முடிவுகள் எடுப்பது எப்படி,எப்படி எடுப்பது முடிவுகள்.

By நா. மகேசன் கனடா. on June 23, 2023

Card image cap

முடிவுகள் எடுப்பது எப்படி,எப்படி எடுப்பது முடிவுகள்.

பலபேரின் வேண்டுகோளுக்கு இணங்கி பலபேரின் கருத்துக்களை உள்வாங்கி, உங்கள் எல்லோரின் அனுசரணையுடன் இதனை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.
எத்தனையோ ஆற்றல் படைத்தவர்கள் தனிப்பட்ட முறையிலோ அன்று பொதுவான முறையிலோ முக்கியமான விடயங்களில் முடிவுகள் எடுக்கத் தெரியாமல்தான் தோற்றுப் போயிருக்கிறார்கள். ஒரு விடயத்தை செய்யலாமோ, அல்லது செய்ய வேண்டாமோ என்று முடிவு எடுப்பது ஒரு திறமையான ஆற்றல். முடிவு எடுக்கும் திறமையைக் கற்றுக் கொண்டால் தனிப்பட்ட முறையிலோ அல்லது சமூகத்திற்கோஅவர்களின் முடிவுகள் உயர்ந்த நிலைக்கு கொண்டுபோய்விடும். முடிவு எடுப்பது என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான பகுதியாகும். சாதனையாளர்கள் எல்லாம்தங்கள் அபரிதமான முடிவுகள் எடுக்கும் திறமையினால்தான் அவர்கள் தங்கள் திறமைகளை நிஜமாக்கியிருக்கிறார்கள். முடிவுகளை நான் மூன்றாக வகைப்படுத்துகின்றேன்.
அவசர முடிவுகள்
இப்போதைக்குத் தேவையில்லாத முடிவுகள்.
ஒரு காலமும் தேவையில்லாத முடிவுகள்.
காலம், நேரம், பயன்பாடு என்ற மூன்றையும் வைத்து இவைகளைத் தீர்மானிக்கலாம். இது மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கு, சமூகப் பணியாளர்களுக்கும் பொருந்தும். சில முடிவுகள் மற்றவர்களின் ஏவலினாலோ,அல்லது பொறாமையினாலோ நான் செய்தால் நான் நிரந்தரமான கெளரவத்தை இழந்து, எனது நற்பெயரையும் சீரளித்துவிடும். ஒரு முடிவை எடுக்கும்போது மற்றவர்கள் ஏன் இதை எனக்கு கூறுகிறார்கள் என்றும், இதனால் எனக்கு நல்ல பெயர் வருமா அல்லது நிரந்தரமான தீய பெயர் வருமா என்று சற்று சிந்தித்து செயல்படுத்துங்கள். முடிவு என்பதற்குப் பொருள் இறுதி என்பதே1.ஆதனால் அதற்கு தொடக்கம் என்று ஒரு வினா இருக்கின்றது என்பதையும் ஞாபகத்தில் வைத்து இருங்கள். இதன் அர்த்தம் என்ன. பிழையான முடிவு என்றால் அதனை தொடங்காமல் இருங்கள் எல்லோரும் சொல்வார்கள். மெளனம் என்றால் சம்மதம் என்று. அது அப்படி இல்லை. தேவையில்லாத முடிவு என்றால் சிலர் மெளனமாக இருப்பார்கள்.
ஒரு செயலைச் செய்வதற்கு சரியாக ஆராய்ந்து, அதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உரிய வழிகளை ஆராய்ந்து, அதை சரியான முறையில் நிறைவேற்றுங்கள். ஒரு முடிவை எடுப்பதற்கு அதன் தேவையையும் பயன்பாட்டையும் அதன் வலிமையையும் அறிந்து முடிவை எடுங்கள். முடிவுகளின் தன்மையைக் கொண்டு அதனை மூன்றாக வகுக்கலாம்.
1. ஆம், இல்லை என்ற முடிவு.
