By நா.மகேஸ்வரன் on May 31, 2022
மன அழுத்தம் என்றால் என்ன? அது எப்படி வருகின்றது.
அது எங்களால? அல்லது மற்றவர்களால?
உயிரினங்களிலே மனித இனம் உயர்ந்ததாக கருதப்படுகிறது. “மனம்” என்ற பெயரினாலும் “மானம்” என்ற பெயரினாலும் “மனிதன்” என்ற பெயரை பெற்றான்.
( விலங்குகளுக்கு இது இல்லை) ஒரு மனிதனின் மனதில் தோன்றுகின்ற எண்ணங்கள்தான் முன்னேற்றமும், பின்னேற்றமும் வருகின்றது. அவனுடைய முன்னேற்றத்துக்கும், பின்னேற்றத்திற்கும் காரணம் அவனே. அவனின் மனதில் தோன்றும் எண்ணங்கள் செயல்வடிவம் பெறும் பொழுது நன்மைகளோ தீமைகளோ ஏற்படுகின்றன.
மனதில் பல வகையான எண்ணங்கள் தோன்றும். அவற்றில் தீயவை எவை நல்லவை எவை என்று பகுத்து அறிவதே பகுத்தறிவு ஆகும் . மற்ற உயிரினங்களுக்கு இல்லாத சிந்திக்கும் ஆற்றலை மனிதன் பெற்றிருக்கின்றான்..இப்படிப்பட்ட மனதை ஆளும் சக்தி நமது மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு உண்டு. நாங்கள் தாழ்ந்த மனம் கொண்டால் தாழ்வு மனப்பான்மைக்கும் உயர்ந்த மனம் கொண்டால் உயர்ந்த மனப்பான்மைக்கும் ஏற்ப இதை தீர்மானிப்பது மனமே.
மனவலிமை இன்மை அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இதனால் முயற்சி தடைபடும் .இதனால் முன்னேற்றத்தையும் வெற்றியையும் இறந்து விடுவீர்கள். நெருப்பு ஆக்கவும் வல்லது. அழிக்கவும் வல்லது .அதே போல் தான் மன அழுத்தம் அழிக்கவே வல்லது. தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தங்கள் திறமையிலே சந்தேகம் வரும். பயம் ,கோவம், வேண்டாத கற்பனைகள் கீழ் நிலையில் இருப்பவர்களின் துன்பத்தையே சிந்திப்பது.விதை விதைக்க முன்பே விளைச்சலை எதிர்பார்ப்பது. ஆரம்பத்திலேயே நட்டத்தை பற்றி சிந்திப்பது. இது போன்ற காரணங்களினால் ஒரு மனிதனுக்கு மன அழுத்தம் ஏற்படுகின்றது.
மன அழுத்தம் மற்றவர்களால் ஏற்படுவது அல்ல . அது தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக்கொள்வது என்று நான் சொல்வேன். அது எப்படி? இப்படித்தான்
1
ஒருவன் தன்னை தாழ்வாக நினைத்து கொள்வதே மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம்.
2
தன்னால் இந்தச் செயலைச் செய்ய முடியாது.
3
தன்னால் படிப்பில் வெற்றி பெற முடியாது.
4
எத்தனை முறை படித்தாலும் கணிதம் வராது.
5
என்னால் மற்றவர்களைப் போல் முன்னேற முடியாது.
6
தரமாகவும் சரியாகவும் என்னால் வேலை செய்ய முடியாது.
இப்படியான மன அழுத்தம் கொண்டவர்கள் எப்படி ஒரு காரியத்தை செய்ய முடியும்? இப்படிப்பட்டவர்களுக்கு பயம் ஏற்படுகின்றது. பயம் என்னும் மன அழுத்தத்தைக் கூட்டும்.
1
என்னால் முடியும் இது உயர்ந்த மனம்.
2
என்னால் முடியாது இது தாழ்ந்த மனம்.
