By நா. மகேசன் on Feb. 1, 2025
உங்களது நண்பர்கள் , உறவினர்களைப் பரிசோதித்துப் பார்ப்பது எப்படி ?
இந்த தலையங்கத்திலேயே உள்ளடக்கம், புரிந்து உரைப்பதை புரிந்து கொள்ளுங்கள். புரிதல் என்றால் என்ன? ஏற்றுக் கொள்ளுங்கள். நேர் மறையில் எதிர் மறையாக சொல்வது என்றால் ஒப்புக் கொள்ளுங்கள். நண்பர்கள் என்ற வடிவிலேதான் எதிர் மறை பாதிப்புக்கள் வரும். நீ எனக்கு நண்பனா இல்லையா என்று கேட்பார்கள். உண்மையான நண்பர்கள், நண்பன் கஸ்டப்படுவதையோ, புண்படுவதையோ ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், சகித்துக் கொள்ளவும் மாட்டார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்து இருங்கள், இதற்கு எதிர் மறையாக செய்தால் அவர்கள், நண்பர்கள் மாதிரி நடிப்பவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியாது. அவ்வளவு கபஸ்தரியமாக பழகுவார்கள்.
என் நண்பன் அளவிற்கு அதிகமாக குடித்து விட்டால் அவனை கார் ஓட நான் அனுமதிக்க மாட்டேன். ஏன் ? நான் நட்பை இழக்க தயாராக இருக்கிறேன், நண்பனை இழக்க தயாராக இல்லை. மற்றவர்கள் தங்களை நல்லவர்கள் என்று சொல்வதற்காக நாம் பல தவறுகளைச் செய்து கொண்டு இருக்கிறோம். அவர்கள் இதை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை, இது துன்பமாக மாறிவிடும் என்பதைச் சொல்வதே இல்லை நண்பர்கள் என்று சொல்லி பாதாளத்தில் தள்ளி விடுவார்கள். ஆனால் திறமை இருந்தால் நாங்கள் மலை உச்சிக்கும் ஏறிவிடலாம் சகாக்களின் கட்டாயம் என்று தொடங்குவது எல்லாம், உவமானமாக நட்பின் சோதனையாக மாறிவிடும். நீங்கள் பிரச்சனையில் இருக்கும்போது அவர்கள் எங்கே இருப்பார்கள், எவ்வளவுதூரம் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். அவர்களுக்கு எப்போ அந்த குணம் வரும் என்பது நண்பனின் பெரிய கேள்வியாக வரும். ஒழுக்கமான நண்பர்களிடம் இருந்து பாதுகாப்பையும் , உயர்வையும் தரும். நண்பர்கள் மாதிரி நடிப்பவர்களிற்கு நேர்மறையோடு பலமான, எதிர்மறையான செயல்களை செய்வார்கள் உண்மையான நண்பர்களுடன் சேர்வது சுய கெளரவத்தை உயர்த்தும் திவாலாகும் ( BANK RUPCTCY) நிலையில் இருந்து பாதுகாக்கும்.
எது எங்களுக்குச் சரி என்று படுகின்றதோ, அதை எற்றுக் கொள்பவன் நண்பனா? அல்லது குறை நிறைகளை சொல்பவன் நண்பனா? நண்பன் தீமைகளைச் செய்தாலும் வாழ்க்கையை வாழ்வதற்காக அவர்களுடன் இணங்கிப் போவது என்பது ஒரு உறுதியான வழிதான். இது உறவினர்களை மகிழ்ச்சியாக்கும், பிரச்சனைகளைத் தவிர்க்கும். உறவைப் பெருக்கும். இங்கேதான் உயர்ந்த சுய கெளரவத்தை ஏற்படுத்தும். இதுவே மற்றவர்களிடம் இருந்து எங்களை உயர்த்திக் காட்டுகின்றது.
நண்பர்கள் இணங்கிப் பேசுவார்கள் ஏன் அவர்கள் மற்றவர்களீன் நகைப்பிற்கு ஆழாக விரும்பப்பட மாட்டார்கள்.
அவர்கள் எதையும் கூறுவது இல்லை, ஏன் என்றால் மற்றவர்கள் சமுதாயத்தில் அவர்களை ஏளனம் செய்வார்கள் என்பதற்காக.
ஒரு நண்பன் வாய்க்கு வந்தபடி திட்டினான், அதில் பக்கத்தில் இருந்த இன்னும் ஒரு உறவினர் கேட்டார் இது யாரைச் சாரும் என்று அதற்கு அவர் சொன்னார் கூறியவனையே சேரும் என்று. ஆனால் வாய்க்கு வந்தவனின் வார்த்தையை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை நான் சொல்வேன், ஒருவன் ஒரு பொருளை எனக்குத் தந்தால், அதை நான் கை நீட்டி வாங்கினால் அது எனக்குச் சொந்தமில்லையேல் அவனுக்குத்தான் சொந்தம், அது மாதிரித்தான் என்று.
நண்பர்களோ அல்லது உறவினர்களோ உண்மைக்குப் புறம்பான கதைகளைக் கூறினாலோ அல்லது சாக்குப் போக்குப் பேசினால் தகவல் பரிமாற்றம் நடைபெறாது. மாராக தகராற்றுப் பரிமாற்றம்தான் நடக்கும். இதை ஞாபகத்தில் வைத்திருங்கள், தவறான புரிதலை தவிர்ப்பதற்கு நாங்கள் கூடுதலாக தகவல்களைக் கொடுத்துப் பேசுவது சாலச் சிறந்தது. அவருக்கு இந்த விடயம் தெரியும் என்று எந்த விடயத்தையும் விட்டுவிட்டால் தகவல் பரிமாற்றத்தின் இடைவெளி கூடிவிடும்.
நான் பழம்தமிழ் புத்தகத்தில் படித்த விடயம் ஒன்றைக் கூறுகின்றேன். ஆறாத பெருஞ்சினமன்றி எளிதே மாறும் சிறு சினம் உடையார், இதில் வரும் அர்த்தம் என்ன? சில சொற்கள் புரிகின்றது, சில சொற்கள் புரியவில்லை. முன்னோர்களுக்குப் புரியுமானால் குழப்பம்தான் மிகையாக இருக்கும். இப்ப உள்ளவர்களுக்கு புரியும்படி கூறுவதானால், அவனுக்கு கோபம் வந்தால் உடனே மாறிவிடும் அல்லது போய்விடும்.
பிறர் கூறுவதை நாம் பழி சொல்லிக் கொண்டு இருக்கும்போது, நமது நின்மதி சிதைந்துகொண்டே போகும். நமது உணர்ச்சிக்கும், பண்புக்கும் பொறுப்பு ஏற்கும்வரை நாம் நின்மதியை இழக்கவேண்டியதுதான். இதன் மறுபக்கம்தான் உறவினர்களை இனம்காண்பது நான் எழுத தேவையில்லை.
நான் ஏன் தடுமாற வேண்டும்.
நான் ஏன் ஆத்திரப்பட வேண்டும்.
நான் ஏன் விரக்தியடைய வேண்டும்.
நான் ஏன் மற்றவர்களை வெறுக்க வேண்டும்.
இப்படியான கேள்விகளை நீங்கள் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்
உலகத்திலேயே மிகச் சிறந்த நண்பர்கள் யார்? இந்த இருவரும்தான்.
ஆணிடம் பணம் கேட்காத பெண்ணும்
பெண்ணிடம் உறவுக்குக் கேட்காத ஆணும்.
நா. மகேசன்.
கனடா.