சுயநலம் என்றால் என்ன? அது பேராசை இல்லையா?

By நாகமுத்து மகேஸ்வரன் on Dec. 14, 2020

Card image cap

சுயநலம் என்றால் என்ன? அது பேராசை இல்லையா?

தங்களுக்கு இடையிலும் சமூகத்துக்கு இடையிலும் ஒரு சுயநல மனப்பாங்குடன்
இருக்கும் தனி நபர் தனக்கும் சமூகத்துக்கும் எந்தவித வளர்ச்சியை தராதவர்கள் என்பதில் எதுவித மாற்றுக் கருத்தும் இல்லை.பிறர் நலத்தை மனதில் கொள்ளாது மற்றவர்கள் மேல் பழியைப் போடுவதே அவர்களது மனப்பாங்கு ஆகும் . பேராசை எப்போதும் அதிகமாகவே விரும்புகிறது.தேவைகளைத் திருப்திப்படுத்தலாம்.ஆனால் பேராசைகளைத் திருப்திப்படுத்தவே முடியாது.இது மனித மனத்தின் புற்று நோயாகும்.
பேராசை உறவு முறைகளை அளிக்கிறது.நமது பேராசைகளை நாம் எப்படி கணிப்பீடு செய்வது? இதற்க்கு விடை நம்மையே நாம் கேள்வி கேட்கலாம்.
* என்னால் அதைப் பெற முடியுமா?
* உண்மையில் அது எனக்கு அவசியம் தானா ?
* நான் அதை பெறுவதால் எனக்கு என்ன சுய திருப்தி ஏற்படுகிறது?

பேராசை என்பது தாழ்ந்த சுய
குழந்தை . தாழ்ந்த சுயகெளரவம் ஒருவரின் போலிப் பெருமை. இது பாசாங்கு அல்லது வரட்டுக் கெளரவத்தின் மூலம் வெளிப்படுகிறது.உங்கள் தகுதிக்குத் தக்கவாறு வாழ்ந்து அதில் மனநிறைவைக் காணுங்கள் .அப்போது நாம் பேராசையில் இருந்து வெளியேறிவிடலாம்.திருப்திப்பட்டுவிடலாம் .திருப்திப் பட்டுக் கொள்ளுவது என்பது முன்னேறும் பேர் ஆர்வம் இல்லாமல் இருத்தல் என்று அர்த்தம் இல்லை.
பேராசை எம்மை அழித்தே விடும். இதற்கு ஒரு பணக்கார விவசாயியின் கதையைக் கூறலாம் .ஒருவர் இன்னொருவருக்கு சொன்னார் ஒரு நாள் முழுவதும் எவ்வளவு தூரம் ஓடுகிறாயோ அவ்வளவு நிலமும் உனக்குச் சொந்தம் என்று.ஆனால் அவர் ஒரு நிபந்தனை விதித்தார்.பொழுது சாய்வதற்கு முன் அதே இடத்திற்கு வந்து விட வேண்டும் என்று.பேராசையோ அவனை வெகு தூரம் கொண்டு சென்று திரும்பி கொண்டு வந்து அவன்
சூரியன் மறைவிற்கு முன் அவன் வந்து சேர்ந்து அவன் எண்ணியதை செய்து
முடித்து விட்டான் . ஆனால் அதிலையே விழுந்து இறந்து விட்டான்
.இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன ? அவனுக்குத் தேவைப் பட்டது வெறும் ஆறு அடி நிலமேதான்.
இந்தக் கட்டுக் கதையில் நிறைய உண்மை இருக்கிறது.இதிலிருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.பேராசை பிடித்த எந்த மனிதனாக இருந்தாலும் அவனுக்கும் இந்த முடிவுதான் ஏற்பட்டு இருக்கும்.
உன்னிடம் அறிவும் திறமையும் இருக்குமானால் சாதாரண ஒரு மனிதனை
கோடிஸ்வரனாக்கிவிடும் உன் மனம் கோடி புண்ணியங்களைப் பெறும் .
மீண்டும் இன்னோரு பதிவில் .
உங்கள் மகேஸ் .