By நா.மகேஸ்வரன் on July 15, 2021
சாக்கு போக்கு பேசாதீர்கள்.
அன்பு உறவுகளே!!!
எமது உறவுகளின் இழப்புக்களும் அவையினால் ஏற்படுகின்ற துயரங்களையும்
தாங்கிய சூழ்நிலையில் உலக கொடிய நோயில் இருந்து உலகம் சற்று வெற்றி
நடைபோட்டு வருகின்ற இந்த நேரத்திலே தொடர்ந்தும் எனது பணியையும் எனது
சிந்தனை தெளிவையும் உங்கள் முன் எழுத விழைகின்றேன்.
சாக்குப் போக்கு என்ற சொல்லுக்கு பல வகையான அர்த்தங்கள் இங்கு
காணப்படுகின்றது. இருப்பினும் இந்த தெளிவற்ற உண்மைக்குப் புறம்பான
கருத்தை நான் சொல்ல விழைகின்றேன் என்பதில் எனது அறிவுக்கும் மனதுக்கும்
நன்கு அறிந்து இதை ஒரு சமூக சீர்கேடு அல்லது சீர்கெட வைக்கின்ற ஒரு போக்கு
பாங்கு ஒரு மனிதனிடம் குறிப்பாக தனி மனிதர்களிடம் அதிகமாகவே
காணப்படுகின்றது.
“யாருக்கும் சொல்லாதீர்கள் என்று எனது பேச்சு துவங்கினால் அங்கே
சாக்குப்போக்கு என்ற குழந்தை பிறக்கின்றது” என்று நினைத்துக்
கொள்ளுங்கள்.உங்களோடு சேர்ந்து சாக்குப்போக்கு பேசுபவர்கள், நீங்கள்
இல்லாதபோது உங்களைப் பற்றியும் பேசுவார்கள். சாக்குப் போக்கும்
பொய்க்கு நெருங்கிய தொடர்பு உண்டு.
இப் மனப்பாங்கு உடையவர்கள் மற்றவர்கள் கூறும் கருத்துக்களை அவசரத்தில்
எதையோ கேட்டுவிட்டு பின்னர் ஆசுவாசமாக அதற்கு பல வகையான
உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை உருவாக்கி ஒன்றை பத்தாகி அதை
மற்றவர்களுக்கு கூறுவார்கள்., இவர்களுடைய கவனம் எதிலுமே மற்றவர்களை
தவறாக கூறுவதாகவே இருக்கின்றன. ஏனென்றால் அவர்களுடைய மனது
எப்பொழுதுமே தன்னை முதன்மைப்படுத்திய மற்றவர்கள் நல்ல முறையிலோ
அல்லது உயர்நிலையில் இருப்பதை விரும்ப மாட்டார்கள். விரும்புவதும்
இல்லை. எப்பொழுதுமே நான் தான் எல்லாத்தையும் முதன்மை என்று சொல்லி
மிகவும் கீழ்த்தரமான மனநோயாளியாக இவர்கள் இருக்கின்றார்கள்.
சாக்குப்போக்கு பேசுபவர்களை சற்று அவதானமாக பாருங்கள் அவர்கள்
நேரடியாகவோ அல்லது தெளிவாகவும் எதையுமே கூறமாட்டார்கள். குறிப்பாக
மற்றவர்களுடைய விஷயங்களில் கவனமாக இருப்பார்கள். ஒரு விஷயத்தை
தவறாக கூறி ஒரு உருப்படி இல்லாத செயலில் இவர்கள் தமது செயல்களை
கருத்தோடு இருப்பார்கள். எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று
பலவகையான கருத்துக்களை தெளிவாகச் சொல்லி முடிப்பார்கள். ஆனால்
இவர்கள் தான் நமது சமூகத்தின் முதன்மையான மனிதர்களாக தெரிவார்கள்,
வெளிப்படையாக இவர்களைப் பார்க்கும் போது இவர்கள் நல்லவர்க தங்களை
காட்டிக் கொள்வார்கள். உண்மை என்னவென்றால் இவை அனைத்துக்கும்
மாறுபட்டவர்கள். அவர்களுடைய மனநிலையும் அவர்களுடைய செயல்களும்
எதிர்மறையாகவே இருக்கும். மேலோட்டமாகப் பார்க்கும்போது அவர்கள்
நல்லவர்களாகவே மற்றவர்களுக்கு தென்படுவார்கள். தாங்கள்
ஒழுக்கமானவர்கள் ஆகவும் எந்த வகையான தீய பழக்கவழக்கங்கள்
இல்லாதவர்களாகவும் வெளிப்படையாக காண்பிப்பார்கள் ஆனால் இதன்
மறுபக்கம் அவர்கள் வீட்டில் அதிகமாகவே இருக்கும்.
