமிநாதன் 100-00
6. கந்தையா கண்ணதாசன் 100-00
7. சிவசுப்பிரமணியம் சுயாகரன் 100-00
8. சிவனடியான் குணசீலன் 100-00
9. சின்னத்துரை தனேஸ்வரன் 50-00
10. கந்தசாமி ராஜ்குமார் 50-00
11. வேலுப்பிள்ளை ஜெயக்குமார் 50-00
12. கிளியக்கா 100-00
13. ஞானசேகரம் கவிதா 108.75
14. சிறிமனோகரன் ( ஜேர்மன் சசி 108.75
15. விதுன் காண்டீபன் 100-00
16. கிருஸ்ணர் ஜெயச்சந்திரன் 100-00
17. ஞானறதி சாந்தகுமார் 100-00
18. தர்சினி ஜெகதீஸ்வரன் 100-00
19. பாமதி வைரவநாதன் 100-00
20. றதிவதனி நற்குணசிங்கம் 100-00
21. மாதவன் இராசலிங்கம் 100-00
22. இளமுருகன் ஆறுமுகம் 100-00
23. சிற்றம்பலம் விக்னேஸ்வரன் 100-00
24. சிறிரமணன் 50-00
மொத்தநிதி சுவிஸ் பிராங் 2167.50
இலங்கை ருபா 504350.00

இடைக்காடு ஆரம்ப பள்ளி நிர்வாகம், எமது நிர்வாகத்தின் ஊடாக கோரிய நிதி உதவியை கருத்தில் கொண்டு தாமாகவே வலிந்து அள்ளி வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் எமது நிர்வாகம் சார்பாக உளப்பூர்வமாக நன்றிகள்.Govid 19 காரணமாக பொது நிகழ்வின் மூலம் ஒன்றிணைய முடியாத நேரத்தில் நிதி வழங்கல் மூலம் ஒன்றிணைந்தது ஒற்றுமையை வலுப்படுத்தி, நம்பிக்கையூட்டி ,மகிழ்ச்சி கரமான சூழலை உருவாக்கிய உறவுகளை வாழ்த்துகின்றோம்.
மேலும் நிதி வழங்கியவர்களின் விபர அட்டவணை கீழே உள்ளது. இதில் யாருடைய பெயர் தவறவிடப்பட்டு இருந்தால், அல்லது தொகையில் மாற்றம் இரூந்தால் ,அல்லது இதுபற்றிய வேறு கருத்துகள் இருப்பின் ,தயக்கம் இன்றி உடன் தொடர்பு கொள்ளவும்.
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கம்(UK),
சுவிஸ் நிதி ஆளுகை குழு

More

சித்திரா பவுணர்மி (April 25, 2021)

canada
Informed by : Thilagam Ramakrishnan
Contributed by : Elango veluppillai
Card image cap

சித்திரா பவுணர்மி

More

உலக மக்கள் அனைவருக்கும் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள், (April 18, 2021)

canada
Informed by : திலகம் இராமகிருஸ்ணன்,
Contributed by : Elango veluppillai
Card image cap

கலியுகம் பிலவ ஆண்டு சித்திரை(சித்திரம்வரையும்-....திரை)மாதம் 1ம் திகதி
(13/4/21)செவ்வாய்க்கிழமை) பிரபஞ்சம் எனப்படுகிற திரையிலே சித்திரம் வரைவதுபோல
தந்தை சூரியன் தலைமையில் கிரகங்கள் சுற்றி வருகி்றன,நமது முன்னோர்கள் அவற்றின்
தன்மை அறிந்து பெயர்சூட்டி ஒரு கிழமையில் ஏழு நாட்கள் ஞாயிறு திங்கள் செவ்வாய்
புதன் வியாழன் வெள்ளி சனி என ஏழுகிரகங்கள் பெரியவை என்றும் அவை நகரும்
விதத்தில் இரண்டு வெட்டுப்புள்ளிகள் ஏற்படுகின்றது எனவும் வடபக்கம் வெட்டுகின்ற
புள்ளிக்கு ராகு எனவும் தென்பக்கம் வெட் டுகின்ற புள்ளிக்கு கேது எனவும் பெயர் சூட்டி
நவக்கிரகங்களாக்கி கணித்து வாழ்ந்து வந்துள்ளார்கள்,வாழ்ந்து வருகிறார்கள், உடம்பிலேயே
ஒன்பது துளைகள் முக்கு காதுகள் கண்கள் வாய் முன்துளை ராகு எனவும் பின் துளை
கேது, எனவும் கணித்துவாழ்ந்துள்ளார்கள், சீனர்கள் கிந்திக்காரர்கள் மலையாளம் தெலுங்கு
பேசுபவர்கள் தைமாத வளர்பிறை மாசிமாத வளர்பிறை பங்குனிமாத வளர்பிறை என
சந்திரனை முன்னிலைப்படுத்தி சந்திர புத்தாண்டு என கொண்டாடி வருகிறார்கள், ஆனால்
தமிழ்மக்கள் உலக தந்தை சூரியனை முதன்மையாகக் கொண்டு சித்திரைமாதம்
சித்திரைப்புத்தாண்டென்று கொண்டாடி வருகிறோம்,தையளாள் பூமித்தாயின் புத்தாண்டு
தந்தைசூரியனுக்கு நன்றி தெரிவிப்பது,இது தமிழ்மக்களின் சிறப்பு,தைப் புத்தாண்டுப்
பொங்கல், பிரபஞ்சம் எனப்படுகிற ஒரு சக்தி \நிலம்/ நீர் காற்று/ ( நெருப்பு( சூடு)/
ஆகாயம் என அறிந்து இவற்றிற்கு வணக்கத்தலங்களையும் அமைத்து வணங்கி வாழ்ந்து
வந்துள்ளார்கள்தமிழ்மக்கள்,பிரபஞ்சத்தின் எல்லாக்கணிப்புகளும் தமிழ்மக்களிடமே
உண்டு,எனவே இயற்கையான சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடிசக்தியை வணங்கி
வளமாக வாழ்வோம்,எப்படியாயினும் தமிழ்மக்கள் தமிழர்களின் நிகழ்வுகளை தமிழ்ப்
பண்பாட்டுடன் செய்து வாழ்ந்து வந்தால் சிறப்பாக இருக்கும்,வாழ்கதமிழ் வளர்க
தமிழர்பண்பாடு,

திலகம் இராமகிருஸ்ணன்,

More

பாலசுப்பிரமணியம் இராசைய்யா அவர்கள் இறைபதம் அடைந்தார் (April 17, 2021)

canada
Informed by : Vel
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் இராசைய்யா அவர்கள் 14-04-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசைய்யா செங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தெய்வேந்திரம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற யோகேஸ்வரி(குமுதா) அவர்களின் அன்புக் கணவரும்,
பாலேஸ்வரி(வவி, கனடா), பழனி(சுவிஸ்), செந்தில்(கனடா), சுகிர்தா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தறுமு அவர்களின் அன்புச் சகோதரரும், பிரதீபன்(கனடா), ஜெபனா(சுவிஸ்), ஜீவானந்தி(கனடா) மற்றும் இராகுலன்(றொசான், இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனும்,
சாந்தா(கொலன்ட்), வேல்(கனடா), கேதா(கனடா), சிறீகாந்தன், மொழி, பாஸ்கர் ஆகியோரின் மைத்துனரும்,
அபிராம், சாரபி, சாத்விகா, சபீதா, அஸ்வினா, அஸ்வித், அட்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: செல்வன்- பெறாமகன்

கிரியை Get Direction
• Sunday, 18 Apr 2021 8:30 AM - 10:30 AM
• Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம் Get Direction
• Sunday, 18 Apr 2021 11:30 AM
• Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

வவி - மகள்
Mobile: +16474607426
பழனி - மகன்
• Mobile : +41764547438
செந்தில் - மகன்
• Mobile : +14162190525
சுதா - மகள்
• Mobile : +94777596948
வேல்
• Mobile : +16478561962
கேதா
• Mobile : +14162943932
செல்வன்
• Mobile : +447405035446

More

மரண அறிவித்தல் திருமதி சரஸ்வதி சின்னத்தம்பி (April 14, 2021)

canada
Informed by : சிவாஜினி
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காட்டை பிறப்பிடமாகவும் ஸ்காபரோ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி சின்னத்தம்பி சித்திரை 13ஆம் திகதி இறைவனடி சேர்ந்தார். இவர் காலஞ்சென்ற ஆழ்வார் செல்லையா,செல்லையா வள்ளிப்பிள்ளையின் அன்பு மகளும் கந்தையா சின்னாச்சியின் மருமகளும் கந்தையா சின்னத்தம்பியின் அன்பு மனைவியும்
காலஞ்சென்றவர்களான தங்கம்மா,பொன்னம்மா,குழந்தையார்,பொன்னையா,தெய்வானை ஆகியோரின் சகோதரியும் முருகையா,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை,தியாகராயா,கதிர்காமு,வள்ளிநாயகி ஆகியோரின் மைத்துனியும் சிவமலர்,சிவமனோகரி,சிவாஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும் குணசீலன்,அபயகரன்,யோகேஸ்வரனின் மாமியாரும் லக்ஸ்மன்-நிரூபி,நேரு-யதுஷா,பானு-சுயன்,
வைஸ்ணவி-சியாம்,வைதேகி,நேத்ராவின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் சித்திரை 15ஆம் திகதி வியாழக்கிழமை Chapel Ridge Funeral Homeஇல், 6:30am - 9:30am மணிக்கு நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு- சிவாஜினி -647-888-3307
சிவமனோகரி - 416-473-2261
சிவமலர் -416-284-0757

The funeral will be on Thursday, April 15th from 6:30 am - 9:30 am EST at Chapel Ridge Funeral Home. Due to the restrictions, only immediate family is permitted to attend. Thank you for understanding. If you would like to watch the live stream, please click the below link.

More

எமது சமுதாயத்திலே சமூகத்திற்கான சமூக சேவையின் பலம் என்ன ? (April 10, 2021)

canada
Informed by : N. மகேசன்
Contributed by : Elango veluppillai
Card image cap

எமது சமுதாயத்திலே சமூகத்திற்கான சமூக சேவையின் பலம் என்ன ?

உறவுகளே !!!

நீண்ட நெடிய நமது வாழ்வியலில் பல மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் covid-19 வைரஸை எதிர்த்துப் போராடும் சூழ்நிலையில் எமது பயணம் தொடர்கின்றது. நிச்சயமாக நாம் அனைவரும் இதிலிருந்து அடுத்த கட்டத்துக்குச் செல்வோம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் நான் இருக்கிறேன்.

கிழக்கு முனையில் தொடங்கி மேற்கு முனை வரை எமது இடைக்காடு கிராமத்தின் மழலைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு தனி ஒரு மனிதனாக அன்புடனும் செயல் வீரனாகவும் நின்று பெரிய நிதியினை கனடாவில் பெற்றுத்தந்த பரமசிவம் அண்ணாவை நலமுடனும் ஆரோக்கியத்துடனும் வளமுடனும் வாழ்த்தி எனது எழுத்துப் பணியை தொடர்கின்றேன் .

