பணம்

By N. Mahesan on Oct. 8, 2021

Card image cap

பணம்

பணம் என்றால் என்ன ? பணத்தின் வேலை என்ன ? பணம் எப்படி எங்களிடம் வரும் ? பணத்தை நாம் எப்படி சேமிப்பது ?

சொந்தங்களே!!!

வாலிப குடும்ப வாழ்வில் நான் ஊகித்துக் கொண்ட, மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட, அவற்றினூடாக எனது இயல்பான தேடுதல் ஊடாக, அனுபவங்களின் ஊடாக பணம் பற்றிய எனது கருத்தாக்கத்தை உங்கள் முன் வைக்கின்றேன். ஆதரவுக்கு மகேசனின் நன்றிகள்.

பணம் என்றால் என்ன பானமா? இல்லை பண்டமாற்றில் இருந்து வந்த குறைபாடுகளை பண்ணோடு சீர் செய்த பானமே பணம் என்ற பெயரைப் பெற்றது. இல்லாதவனுக்கு இவ்வுலகம் இல்லை.அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை என்றார் புலவர் வள்ளுவர். பூரிப்பு உண்டாகாது, புகழ் கிட்டாது, பெருமை தங்காது, உறவுகள் கொண்டாடது, சிறப்பு சேராது, வாழ்க்கை வற்றிய நதி போல் ஆகிவிடும் . பணம் இல்லாதவன் பிணம் என்றும் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பழமொழியும் தோன்றியது., இதிலிருந்து பணத்தின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம். ஈட்டி எறிந்த தூரம் தான் செல்லும்., பணம் பாதாளம் வரை போகும்., என்று சொல்வார்கள்.

இனி பணத்தின் வேலையை பார்ப்போம்.

பணம் படைத்தவன் எங்கு வாழ விரும்புகிறானோ அங்கு வாழலாம்.எதைப் பெற விரும்புகிறானோ அதை பெறலாம். குடும்பத் தொல்லைகள் இல்லாமல் வாழலாம். ஒருவருக்கு அடிபணியாமல் வாழலாம். கவலையற்று வாழலாம். நினைத்த இடத்துக்குச் செல்லலாம். அறிவு கல்வி பெறலாம். சமூகசேவைகள் செய்யலாம்.உணவை சுவைத்து சுவைத்து சாப்பிடலாம்.

அப்பப்பாடா பணம் இல்லாதவன் பாடா!! ஈன்ற தாயும் மதியாள்., இல்லாளும் மதியாள்., “அவர்” என்ற வார்த்தை “அவன்” என்று மாறும். அழுக்கில் வாழ்கின்றான் , உணவின்றி வாழ்கின்றான், உரிமை அற்று தவிக்கின்றான் . நோயினால் நெளின்றான், வறுமை, துன்பம், துயரம் அவனை செத்து பிடுங்கி விடும். பணம் இல்லாதவன் வாழ்வு, பயனற்ற வாழ்வு என்று ஆகிவிடும். பணம் இல்லாதவன் வேறு வழியில்லாது கடன் படுகின்றான். கடன் பட்டவன் வாழ்வோ கஷ்டமான வாழ்வு ஆகிவிடும் அவன் வார்த்தையும் சபை ஏற்காது., சொல்லுக்கும் பெறுமதி இருக்காது.

மகிழ்ச்சியான வாழ்வுக்கு மூன்று அடிப்படை உணவு, உடை, உறைவிடம். பணம் படைத்தவர்க்கு இந்த மூன்றும் பெற்று இன்பமாக வாழலாம். ஒரு பிச்சைக்காரனிடம் ஒருத்தர் கேட்டார் உன்னிடம் பணம் வந்தால் என்ன செய்வாய் என்று,. அவன் சொன்னான் மண் பானையை எறிந்துவிட்டு பொற்குடம் வாங்குவேன் என்று. இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவெனில் பணம் வர வர தேவைகளும் அதிகரிக்கும்.

