பெற்றோர்கள் என்றால் வரைவிலக்கணம் என்ன? பிள்ளைகள் பெற்றோரின் கடமை என்ன? பிள்ளைகளின் பொறுப்பு என்ன? பகுதி 2

By நா . மகேஸ்வரன் கனடா on Dec. 28, 2021

Card image cap

பிள்ளைகள் பிறந்து ஆறாவது வார காலத்தில் இருந்தே தங்களைப் பார்த்து
ஆரவாரப்படுபவர்களையும், பரிவு காட்டுபவர்களையும் புன்னகைப்பூ இருப்பதையும் பார்த்து
அதிக ஆர்வம் காட்டுவார்கள். தங்கள் பெற்றோரின் அன்பு கிடைக்காத பிள்ளைகள் தங்கள்
உறவுமுறைகளில் ஏதோ தவறு இருப்பதாக உணர்வார்கள். அது என்ன விடயம் என்று
தடுமாறுவார்கள். பொதுவாக பெற்றோர்கள் பிள்ளைகளை தண்டிக்கும் போதும் கண்டிக்கும்
போதும் தான் அவர்களின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பார்கள். ஆனால் அன்பை
வெளிப்படுத்துவதற்கு எப்போதாவதுதான் பார்க்கின்றோம்.

இரண்டாவது முறை அரவணைப்பு மூலம் அன்பை வழிகாட்டுதல். ஒரு பிள்ளையை தினமும்
அரவணைப்பதின் மூலம் அவர் ஆரோக்கியமானஇருப்பதற்கும் அவர்களது வளர்ச்சிக்கு தேவை
என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பிறந்ததிலிருந்து ஆண்பிள்ளைகளும் பெண்
பிள்ளைகளும் ஒரு வருடத்துக்கு அன்பை பெறுகின்றனர். பின்னர் ஆண்பிள்ளை குறைவான
அன்பையே பிறக்கின்றது. ஏனென்றால் ஆண்பிள்ளை அதிக அன்பை கொடுத்தால் அவர்கள்
பலவீனமாக வாழ்வார்கள் என்ற அவநம்பிக்கை பெற்றோர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. இது
முற்றிலும் தவறு.

ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஊட்டச்சத்து எவ்வளவு முக்கியமோ அதேபோல் அவர்களுடன்
நாங்கள் செலவு செய்யும் நேரமும் முக்கியம். பிள்ளைகளுடன் கூடுதல் நேரத்தை செலவிட்டாலும்
செலவிடும் நேரத்தை தரமானதாக இருத்தல் மேலும் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன்
அதிக நேரத்தை செலவிடுவதில்லை அப்பொழுது பிள்ளைகள் கூடுதல் நேரத்தை தங்கள்
நண்பர்களுடன் நேரத்தை செலவு செய்ய முற்படுவார்கள். அப்போது நண்பர்களின்
ஆலோசனையும் ஒப்புதலையும் அனுமதித்து அதன் படி நடக்கத் தொடங்குவார்கள். நல்ல
நண்பர்களாக இருந்தால் நல்லவர்களையும் தீயவர்களையும் தீயவற்றை இசை மாற்றப்படுவார்கள்
மிகவும் அவதானமாக இருங்கள். அவர்களின் நண்பர்கள் யார் என்று நீங்கள் வரையறை செய்து
அவர்களை கண்காணித்து கொள்வது பெற்றோரின் மிக முக்கியமான பொறுப்பு என்று நான்
சொல்வேன்.

பிள்ளைகளுக்கு அன்பு, ஆதரவு, அரவணைப்பு, மதிப்பு இவற்றை நீங்கள் போதிய அளவு
கொடுக்க வேண்டும்., இல்லை என்றால் உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இடைவெளி
பெரிதாக போகும் இதனால் உங்களது அறிவுரைகளையும் பரிந்துரைகளையும் சமுதாயத்தில்
உள்ள கண்ணோட்டத்தையும் நிராகரிக்க தொடங்குவார்கள். இலையுதிர்காலம் போல்
அவர்களுடைய வாழ்வு உதிர்ந்து போய் விடும்.

