By நா . மகேஸ்வரன் கனடா on Dec. 24, 2021
பெற்றோர்கள் என்றால் வரைவிலக்கணம் என்ன? பிள்ளைகள் பெற்றோரின் கடமை என்ன?
பிள்ளைகளின் பொறுப்பு என்ன?
ஆதரவு தரும் அன்பு உள்ளங்களே!!!
கனடாவில் புதிய அரசும் புதிய ஆட்சிகளும் உருவாக்கப் பெற்று Covid-19 தாக்கங்களின்
சூழ்நிலைக்கு ஏற்ப நாமும் அவைகளுக்கு பாதுகாப்பாகவும், சுகாதாரத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட
வெளியே செல்லும் செயல்களிலும் நமது வேலையும் கடமைகளும் பிள்ளைகளை வளர்ப்பதில்
இருக்கின்ற சிரமங்கள் அனைத்தையும் செவ்வனே செய்து கனடிய வாழ்வியலில் குளிர்காலத்தை
எதிர்பார்த்து வாழ்வை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.
மேலும் இங்கே பலருடைய வேண்டுதலுக்கிணங்க என்னால் முடிந்த கற்றுக்கொண்ட
விடயங்களை உங்களோடு முடிந்த அளவில் பகிர்ந்து கொள்ள முனைகின்றேன். என்றும் உங்கள்
ஆதரவுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் நன்றி.
உலகத்தில் உள்ள உயிரினங்களை நான்கு வகைப்படுத்தலாம் அவை நுண்ணுயிர்கள், பிராணிகள்,
தாவரங்கள், விலங்கினங்கள். முன் மூன்றையும் விடுத்து விலங்குகளை எடுத்துக்கொண்டால்
விலங்குகளில் இருந்து மனிதன் எவ்வாறு வேறுபடுகின்றன?! எல்லா விலங்குகளும் குறுக்கே வளர
மனிதன் உயரவே வளர்கிறான்., இதனால் மனிதனின் வாழ்க்கை உயர்ந்து . எல்லா
விலங்கினங்களின் குட்டிகளும் தாயுடன் வாழும்., ஆனால் மனிதனின் குழந்தைகள் தாயுடனும்,
தந்தையுடனும் வாழும் இந்த வேறுபாடு மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகிறது.
இனி பெற்றோர்கள் என்ற வரைவிலக்கணத்தை பார்ப்போம். நான் என் எண்ணத்தை மாற்றலாம்,
செய்யலை மாற்றலாம், வேலையை மாற்றலாம், வீட்டை மாற்றலாம், வாகனத்தை மாற்றலாம்,
விரும்பினால் மனைவியையும் மாற்றலாம்., ஆனால் பெற்றோர் என்ற சொல்லை மாற்ற முடியாது.
ஏன்? என் பிள்ளைக்கு நாங்கள் தான் பெற்றோர்கள். இதிலிருந்து உங்களுக்கு பெற்றோரின்
வலிமை புரியும். இதுதான் வரைவிலக்கணம்.
இறைவனின் ஆசீர்வாதத்துடனும், எங்கள் இருவரின் அணைப்பிலும் நாங்கள் நிரந்தரமான
உறவுக்கு அடியெடுத்து வைக்கிறோம். உலகத்திலேயே உயர்ந்த செல்வமும் முதன்மையானதும்
எங்கள் இருவரின் வரிசை நிலைநாட்டவும் வரும் பெரும் செல்வம் தான் பிள்ளைகள்.
பிறக்கும்போது எல்லா பிள்ளைகளும்சமம் தான் . ஆனால் நாங்கள் எப்படி நல்ல பெற்றோர்கள்
ஆவது என்பதை பற்றி பார்ப்போம். சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உடமையாக
பார்க்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் தங்கள் சொல்படி நடக்கும் போது தான் அவர்கள் தங்கள்
பிள்ளைகள் முறையாக நடந்து செல்வதாக நினைக்கிறார்கள்.
எங்கள் பிள்ளைகளை இந்த உலகுக்கு கொண்டு வந்தது நாங்கள் இருவருமே. அவர்களை வளர்த்து
பராமரித்து பெரியவர்கள் ஆக்குவது எங்கள் இருவரது பொறுப்பே. வளரும் போது எங்களுடன்
வாழும் பிள்ளைகளை பராமரித்து நேசிப்பதும் தமது பொறுப்பே. சிலகாலம் தான் எங்களுடன்
வாழும் பிள்ளைகள். எங்களின் எதிர்பார்ப்புக்கு அடிபணியச் செய்வது எங்கள் செயல்
அல்ல.அவர்களின் தனித்தன்மைக்கும் தனித்துவத்திற்கு வளர்த்து கொள்வதற்கும் ஊக்குவிப்புதே
எமது பொறுப்பு.