உங்கள் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் மக்கள் கேட்கும்போது அதனை நிறைவேற்றி விட நடைமுறைக்கு சாத்தியமான நேர்மையான அணுகுமுறையை முயன்று பாருங்கள். அதன் விளைவுகளைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள்.

எல்லோருடைய இதயங்களும் ஒரே மாதிரி துடிக்கின்றது. ஆனால் எல்லோரையும் ஒரு குழுவாக அல்லது ஒரு தலைமையின் கீழ் மாற்றுவது எப்படி என்பதனை எல்லோரும் அறிவார்களா ? அது எப்படி அவர்களை மாற்றுவது என்பதனை அவர்களை ஆசுவாசப் படுத்துவதன் மூலம் அவர்களுக்கு நான் மூன்று விடயங்களை இங்கே கூற விழைகின்றேன்.

1) ஏதேனும் நடந்திருந்தால் நான் அதனைச் செய்தேன் என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

2) ஏதேனும் சரியாக நடந்து இருந்தால் நாம் அதை செய்தோம் என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

3) ஏதேனும் உண்மையிலே சரியாக நடந்திருந்தால் நீங்கள் செய்தீர்கள் என்று சொல்லுங்கள்.

பொதுப்பணி என்ற வார்த்தை மக்களுக்கு சக்தியூட்டும் என்று நினையுங்கள். நீங்கள் பொதுப் பணிகளை செய்யும் போது உங்களை கட்டளை இடும் அதிகாரி என்று நினைப்பவர்கள் இல்லவே இல்லை .,மாறாக மக்களை நேசிப்பவர்கள் என்றுதான் அவர்கள் நினைப்பார்கள். அவர்கள் மக்களது கவனத்தை சரி செய்து கொண்டு வருவார்கள் என்று தான் நினைப்பார்கள்.

இளைய சமூகத்தினை விரைவாக முன்னேற்றி விடுங்கள்.மெல்லிய இரும்புத் தகடு நொறுங்கிவிடும், ஆனால் மொத்தமா தகடு ஒரு பூகம்பத்தை தாக்கிவிடும். நாங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள்ளேயே நாமே ஒப்பந்தம் செய்து கொள்வோம்.

1) சூழ்நிலையின் முரண்பாட்டுக்கு பதிலாக உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வோம்

2) எதிர்ப்புத்தன்மைக்கு பதிலாக ஈர்ப்புதன்மையுடன் செயல்படுவோம்.

3) சச்சரவுக்கு பதிலாக விட்டுக்கொடுத்து போதல் என்ற பொது வீதியில் உறுதி கொள்வோம்.

4) உடைந்து போவோம் என்பதை விட்டு ஒத்துப் போவோம் என்று இணைந்து கொள்வோம்.

இருட்டைக் கண்டு குழந்தைகள் …

More

எனது பதவிகளை நானே உயர்த்தலாமா ? (March 4, 2021)

canada
Informed by : N. மகேசன்
Contributed by : Elango veluppillai
Card image cap

எனது பதவிகளை நானே உயர்த்தலாமா ?

எந்த ஒரு பதவி உயர்வையும் நாங்கள் பெறுவதற்கு பரீட்சை எழுதியே ஆகவேண்டும். எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாங்கள் எப்படி எங்களுக்கு பதவியை நாங்களே உயர்த்துவது !? அதற்கு ஒரே வழி தான் உண்டு. அது என்ன வழி ? பொதுப்பணிகள் , சமூகப்பணிகளையும் பொறுப்பு ஏற்பவர்கள் தங்களுக்குத் தாங்களே பதவிகளை கொடுத்துக் கொள்வது தான்.

பொறுப்பான பண்பு என்பதுபொறுப்பு ஏற்பது வாகும் . பொறுப்பு ஏற்பது என்பது முழுவதும் நமது மனங்களிலே தங்கியுள்ளது. பொறுப்பானவர்கள் எது சரியாக நடைபெறுகிறதோ அதை உடனடியாக பொறுப்பு ஏற்பார்கள். ஆனால் சிலர் தவறாகப் போகும்போது பொறுப்பு எடுத்து அதை திறம்பட நடத்தி முடிப்பார். ஆனால் கீழ்படிதல் இல்லாமல் திறம்பட செய்து முடிக்க இயலாது. பொறுப்பு ஏற்க முடியாத நபர்கள் தங்களுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள், இனம், கடவுள், விதி, அதிர்ஷ்டம், அல்லது சந்தர்ப்பம் போன்றவற்றின் மேல் பழி கூறுவார்கள்.

பொறுப்புத் தன்மை என்பது சிந்தித்துச் செயல்படும் உயர்ந்த குணத்தை உள்ளடங்கி இருக்கும் . சிறு புத்திதானம் நமது பொறுப்புகளை புறந்தள்ளி வைத்து விடுகின்றது . இதைப் பற்றி சற்று சிந்தியுங்கள்

நமது சமூகத்தில் மூன்று வகையான மனித இயல்புகள் இருப்பதாக நான் எண்ணுகின்றேன்.

முதலாவதாக;

காரியத்தை நடத்தி வைப்பவர்கள்.

இரண்டாவதாக;

காரியத்தை நிகழ்த்துவதை பார்ப்பவர்கள்.

மூன்றாவதாக;

காரியம் நடப்பதை பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.

நீங்கள் எந்த வகையான நபர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

பொறுப்புகள் சுமக்க முடிந்தவர்கள் இடமே பொறுப்பு சென்றடையும்.

தமிழ் மகா நூல் ஒன்று கூறுகின்றது.

முதல் பொறுப்பு சமுதாயத்துக்கு.

இரண்டாவது பொறுப்பு எனது குடும்பத்திற்கு.

மூன்றாவது பொறுப்பு எனக்கு உரியது.

கடந்த கால தவறுகள் நடந்தவையாக செல்லட்டும்;

இன்றைய செயல்கள் நல்லவையாக இருக்கட்டும்;

நாளைய திட்டங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையட்டும்;

நன்றி மகேசன்

More

அனைத்து செயல்களிலும் ஏற்படும் மாற்றங்களும் அதன் வளர்ச்சி வளர்ச்சிப் போக்குகளும். (Feb. 28, 2021)

canada
Informed by : N. மகேசன்
Contributed by : Elango veluppillai
Card image cap

அனைத்து செயல்களிலும் ஏற்படும் மாற்றங்களும் அதன் வளர்ச்சி வளர்ச்சிப் போக்குகளும்.
நாம் பிறருடன் சேர்ந்து பணியாற்றும்போது ஏதோ ஒருவகையில் இணைநிலை வினைத்திறன்
தோன்றுகின்றது அல்லவா? தனியாக செய்வது கடினமான வேலையாக தெரிகின்றது அல்லவா? அதனை
பலரது கூட்டு முயற்சியினால் பொது சிந்தனை நோக்குடன் செயற்படும்போது எவ்வளவு இலகுவாக செய்ய
முடிகின்றது அல்லவா!! இவ் ஊக்குவிப்பு சக்தி மிகவும் பலமானது பொதுமையான செயல்கள்,
திட்டங்களை செய்யும்போது நல்ல சிந்தனை உள்ள நண்பர்களை பெறுவது உட்பட வாழ்வின் அனைத்து
விடயங்களிலும் இப் பொறிமுறையானது சாலச் சிறந்ததாகும் . முழுக்க முழுக்க தவறற்றதும் மாற்றக்கூடாது
மான ஒரு வாழ்வியல் முறை இருக்க முடியுமா? அதேபோல்தான் ஒவ்வொருவரும் மற்றவர்களின்
கருத்துக்களை செவிமடுப்பது நல்லது. ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் அடுத்தவரது
சுகதுக்கங்களுக்கு ஆறுதலாக இருங்கள். எம்மை நாமே நல்வழி படுத்துவோம் . ஒருவர் மீது ஒருவர்
கண்ணியமாக இருப்போம் . நாம் ஒரு குறிச்சி என்று எண்ணாதீர்கள். நாம் ஒரு கிராமம் என்று சிந்தியுங்கள்.
அனைவரிடமும் உற்சாகத்துடனும் ஊக்கமுடன் செயற்படுவோம். முற்றும் கற்றவன் என்று இறுமாப்பு
வேண்டாம். கடந்த காலங்களில் நீங்கள் சுமந்த சுமைகள் பலபேருக்கு வாழ்வளித்து இருக்கும் என்பதை
எண்ணி மகிழ்ச்சி அடையுங்கள். புதிய பல தீர்மானங்களையும் திட்டங்களையும் உருவாக்குங்கள்.
இந்தப்பொறிமுறை தொடர்ந்து கொண்டே இருக்கும். நல்ல நட்பு வட்டங்களை உருவாக்குங்கள். உருவாக்க
தயாராகுவோம். நமது முன்னேற்றத்திற்கு யார் யாரெல்லாம் உதவி செய்தார்களோ அவர்கள்
அனைவரையும் அரவணைத்து தமது முயற்சியில் தொடர்ந்து முன்னேறுவோம்.இதுவே எமது
மாற்றத்திற்கான சிறந்த பொறிமுறை ஆகும்.
நாங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக நாம் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க
வேண்டும். நன்றி

N. மகேசன்

More

மரண அறிவித்தல் (Feb. 27, 2021)

canada
Informed by : webadmin
Contributed by : Elango veluppillai
Card image cap

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, கரந்தன், தெல்லிப்பழை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாயகி ஜெகதீசன் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை கற்பகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும், ஜெகதீசன் அவர்களின் அன்பு மனைவியும், ஜதுநந்தனன்(ஜது), ஜதுதீசன்(கபில்), ஜகந்தினி(கனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், ரேணுகா, கதிர்மதி, குமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற சரஸ்வதி, சர்வேஸ்வரி, சண்முகநாதன், காலஞ்சென்றகனி - மகள் ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பஞ்சலிங்கம் மற்றும் அன்னலக்சுமி, காலஞ்சென்ற பேரானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஜெசேரன், ஜெயந்தன், ஜெயகபிஷன், ஜெயஞ்சலி, அக்‌ஷயன், அஜிஷயன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், கிருசன், ஜசானா, சஜானி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
ஜது - மகன் 437 223 1514
கனி - மகள் 647 965 4541
கபில் - மகன் 647 716 8798
குமரன் - மருமகன் 416 716 3819

More

நீத்தார் பெருமை (Feb. 10, 2021)

srilanka
Informed by : நா.இ.ஈசுவரன்.
Contributed by : Elango veluppillai
Card image cap

