By நா. மகேசன் கனடா. on March 21, 2023
சரியானதை சரியாகச் செய்தால், சரியாக வரும். பிழையானதை சரியாகச் செய்தாலும் பிழையாகத்தான் வரும். சரியானது எது, பிழையானது எது.
எல்லோரையும் நேசிப்பது சிலருக்கு இயற்கையாகவே அமைந்துவிடும். அவர்களுக்கு எல்லோரிடமும் நண்பர்களாக இருப்பதற்கு எதுவித தடைகளும் இருப்பது இல்லை. ஆனால் எல்லோருக்கும் இயல்பாகவே நல்ல குணம் அமைந்துவிடாது, பிழையான குணங்களால் அவரைவிட்டு உறவுகள், நண்பர்கள் விலகிப் போகும் நிலை ஏற்படும். இதற்கு என்ன செய்ய வேண்டும். நான் என்னை சரியான மரியாதைக்கு உரியவனாக்கிக் கொள்வேன்.
நான் 2013 அம்மாவின் ஆத்மகிரியைக்காக தாயகம் சென்று இருந்தேன். அப்போது என் நண்பர் வீட்டில் ஒரு செடி செழித்து வளர்ந்து இருந்தது. ஆனால் ஒரு பூவையும் காணவில்லை. நான் சொன்னேன் செடியில் இலைகளை அகற்றி விடும்படி, அவர் அகற்றிவிட்டார். இரண்டு மாதங்களின்பின் அச்செடி நன்றாக பூத்துக் கொழித்து இருந்தது. இதில் இருந்து நாம் அறியும் உண்மை என்ன, சாத்தியம் இல்லாததை நாங்கள் அகற்றிவிட வேண்டும். சாத்தியமான விடயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
ஒரு மனிதன் தன் குணங்களில் தேவையில்லாததை அகற்றிவிட்டால் போதும், அவனைச் சுற்றி எல்லோரும் வலம் வருவார்கள். வீட்டிற்கு வருபவர்களை வரவேற்பதுதானே இளைஞர்களுக்கு அழகு. இளைஞர்கள் பொதுப்பணி செய்பவர்களை அநுசரிப்பதுதானே அவர்களுக்குப் பெருமை, இளைஞர்கள்தான் ஊரை வழி நடத்திச் செல்பவர்கள், இவர்கள் என்ன செய்ய வேண்டும். முன்னர் பொதுப்பணி செய்தவர்களை மதிக்க வேண்டும், அவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும், அவர்களைக் கனம் பண்ண வேண்டும்.
நான் செல்வேன் நல்லவர்களுக்கு தானாகவே நன்மைகள் வரும், எப்படி, ஒரு ஏழை வயோதிபரின் கதை, இதை என் தந்தை 74 ம் ஆண்டு சொன்னார். எல்லோரும் ஒரு குளத்தில் நீராடுவார்கள். ஒருநாள் அந்த இடத்திற்குப் போகும் வழியில் மரம் ஒன்று வீழ்ந்து கிடந்தது. பலர் மாற்று வழிகளில் சென்றார்கள். சிலர் மரத்தின்மேல் ஏறிச் சென்றார்கள். ஆனால் ஒரு முதியவர் அம் மரத்தினை அகற்ற முயன்றார். அப்போது மரத்தின் கீழ் பகுதியில் பணப்பை ஒன்று இருந்தது. இதில் இருந்து நாம் அறியும் உணமை என்னவெனில் மற்றவர்களுக்கு நன்மைகளைச் செய்யும் போது எமக்கும் நன்மைகளே வந்து சேரும்.
நல்லமனமும், பொதுப் பணி செய்பவர்களுக்கும் எப்போது நல்லதே நடக்கும் என்பார்கள். அதைவிட நல்ல மனிதர்களின் நன்மை, தீமைகளுக்கு வருபவர்களையும், ஆதரவு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கையையும் கொண்டு அவர்களின் மகிமையையும் பொதுநல நோக்கும் எல்லோருக்கும் புலப்படும். மனிதனுக்கு எது பெருமை, தவறுகளை ஒப்புக் கொள்வது, இப்படித்தான் இருக்க வேண்டும் உண்மைகளை சொல்ல எப்பவும் தயங்கக் கூடாது. கோபுரத்தில் இருந்தால் என்ன, கோடி பணம் வைத்து இருந்தால் என்ன, நேர்மை, நீதி நியாயம்தான் வெல்லும். யாராக இருந்தாலும் வேறு ஒருவரின் வெறுப்பை சம்பாதிக்கக் கூடாது, இதுதான் இளைஞர்களுக்குப் பெருமை.
அடுத்தவர்களின் வெறுப்பிற்கு ஆளாகாமல், ஊரில் உள்ள எல்லோரிடமும் இனிமையாக, ஆதரவாக, வாழ்வதே இளைஞர்களுக்குப் பெருமை. பணம், பொருளாக நாம் வைத்திருந்தால் எமக்கு என்ன பயன், அதில் மற்றவர்களும் பயன் பெற்றால்தான் நமக்கும் பயன்.பயன் படாத நிலத்தால் என்ன பயன்.மற்றவர்களுக்கு பயன்படாத மனிதர் வாழ்ந்து என்ன பயன்.
இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டியது என்னவென்றால் அடுத்தவர்களின் வெறுப்பிற்கு ஆளாகமல் எல்லோருக்கும் இனிமையான இளைஞனாக நான் வலம்வர வேண்டும் என்பதே ….
அடுத்தவர்களின் வெறுப்பிற்கு ஆளாகமல் எப்படி இனிமையாக மற்றவர்களுடன் வாழும் வழிமுறைகளை அடுத்த கட்டுரைகளில் நான் எழுதுகின்றேன் இதில் பலபேரின் கருத்து உள்வாங்கப்பட்டுள்ளது. பலபேரின் வேண்டுகோளின் மத்தியில் இதை நான் எழுதுகின்றேன். உங்கள் ஆதரவிற்கும், கருத்துப் பரிமாற்றங்களுக்கும் எனது நன்றிகள்.
இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை
1. கிடைக்கின்ற தகவல் சரியான இடத்தில் இருந்து கிடைத்ததா, என்பதை உறுதி செய்ய வேண்டும்.
2. அது என்ன நோக்கத்துடன் கூறப்பட்டது, அதை நாம் சரியாகப் புரிந்து கொண்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மீண்டும் அடுத்த மடலில்
நா. மகேசன்
கனடா.