என் பிள்ளை என்ன வா ஆவான் எப்படி வாழ்வான் என்று யாராலும் கூற முடியாது. ஆனால்
அவன் எப்படி வருவான் எப்படி ஆவான் என்பது அவனை பொறுத்ததே. அதாவது வளர்ந்து
படித்து காய்கனி ஆவது அவன் வேலை. உங்கள் பிள்ளைகள் உங்களிடம் இருந்து உங்களுக்கு
சொந்தம் அல்ல. அவர்கள் அவர்களுக்கு சொந்தம். அவர்கள் தங்களுக்கென்று சொந்தமாக
எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள். ஏன் அவர்கள் நாளை என்ற வாசலில் அடி எடுத்து
வைப்பார்கள். ஆனால் அவர்கள் உங்களைப் போல் வாழ முடியும். ஆனால் அவர்களை உங்களைப்
போல் வாழ வைக்க முயற்சிக்காதீர்கள்.
உங்கள் பிள்ளைகளை மதித்து அவர்களை பராமரித்து அவர்களிடம் உயர்ந்த சுயமரியாதையும்
தன்னம்பிக்கையும் ஏற்படுத்துவதுதான் உங்களுக்கு முக்கிய நோக்கம். பிள்ளை வளர்ப்பில்
அவர்களுக்கு பெரும் செல்வத்தை தேடி வைத்து தன்னம்பிக்கை கெட்டவர்களாகவும் சுயமரியாதை
கெட்டவர்களாகவும் நீங்கள் வளர்த்து இருந்தால் நீங்கள் பிள்ளை வளர்ப்பில் தோல்வி கண்டு
இருக்கிறீர்கள் என்று தான் நான் சொல்வேன். ஒரு வாலிபன் இளம் வயதில் இழந்த அன்பை
சரிசெய்வதற்கு தனது வாழ்நாளில் பெரும்பகுதியை அதை நினைத்து செலவு செய்கின்றான்.
அன்பை பிள்ளைகளுக்கு கொடுங்கள்.
தாய் தந்தையர் தங்களுக்கு பிடிக்காத செயல்களை பிள்ளைகள் செய்யும் போது அனேகமான தாய்
தந்தையர் அவர்களை குறை கூறுகிறார்கள் அவர்களை விமர்சனம் செய்கிறார்கள் ஆனால்
உயர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடத்தைக்கு தாங்களே பிரதான காரணமாக
நினைத்துக்கொள்வார்கள்.
ஒரு பிள்ளை நல்லவிதமாக நடந்து கொண்டாலும் சரி., பிள்ளையாக நடந்து கொண்டாலும் சரி.,
அவனது தாய் தந்தையரும் சுற்றத்தாரும் நடத்தும் விதம் தான் அவனை இவ்வாறு நடந்து கொள்ள
தூண்டுகின்றது. பிள்ளைகளின் நடத்தைக்கு அவன் தாய் தந்தையர் பொறுப்பு ஏற்கும் பொழுது
அவன் அனுபவித்து வந்த பிரச்சனைகளுக்கு முடிவு காண்பதற்கு சாத்தியமாகின்றது.
நல்ல பிள்ளைகள் வளர்ப்பதில் நீங்கள் மிக முக்கியமாக எண்ணிக் கொள்வது எங்கள்
பிள்ளைகள் எவ்வளவு அன்பைப் பெறுகின்றார்கள் என்பதை பொறுத்ததே. ஒரு தாவரத்திற்கு
சூரிய ஒளியும் நிலமும் எவ்வளவு முக்கியமோ அதேபோல பிள்ளைகளுக்கு அன்பும்
அரவணைப்பும் மிக முக்கியம். பிள்ளைகளுக்கு கொடுக்கும் அன்புக்கு எல்லையே கிடையாது. ஒரு
பிள்ளைக்குத் தாய் தந்தையரிடம் இருந்து கிடைக்கும் அரவணைப்பும், ஒப்புதலும்மே அவரது
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமான நிறைவு. பொதுவாக பிள்ளைகள் தங்கள்
பிரச்சனைக்கு முழுமையாக காரணம் தங்கள் பெற்றோர்கள் தங்களை முழுமையாக
நேசிக்கவில்லை என்பதே.