நீத்தார் பெருமை
அமரர் தம்பிமுத்து கதிரமலை
அமரர் தம்பிமுத்து கதிரமலை அவர்கள் 1945 ல் இடைக்காட்டில் ஓர் விவசாய குடும்பத்தில்
இரண்டாவது மகவாகவும் மூத்த மகனாகவும் பிறந்தார், போதிய நிலபுலன்கள் இன்மை,
சகோதரர்களின் வருகை போன்றவற்றால் அவர்களின் வாழ்க்கை நடுத்தர வர்க்க
வாழ்க்கையாகவே இருந்தது, திரு தம்பிமுத்து கதிரமலை அவர்கள் தனது கல்வியை இடைக்காடு
மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரணம் வரை கற்று பின் அதற்கு மேல் கற்கவேண்டுமாயின்
அயலூர் பாடசாலைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்பதாலும், குடும்பத்தின் மூத்தமகன்
என்பதாலும் தனக்கு பின்னால் இருக்கும் சகோதரர் நலன் களுக்காகவும் தனது கல்வியை
விடுத்து தந்தையாரின் விவசாய தொழிலுக்கு உதவத் தொடங்கினார், அன்றைய கால கட்டத்தில்
அவர் ஏதாவதொரு அரசாங்க வேலையொன்றினை பெற்றுக் கொள்ளக்கூடிய நிலை இருந்த
போதிலும் அதற்கும் அவர் முயற்சிக்கவில்லை.
இவர் எனது தந்தையாரின் சகோதரியின் பேரனாவார், அவரின் தாயார் எனது
தாயின் மீது மிகுந்த அன்பும் பாசமுமுடையவர்.அதனால் அடிக்கடி எமது தாயாரை சந்திக்க
வருவதுடன் எந்த விடயமாயினும் எனது தாயின் ஆலோசனை பெற்றுத்தான் செய்வது வழக்கம்,
அதனாலும் நெருங்கிய உறவினர் என்பதாலும் எனக்கும் அவர்களுடன் நல்ல உறவு இருந்தது.
ஆயினும் அவர் என்னைவிட வயதில் மூத்தவர் என்பதல் நான் அவரை எப்போதும் அண்ணா
என்றே அழைப்பது வழக்கம்,
இவர் தனது இளமைக்காலத்தில் தந்தையாருக்கு உதவுவதுடன் நண்பர்களுடன் சேர்ந்து
தோட்ட வேலைகளுக்குச் செல்வது வழக்கம், அதனால் அவர் விசுவமடு படித்த வாலிபர் திட்டம்
உருவானபோது முதல் தொகுதி வழங்கலில் அவரது நண்பர்களுடன் ஒரே தெருவில் காணியை
பெறக்கூடியதாக இருந்தது. அவரின் இளமைக்கால விவசாய முயற்சியினால் விசுவமடுவில்
மிளகாய் செய்கையில் நல்ல பயன் கிடைத்தது, அதன் பயனாக அவர் தனது சகோதரர்களுக்கு
நல்ல குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடிந்தது
. அவர் அந்த வருவாயைக் கொண்டு பாவித்த பார ஊர்தி ஒன்றைக் கொள்வனவு செய்து அதில்
கொழும்பிற்கான பொருட்களை ஏற்றி இறக்கும் தொழிலை ஆரம்பித்தார். தொழில் நேர்மை,
நேரம் தவறாமை, மக்களுடன் பழகும் முறை ஆகியவற்றால் அவரின் தொழில் மிகவும் சிறப்பாக
மேலோங்கியது .பின்னர் அவர் புதிதான பார ஊர்திகளை வாங்கி தொழில் செய்யத்
தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவர் மூன்று பார ஊர்திகளை வைத்து தொழில் செய்தமை
அவரின் திறமைக்குச் சான்றாகும், இடைக்காட்டில் முதல் பார ஊர்தி சேவையை
தொடங்கியவரும் அவரே.
இறை பக்தியில் அவரின் குடும்பம் சிறந்து விளங்கியது, அவரின் தந்தையார் விவசாயம்
செய்தபோதும் கொட்டடி வைரவர் ஆலய திருவிழாவில் தனது பங்களிப்பாக மேளக்கச்சேரி
ஒன்றினை வழங்குவதுடன் அன்னை புவனேஸ்வரி ஆலயத்திலும் மிகுந்த சேவையினை
வழங்குவதனை நான் கண்டிருக்கிறேன், அவரை தொடர்ந்து அவரின் மகனான கதிரமலை
அவர்களும் கொட்டடி ஆலய வளர்ச்சியிலும் இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் ஆலய
வளர்ச்சியில் மிகுந்த அக்கறையுடன் செயலாற்றி …

More

இடைக்காடு மகாவித்தியாலத்தைச் சேர்ந்த அன்பர்களே, (Feb. 10, 2021)

canada
Informed by : பொன் கந்தவேல்
Contributed by : Elango veluppillai

இடைக்காடு மகாவித்தியாலத்தைச் சேர்ந்த அன்பர்களே,
கனடா நாட்டின் ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்
கு நீங்கள் $12,650 நன்கொடை திரட்டி வழங்கியது வரலாறு. கல்லூரிகள் வழங்கிய
நன்கொடைகளில் உங்கள் நன்கொடைதான் தொகையில் அதிகமானது. இதையிட்டு
நீங்கள் பெருமை கொள்ளலாம்.
193 வருடம் வயதான ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ்
இருக்கை, தமிழ் மக்களுக்குச் சொந்தமானது. இதற்குத் தேவை நிதி 3 மில்லியன்
டொலர்கள்; ஏற்கனவே 2.4 மில்லியன் டொலர்கள் திரட்டியாகிவிட்டது. மேலும் தேவை
600,000 டொலர்கள் மட்டுமே. இப்பொழுது இறுதிக் கட்ட நிதி திரட்டல்
நடைபெறுகிறது. Last lap என்பார்கள். கடைசிப் பாய்ச்சல்.
இந்த முயற்சி வெற்றிகரமாக அமைய மீண்டும் உங்களிடம் நன்கொடைக்கு வருகிறோம்.
ஏற்கனவே கொடுத்தாகிவிட்டது என்று நினைப்பீர்கள். காலை உணவு சாப்பிட்டால்
மதியம் சாப்பிடுவதில்லையா? மதியம் சாப்பிட்டால் இரவு உணவு எடுப்பதில்லையா?
இன்னும் தேவை மிகச் சிறிய தொகைதான். பல்வேறு தமிழ் சங்கங்கள், ஊர் அமைப்புகள்,
கல்லூரிகளின் பழைய மாணவ மாணவிகள் ஒன்றுதிரண்டு உதவினால்
சிலவாரங்களிலேயே எங்கள் கனவு நனவாகிவிடும்.
இடைக்காடு மகாவித்தியாலயத்தின் பெயரும் நன்கொடையும் ரொறொன்ரோ
பல்கலைக்கழக ஏடுகளில் என்றென்றும் நிரந்தரமாகப் பாதுகாக்கப்படும். இது எங்கள்
வருங்காலச் சந்ததியினருக்கு நாங்கள் ஆற்றும் கடமை. எங்கள் மொழியை நாங்கள்
காப்பாற்றாவிட்டால் வேறு யார் செய்வார்கள்? நல்லது செய்யத் தயக்கம் வேண்டாம்.
இன்றே செய்யுங்கள். நன்றே செய்யுங்கள்.
ரொறொன்ரோ பல்கலைக்கழகம் தமிழ் இருக்கைக்கான நிதிப் பங்களிப்பு

மேற்படிவிடயம் தொடர்பாக பல தடவைகள் எனது கருத்தை எழுதி யிருந்தேன். அதன் பலனாக எம் உறவுகளும் பழைய மாணவர்களும் கணிசமான நிதியினை உதவியிருந்தீகள். அதன்படி கடந்த வருடம் ரொறன்ரொ உறவுகளால் 7200.00 டொலர்களும் மொன்றியல் உறவுகளால். 5450.00 டொலர்களும் ஆக மொத்தம் 12650.00 டொலர்களை தமிழிருக்கை உதவுதொகையாக வழங்கியிருந்தோம். இவ்விடத்தில் மொனறியல் பிரதேசத்தில் உதவுதொகையைபெறுவதற்கு முன்நின்றுளைத்த திரு பரமசிவத்துக்கும் எம் மனமாந்த நன்றியைக் கூறக் கடமைப்பட்டுளோம்.

இடைக்காடு சிறிய ஊர்தான். எனினும் அவர்களின் பங்களிப்பு எல்லோரையும் விட உயர்வாக உள்ளது என தமிழிருக்கைகுழு எம்மைப் பாராட்டிருப்பது எமக்கல்ல எம் ஊருக்கே மிகவும் பெருமையாக உள்ளது.

இது தொடர்பாக அவர்களால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட செய்தியை கீழே இணைத்துள்ளோம்.

எம்மைப்பற்றிதெரிந்கொண்டு தமிழ் இருக்கைக் குழு மீண்டும் எம்மிடம் உதவிகேட்டு நிற்கிறது. ஒரு குடும்பத்தில் பல பிள்ளைகள் இருந்தாலும் பெற்றொர் கஸ்டப்படும்போது எல்லாப்பிளைகளும் உதவுவதில்லை. ஒரு சில பிள்ளைகளே மீண்டும் மீண்டும் பெற்றோர்க்கு உதவுவார்கள். அதுபோலத்தான் இதுவும்.

நாம் ஏற்கனவே கணிசமான தொகையை உதவிவுள்ளோம். உதவியோர்க்கு எமது மனமார்ந்த நன்றிகள். எனினும் ஏதோ சில வசதியீனம் காரணமாக சிலர் இந்நிதிப்பங்களிப்பில் பங்குகொள்ளாமல் இருந்திருக்கலாம். அவர்களைஇவ் இறுதிச் சந்தற்பத்தைப் பயன்படுகத்திக் கொள்ளுமாறு தயவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பணம் சிறியது, அதனால் வரும் பயன் பெரியது.
பெறுவதை விட கொடுப்பதே மகிழ்ச்சியானது.

உங்கள் உதவுதொகையை e tansferமூலம் அனுப்புவதாயின் அதற்கான முகவரி,

S.Navakumar 416 525 6299
email: nanthantsap@yahoo.ca

P.Kanthavel 6477027346
email :. pSonkanthavel@yahoo.com

அன்புடன்,
பொன் கந்தவேல்
13.2.2021

.

.

