தானம் என்றால் வரைவிலக்கணம் என்ன?

By நா. மகேசன் கனடா on Feb. 16, 2026

Card image cap

தானம் என்றால் வரைவிலக்கணம் என்ன?

இது ஒரு மனு எல்லை. இது மிகுந்த உணர்ச்சி நிலை. இது முக்கியமாக மன உணர்ச்சிகளை கையாளும் முறை. தன்னைப் பாதித்து விடுமோ என்ற பயம் இல்லாத நிலை. அனுபவம் இதனை கற்றுக் கொடுக்கிறது. இது எங்களை வெட்கப்படும் நிலையில் இருந்து வெளிக் கொண்டு வருகின்றது. ஆனால் எப்போதும் உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடுவதும் சரி அல்ல. ஆனால் உணர்ச்சிகள் பாலைவனம் போல இருப்பதும் சரி அல்ல. இவற்றிற்கு எதிராக மனதுக்கு ஒரு தற்பாதுகாப்பு உணர்ச்சியின் உச்சகட்டமும் இதுதான். உணர்ச்சிகள்தான் நீங்கள் சாதாரணமாக ஆரோக்கியமானவர் என்பதை வெளிக்காட்டுகின்றது.
யாதார்த்த வாழ்க்கையிலே நாங்கள் சாதிக்க முடியாது என்று ஒன்றும் இல்லை. வெற்றியுடன் சாதிக்க முடியும் என்ற எண்ணம் திண்ணமாக உருவாக வேண்டும். இதுதான் தானம் என்பதற்கு வரைவிலக்கணம். தானங்கள் இரு வகைப்படும். அவையாவன;-
பொருள் தானம்
உடல் தானம்
இதில் நான் உடல் தானத்தை முதன்மைப் படுத்தி எழுதுகின்றேன். இதையும் இரண்டு வகைப் படுத்தலாம். உடல் பாக தானங்கள், இரத்த தானங்கள். இதில் நான் முதல் கூறிய உடல் பாக தானங்கள் வாழ்நாள் முழுவது கொடுக்க முடியாது. ஆனால் இரத்த தானம் என்பது உயிர் உள்ளவரை நாம் கொடுக்க முடியும். இதனை நாங்கள் செய்வதால் எமக்கும் மற்றவர்களுக்கும் பல நன்மைகளைக் கொடுக்கும். எமது உடல் ஆரோக்கியம் பெறும், புத்துணர்ச்சிகள் ஏற்படும், மன அமைதி அதிகரிக்கும், மன உறுதி பெருக்கெடுக்கும், உடல் உறுப்புக்கள் புத்துணர்ச்சி பெறும், நோய்கள் உடலை விட்டு நீங்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். மற்றவர்களைப் பொறுத்த வரையில் பல உயிர்களைக் காப்பாற்றும். எனவே இதனைக் கடைப் பிடியுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.
நா. மகேசன்.
கனடா.