By நாராயணபிள்ளை சுவாமிநாதன் on Dec. 25, 2020
சுனாமியை வென்ற சுவாமி.
டிசம்பர் 26. என்னால் மறக்க முடியாத தினம்.
2004 டிசம்பர் 26 காலை 9.00 மணிக்கு களுத்துறையிலிருந்து காலிக்கு புறப்பட்டேன். உண்மையில் அன்று காலை 7.00 மணிக்கு புறப்பட வேண்டியவன் களுத்துறை முருகனால் தாமதிக்கப்பட்டேன்.
இதோ விபரமாக. 1976ம் ஆண்டு களுத்துறையில் இருந்து யாழ் குடாநாட்டுற்கு இடமாற்றம் பெற்று வந்த போதிலும் அன்றிலிருந்து வருடம் தோறும் களுத்துறைப் பயணம் தொடர்ந்தது. இடையில் நாட்டின் யுத்த நிலைமை காரணமாக 1984 முதல் 2001 வரை பயணம் தடைப்பட்டது.
களுத்துறையில் எனது முன்னைநாள் மாணவன் ஜனாப் MMM Zabry பொறியியலாளராக இருக்கிறார். இவர் கடந்த வருடம் இலங்கை மின்சார சபையிலிருந்து பிரதிப் பொது முகாமையாளராகப் பதவி வகித்த பின் ஓய்வு பெற்றார். நான் எப்பொழுது களுத்துறை சென்றாலும் நண்பன் சப்றியுடனேயே தங்குவது வழமை. 20004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் 29ம் திகதிகளில் எனக்கு கொழும்பில் பிரதம பரீட்சகருக்கான கூட்டம் இருந்தது. எனவே அம்முறை களுத்துறை காலி ஆகிய இடங்களுக்குச் சென்று விடுமுறையைக் களிக்க விரும்பினேன். 2004 டிசம்பர் 24ம் திகதி இரவு தொடருந்து மூலம் பயணம் செய்து 25ம் திகதி காலை 600 மணிக்கு நண்பரின் வீட்டை அடைந்தேன். காலை உணவு உண்டபின் என்னுடன் பணிஆற்றிய ஆசிரியை KKC வினிதாவின் தொடங்கொடையில் உள்ள வீட்டிற்கு நண்பரின் வண்டியில் சென்றோம். அவரது வீட்டிற்கு 1973, 1974ம் ஆண்டுகளில் வெசாக் தினத்தன்று சென்று மதிய போசனம் உண்டோம். அன்று அவர் இல்லை. திருமணம் முடித்து ஹொறணையில் இருப்பதாக தம்பியார் கூறினார். அவர் நன்கு உபசரித்து வீட்டைச் சுற்றிப் பார்க்குமாறு கூறினர். இறப்பர்த் தோட்டத்தில் அமைந்த வீடு.
பின் அக்காவுடன் தொலைபேசி தொடர்பெடுத்துத் தந்தார்.வினிதா தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.. 30 வருடங்களின் பின் அவரைச் சந்திக்கச் சென்றேன். ஹொறணையில் அவரைபர பார்த்ததும் சப்றி என்ன Sir கிழவிநாக இருக்குறார் என்றார். என்னடா 60 வயது கிழவி தானே என்றேன். அவருன் புதல்விகள் இருவரும் 1974 ஐய வினிதா மாதிரியே இருந்தனர். இருவரும் NDT பட்டதாரிகள் . வெளியே சென்ற கணவரை அழைத்மு அறிமுகம் செய்தார். அவர்களுனர அழைபலபில் அங்கு மதிய போசனம் உண்டபுனர களுத்துறை திரும்பினோம்.
அன்று மாலை அளும்கமை தர்காதநநகரம் சென்று ஜனாபா Fassy ஆசிரியையையும் (32வருங்களின் பின் ) சந்தித்தேன். பின் பிரபல 'அரும்பு 'சஞ்சிகை ஆசிரியர் ஜனாப் இசடீன் அவர்களையும் சந்தித்தேன்.