More

கன்னியா(கன்னியர் ஊர் ) வெந்நீர் ஊற்று. (சுடு நீர்) (Feb. 10, 2021)

canada
Informed by : நா . மகேஸ்வரன் கனடா
Contributed by : Elango veluppillai
Card image cap

கன்னியா(கன்னியர் ஊர் ) வெந்நீர் ஊற்று. (சுடு நீர்)

சுடுநீர் கிணறு கன்னியா ஈழவள நாட்டில் கிழக்கு மாகாணத்திலே திருகோணமலை என்கின்ற நகர
பட்டினத்தில் அமைந்துள்ளது. இதனை இன்னும் சிறப்பாக கூறுவதாக இருந்தால், கிழக்கு மாகாணம்
திருகோணமலையில் இருந்து வவுனியா செல்லும் பாதையில் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள
கன்னியா என்கின்ற கிராமத்தில் வரலாற்று புகழ் மிக்க சுடு நீர் கிணறுகள் அமைந்துள்ளன.
இக் கிணறுகள் தொடர்பான கர்ண பரம்பரை கதை ஒன்று இராவணேஸ்வரன் ஆகிய
இராவணனுடன் சம்பந்தப்பட்டதாக உள்ளது.அது என்னவெனில் இராவணேஸ்வரன் தனது
தாயாரின் ஈமக்கிரியை செய்வதற்கு ஏழு இடங்களில் தனது உடைவாளால் வெட்டி நீர் ஊற்றினை
வரவழைத்தான் என்று அறியப்படுகின்றது. அதுவே கன்னியாவில் உள்ள சுடு நீர் கிணறுகள் ஆகும்.
இக் கிணறுகள் வெவ்வேறு அளவிலான வெப்பநிலை கொண்டவை.
உலகிலேயே மிக அபூர்வமாக தோன்றுகின்ற சுடு நீர் கிணறுகள். இதுபோன்ற கிணறுகள் இந்தியா,
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து,சுவீடன் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.
அன்றைய மகேஸ்வர சித்தர் இந் நீர் பற்றிய வெப்ப நிலைகளை குறித்து வைத்துள்ளார். அதன்படி,
முதலாவது கிணற்றில் 101 பாகையும்
இரண்டாவது கிணற்றில் 101.5 பாகையும்
மூன்றாவது கிணற்றில் 107 பாகையும்
நான்காவது கிணற்றில் 88.5 பாகையும்
ஐந்தாவது கிணற்றில் 86 பாகையும்
ஆறாவது கிணற்றில் 105 பாகையும்
ஏழாவது கிணற்றில் 90 பகையுமாக குறிப்பு எழுதி வைத்துள்ளார்.
இதனை 1817 -களில் டேவிட் என்ற ஆங்கில அறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.இவைகளை உற்று
நோக்கும் போது அன்றைய ராவணேஸ்வரன் ஆட்சி பெரு வியப்பாக உள்ளது .
இராவணேஸ்வரன் என்ற மன்னனிற்கும் இடைக்காடு என்ற கிராமத்திற்கும் உடைய
தொடர்புகளையும் சற்று ஆழமாக இங்கே பார்க்க விழைகின்றேன்.இடைக் காட்டிலே வடபுறத்தில்
கோணாவளை மற்றும் இராக்கை என்ற இரு இடங்களை உற்று நோக்குவோமாக இருந்தால் ,
அதாவது இராவணேஸ்வரன் வந்து சென்ற இடத்துக்கு அமைக்கப்பட்ட வளைவின் பெயரே
கோணாவளை . இராவணன் இருந்த இடமே பின்னாளில் இராக்கை என பெயர் மருவி உள்ளதாக
எண்ணுகின்றேன். மேலும் இந்த இராவணன், பத்துத்தலை இராவணன் என்று தவறாக ஒரு புரிதலை
ஆரியக் கூட்டம் உண்மைக்கு புறம்பாக உருவகம் செய்துள்ளார்கள். இவ் மகாமேதை பத்தினையான
அறிவுடையவராக இருந்தார்.அவையாவன இசைஞானி விமானியாக, அரசியலில் அறியனாக
,மருத்துவ நிபுணராக குற்றவியல், கட்டிடக்கலை நிபுணராக, வானியல் தத்துவாத்தியாக இப்படி பத்து
விதமான அறிவார்ந்த நிலையில் இருந்ததினால் பத்தினை உடைய இராவணன் இந்நாளிலே
பத்துத்தலை இராவணன் என்று தவறாக எம் மத்தியிலே ஆரியக் கூட்டம் எழுதிச் சென்று விட்டனர்.
இந்த உலகத்தில் ஒரு இனமாக தமிழர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள் என்பது கண்கூடாக ஆய்வின்
ஊடாக பெற்றுக் கொண்ட அறிவாகும். இதனை இன்றைய எதிர்கால தலைமுறையினர் மிகவும்

விரிவாகவும் ஆழமாகவும் சிந்தனையோடும் ஆராய்ச்சி …

More

மரண அறிவித்தல் (Feb. 2, 2021)

srilanka
Informed by : பொன் கந்தவேல்
Contributed by : Elango veluppillai
Card image cap

திரு அருணாசலம் கந்தையா
விசகடி சித்த வைத்தியர்
வயது 90
ஆனையிறவு இயக்கச்சி(பிறந்த இடம்) இடைக்காடு , வட்டக்கச்சி கனடா
மண்ணில் 08 JUN 1930
விண்ணில் 01 FEB 2021

யாழ். ஆனையிறவு இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், இடைக்காடு, வட்டக்கச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் கந்தையா அவர்கள் 01-02-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
காலஞ்சென்றவர்களான அருணாசலம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
சின்னத்தங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
மனோண்மனி(ஜேர்மனி), சேதுகாவலர்(கனடா), காந்தரூபி(இலங்கை), சறோஜினிதேவி(இலங்கை), தங்ககேஸ்வரன்(கனடா), மனோரஞ்சிதமலர்(இலங்கை), நகுலேஸ்வரன்(கனடா), வனஜா(கனடா), கிரிஜா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அதிஸ்டலிங்கம், யோகேஸ்வரி, காசிலிங்கம், மகேந்திரன், சந்திரவதனி, தனபாலசிங்கம், கார்த்திகா, சிறீகரன், கபிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரோபினி- நந்தகுமார், நிதர்சன், அனோஜன், சஜீதன், அபிநயா, சங்கீர்த்தன், தனுஷா, புருஷோத்தமன், கிருபன், விதுஜன், சங்கவி, தர்சன் -யாமினி, திவாகரன், மதுரா, ஆதித்திஜன், ஆரிஷா, சாரங்கன், தனுஷ், அபிரா, அய்டன் அக்சன், காவின் கோபி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, வேலுப்பிள்ளை, வள்ளியம்மை, மயிலாத்தை(மணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் தற்போதைய சூழ்நிலை காரணமாக குடும்பத்தினருடன் மட்டும் நடைபெறும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

சின்னத்தங்கம் - மனைவி
905 251 6702

More

கணபதிப்பிள்ளை வல்லிபுரம் (Jan. 23, 2021)

uk
Informed by : V.Kannathasan
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

சோதி பைரவர் கோவிலடி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டன், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை வல்லிபுரம் அவர்கள் 11/01/2021 திங்கள்கிழமை லண்டனில் இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(அப்பையா), சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான நாகமுத்து, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் பேராசிரியர் சின்னத்தம்பி(துரைராஜா), கதிராசி ஆகியோரின் அன்புச்சகோதரரும் இலட்சுமிப்பிள்ளையின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா, நாகம்மா, சுப்பிரமணியம், செல்லையா, சின்னம்மா, செல்லம்மா, நல்லையா, இராசையா,முத்தையா, தெய்வானை, மற்றும் இராசமணி, தங்கமணி, முருகையா ஆகியோரின் அன்பு மைத்துனரும் காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, விவேகானந்தன், மற்றும் குகமலர், யோகேஸ்வரன், சிவமலர், வசந்தமலர், கண்ணதாசன்ஆகியோரின் அன்புத் தந்தையாரும், இடைக்காடர் ஈஸ்வரன், சிவமலர், பாலகுமார், பொன்னீஸ்வரன், காவேரி ஆகியோரின் அன்பு மாமனாரும், பரணிகா, விஜய், துளசிகா, லக்சிகா, சாரூஜன், சாரூஜா, ,திவ்வியா, ராகுல், கிருசன் , கம்சா, நிஜன், நிசா ஆகியோரின் அன்புப் பேரனும், அம்மணி, தண்ணிலா, காந்தள், இளவல், வாகை ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

Funeral Arrangements
Sunday 24 Jan 2021

கிரியை
10.00am to 12.00am
Angel Funeral
267 Allenby Road
Southall UB1 2HD

தகனம்
Hendon Crematorium @ 1.00pm
Holders Hill Road
Hendon London NW7 1NB

ANGEL FUNERAL Angel funeral is inviting you to a scheduled Zoom meeting.

Topic: The Late Mr Vallipuram Kanapathipillai Funeral Ritual Prayer ANGEL FUNERAL DIRECORS
Time: Jan 24, 2021 10:00 AM London

Join Zoom Meeting
https://zoom.us/j/96597364178?pwd=RDdjdFhGNElvV3ZDMFErdXI2T2U2QT09

Meeting ID: 965 9736 4178
Passcode: 571630

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு;
வ. யோகேஸ்வரன்: லண்டன் - +44 208 57 52643
பா.சிவமலர்: லண்டன் - +44 208571 2372
வ. கண்ணதாசன்: லண்டன் – +44 20860 60827
இ.குகமலர்: கனடா +1 416 431 7236
பொ.வசந்தமலர்: கனடா +1 416 439 8613.
பேராசிரியர் க.சின்னத்தம்பி(துரைராஜா) +94 777286165

More

செல்லம்மா கந்தசாமி (Jan. 21, 2021)

uk
Informed by : K.Kanthalingam
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லம்மா கந்தசாமி அவர்கள் இன்று (14/01/2021) லண்டனில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சிலம்பாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும், தெய்வானைப்பிள்ளை(முத்து), கண்மணி(சிவம்), ராமகிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுப்பிரமணியம், சின்னத்துரை, சரஸ்வதி, வைரமுத்து, முருகேசு, வேலுப்பிள்ளை, இராசம்மா, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் கணபதிப்பிள்ளை, சிவபாக்கியம், தருமலிங்கம், கணேசலிங்கம், காந்தலிங்கம், சிவநாயகி, காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் சிவகாமி(ரத்தி), சிவலோஜினி (கிளி), சோதிலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும் சிவகாமி, கிருஷ்ணானந்தன், தெய்வநாயகி, சரோஜினிதேவி, ஆனந்தராணி, நடேசமூர்த்தி, செல்வக்குமாரன், சிறிசிவகாசிவாசி, நாகரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும், கவிதா, சுஜிதா, வினோதினி, அனுஷா, கேதீஸ்வரன், கவிதன், நிந்துஜன், கஜீபன், மாதுனி, காருஜன், சாம்பவி, கஜேந்திரன், ஜெகானி, சரண்யா, சேரன், சுமன், தூயவி, கஜீனா, அபினா, ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

Sellamma Kandasamy
Funeral Arrangements
Saturday 23 Jan 2021
கிரியை
2.00 – 4.00 pm
Asian Funeral Service
209 Kenton Road, Harrow, Middlesex, HA3 0HD
தகனம்
5.00 pm
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB

ANGEL FUNERAL Angel funeral is inviting you to a scheduled Zoom meeting.

Topic: The Late Sellammah Kandasamy Funeral Ritual Prayer 2.15 pm to 4.15
Time: Jan 23, 2021 02:15 PM London

Join Zoom Meeting
https://zoom.us/j/99605216284?pwd=dWs2WEJiRUxFeVdmUVc5N2ZzV0tzUT09

Meeting ID: 996 0521 6284
Passcode: 165194

தொடர்புகளுக்கு

தருமலிங்கம்: +1 905 471 3160
கணேசலிங்கம்:+ 94 778927858
காந்தலிங்கம்: + 44 2030922902
சிவநாயகி: +61 394087276
சிவகாமி: +44 2085615570
சிவலோஜினி: +1 416 289 1673
சோதிலிங்கம்: +1 416 897 6240

More

எங்கள் எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றுவது எப்படி? (Jan. 20, 2021)

canada
Informed by : நா . மகேஸ்வரன் கனடா
Contributed by : Elango veluppillai
Card image cap

எங்கள் எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றுவது எப்படி?