ஒரு வரியவன் மழையில் நனையாமல் குளிரில் நடுங்காமல் ஒரு குடிசை கிடைத்துவிட்டால் அவனுக்கு அது மாளிகை. ஆனால் பணம் படைத்தவன் அறிவைப் பெருக்கலாம், ஆராய்ச்சி செய்யலாம், வீட்டில் ஏற்றம் பெறலாம், ஊரில் நன்மதிப்பு பெறலாம், வெற்றிச் சிகரத்தை அடைந்து விடலாம், புகழின் உச்சத்தை தொட்டுவிடலாம், வாழ்க்கை மகிழ்ச்சி கூடமாக மாறிவிடும். தெவிட்டாத இன்பம், வற்றாத புகழ், நிகரில்லாத வாழ்வு,குறையாத வலிமை,ஆனால் இதற்கு முதல் விதி பணம் படைத்து இருக்க வேண்டும். நீங்கள் பணம் பெறும் வழியை அறிந்து பணக்காரர்களாக வேண்டும் என்கின்றேன்.

இனி எப்படி எங்களிடம் பணம் வரும் என்று பார்ப்போம்.

மூன்று வழிகளில் எங்களுக்கு பணம் வரும்.

முன்னோர்கள் சேர்த்து வைத்த பணம்.

மனைவி கொண்டு வந்த பணம்.

நான் தேடிய பணம்.

முதல் தேடிய பணம் குருட்டு வழியில் வந்த பணம் ஆகும். இந்தப் பணத்தால் நாம் பெருமை கொள்ள முடியாது. ஏனெனில் இப்பணத்தில் நமது உழைப்பு திறமையோ வரவில்லை. இரண்டாவதாக வந்த பணம் தானாகவும் பெறலாம், திறமையாலும் பெறலாம். இந்தப் பணம் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியையும் தரலாம், வேதனையும் தரலாம்.

மூன்றாவது வழியில் வந்த பணம் எனது உழைப்பாலும், தகுதியாலும், திறமையினாலும் ஆகும். இந்தப் பணம் தன்மானத்தை உயர்த்தும், அமைதியைக் கொடுக்கும்.

திறமையினாலும், தகுதியினாலும் பணம் தேடியவர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். உதாரணமாகச் சொல்கிறேன்1906 இல் கனடா நாட்டில் 160 ஏக்கர் காணியும் 15,000 டொலர் வைத்து இருந்தவர்கள் பணக்காரர் என்று சொல்கிறார்கள்.

பணம் இல்லாதவர்களும் ஒன்றும் இல்லாதவர்களும் கோடீஸ்வரர்கள் ஆகவில்லையா? உதாரணமாக கருப்பையாவை நான் சொல்வேன். தோட்டத்தில் கூலியாக சேர்ந்த கருப்பையா அந்த தோட்டத்தை வாங்கினார். பெரும் பணக்காரராக, பெரும் சமூக சேவை செய்தார். அவர் தன் பெயர் மங்காது இருக்க கருப்பையா விடுதி ஒன்று கட்டினார். மேலும் ஹென்றி போர்டு, நட்பில் பிரபு, ராக் பலர் போன்ற கோடீஸ்வரர்கள் எளிய நிலையிலிருந்து அரும்பாடுபட்டு பணம் மழையை குவித்தவர்கள்,. வாழ்க்கையில் மன மகிழ்ச்சியை கண்டார்கள். உடல்நலம், கல்வி ஆராய்ச்சி,கலை ஆகியவற்றை வளர்ப்பதற்கு கோடிகோடியாக கொடுத்தார்கள்.

பணம் சேர்ப்பதற்கு நான்கு வழிகளை நான் சொல்வேன்.

1) எவ்வளவு பணம் சேர்க்கலாம் அவ்வளவு பணம் சேர்க்கலாம்.

2) எவ்வளவு குறைவாக செலவழிக்கறோமோ அவ்வளவு செலவு செய்யுங்கள். 3) எவ்வளவு மிச்சம் பிடிக்கலாம் அவ்வளவு மிச்சம் பிடியுங்கள்.

4) எவ்வளவு மற்றவர்களுக்கு உதவி செய்யலாமோ அவ்வளவு செய்யுங்கள்.

