By IMV OSA Canada on Jan. 14, 2025
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா
இரண்டு மாடிகள் கொண்ட பிரதான உள்ளக அரங்கம்
கனடா வாழ் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிற்கு
Jan-05-2025
எமது பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாடசாலையில் பௌதிகவள புனர்நிர்மாண வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கான நிதி பங்களிப்பில் உங்களின் காத்திரமான பங்களிப்பு காரணமாக நாம் எமது முதற்கட்ட அன்பளிப்பு இலக்கினை நிறைவு செய்துள்ளோம். அந்த வகையில் முதலில் பழைய மாணவர் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அடுத்த கட்டமாக இரண்டு மாடிகள் கொண்ட புதிய உள்ளக அரங்கம் அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய மண்டபம் இடப்பெயர்வு காலத்தில் கூரையற்று இருந்தமையால் மிகவும் பழுதடைந்த நிலையில் பாதுகாப்பற்றதாக தற்போது காணப்படுகின்றது. ஆகையால் புதிய மண்டபத்தின் தேவைப்பாடு மிக அவசியமாக உள்ளமை அனைவராலும் உணரப்பட்டுள்ளது. இவ்விடயம் பாடசாலை அபிவிருத்தி சங்க கூட்டத்திலும், நூற்றாண்டு விழா செயற்குழுவிற்கும், உலக நாடுகளில் வதியும் பிரதிநிதிகளிற்கும் இடையிலான இணையவழி உரையாடலிலும் கலந்துரையாடப்பட்டு புதிய மண்டபம் அமைப்பது என ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது
.இந் நூற்றாண்டுவிழா காலத்தில் இவ்வாறான வரலாற்று மண்டபத்தை அமைக்கும் சந்தர்ப்பத்தை தவறவிடுவோமாயின், இதன் பின்னரான காலத்தில் மண்டபம் அமைப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும். எனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய, நமசிவாயம் கட்டடத்திற்கு சமாந்திரமாக வடக்குப்புறமாக, கிழக்கு - மேற்கு திசையில் அமையவுள்ள 40’ x 100’ அளவு மண்டபத்தை அமைப்பதற்கு அண்ணளவாக $500,000 தேவைப்படுகின்றது. நாம் ஒவ்வொருவரும் $1,000 நன்கொடையினை வழங்குவதன் மூலம் இந்த இலக்கினை இலகுவாக அடைய முடியும். ஆனால், இந்த ஒருவரிற்கு $1000 என்பது நிச்சயிக்கப்பட்ட தொகையல்ல. நீங்கள் விரும்பி அன்பளிக்கும் எந்த தொகையினையும் நாம் அன்புடன் வரவேற்கின்றோம்.
ஆகவே அனைவரும் அணிதிரண்டு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஏற்கனவே நூற்றாண்டு விழாவிற்கு அன்பளிப்பு வழங்கியர்களும் மேலதிக பங்களிப்பினை வழங்கி உதவுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இப்புதிய மண்டபத்திற்கு "நூற்றாண்டு விழா மண்டபம்" என பெயர்சூட்டப்படும் !
நன்றி
இ.ம.வி ப.மா.ச - கனடா