2004 டிசம்பர் 26ம் திகதி எனது பிறந்த நட்சத்திரம் . அன்று அதிகாலையில் களுத்துறை முருகன் கோவிலுக்குச் சென்றபின் காலை 7.00 மணி தொடருந்தில் காலிக்குப் பறப்படுவதாகத் திட்டமிட்டேன்.முதல் நாள் அயல் வீட்டினருடன் உரையாடும் போது தாங்களும் மறுநாள் காலையில் காலிக்கு வானில் செல்வதாகவும் எனலனையும் தங்களுடன் சேருமாறும் அழைததனர். அதற்கு நான் நநேரத்தைப் பொறுத்து தீர்மானிக்கின்றேன் என்றேன்.
மறுநாள் நண்பர் என்னை காலை 6.00 மணிக்கு ஆலயத்திற்கு அழைத்துச் செனலறுவிட்டு மகனைப் பார்க்க சென்றுவிட்டார்.நான் ஆலய வழிபாடு முடித்தபின் அவர் வரத் தாமதமாகி விட்டது. 7.30 மணிக்கு வந்தார். தொடருந்து போய்விட்டது. காலை உணவை உண்டபின் கல்முனையில் இருந்து நண்பருகு வந்த செய்தியில் அங்கு கடல்அலை அடித்து ஒரு டாக்டர் குடும்பம் முழுவதும் மரணித்து விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் பள்ளிவாசலில் இருந்து சமுத்திரத்தில் பாரியகடல் அலை அடிப்பதாகவும் உடனே அனைவரையும் தொழ வருமாறும் பாங்கு ஒலி ஒலித்து அறிவிபலபு வெளியானது.
நண்பர் எனது காலிப் பயணத்தை தவிர்க்குமாறு வேண்டினார். எனது பழக்கம் ஒனலறு முன் திடலடமிட்ட விடயங்களை ஒத்திப் போடுவதில்லை.என்னை களுத்துறை பேருந்து நிலையத்தில் விடுமாறு கூறுனேன்.போகும் வழியில் மக்கள் அவலப்பட்டு அங்கும் இங்கும் பதறி அடித்து ஓடுவதைக் கண்டேன் . தொடருந்து தண்டவாளத்தின் ஒரு மீற்றர் உயரத்திற்கு வந்த நீர் வடிந்தோடுவதைக் கண்டேன். அப்பொழுதும் நண்பர் மறித்தார். அதற்கு நான் என்னடா Science படித்த உனக்குத் தெரியாதா இன்று போயா தினம். பௌர்ணமி கடல் பொங்குவது வழமைதானே என்றேன். களுத்துறை வடக்கில் Kaeido கடற்கரையில் இருந்த Hotel ஒன்று அலையினால் இடிந்து விட்டதாகக் கூறப்பட்டது.
ஓரே சனக்கூட்டம். ஒரு மாதிரியாக தங்காலைக்குச் செல்லும் தனியார் பேருந்தில் தண்பர் ஏற்றி விட்டார்.
தொடருந்து கட்டுக்குருந்த சந்தியை அடைந்ததும் தொடர்ந்து A2 கரையோரப்பாதை மூலம் பயணம் செய்ய முடியாது மத்துகம பாதை மூலம் செல்லுமாறு poster கள் கூறின . வண்டி மத்துகம அகலவத்தை என ஓடிக் கொண்டிருந்தது. மங்கள் கலவரத்துடன் இருந்தார்கள் தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டன. வானொலி தொலைக்காட்சி சேவைகளும் இல்லை. நண்பகல் 12.30 அளவில் வண்டி தல்கஸ்வெவ என்றை இடத்தை அடைந்ததும் வண்டி பழுதடைந்து விட்டது. நாம்இறங்கினோம். அப்பொழுதும் நான் களுத்துறைக்கு திரும்பவில்லை. மீண்டும் வண்டி பி.ப 2.00 மணிக்குப் புறப்பட்டது. நான் ஒரு plain tea banis உடன் பயணத்தைத் தொடர்ந்தேன். ..... பயணம் தொடரும்.