பெறு, செலவிடு, சேமி, கொடு என்று நான்கு வழிகள் பணம் சேர்த்தவர்கள் கைக்கொண்ட வழிகள் ஆகும் .

பணம் படைத்தவர்கள் இரண்டு வழிகளில் பணத்தை செலவு செய்ய வேண்டும்.

வியாபாரம் அல்லது தொழிலை பெருக்குவது.

வருமானம் வருவதில் முதலீடு போடவேண்டும் .

பணத்தை பக்குவமாக சேர்த்தால் அறிவும் பண்பும் சேர்ந்து வரும். உறுதியும் இடைவிடாத முயற்சியும் கொண்டவர்களால் தவறாது பணத்தைக் குவிக்க முடியும். ஆசை வேண்டும், பக்குவம் வேண்டும், அறிவு வேண்டும், சற்றும் கலங்காத உள்ளம் வேண்டும். அவர்களுக்கு பணம் சேர்ப்பது அரிதல்ல .

இனி பணத்தை எப்படி சேர்ப்பது என்று பார்ப்போம்!!

இரண்டு வழிகள் உண்டு

நேர்வழியில் பணம் சேர்ப்பது

எதிர் வழியில் பணம் சேர்ப்பது

நேர்வழியில் பணம் சேர்த்தால் நிலத்தில் தோன்றிய குட்டை போன்றது தேங்கி நிற்கும். எதிர்மறையில் பணம் சேர்த்தால் மலையில் தோன்றிய குட்டை போன்றது ஒன்றும் தேங்கி நிற்காது.

நீங்களே இதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

பணம் இருந்தால் குணம் இருக்காது; குணம் இருந்தால் பணம் இருக்காது; என்பார்கள். இல்லவே இல்லை நான் சொல்வேன்; பணமும், குணமும் இரட்டை குழந்தைகள் என்று; இரண்டும் இருந்தால் தான் சமுதாயத்தில் இடமுண்டு; சிலர் கூறுவார்கள் சிலருக்கு பணம் வந்தவுடன் குணம் மாறும் என்று; இல்லவே இல்லை ஏனென்றால் அவர்களின் இயற்கையான குணம் அதுதான். பணம் வரும் பொழுது அவர்களின் குணம் பலம் பெறுகின்றது. தவிர அது அவர்களின் இயற்கை குணமே தான்.

பணக்காரர்களை பாராட்டுங்கள்; அவர்களைக் கண்டு மகிழ்ச்சி அடையுங்கள்; ஏனென்றால் நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். அன்னப்பறவை நீரின் மேல் நீந்தி வரும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கின்றத!?. ஆனால் அப்பறவை எத்தனை தரம் தன்னை தன் காலை நீருக்குள் உதைக்க வேண்டும்!? அதேபோல பணக்காரன் பணக்காரன் ஆவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்க இருக்க வேண்டும்!?. பணம் சேர்க்க விரும்பாதவர்களை நான் சொல்வேன் “ உயிரோடு வாழும் பிணம்” என்று தான்.

* நான் விஞ்ஞானியாக வருவதற்கு கொஞ்சம் விஞ்ஞான அறிவு வேண்டும்.

* நான் கணிதமேதை ஆவதற்கு கொஞ்சம் கணித அடிப்படை விதி தெரிய வேண்டும்.

* நான் பணக்காரன் ஆவதற்கு கொஞ்சம் பணம் வேண்டும்.

ஏழைகழுக்கு உதவுங்கள் அவர்களையும் பணக்காரர் ஆக்குங்கள்.

ஏழையாகப் பிறந்தாலும்; பணக்காரனாக இறக்கவே; விரும்புங்கள்.

நகர்ந்தால் தான் நதிஅழகு!

வளர்ந்தால் தான் செடி அழகு!!

முயன்றால் தான் மனிதன் அழகு!!!

மூச்சு விடுபவன் எல்லாம் மனிதர் அல்ல.

முயற்சி செய்பவனே மனிதன்.

மீண்டும் ஒரு பொழுதில் சந்திக்கும் வரை நா. மகேசன்.