மன அழுத்தம் தெளிவில்லாத மனதில் தான் தோன்றும் இது தூசு படிந்த கண்ணாடி அல்லது துருப்பிடித்த இரும்பு போன்றது. கண்ணாடியில் உள்ள தூசுசை தட்டிவிட்டால் சரியாக பார்க்க முடியும். அதேபோல் மன அழுத்தத்தை நீக்கி விட்டால் மனம் தெளிவு பெறம். வழி தெரியாதவர்கள் தெரிந்து விட்டால் அவ்வழியில் உள்ள பள்ளம் மேடு தெளிவாக தெரிந்துவிடும் அதே போல் மனம் தெளிவாக இருந்தால் வாழ்க்கையின் பள்ளம் மேடுகள் தெளிவாக தெரியும். அதேபோல் பகுத்தறிவுடன் நாம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
மன அழுத்தத்தில் இருந்து நாம் விடுபடுவதற்கு நாம் கடைபிடிக்க வேண்டியவை
1
பயம் இல்லாத மனம்
2
சந்தேகம் இல்லாத மனம்
3
அச்சம் இல்லாத மனம்
4
துணிவு உள்ள மனம்
5
அன்புள்ள மனம்
6
கொள்கை உள்ள மனம்
7
தன்னம்பிக்கை உள்ள மனம்
மன அழுத்தம் கொண்டவர்கள் ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்னரே அதில் தடங்கல் ஏற்பட்டு விடும் என்று பயப்படுவார்கள். மன அழுத்தத்தில் இருந்து நாங்கள் விடுபட்டால் நமக்குள் நம்பிக்கை பலப்படும்., யார் தும்மினாலும் பயப்பட மாட்டோம்., எங்கே போகிறீர்கள் என்று கேட்டாலும் நாங்கள் தயங்க மாட்டோம். எத்தனை பூனைகள் இங்கே வந்தாலும் பாவம் அது போகட்டும் என்று விட்டு விடுவோம். இப்படிப்பட்ட சகுன தடைகளில் இருந்து விடுபடுவோம்.
சில பெற்றோர்களே பெரியோர்களே தெரிந்தோ., தெரியாமலோ தங்கள் பிள்ளைகளையும்,மனைவிகளை அல்லது கணவன்மார்கயோ மட்டம் தட்ட முயல்வார்கள் இவர்கள் தங்கள் பிள்ளைகளை விட மற்றவர்களுடைய பிள்ளைகள் உயர்ந்தவர்கள் என்றும் வசை பாடிக் கொண்டிருப்பார்கள். சிலர் தங்கள் கணவரை விட மற்றவர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்வார்கள். இது பெரிய பாதகத்தில் கொண்டு போய் தள்ளிவிடும். தாழ்வு மனப்பான்மையின் உச்சகட்டம் இதுபோன்ற மன அழுத்தம் சில நேரங்களில் தற்கொலையில் கூட முடியும்.
பழமொழி ஒன்று சொல்வார் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று பெற்றோர்கள் இருவகை தங்கள் பிள்ளைகளை உயர்த்திப் பேசுவார்கள்.இன்னொரு வகையினர் எதற்கெடுத்தாலும் குற்றம் குறை கண்டு அவர்களை மனம் குறுகச் செய்து ரகளை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று சொல்லி அவர்களை மனம் வெறுக்கும் நிலைக்கு னுக்குகொண்டு செல்வார்கள். அல்லது அந்தப் பிள்ளைக்கு சிந்திக்கவும் தனது திறமையை வளர்ப்பதற்கு முயற்சி செய்ய மாட்டார்கள் இதனால் அப்பிள்ளைக்கு மனதில் மன அழுத்தத்தை உருவாக்கி விடும் இதன் மூலம் அப்பிள்ளையின் வாழ்வையே மழுங்கடித்துவிடும்.
சிலரின் விமர்சனங்களும் மற்றவர்களின் மனதையும் முயற்சியையும் மழுங்கடித்துவிடும்; இவருக்கு இப்படி கூப்பிட்டால் கோபம் வரும் , இல்லை காசு கேட்டால் கோபம் வரும், இவரைப் பற்றி எனக்குத் தெரியும், அவர் உண்மை சொல்வது இல்லை போன்ற கதைகளை சொல்வார்கள். ஏன் இவர்கள் மற்றவர்களை பற்றி இப்படி சொல்கிறார்கள்?! தங்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வார்கள்?! இப்படி கதைப்பவர்களின் கதைகளை சிலகாலம் கேட்டுவிட்டு பின்னர் இவரைக் கண்டால் எல்லோரும் விலகி விடுவார்கள்.
தாழ்வு மனப்பான்மை வருவதற்கு விதியா?, சதியா?, பாதாளத்தில் அல்லது படுகுழியில் விழுந்தவன் வெளியே வரவேண்டும் என்று எண்ணுவது சாதாரணம். அதேபோல் தாழ்வுமனப்பான்மை இருப்பவன் அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்று முயற்சிக்க வேண்டும்.
ஒரு முறை ஏமாற்றப்பட்டடால்., ஏமாற்றியவனுக்கு அவமானம். இரண்டாம் முறை ஏமாற்றப்பட்டடால்., ஏமாற்றபட்டவனுக்கு அவமானம். எனவே கவனமாக உங்கள் வாழ்க்கையை எடுத்துச் செல்லுங்கள்
நன்றியுடன் நா.மகேஸ்வரன்