பிள்ளைகளுக்கு அன்பு காட்டப்படவில்லை என்றால் அது பிள்ளைகளின் வாழ்வில் நிரந்தரமான
விளைவுகளை ஏற்படுத்துகின்றது. உடல் நோய்களும் மன நோய்களும் மரணங்களும் கூட
காரணமாகின்றது. அவர்களின் அறிவுபூர்வமான தாக்கத்திற்கும் இளமையில் தங்கள் தாய்
தந்தையிடம் இருந்து பூரணமான அன்பு கிடைக்க பொறாமையே.
அமெரிக்காவிலேயே நூறு வருடங்களுக்கு முன் ஒரு கொள்கை உலா வந்தது அதிகமானவர்கள்
புள்ளை மற்றவர்களை பார்த்தால் நோய் தொற்று மற்றும் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கும்
என்று பிள்ளை வளர்ப்பு கோட் படுத்தியது இதன் அடிப்படையில் பிறந்த பிள்ளைகளை
தனிமைப்படுத்தி உடை மாற்றுவது உணவு கொடுப்பது தவிர மற்ற நேரங்களில் பிள்ளைகள்
தனிமை படுத்தினார்கள். ஆனால் இதில் மிக மோசமான நிகழ்ச்சி ஒன்று நடந்தது பிள்ளைகள்
ஊட்டச்சத்து உணவை உட்கொள்ள மறுத்தனர்,அவர்களின் ஆரோக்கியமும் இழந்தனர்., சில
குழந்தைகள் இறந்து போயின இந்த நோய்க்கு “ பயஸ்மா” என்று பெயர் சொல்வார்கள்.
அமெரிக்காவில் ஒரு அனாதை இல்லத்தில் பல பிள்ளைகள் இறந்தும் போயினர்.
ஒரு உளவியல் உண்மையான ஒரு சம்பவத்தை பாப்போம். டெக்சாஸ் மாநிலத்தில் ஒரு
தம்பதியினர் கடைக்கு ஷாப்பிங் செல்வதற்காக தங்கள் பிள்ளைகளை ஒரு பிள்ளை பராமரிப்பு
நிலையத்தில் விட்டு விட்டு சென்றனர் துரதிருஷ்டம் அவர்கள் வரும் வழியில் வாகன விபத்தில்
இறந்துவிட்டார்கள். அப்பொழுது அப் பிள்ளையின் வயது 2 ஆகும். என்ன நடந்தது என்று
தெரியாத சிறுவன் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பின் ஒரு குடும்பத்தினரிடம் வளர்க்க
கொடுக்கப்பட்டார். அவன் அங்கு இரவில் விழித்திருப்பது பகலில் தூங்குவதும் வளர்ப்பு
பெற்றோர்களை வெறுப்பது மாக இருந்தார். பின் இன்னொரு குடும்பத்தாரிடம்
ஒப்படைக்கப்பட்டது. அங்கும் அவனுக்கு பூரணமான அன்பை பெற வில்லை. இப்படிப் பல தத்து
எடுக்கும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட பின்பு., ஒன்பதாவது வளர்ப்பு தாய் தந்தை அவர்கள்
மீது அளவு கடந்த அன்பையும் பாசத்தையும் பொழிந்தனர்., கேட்பதை எல்லாம் வாங்கிக்
கொடுத்தனர்.,வெளியில் போகும்போது கூட்டிச் சென்றனர்.,உறங்கும்போது தங்களுடனேயே
அவனையும் உறங்க வைத்தனர்., என்ன ஆச்சரியம் அப்பிள்ளை 7 வயதுக்கு ஏற்ற வளர்ச்சியை
பெற்றான் 5 மாதங்களில் முழு வளர்ச்சியை பெற்று கட்டியணைத்தல் முத்தமிடல் அவர்களிடம் கை
கோர்த்துக் கொண்டார்கள், அவன் பூரணமான வளர்ச்சியடைந்து பிற்காலத்தில் மிகப்பெரிய
தொழில் அதிபராக வந்தார். இந்த உண்மையான உண்மை சம்பவத்தில் நாம் உணர்ந்து கொள்வது
உண்மையான உள்ளம் கொண்ட பிள்ளைகளுக்கு பூரணமான அன்பை கொடுங்கள்.
ஒரு பிள்ளைக்கு அன்பு விளக்கி கொல்லப்பட்டால் உடல் ரீதியான,மனப் பிரச்சினைகள் பல
உள்ளன. இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஆளுமைக் குறைபாடு, நரம்புத்தளர்ச்சி,
மனநோய், வாழ்வில் தோல்வி போன்றவை உடல்நலத்தில் தென்படும். ஒரு பிள்ளை மிக
முக்கியமான பிரச்சினை உட்படுவது பூரணமான அன்பு இன்மையே.
தொடரும்