காலத்தால் தொன்மையானதும் செழுமையிலும் செம்மை ஆனதும் ஆதி மொழிகளில் ஒன்றும்
ஆகிய எங்கள் தமிழ் மொழி. இத்தமிழ் மொழிக்கு பாண்டிய வம்ச ஆட்சியில் சமதாக்கியன்
திறனதூமாக்கினி என்ற மகா அறிஞர் இலக்கண விதிமுறைகளை எழுத்துருவில் தொகுத்து
வழங்கிய மாபெரும் காப்பியநூலே தொல்காப்பியம் ஆகும் . இவர் பழந்தமிழ் பெருங்குடி களில்
ஒன்றாகிய காப்பிய வழித் தோன்றலில் வந்தவர் என்று அறிய முடிகின்றது.

அக்காலத்தில் குரு குல கல்வி முறைப்படி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் முறை மிகவும்
பிரபல்யம் ஆனது . இவரின் கற்றல் தொகுதியில் ஆயிரம் மாணவர்கள் கொண்ட பெரும் பாசறை
ஆகும் . இவரின் பாசறையில் செய்முறை பாடத்தின் போது சூழ்நிலைகளுக்கு ஏற்ப தெளிவாக
கற்றுக் கொடுக்கும் ஆசானாக விளங்கினார். இவரின் கற்பித்தல் முறையில் ஒரு விளக்கமாக கீழே
குறிப்பிடுகின்றேன்.

ஒரு பெரிய மண்பானையில் மாணவர்கள் அனைவரும் பார்க்கும்படி முன் வைத்தார் . இந்தப்
பானைக்குள் என்ன இருக்கின்றது என்று மாணவர்களை பார்த்து வினாவினார். பல
நிமிடங்களுக்குப் பின் ஒரு மாணவன் எழுந்து அதற்குள் காற்று உள்ளது என்று பதில் அளித்தார் .
சரியான பதில் என உரைத்த ஆசிரியர் பின்னர் அதனை எப்படி வெளியேற்ற முடியும் என்று
அடுத்த வினாவைத் தொடுத்தார் அதற்கு மாணவர் நீரினை பானையில் நிரப்பும்போது காற்று
வெளியேறும் என்று பதிலுரைத்தார். சரியான பதில் என்று கூறிய ஆசிரியர் இதிலிருந்து நாம் ஒரு
மெய்யியல் உண்மையை புரிந்துகொள்ள முடியும் என்று விளக்கினார்.

அது என்னவெனில் எங்கள் மனங்களை நல்ல எண்ணங்களினால் நிறைத்துக் கொள்ளும்போது தீய
எண்ணங்கள் அங்கு புக இடமில்லை என்பதே. எனவே நாங்கள் எப்பொழுதும் நல்லதையே
சிந்திப்போம் .தெளிவான எண்ணங்களால் நிரப்புவோம் .

நாம் என்னத்தைத்தான் சொன்னாலும் எழுதினாலும் அதன்படி நமது வாழ்வை வாழ்வது மிகவும்
கடினமானதுதான் ஆனால் எமது புறச்சூழல்கள் மூலம் தெளிவுற வகுக்கும்போது நன் முறைகளை
கடைப் பிடிக்கும் போதும் அவைகளை நல்ல கருத்துக்களாக மாற்றியமைக்க முடியும்.
அவற்றிற்காக ஐந்து முறைகளை நான் தெரிவு செய்துள்ளேன்.
முதலாவதாக தவறுகளை உணர்ந்து ஏற்றுக் கொள்ளல் .
அதில் இருந்து கற்றுக்கொள்ளுதல் .
நடந்த தவறுகளை நடந்த தவறுகளிலிருந்து தெளிவுறல் . அதிலிருந்து வெளியேறுதல் .
அதை மீண்டும் செய்யாது நிதானமாக இருத்தல் .
பிறரைக் குறை கூறாமல் ஏதும் சாக்குப் போக்குச் சொல்லாமல் நல்ல நிலைகளில் நல்ல
சிந்தனைகளுடன் தொடர்ந்து இருப்போமாக .
உடலை வளர்ப்பது உணவு
உயிரை வளர்ப்பது மனது
மனங்களில் நல்ல எண்ணங்களை நிரப்பி விடுங்கள்
வாழ்வு நலம் சேரும்.

இதன் மூலம் நமது வாழ்வும் நலமுடனும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்து பார்ப்போமே!!!
நன்றி.
மகேஸ்வரன்!!!

More

மரண அறிவித்தல் (Jan. 11, 2021)

uk
Informed by : பொ.வசந்தமலர் , கனடா ; - 416 439 8613.
Contributed by : Elango veluppillai
Card image cap

மரண அறிவித்தல்
கணபதிப்பிள்ளை (அப்பையா ) வல்லிபுரம் லண்டனில் இறைபதமடைந்தார்,
சோதி பைரவர் கோவிலடி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டன் பிரித்தானியாவை
வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை வல்லிபுரம் சற்றுமுன் லண்டனில்
இறைபதமடைந்தார்.
அன்னார் இலட்சுமிப்பிள்ளையின் அன்புக் கணவரும், காலம் சென்றவர்களான கணேசமூர்த்தி,
விவேகானந்தன், மற்றும் குகமலர், யோகேஸ்வரன், சிவமலர், வசந்தமலர், கண்ணதாசன்
ஆகியோரின் அன்புத் தந்தையாரும், இடைக்காடர் ஈஸ்வரன், சிவமலர், பாலகுமார்,
பொன்னீஸ்வரன், காவேரி ஆகியோரின் அன்பு மாமனாரும், பரணிகா, விஜய், துளசிகா, லக்சிகா,
சாரூஜன், சாரூஜா, ,திவ்வியா, ராகுல், கிருசன் , கம்சா, நிஜன், நிசா ஆகியோரின் அன்புப்
பேரனும், அம்மணி, தண்ணிலா, காந்தள், இளவல், வாகை ஆகியோரின் அன்புப் பூட்டனும்
ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு;
வ, யோகேஸ்வரன் ; லண்டன் - 01144208 5752643
பா,சிவமலர் ; லண்டன் - 011442085712372
வ, கண்ணதாசன் லண்டன் – 011442086060827
இ. குகமலர் கனடா -416 431 7236
பொ.வசந்தமலர் , கனடா ; - 416 439 8613.

More

இடைக்காடு இணையதள - பாவனை (Jan. 9, 2021)

canada
Informed by : வலைய வடிவமைப்பாளர்கள்
Contributed by : Sengo Vel
Card image cap

புதிய இடைக்காடு இணையதளத்தில் வாசகர்கள் கருத்துக்களை பரிமாறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. பலரும் இதனை பாவிக்கத்தொடங்கியிருப்பதையிட்டு மகிழ்ச்சி.

நீங்கள் உங்கள் பெயரில் ஒரு login உருவாக்கினால் இலகுவாக உங்கள் பதிவுகளையும் கருத்துக்களையும் அமைத்துக்கொள்ள முடியும்.
வலது பக்க மூலையில் உள்ள login தெரிவு செய்து புதிய login அமைத்துக்கொள்ள முடியும், அல்லது கீழேயுள்ள தொடர்பையும் அழுத்தி புதிய ஆள் பதிவை ஏற்படுத்தி கொள்ளவும்.

உங்கள் முழுப்பெயரை தமிழிலும் பதிந்து கொள்ளலாம். User Name மட்டும் ஆங்கிலத்தில் பதியவும்.

நன்றி. வலைய வடிவமைப்பாளர்கள்

More

சிதம்பரப்பிள்ளை மகேந்திரம் இறைபதம் அடைந்தார் (Jan. 5, 2021)

canada
Informed by : Giri
Contributed by : None
Card image cap

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிதம்பரப்பிள்ளை மகேந்திரம் (பிறப்பு: May 22, 1961) அவர்கள் கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை - சிவம் (கண்மணி) தம்பதிகளின் அன்பு மருமகனும், வள்ளியின் அன்பு கணவரும், சிந்தூரன், சுவஸ்திகா ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.

Contact:
Home - 416-519-2933
வள்ளி- 647-248-7645
சிந்தூரன்- 647-702-5406
சுவஸ்திகா- 647-707-9627

Lotus Funeral and Cremation Centre Inc.,
Wednesday Jan -06 2021
Viewing : 8:00 am to 9:00 am
Cremation : 9:00 am to 10:00 am

Mahendran Sithamparapillai's Funeral live streaming can be viewed from below link
Join Zoom Meeting
Time: Jan 6, 2021 07:00 AM Eastern Time (US and Canada
Meeting ID: 885 5262 3982
Passcode: 194676
One tap mobile
+13126266799,,88552623982#,,,,*194676# US (Chicago)
+13462487799,,88552623982#,,,,*194676# US (Houston)
Dial by your location
+1 312 626 6799 US (Chicago)
+1 346 248 7799 US (Houston)
+1 646 558 8656 US (New York)
+1 669 900 9128 US (San Jose)
+1 253 215 8782 US (Tacoma)
+1 301 715 8592 US (Washington D.C)
Please click below

More

மரண அறிவித்தல் திரு. செல்வத்துரை சன்னிதிவேல் (Jan. 5, 2021)

canada
Informed by : சிவமனோகரி
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

அன்னை மடியில் 22-06-1946
ஆண்டவன் அடியில் 03-01-2021

திரு. செல்வத்துரை சன்னிதிவேல்
யாழ் இடைக்காடு அச்சுவேலியை பிறந்த இடமாகவும், அல்வாயை புகுந்த இடமாகவும், இத்தியோப்பியா, நையீரியா, கனடாவை வதிவிடங்களாகவும் கொண்ட திரு.செல்லத்துரை சன்னிதிவேல் அவர்கள் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் யாழ் ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரி, நெல்லியடி மகா வித்தியாலயம், இத்தியோப்பியா, நையீரியா ஆகிய இடங்களில் ஆசிரியராகவும், கனடா தமிழ் கலாச்சார தொழில் நுட்பவியல் கல்லூரியில் தொகுப்பாளராகவும், ஆசிரியராகவும் பணியாற்றினார்.
அன்னார் காலம் சென்றவர்களான செல்வத்துரை நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், தட்சணாமூர்த்தி இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், சாமினியின் அன்புத் தந்தையும், காண்டீபனின் அன்பு மாமாவும், யாதவ், விஸ்வா ஆகியோரின் தாத்தாவும்,
சிவேஸ்வரி, சிவமங்களவதி, சிவமலர், நடராசபதி, சிவயோகராணி, சிவமனோகரி, சிவயோகேஸ்வரி, காலம் சென்றவர்களான கதிர்காம சுந்தரலிங்கம், சுந்தரவேல், சிவபாக்கியவதி, சிவசோதிமதி ஆகியோரின் அன்பு சகோதரனும்.
இராசரத்தினம், உதயநாயகி, சோதிமுருகேசு, சிவரஞ்சனி, சிறீதரன், சிவபாலன், கணேசலிங்கம், சுகிர்தராணி, சுபாசினி, காலம் சென்றவர்களான பொன்னம்மா, துரைசிங்கம், சிதம்பரநாதன், சண்முகபாரதி ஆகியோரின் மைத்தினரும், மனோகரன் அருள்ராஐன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் Covid -19 காரணமாக கனேடிய சட்டத்திற்கமைய குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களுடன் நடைபெற வேண்டும் என்பதால் இந் நிகழ்வானது குடும்ப உறவுகள் மட்டும் பங்கு பற்றும் நிகழ்வாக நடைபெற உள்ளது. இந் நிகழ்வினை உறவினர்கள், நண்பர்கள் நேரலை மூலம் பார்வையிட முடியும். இதன் விபரம் பின்னர் அறிய தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