பிள்ளைகளின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு சில பெற்றோர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.,
ஆனால் எதிர்மறையான விமர்சனங்களில் சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும், மன
விரக்தியையும் ஏற்படுத்தி அவர்களை மழுங்கடித்துவிடும். சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு
பூரணமான அன்பையும் சுயமரியாதையை கொடுப்பது இல்லை. ஏன் பெற்றோரின் மனம் அதற்கு
அனுமதிப்பதில்லை. ஏன் ஏனென்றால் பெற்றோர்கள் இருவரும் அன்பாக வாழ்வது இல்லை.
இப்படிப்பட்டவர்களை எப்படி நாம் வரையறை செய்வது?! இவர்கள் ஒன்றாக இருந்து உணவு
உண்ண மாட்டார்கள், காரில் போகும்போது வெளிக்காட்சிகளில் பார்த்து ரசிப்பார்கள்,
கணவனுடன் பகிர்ந்து உரையாட வேண்டிய விடயங்களை சகோதரர்களுடன் பரிசீலனை
செய்வார்கள், கணவனைப் பற்றி பெற்றோருக்கு சொல்வார்கள், டிவி பார்த்துக்கொண்டு
இருப்பார்கள், கணவன் வீடு வந்ததும் டிவி நிறுத்திவிட்டு அறைக்குச் சென்று கதவை மூடிக்
கொள்வார்கள், இப்படிப்பட்டவர்கள் வாழ்வில் அன்பாக வாழ்வது இல்லை., இதனால் இவர்களது
மனம் பிள்ளை வளர்ப்பின் பூரணமான அன்பை வழிகாட்ட மனம் அனுமதிப்பதில்லை அன்பாக
பிள்ளைகளை வாழ வையுங்கள்.

இனி அன்பாக வாழும் கணவன் மனைவி எப்படி இனம் காண்பது மனைவியை முதலில்
பார்ப்போம் மனைவி பொதுவிடங்களில் கணவனின் Coat,Tie சரி செய்வார்கள், கணவனின்சேட்
கோலரை சரி செய்து விடுவார்கள், தலைமயிரை சரி செய்து அன்பாக தனது கணவனுடன்
அனுசரித்து வாழ்வார். கணவன் எப்படி மனைவியுடன் வாழ்வான் என்பதை பார்ப்போம். பொது
இடங்களில் தங்களுக்குள் இருக்கும் குறை நிறைகளை வெளியில் காட்டாது மிகவும்
அன்னியோன்யமாக மனைவியை தனக்கு சமமாக மரியாதையாக நடத்துவார். இவர்கள் எப்படி
பிள்ளைகள் வளர்ப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும்.

சில நேரங்களில் பிள்ளைகள் பெற்றோரின் அன்பை சோதிப்பதற்காக சில பிழைகளை
செய்வார்கள் அப்பொழுது பெற்றோர்கள் அவர்களை கண்டிக்கவே தண்டிக்கவே கூடாது.,
அவர்களுக்கு அதனால் வரும் பின் விளைவுகளை விளங்கப்படுத்தி உணர வைப்பதின் மூலம்
அதிலிருந்து அவர்கள் உண்மையான அன்பை புரிந்து கொள்வார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு
அன்பை இம்மியளவு கூடக் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பொதுவாகவே எதிர்மறையான விமர்சனங்களை பெரும் ஆபத்தையும், பிள்ளைகளின்
பின்னடைவை ஏற்படுத்தும், அவர்களை தங்கள் காயத்தை வெளிப்படுத்த விடினும் ஒவ்வொரு
முறையும் விமர்சனத்தின் போது மனதுக்குள் அதிக வலியை அனுபவிக்கின்றனர். போர்
ஏற்படுத்தும் அழிவை விட அறிவு பூர்வமான விமர்சனங்கள் இதுபோன்று ஆளுமை பிரச்சினையில்
பெரும்பான்மையானவர்கள் எதிர்கொள்கின்றார்கள். இது பெரியவர்களுக்கும் பொருந்தும் .ஒரு
வயது வந்த அவரைப் பற்றி எதிர்மறையான விமர்சனம் செய்யும் போது அவர் அது தன்மானத்தை,
சுய விமர்சனத்தை, சுயகௌரவத்தை, தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் என்பது பின்னடைவைச்
அடைகின்றது. அவன் தனக்குள்ளேயே குலுங்கி தூக்கம் இழந்து மனச்சோர்வையும்
அடைகின்றார். இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது ஒரு பிள்ளையோ அல்லது ஒரு நபரையோ
மோசமாகிக்கொண்டே போகின்றோம். திருந்துங்கள், அன்பாக எல்லோரிடமும் நடவுங்கள்.