2. இவற்றில் ஒன்று
3. தேவையான முடிவு. ( நிற்பந்தங்களுடன் ). இந்த முடிவுகளை, வரையறை செய்வது இந்த மூன்றும்தான். துரித முடிவு, நிதானமான முடிவு ,தாமத முடிவு. ஒரு நாட்டின் கட்டங்கள் திட்டங்கள் அந் நாட்டின் பாராளுமன்றத்தில்தான் ஜனநாயக முறையில் தீர்மானிக்கப் படுகின்றது. ஆனால் இதற்கு நேர் எதிர் மாறானது சர்வாதிகார முடிவுகள். இதிலும் இரண்டுவகை உண்டு பாதிப்பை ஏற்படுத்தும் முடிவுகள், பாதிப்பைஏற்படுத்தாத முடிவுகள்.
நாங்கள் எல்லோரும் நல்ல முடிவுகளைத்தான் எதிர்பார்த்து நிற்கின்றோம் சில நேரங்களில் அதிக நன்மைகள் கிடைத்தால் எமக்கு பாராட்டுக்கள் கிடைக்கும் முடிவுகள் பிழையாகிவிட்டால் கேலி, கிண்டல்,விமர்சனங்கள், எதிர்ப்புக்கள் எல்லாவற்றையும் எதிர்கொள்ள நேரிடும், நான் சொல்வேன் பொதுப்பணிகள் செய்பவர்களுக்கு எருமைத்தோல் வேண்டும் என்று, ஏன் அந்த சொல், அடியையும் தாங்கும் சக்தி வேண்டும். எந்த முடிவிற்கும் பல விளைவுகள் ஏற்படும் அவற்றில் சில.
1.வெற்றி பெறலாம்.
2. தோல்வி அடையலாம்.
3. விமர்சிக்கப்படலாம்.
4. பாராட்டப்படலாம்.
5. பிரச்சனைகள் உருவாகலாம்,.
6.மற்றவர்களால் அழிக்கப்படலாம்.
முடிவுகள் எடுப்பதற்கு சில குணங்கள் முக்கியமானவை. சமயோகிதம், சந்தர்ப்பம், விட்டுக் கொடுக்கும் மனப்பன்மை, மனத் தைரியம், பயன்பாட்டின் அறிவு ஞானம். இவைகளை சுருக்கமாகப் பார்ப்போம்.
1. அணில்கள் எடுக்கும் முடிவு ;- மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை, அதில் பங்கு கொள்வதும் இல்லை. விமர்சிப்பதும் இல்லை
2. அழுங்கு எடுக்கும் முடிவுகள் ;- எடுத்த முடிவு நல்லதோ, கெட்டதோ எதற்கும் கவலைப்படாமல், எடுத்த முடிவை விடாப் பிடியாகக் கொண்டு அதை நிறைவேற்றுவதில் மட்டும் குறியாக இருப்பார்கள்.
3. மந்தி எடுக்கும் முடிவுகள் ;- ஒரு முடிவை தாமதமாக எடுப்பார்கள், அதை தாமதமாக செயல்படுத்திக் கொண்டு இருக்கும்போதே, வேறு ஒரு முடிவை எடுத்தால் நன்றாக இருக்குமே என்று, அடுத்த முடிவிற்குத் தாவி விடுவார்கள். இப்படி நினைத்த நேரமெல்லாம் முடிவை மாற்றினால் விளைவுகள் கிடைக்காமல் இறுதியில் ஒன்றுமே பயன் இல்லாமல் சிதறிப் போகலாம்.
4. யானை எடுக்கும் முடிவுகள் ;- எடுத்த முடிவை நிதானமாகவும், துரித வேகத்துடனும், அதிக பலத்துடனும், அபரிதமான அச்சரியத்திலும் மற்றவர்களை ஆழ்த்தி, எடுத்த முடிவை மாற்றாமல் மற்றவர்களுக்கு நிரந்தர பயன்பாட்டையும் , உபயோகத்தையும் ஏற்படுத்துவார்கள்.
( முடிக்கக்கூடிய முடிவுகளை முடிவாக எடுங்கள், முடிக்க முடியாத முடிவுகளை, முடிவு எடுத்தால் முடிவுகள் முடிக்காமலே முடிந்துவிடும்.)

மீண்டும் சந்திக்கும் வரை உங்கள்
நா. மகேசன்
கனடா.