சாமினி (மகள்) / இராஜேஸ்வரி (மனைவி) : 416 757 4253
காண்டீபன் (மருமகன்): 647 391 0946

நிகழ்வுகள்:
Thursday, January 7, 2021 : 5:30 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, Ontario
L3R 5G1

To view the funeral, Please click below link:

More

நன்றி நவிலல் - அமரர் தம்பிமுத்து கதிரமலை (Dec. 31, 2020)

canada
Informed by : க.முகுந்தன்
Contributed by : None

நன்றி நவிலல்
அமரர் தம்பிமுத்து கதிரமலை
இறைபதமடைந்த எங்கள் குடும்ப தலைவரும், எங்கள் இதயத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தந்தையாருமான திரு தம்பிமுத்து கதிரமலை அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு தொலைபேசி வழியாகவும் மின் அஞ்சல் வழியாகவும் ஆழ்ந்த இரங்கலும், அஞ்சலியும் தெரிவித்தும், நேரிலும் எமக்கு ஆறுதலையும் அளித்த எம் உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகள். மேலும் இச் செய்தியினை முகநூல் பக்கத்தில் பிரசுரித்தும் ,பகிர்ந்தும் கொண்டுள்ள நண்பர்களுக்கும் அஞ்சலி பிரசுரங்களை அச்சிட்டு காட்சிப்படுத்திய இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் ஆலய அறங்காவலர் சபைக்கும்,, இடைக்காடு கொட்டடி ஞான பைரவர் ஆலய அறங்காவலர் சபைக்கும் மலர் வளையம் வைத்தவர்களுக்கும் உணவு அளித்தவர்களுக்கும். மருத்துவமனையில் இருந்த வேளையில் எம்முடன் அடிக்கடி தொடர்பு கொண்டு அவர் நலம் பெற வேண்டும் என்று எமக்கு ஆறுதல் அளித்தவர்களுக்கும் அவருக்காக பிரார்த்தை செய்த அத்துணை அன்புள்ளங்களுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகள். இன்னமும் எமக்கு பல்வேறு வழிகளில் எமக்கு உதவி புரிந்த எம் உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் எம் நன்றிகள்
குடும்பத்தினர் சார்பாக ;
க.முகுந்தன் – மகன்

More

சுனாமியை வென்ற சுவாமி. (Dec. 25, 2020)

srilanka
Informed by : நாராயணபிள்ளை சுவாமிநாதன்
Contributed by : None
Card image cap

சுனாமியை வென்ற சுவாமி.
டிசம்பர் 26. என்னால் மறக்க முடியாத தினம்.
2004 டிசம்பர் 26 காலை 9.00 மணிக்கு களுத்துறையிலிருந்து காலிக்கு புறப்பட்டேன். உண்மையில் அன்று காலை 7.00 மணிக்கு புறப்பட வேண்டியவன் களுத்துறை முருகனால் தாமதிக்கப்பட்டேன்.
இதோ விபரமாக. 1976ம் ஆண்டு களுத்துறையில் இருந்து யாழ் குடாநாட்டுற்கு இடமாற்றம் பெற்று வந்த போதிலும் அன்றிலிருந்து வருடம் தோறும் களுத்துறைப் பயணம் தொடர்ந்தது. இடையில் நாட்டின் யுத்த நிலைமை காரணமாக 1984 முதல் 2001 வரை பயணம் தடைப்பட்டது.
களுத்துறையில் எனது முன்னைநாள் மாணவன் ஜனாப் MMM Zabry பொறியியலாளராக இருக்கிறார். இவர் கடந்த வருடம் இலங்கை மின்சார சபையிலிருந்து பிரதிப் பொது முகாமையாளராகப் பதவி வகித்த பின் ஓய்வு பெற்றார். நான் எப்பொழுது களுத்துறை சென்றாலும் நண்பன் சப்றியுடனேயே தங்குவது வழமை. 20004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் 29ம் திகதிகளில் எனக்கு கொழும்பில் பிரதம பரீட்சகருக்கான கூட்டம் இருந்தது. எனவே அம்முறை களுத்துறை காலி ஆகிய இடங்களுக்குச் சென்று விடுமுறையைக் களிக்க விரும்பினேன். 2004 டிசம்பர் 24ம் திகதி இரவு தொடருந்து மூலம் பயணம் செய்து 25ம் திகதி காலை 600 மணிக்கு நண்பரின் வீட்டை அடைந்தேன். காலை உணவு உண்டபின் என்னுடன் பணிஆற்றிய ஆசிரியை KKC வினிதாவின் தொடங்கொடையில் உள்ள வீட்டிற்கு நண்பரின் வண்டியில் சென்றோம். அவரது வீட்டிற்கு 1973, 1974ம் ஆண்டுகளில் வெசாக் தினத்தன்று சென்று மதிய போசனம் உண்டோம். அன்று அவர் இல்லை. திருமணம் முடித்து ஹொறணையில் இருப்பதாக தம்பியார் கூறினார். அவர் நன்கு உபசரித்து வீட்டைச் சுற்றிப் பார்க்குமாறு கூறினர். இறப்பர்த் தோட்டத்தில் அமைந்த வீடு.
பின் அக்காவுடன் தொலைபேசி தொடர்பெடுத்துத் தந்தார்.வினிதா தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.. 30 வருடங்களின் பின் அவரைச் சந்திக்கச் சென்றேன். ஹொறணையில் அவரைபர பார்த்ததும் சப்றி என்ன Sir கிழவிநாக இருக்குறார் என்றார். என்னடா 60 வயது கிழவி தானே என்றேன். அவருன் புதல்விகள் இருவரும் 1974 ஐய வினிதா மாதிரியே இருந்தனர். இருவரும் NDT பட்டதாரிகள் . வெளியே சென்ற கணவரை அழைத்மு அறிமுகம் செய்தார். அவர்களுனர அழைபலபில் அங்கு மதிய போசனம் உண்டபுனர களுத்துறை திரும்பினோம்.
அன்று மாலை அளும்கமை தர்காதநநகரம் சென்று ஜனாபா Fassy ஆசிரியையையும் (32வருங்களின் பின் ) சந்தித்தேன். பின் பிரபல 'அரும்பு 'சஞ்சிகை ஆசிரியர் ஜனாப் இசடீன் அவர்களையும் சந்தித்தேன்.
2004 டிசம்பர் 26ம் திகதி எனது …

More

சுயநலம் என்றால் என்ன? அது பேராசை இல்லையா? (Dec. 14, 2020)

canada
Informed by : நாகமுத்து மகேஸ்வரன்
Contributed by : None
Card image cap

சுயநலம் என்றால் என்ன? அது பேராசை இல்லையா?

தங்களுக்கு இடையிலும் சமூகத்துக்கு இடையிலும் ஒரு சுயநல மனப்பாங்குடன்
இருக்கும் தனி நபர் தனக்கும் சமூகத்துக்கும் எந்தவித வளர்ச்சியை தராதவர்கள் என்பதில் எதுவித மாற்றுக் கருத்தும் இல்லை.பிறர் நலத்தை மனதில் கொள்ளாது மற்றவர்கள் மேல் பழியைப் போடுவதே அவர்களது மனப்பாங்கு ஆகும் . பேராசை எப்போதும் அதிகமாகவே விரும்புகிறது.தேவைகளைத் திருப்திப்படுத்தலாம்.ஆனால் பேராசைகளைத் திருப்திப்படுத்தவே முடியாது.இது மனித மனத்தின் புற்று நோயாகும்.
பேராசை உறவு முறைகளை அளிக்கிறது.நமது பேராசைகளை நாம் எப்படி கணிப்பீடு செய்வது? இதற்க்கு விடை நம்மையே நாம் கேள்வி கேட்கலாம்.
* என்னால் அதைப் பெற முடியுமா?
* உண்மையில் அது எனக்கு அவசியம் தானா ?
* நான் அதை பெறுவதால் எனக்கு என்ன சுய திருப்தி ஏற்படுகிறது?

பேராசை என்பது தாழ்ந்த சுய
குழந்தை . தாழ்ந்த சுயகெளரவம் ஒருவரின் போலிப் பெருமை. இது பாசாங்கு அல்லது வரட்டுக் கெளரவத்தின் மூலம் வெளிப்படுகிறது.உங்கள் தகுதிக்குத் தக்கவாறு வாழ்ந்து அதில் மனநிறைவைக் காணுங்கள் .அப்போது நாம் பேராசையில் இருந்து வெளியேறிவிடலாம்.திருப்திப்பட்டுவிடலாம் .திருப்திப் பட்டுக் கொள்ளுவது என்பது முன்னேறும் பேர் ஆர்வம் இல்லாமல் இருத்தல் என்று அர்த்தம் இல்லை.
பேராசை எம்மை அழித்தே விடும். இதற்கு ஒரு பணக்கார விவசாயியின் கதையைக் கூறலாம் .ஒருவர் இன்னொருவருக்கு சொன்னார் ஒரு நாள் முழுவதும் எவ்வளவு தூரம் ஓடுகிறாயோ அவ்வளவு நிலமும் உனக்குச் சொந்தம் என்று.ஆனால் அவர் ஒரு நிபந்தனை விதித்தார்.பொழுது சாய்வதற்கு முன் அதே இடத்திற்கு வந்து விட வேண்டும் என்று.பேராசையோ அவனை வெகு தூரம் கொண்டு சென்று திரும்பி கொண்டு வந்து அவன்
சூரியன் மறைவிற்கு முன் அவன் வந்து சேர்ந்து அவன் எண்ணியதை செய்து
முடித்து விட்டான் . ஆனால் அதிலையே விழுந்து இறந்து விட்டான்
.இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன ? அவனுக்குத் தேவைப் பட்டது வெறும் ஆறு அடி நிலமேதான்.
இந்தக் கட்டுக் கதையில் நிறைய உண்மை இருக்கிறது.இதிலிருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.பேராசை பிடித்த எந்த மனிதனாக இருந்தாலும் அவனுக்கும் இந்த முடிவுதான் ஏற்பட்டு இருக்கும்.
உன்னிடம் அறிவும் திறமையும் இருக்குமானால் சாதாரண ஒரு மனிதனை
கோடிஸ்வரனாக்கிவிடும் உன் மனம் கோடி புண்ணியங்களைப் பெறும் .
மீண்டும் இன்னோரு பதிவில் .
உங்கள் மகேஸ் .