இனி ஒரு முக்கியமான விடயத்தை பார்ப்போம்.

ஒவ்வொரு பெற்றோரும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது.

பிள்ளைகளை எப்படி வளர்க்க படுகிறார்களோ அப்படியே அவர்களது நடைமுறை வாழ்க்கையை
அமைத்துக் கொள்வார்கள்

1. ஒரு பிள்ளை எதிர்விமர்சனத்துடன் வாழ்ந்தால் அவன் எந்த விடயத்துக்கும் எதிர்ப்பைத்
தெரிவிப்பான்.

2. ஒரு பிள்ளை பெற்றோரின் எதிர்ப்புடன் வாழ்ந்தால் அவன் சண்டைஇ டக்
கூடியவனாகவும் இருக்கிறான்.

3. ஒரு பிள்ளையை அவமதித்து வாழ்ந்தால் அவன் குற்ற உணர்வு உள்ளவராக வாழ்வான்.

4. ஒரு பிள்ளையை சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்தால் அவன் பொறுமையுடன்
வாழ்கின்றான்.

5. ஒரு பிள்ளையை ஊக்கத்துடன் வளர்த்தார் அவன் தன்னம்பிக்கையுடன் வாழ்வான்.

6. ஒரு பிள்ளையை பாராட்டி வளர்த்தால் அவன் பேரும் புகழும் உடன் வாழ்வான்.

7. ஒரு பிள்ளையை நியாயத்துடன் வளர்ந்தால் அவன் நிதானமாக நீதி நிறைந்தவனாக
வாழ்கிறான்.

8. ஒரு பிள்ளை பாதுகாப்பாக வளர்ந்தால் அவன் சுய நம்பிக்கை கொண்டவனாக வாழ்வான்.

9. ஒரு பிள்ளை அன்புடனும் நட்புடனும் வாழ்ந்தால் அவன் தன்னை நேசிக்கின்ற
கற்றுக்கொள்கிறான்.

10. ஒரு பிள்ளை அன்பாக வளர்ந்தால் எல்லாத்திலும் நல்லவளாக உயர்ந்தவனாக
சுயகௌரவம் உள்ளவனாகவும் சமுதாயத்தில் உயர்ந்தவராக மற்றவர்களுக்கு முன்
உதாரணமாக வாழ்வான்.

உங்கள் பிள்ளைகள் தொடர்பான ஒரு சவாலான சூழ்நிலையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்
போதெல்லாம் இங்கு எது முக்கியம் என்ற கேள்வியை நீங்கள் உங்களிடம் கேட்பது எப்போதையும்
விட மிகவும் முக்கியமாகின்றது. உங்கள் பிள்ளை உயர்வு சுயமரியாதையுடன்
தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது தான் உங்களுடைய முக்கிய குறிக்கோள் என்பதை ஞாபகத்தில்
வைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளின் பொறுப்பு என்ன பெற்றோருக்குச் செய்ய வேண்டிய
கடமைகளை காலநேரம் பார்த்து செய்து முடித்து அவர்களின் நிறைவான வாழ்வை வாழ
வைப்பதே.

First, god is parents. First, teacher is parents. All remember that!!!!

இவ்வண்ணம்

நா. மகேஸ்வரன்.