By N.மகேசன் on Oct. 16, 2020
நம்பிக்கை என்றால் என்ன? நீதியின் தம்பி.
நல்லவித எண்ணத்துக்கும் நல்லவித நம்பிக்கைக்கும் இடையே என்ன வித்தியாசம்
இருக்கு? உங்களது எண்ணங்களை நீங்களே கேட்க முடிந்தால் அது எப்படி இருக்கும்? அவை நல்லவித எண்ணங்களா? அல்லது எதிர்மறை எண்ணங்களா ? பொது நோக்கத்துக்காகவோ அல்லது சமூக நோக்கத்துக்காகவோ உங்கள் மனதை எப்படிப் பக்குவப்படுத்தி இருக்கிறீர்கள்.அது உங்கள் செயல்பாட்டின் மீது ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்தும்.அது மற்றவர்களுக்கு மிகுந்த பலனை விளைவிக்கும்.
நல்லவித எண்ணங்களுடன் இருப்பதும் மன ஊக்கத்துடன் இருப்பதும் நாம் ஒவ் வொருவரும் ஒவ்வொரு கலையிலும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய கடமை ஆகும்.
நம்பிக்கையுடன் வாழ்வது சுலபமானது அல்ல அதேவேளை எதிர்மறை வாழ்வு வாழ்வதும் சுலபமானது அல்ல.இதில் நான் தேர்ந்தெடுப்பது நம்பிக்கையுடன் நீதியையும் தேர்ந்து எடுத்து வாழ்ந்து கொள்வேன்.
எதிர்மறை எண்ணங்களை விட நல்லவித எண்ணங்கள் மிகவும் பயன் தருவதாகும்.ஏனென்றால் இது எங்கள் முழுத்திறமைகளையும் முழுமையாகப் பயன்படுத்த உதவுகின்றது.
ஏழைகளுக்கு நான் பணக்காரனாக வருவேன் என்ற நம்பிக்கையும் பணக்காரனுக்கு தான் ஏழையாகிவிடுவேனோ என்ற பயமும் இருந்து கொண்டே இருக்கும்.
நல்லவித எண்ணங்களை விட நல்லவித நம்பிக்கையே பெரிதாகும். நல்லவித எண்ணங்கள் வாழ்க்கையில் நல்லவித வெற்றியைக் கொடுக்கும் என்பதே நம்புவதே நம்பிக்கையாகும்!!.நல்லவித நம்பிக்கை என்பது நமே எங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளும் ஒரு தன்னம்பிக்கை மனப்பாங்கு ஆகும் .நல்லவித நம்பிக்கை இன்றி நல்லவித எண்ணங்களை கொண்டு இருப்பது வெறும் பயனற்ற பகற்கனவு போன்றதாகும். பயனற்றதும் ஆகும்.
இப்படிக்கு,
உங்களில் ஒருவன்,
N.மகேசன்