More

Selfishness and Greed (Dec. 14, 2020)

canada
Informed by : Nagamuthu Maheswaran
Contributed by : None
Card image cap

Selfishness and Greed

There are many factors that prevent us from achieving success and excellence. One of such factors include selfishness and greed. Organizations and people who portray a selfish attitude should not expect to achieve growth. They tend to keep putting themselves
before others. Likewise, organizations and people who are greedy tend to always want more. They are usually never satisfied and always looking for more. Needs can be satisfied, but greed cannot. Greed can be compared to that of salt water as the more you drink, the thirstier you become. Greed is a result of low self-esteem, which can result in false pride and pretence. To get rid of greed, one must learn to live within their means and be satisfied. However, being content should not be confused with lack of ambition.

An example would be that of a wealthy farmer. He was once offered all the land he could walk in a day, as long as he returned to the starting point by sundown. In order to get a head start, he started covering the land early morning as he wanted to get as much land as possible. Even though he was tired, he continued all afternoon as he wanted to gain more land and wealth. Later that afternoon, he remembered the condition of coming back to the starting point by sundown in order receive the land and thus, started his journey to come back to the starting point. His greed of wanting more land was what gotten …

More

Wedding Wishes (Nov. 26, 2020)

canada
Informed by : UK
Contributed by : None
Card image cap

Wishing for Happy Marriage Thivagar and Darsana

More

ரொறொன்ரோ பல்கனலைக்கழகம் தமிழ் இருக்கை- நிதிப்பங்களிப்பு (Nov. 12, 2020)

canada
Informed by : பொன். கந்தவேல்
Contributed by : None

ரொறொன்ரோ பல்கனலைக்கழகம் தமிழ் இருக்கை- நிதிப்பங்களிப்பு -யா/ இடைக்காடு மகாவித்தியாலயம் பழைய மாணவர் சங்கம் 12.11.2020

காலத்துக்குக் காலம் மேற்படி விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் கோரிக்கைக்கு அமைவாக எம்மால் சேகரிக்கப்பட்ட்ட உதவுதொகை விபரம் வருமாறு: -

ரொறன்ரோ உறவுகள் - $ 4100.00 + 3100 = 7200.09(கொடையாளர்கள் தொகை 65)

மொன்றியல் உறவுகள் - $ 5450.00 ( கொடையாளர்கள் தொகை -66)

மொத்த உதவுதொகை - $ 12,650.00

இவ்வுதவுதொகை இவ்வாரம் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுவிட்டது. இதற்கான பற்றுச் சீட்டு காலக்கிரமமத்தில் உரியவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

தழிழ் இருக்கைக்கான நிதிச் சேகரிப்பு இத்துடன் நிறைவடைந்துவிடவில்லை. இன்னமும் ஒரு மில்லியன் வரையான தொகை தேவைபடுவதாகத் தெரிய வந்துள்ளது.. இன்னமும் எம்மில்பலர் பலவித வசதியீனம் காரணமாக இப்பணியில் பங்குபற்றாது இருக்கலாம். இன்னமும் காலம் கடந்துவிடவில்லை. தங்களிடமும் உதவுதொகையை அன்புடன் எதிபார்க்கின்றோம். சிறு உதவுதொகை உணர்வாளர்களாக உங்களை உயரவைக்கும்.

தமிழ் இருக்கை தொடர்பான zoom மூலமான ஒன்றுகூடல் ஒன்று 14.11.2020 காலை 10.30 மணியளவில் learn tamil ----facebook என்னும் முகவரியச் சொடுக்குவதன்மூலம் காணலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது எதிகாலம் மற்றும் இம்மண்ணில் வாழப்போகும் எம் எதிர்காலச் சந்ததியினர் நலன் கருதி இப்புனித பணியை மேற்கொள்வதற்கு தோளோடு தோள்நின்று உளைத்த திரு சு. நவகுமார். நா. மகேசன், ச. பரமசிவம் மற்றும் நா. மகேந்திரன் முதலியோருக்கும் மன உவகையுடன் தமிழ் உணர்வுடன் நிதிப்பங்களிப்புச் செய்த எம் உறவுகள் நண்பர்கள் அனைவர்க்கும் எம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் நானும் மகிழ்வடைகின்றேன்.

நன்றி,

அன்புடன்

பொன். கந்தவேல்

More

நிகழ்வுகளின் நினைவுகள் (Oct. 24, 2020)

canada
Informed by : நா.இ.ஈசுவரன்.
Contributed by : None
Card image cap

நிகழ்வுகளின் நினைவுகள் ---- இடைக்காடு சன சமூக நிலையம் ----- 1976.
பயிர் பாதுகாப்பு --- கிருமிநாசினி அறிமுகம்.
விவசாய
கிராமமான இடைக்காட்டில் 1976 களில் என்னோடு ஒத்த வயதுடைய இளம்விவசாயிகள் விவசாய முயற்சிகளில் செயல்படுகின்ற நேரம் அது, 1976 பெரும்போக ( மார்கழி 1975- சித்திரை 1976 )பயிர் செய்கையின் முக்கிய உற்பத்தியான வெண்காய அறுவடை முடிந்து அதனை வீட்டில் கொண்டு வந்து உரிய முறையில் சேமித்துவைத்துவிட்டு, அதன் ஊடு பயிரான (ஊடு பயிர் என்றால் வெண்காயத்திற்கு இடையே மிளகாய் நாற்றுகளை நாட்டி அதனை வெண்காயத்தை பாதிக்காதவாறு பேணி வளர்த்து வெண்காயம் அறுவடை செய்தபின் தொடராக மிளகாய் கன்றினை பேணி வளர்த்தல்) மிளகாய் கன்றிற்கு பாத்திகளை மீளமைத்து உரமிட்டு வளர்த்து அவை பூவும் பிஞ்சுமாக செழித்து வளர்ந்து கண்ணுக்கு மிக அழகான காட்சியாக இருந்தது.
இன்னும் ஓரிரு வாரங்களில் அவை பழுத்து அறுவடைக்கு வந்துவிடும் என்ற மகிழ்வில் நாம் இருந்த நேரம் அது,
ஒருநாள் காலை மிளகாய் தோட்டத்திற்கு சென்ற எல்லோருக்கும் அதிர்ச்சிகரமான காட்சி காத்துக் கொண்டிருந்தது., எல்லா மிளகாயிலும் துவாரங்கள் ஏற்பட்டு அழுகி இருந்தது, உள்ளே பார்த்தால் பச்சை நிறத்தில் சிறிய புழுவொன்று இருந்ததைக் கண்டு எல்லோரும் அதிர்ச்சி யடைந்தனர். உடனே அதற்கு வழமையாக பாவிக்கும் கிருமிநாசினிகளை தெளித்தனர், மறுநாள் பார்த்தால் அது இன்னமும் வேகமாக பரவியிருந்தது. விவசாயிகள் எல்லோரும் ஒன்றுகூடி சந்தையில் கிடைக்கின்ற எல்லாவகையான கிருமி நாசினிகளையும் வாங்கி தெளித்தனர். ஆனால் எந்தவொரு கிருமி நாசினிக்கும் அது கட்டுப்படவில்லை. மாறாக மருந்து தெளித்த பலர் அம்மருந்துகளால் பாதிக்கப்பட்டு மயக்க மடைந்து மருத்துவ சிகிச்சை பெற்றதுதான் கண்ட மிச்சம்.
ஒன்றுமே செய்யமுடியாது கையறுநிலையில் எல்லோரும் சனசமூக நிலையத்தில் ஒன்றுகூடி இதனை எவ்வாறு கட்டுபடுத்துவது என விவாதிக்க தொடங்கினார்கள். எப்போதும் எங்கள் மூத்த உறுப்பினரான திரு வி, சிவபாலன் அவர்களின் கருத்தினை எல்லோரும் எதிர்பார்ப்பது வழக்கம்., அன்றும் அதுவே நடந்தது, திரு சிவபாலன் அவர்கள் நாம் யாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தினை நாடி அவர்களின் ஆலோசனையைப் பெறுவோம் என எல்லோரும் அதனை ஏற்றுக் கொண்டனர். எனவே அன்று இரவு தோட்டத்து க்குச் சென்று கிருமியின் வாழ்க்கை வட்டம் முழுவதையும் சேகரிப்பதென முடிவானது, அதன்படி அந்த பூச்சி, அதன் முட்டை, கூட்டுப்புழு, பாதிக்கப்பட்ட மிளகாய் செடியின் பாகங்கள் என எல்லா மாதிரிகளும் சேகரிக்கப்படு மறுநாள் யாழ் மாவட்ட விவசாய திணைக்களத்திற்குச் செல்ல ஒழுங்கு செய்யப்பட்டது, திரு சிவபாலனுடன் திரு மு. கிருஸ்ணகுமார் ( சந்திரமணி)அவர்களும் …

More

நம்பிக்கை என்றால் என்ன? நீதியின் தம்பி. (Oct. 16, 2020)

canada
Informed by : N.மகேசன்
Contributed by : None
Card image cap

நம்பிக்கை என்றால் என்ன? நீதியின் தம்பி.

நல்லவித எண்ணத்துக்கும் நல்லவித நம்பிக்கைக்கும் இடையே என்ன வித்தியாசம்
இருக்கு? உங்களது எண்ணங்களை நீங்களே கேட்க முடிந்தால் அது எப்படி இருக்கும்? அவை நல்லவித எண்ணங்களா? அல்லது எதிர்மறை எண்ணங்களா ? பொது நோக்கத்துக்காகவோ அல்லது சமூக நோக்கத்துக்காகவோ உங்கள் மனதை எப்படிப் பக்குவப்படுத்தி இருக்கிறீர்கள்.அது உங்கள் செயல்பாட்டின் மீது ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்தும்.அது மற்றவர்களுக்கு மிகுந்த பலனை விளைவிக்கும்.

நல்லவித எண்ணங்களுடன் இருப்பதும் மன ஊக்கத்துடன் இருப்பதும் நாம் ஒவ் வொருவரும் ஒவ்வொரு கலையிலும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய கடமை ஆகும்.

நம்பிக்கையுடன் வாழ்வது சுலபமானது அல்ல அதேவேளை எதிர்மறை வாழ்வு வாழ்வதும் சுலபமானது அல்ல.இதில் நான் தேர்ந்தெடுப்பது நம்பிக்கையுடன் நீதியையும் தேர்ந்து எடுத்து வாழ்ந்து கொள்வேன்.

எதிர்மறை எண்ணங்களை விட நல்லவித எண்ணங்கள் மிகவும் பயன் தருவதாகும்.ஏனென்றால் இது எங்கள் முழுத்திறமைகளையும் முழுமையாகப் பயன்படுத்த உதவுகின்றது.

ஏழைகளுக்கு நான் பணக்காரனாக வருவேன் என்ற நம்பிக்கையும் பணக்காரனுக்கு தான் ஏழையாகிவிடுவேனோ என்ற பயமும் இருந்து கொண்டே இருக்கும்.

