எமது சமுதாயத்திலே சமூகத்திற்கான சமூக சேவையின் பலம் என்ன ?

By N. மகேசன் on April 10, 2021

Card image cap

எமது சமுதாயத்திலே சமூகத்திற்கான சமூக சேவையின் பலம் என்ன ?

உறவுகளே !!!

நீண்ட நெடிய நமது வாழ்வியலில் பல மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் covid-19 வைரஸை எதிர்த்துப் போராடும் சூழ்நிலையில் எமது பயணம் தொடர்கின்றது. நிச்சயமாக நாம் அனைவரும் இதிலிருந்து அடுத்த கட்டத்துக்குச் செல்வோம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் நான் இருக்கிறேன்.

கிழக்கு முனையில் தொடங்கி மேற்கு முனை வரை எமது இடைக்காடு கிராமத்தின் மழலைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு தனி ஒரு மனிதனாக அன்புடனும் செயல் வீரனாகவும் நின்று பெரிய நிதியினை கனடாவில் பெற்றுத்தந்த பரமசிவம் அண்ணாவை நலமுடனும் ஆரோக்கியத்துடனும் வளமுடனும் வாழ்த்தி எனது எழுத்துப் பணியை தொடர்கின்றேன் .

உங்கள் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் மக்கள் கேட்கும்போது அதனை நிறைவேற்றி விட நடைமுறைக்கு சாத்தியமான நேர்மையான அணுகுமுறையை முயன்று பாருங்கள். அதன் விளைவுகளைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள்.

எல்லோருடைய இதயங்களும் ஒரே மாதிரி துடிக்கின்றது. ஆனால் எல்லோரையும் ஒரு குழுவாக அல்லது ஒரு தலைமையின் கீழ் மாற்றுவது எப்படி என்பதனை எல்லோரும் அறிவார்களா ? அது எப்படி அவர்களை மாற்றுவது என்பதனை அவர்களை ஆசுவாசப் படுத்துவதன் மூலம் அவர்களுக்கு நான் மூன்று விடயங்களை இங்கே கூற விழைகின்றேன்.

1) ஏதேனும் நடந்திருந்தால் நான் அதனைச் செய்தேன் என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

2) ஏதேனும் சரியாக நடந்து இருந்தால் நாம் அதை செய்தோம் என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

3) ஏதேனும் உண்மையிலே சரியாக நடந்திருந்தால் நீங்கள் செய்தீர்கள் என்று சொல்லுங்கள்.

பொதுப்பணி என்ற வார்த்தை மக்களுக்கு சக்தியூட்டும் என்று நினையுங்கள். நீங்கள் பொதுப் பணிகளை செய்யும் போது உங்களை கட்டளை இடும் அதிகாரி என்று நினைப்பவர்கள் இல்லவே இல்லை .,மாறாக மக்களை நேசிப்பவர்கள் என்றுதான் அவர்கள் நினைப்பார்கள். அவர்கள் மக்களது கவனத்தை சரி செய்து கொண்டு வருவார்கள் என்று தான் நினைப்பார்கள்.

இளைய சமூகத்தினை விரைவாக முன்னேற்றி விடுங்கள்.மெல்லிய இரும்புத் தகடு நொறுங்கிவிடும், ஆனால் மொத்தமா தகடு ஒரு பூகம்பத்தை தாக்கிவிடும். நாங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள்ளேயே நாமே ஒப்பந்தம் செய்து கொள்வோம்.

1) சூழ்நிலையின் முரண்பாட்டுக்கு பதிலாக உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வோம்

2) எதிர்ப்புத்தன்மைக்கு பதிலாக ஈர்ப்புதன்மையுடன் செயல்படுவோம்.

3) சச்சரவுக்கு பதிலாக விட்டுக்கொடுத்து போதல் என்ற பொது வீதியில் உறுதி கொள்வோம்.

4) உடைந்து போவோம் என்பதை விட்டு ஒத்துப் போவோம் என்று இணைந்து கொள்வோம்.

இருட்டைக் கண்டு குழந்தைகள் பெற்றோரின் கைகளை பிடிப்பது போன்று

பொதுப் பணிகளை செய்யும் இளைஞர்களுக்கு நீங்கள் முன் பணி செய்தவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் . புதிய சூழலில் சற்று தயக்கம் ஏற்படுவது வழக்கம் ஆனால் மன தைரியமும் விடா முயற்சியும் உங்களை வெற்றி பெறச் செய்யும் , எதிர்ப்புகளும் விமர்சனங்களும் உங்கள் முயற்சியை தடை செய்யா வண்ணம் விலகிக் கொள்ளுங்கள், ஆனால் பயமும் விமர்சனங்களும் பல பேரை முடக்கிவிடும். நீங்கள் இவர்களுக்கு இடம் கொடுக்காதீர்கள் . ஆனால் நிரந்தரமான முயற்சி பூரணமான வெற்றியை தரும் .

நீர் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் அதை தாங்குகின்ற குடம் தூய்மையாக இருத்தல் வேண்டும். அதேபோன்று கணவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்றால் அவனை தாங்குகின்ற மனைவி நல்லவளாக இருக்க வேண்டும்!!! .

மகேசன்.