சாக்குப்போக்கு பேசுபவர்களும் சரி அல்லது கேட்பவர்களும் சரி மற்றவர்களை
இழிவுபடுத்தி அவர்களை அவமானப்படுத்தி சமூகத்தின் சீரழிவை
உருவாக்குகிறார்கள் என்பது எனது கருத்தாகும்.
இந்த மனநிலை உள்ளவர்கள் அவர்களுடைய பேச்சில் இருந்தே அவர்களுடைய
மனநிலை தெள்ளத் தெளிவாக தெரிந்துவிடும். நீதிக்கு மாறானது. இது
இன்னொருவரின் மனதையும் மழுங்கடித்து, வாழ்க்கையை நிம்மதி இல்லாத
நம்பிக்கை துரோகம் ஆக மாற்றி விடும். தீய நோக்கம் உடையது. இது
தனிமனிதர்களை சமூகத்தின் கீழ் நிலைக்கு கொண்டு செல்லும். எங்கே
தொடங்குகிறது எங்கே முடிகின்றது என்று இதை புரிந்து கொள்வது மிகவும்
கடினம். இதற்கு முகவரியையோ அல்லது தலையங்கமும் இல்லை. இது
நற்பெயரை சிதைத்துவிடும். திருமணஉறவுகளை உடைத்துவிடும். தொழிலை
பாழடித்து விடும். அப்பாவிகளை நையப்புடைத்து விடும். மனக் கவலையை
ஏற்படுத்தி “நித்திரை அற்ற தூக்கத்தை” கெடுத்துவிடும். இவை மூலம் நாங்கள்
பெற்றுக் கொள்கின்ற நன்மைதான் என்ன;!? என்ன;!?
இனிய உறவுகளே!!!
சாக்குப்போக்கு பேசாதீர்கள். நீங்கள் ஒருவருடன் பேசும்போது சில கேள்விகளை
நீங்கள் உங்களுக்குள்ளே கேட்டுக் கொள்ளுங்கள்.
1) இது சரியா?
2) இது என்னை உயர்ந்த நிலைக்குக் கொண்டு போகுமா?
3) இது எனக்கு அவசியம்தானா?
4) நான் சாக்குப்போக்கு பேசுகிறேனா ?
5) நான் பிறரை பற்றி சரியானபடி சொல்கிறேனா ?
6) நான் பிறரை சாக்குப்போக்கு பேச ஊக்க படுத்துகிறேனா ?
7) என் மேல் மற்றவர்களுக்கு நம்பிக்கை தன்மையை ஏற்படுத்த முடியுமா?
சாக்குப்போக்கு பேசுவதிலிருந்து நம்மை முழுமையா மாற்றிக்கொள்வோம்.
அந்தக் கீழ்தரமான பேச்சு எங்களது வார்த்தைகளில் இருந்தோ அல்லது மனதில்
இருந்தோ வருவதை சமூகத்தின் உயர்வாக பார்க்க முடியாது. நல்லதொரு
வாழ்வை நல்லதொரு சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து
கொள்வோம்.
நன்றியுடன்.
நா.மகேஸ்வரன்