நல்லவித எண்ணங்களை விட நல்லவித நம்பிக்கையே பெரிதாகும். நல்லவித எண்ணங்கள் வாழ்க்கையில் நல்லவித வெற்றியைக் கொடுக்கும் என்பதே நம்புவதே நம்பிக்கையாகும்!!.நல்லவித நம்பிக்கை என்பது நமே எங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளும் ஒரு தன்னம்பிக்கை மனப்பாங்கு ஆகும் .நல்லவித நம்பிக்கை இன்றி நல்லவித எண்ணங்களை கொண்டு இருப்பது வெறும் பயனற்ற பகற்கனவு போன்றதாகும். பயனற்றதும் ஆகும்.

இப்படிக்கு,
உங்களில் ஒருவன்,
N.மகேசன்

More

நான் என்னை எப்படிப் சுய மதிப்பீடு செய்து கொள்வது (Oct. 3, 2020)

canada
Informed by : N.மகேசன்
Contributed by : None
Card image cap

நான் என்னை எப்படிப் சுய மதிப்பீடு செய்து கொள்வது !!!

உலக covid - 19 முடக்கலின் இரண்டாவது அலையை நாம் தைரியமாக கடந்து
செல்ல விழைகின்றோம் . இன்று வரை துடிப்புடன் இயங்கும் பூலோகம் எல்லா வலிகளையும் எதிர்கொண்டு மீளும் என்பதில் எனக்கு தைரியமான நம்பிக்கை உள்ளது.

சரி……. இனி எமது நீண்ட நெடிய வாழ்வில் …. நாம் ஒவ்வொருவரும் சுய மதிப்பீடு செய்து கொள்வதன் மூலம் நான் யார் என்று அறிந்து கொள்ள முடியும் அவை இன்றைய சூழ்நிலையில் மிகவும் தேவையும் கூட.

“உன்னையே நீ அறிவாய்” என்று எமது சித்தர்களின் கூற்று.அதேபோல் “என்னையே நான் அறிவேன் “ என்பது திருமூலர் கூற்று. இரண்டின் பொருள் ஒன்றுதான்.

ஒவ்வொரு மானிடரும் எவ்வளவு ஆழமான, தங்களைப் பற்றிய பூரண புரிதலுடன் இருக்கிறார்கள்? நான் என்னை எப்படிப் பார்க்கிறேன்? எனது வலிமைகள் என்ன? எனது பலவீனங்கள் என்ன? என்று ஆராய்ந்து எமது சுய மதிப்பீடுகளை கற்று அறிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய நவீன உளவியல் முதன்மை கவனம் ஒருவர் தன்னைப் பற்றி தெரிந்து வைத்திருக்கும் சுய அறிதல் குறித்தே என்று Dr . நாகமுத்து இராமநாதன் கூறுகின்றார்.ஆக, நீங்கள் யார் என்ற விழிப்புணர்வு உங்கள் ஒருவரால் மட்டுமே உணர முடியும்.ஒருவர் செயற்படுவது அல்லது முடிவு எடுப்பதில் தெளவில்லமல் இருக்கிறார் என்றால், அவர் குறித்த பிரச்சனையின் உள்நோக்கத்தை பெறுவதே அதனை தீர்வு காண்பதற்கான சிறந்த வழி ஆகும்.தன்னைப் பற்றிய சுய அறிதலுக்கும் சுய மதிப்பிற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக எனது சுய அறிதலில் நான் கற்றுக் கொண்டேன்.

அனைவரிடமும் குறைகள் உள்ளன.இதற்கு நீங்கள் விதி விலக்கு அல்ல.இப்படிப்பட்ட தவறான தெளிவற்ற செயல்களை நீங்கள் அனுமதிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் உங்களைப் பற்றிய சுய மதிப்பீடு.
நீங்கள் உங்கள் தோல்விகள் மீது அளவுக்கு அதிகமாக அக்கறை காட்டாதீர்கள்,
அவற்றைப் பற்றி அதிகம் கவலை கொள்ளாதீர்கள் .ஏனெனில் வாழ்க்கையைப் போல அவையும் இயல்பானவையே.நீங்கள் இன்று வரை தோற்கவில்லை என்றால் நீங்கள் இன்னும் ஆரம்பிக்க இல்லை என்று அர்த்தம் .
நான் இன்று வரை கற்று உணர்ந்து கொண்ட வழி முறைகளில் இருந்து பெற்ற அனுபவம் என்ன என்றால் “வெளியே வருவதற்குரிய வழியை தெரிந்து கொண்டு உள்ளே புக வேண்டும் என்பதே”

நன்றி .
உங்களில் ஒருவன் மகேசன்.

More

நிகழ்வுகளின் நினைவுகள் (Sept. 14, 2020)

canada
Informed by : நா.இ.ஈசுவரன்
Contributed by : None
Card image cap

நிகழ்வுகளின் நினைவுகள் ;
இடைக்காடு சனசமூக நிலையம் --- வெதுப்பி ( பாண் ) விநியோகம் ---- 1974
எமது கிராமமான இடைக்காடு
ஓர் விவசாய கிராமமாகும். எம் முன்னோர்கள் அக்காலத்தில் தமது உணவுத் தேவைக்காக குரக்கன் சாமை,,தினை ,மரவள்ளி,, வரகு போன்ற பயிர்களை செய்து வந்தனர். இப்போது பயிர் செய்யப்படாது கால்நடைகள் மேயும் தரவையாக காணப்படும் ஆவரம்புலம், கிராஞ்சி, சாமித்திடல் மயானத்திற்கு மேற்குப் புறமாக உள்ள சாங்காணி போன்ற இடங்களில் வரகு செய்கை பண்ணப்பட்டதாக எனது பாட்டனார் எமக்குச் சொன்னதுண்டு. நாம் பார்க்கின்ற காலங்களில் அவ்விடங்களில் வரப்புக்களும் நீர்பாய்ச்சலுக்கான தடங்களும் காணப்பட்டன, பின்நாளில் தோட்டங்களுடன் சார்ந்த வயல்களில் நெற் செய்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவிற்கான புகையிலை சந்தைப்படுத்தல் வசதி கிடைத்ததால் பணப் பயிரான புகையிலை செய்கையில் ஈடுபட்டார்கள் .எனது பாட்டனார் புகையிலை செய்கை பண்ணி அதனை பதப்படுத்தி யாழ் நகருக்கு கொண்டு சென்று வியாபாரிகளிடம் அதனை விற்று வந்ததை நான் கண்டுள்ளேன், அப்போது அவை தென் இந்தியாவிலுள்ள மலையாளம் என்ற கேரளா விற்கு அதனை ஏற்றுமதி செய்ததால் அதனை மலையாளம் புகையிலை என்றே சொல்லி வந்ததை நான் அவதானித்திருக்கிறேன்,
எனக்குத் தெரிந்த காலங்களில் அதாவது 1965 களில் என நினைக்கிறேன் வெண்காயம் , காய்ந்தமிளகாய் என்பவற்றிற்கான சந்தை வாய்ப்புக்கள் ஏற்பட்டதால் எம்மவர்கள் பணப் பயிரான வெண்காயம் ,மிளகாய் என்பவற்றை பிரதான பயிராக செய்கை பண்ணத் தொடங்கியதால் உணவுப் பயிர்களின் செய்கை குறைவடைய தொடங்கியது.
1972 ல் நான் முழுநேர விவசாயியாக இறங்கியபோது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இலங்கையின் அரசுக்கட்டிலில் அமர்ந்திருந்தது.அப்போது பிரதமராக திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரும் நிதி அமைச்சராக கலாநிதி என். எம் .பெரேரொ அவர்களும் பதவி வகித்தனர், அந்த நேரத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அந்நியச் செலாவணி மிகுந்த பற்றாக் குறையாக இருந்தது. எனவே நிதி அமைச்சரான என்.எம். பெரெரோ அவர்கள் பெரும்பாலான பொருட்களுக்கு இறக்குமதி தடைகளை போட்டார், அதனால் உள்ளூர் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் அவற்றிற்கு நல்ல சந்தை வாய்ப்பு கிடைக்கும் என்றார், அப்படியே எமது விவசாய உற்பத்திகளான வெண்காயம், மிளகாய் என்பனவற்றிற்கு நல்ல விலை கிடைத்தது, அக்காலத்தில் தான் எம்மூரில் உள்ள ஓலைக் குடிசைகள் யாவும் ஓடு வேய்ந்த கல் வீடுகளாக மாறின, ஆனால் உணவுப் பொருட்களுக்கு பெரிதும் தட்டுப்பாடு ஏற்பட்டது. உடனடியாக உணவுப் பயிர்களை போதிய அளவிற்கு உற்பத்தி செய்ய முடியவில்லை. அதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது.
அதற்கிடையில் கோதுமை மாவிற்கான இறக்குமதி குறைக்கப்பட்டதால் மக்கள் பாவனைக்கு …

More

வளலாய் நிதியம் 2020 (Sept. 12, 2020)

uk
Informed by : IVWA - UK
Contributed by : None
Card image cap

லம்பெயர்ந்து ஐக்கியஇராச்சியத்தில் வாழும் இடைக்காடு வளலாய் உறவுகளால் வளலாய் அபிவிருத்திக்கென சேகரிக்கப்பட்ட
மொத்தம் 4 இலட்சத்து மூவாயிரம் ரூபாய் (Rs 403 000/=) இரண்டு கட்டங்களாக (331000 + 72000) வளலாய் கல்விமேம்பாட்டு நிதியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்படி நிதியை வளலாய் கல்விமேம்பாட்டு நிதியத்தின் இயக்குனர்கள் திரு ஏகாம்பரம் மனோகரன், திரு வடிவேல் யோகநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டனர். இத்துடன் நிதியத்தின் கடிதம் இணைக்கபட்டுள்ளது.
நிதிப்பங்களிப்பு வழங்கிய எமது உறவுகள் அனைவருக்கும் இடைக்காடு வளலாய் நலன்புரிச்சங்கத்தின் சார்பில் நன்றிகள்.

திரு கி. கேதீஸ்வரன் – தலைவர்
திருமதி. சு. உதயச்சந்திரன் – செயலாளர்
திரு.பா. வெற்றிவேல் - பொருளாளர்

Valalai Fund – 2020 Update 12/09/2020

Contributors.

Dr. Vetpillai - Dr. Sornambigai
Kiritharan (Sri) – Sasmitha
Selvakkumaran – Sivakamy
Saththiyamoorthy (Mani) – Rajani
Suresh - Revathy
Gnanathileeban –Thibajini
Keatheswaran – Kenga
Kannathasan – Kavery
Kanthalingam – Anantharani
Kaneswaran – Sibi
Bavan – Gowthamy
Sivaparan – Shanthaluxmy
Saravanabavan – Sivaluxmy
Vettivel – Jeyavathani
Narenthiran – Joshila
Sivanesan – Roushanthy
Kumanan – Banumathy
Arumukasamy – Kaladevi
Nandakumaran – Selvamalar
Vijayakumar – Vasuki
Sivalingam – Thabothini
Sivakumar – Pathmarani
Velpillai – Karthika
Ketheeswaran – Sujanthini
Velavan – Bamini
Raveendran – Santhumathy
Kugaroopan – Priyatharsini
Balakumar –Sivamalar
Manoharan – Sumathy
Uthayachandran – Sukuna
Ananthavadivel – Yalini

Money raised for Valalai Fund: £ 1735
Thank you for your kind and generous support.
IVWA – UK

More