எந்த நேரத்தில் எந்த வேலை செய்ய வேண்டும்

By நா. மகேசன் on July 21, 2022

Card image cap

எந்த நேரத்தில் எந்த வேலை செய்ய வேண்டும், அதே நேரத்தில் அந்த வேலையை செய்ய வேண்டும்

நாம் ஒவ்வொருவரும் மாபெரும் வாழ்க்கைப் பயணத்தை ஒவ்வொரு நாளும் எதிர் கொள்கிறோம். இந்த நேரத்தில் எங்கள் வாழ்க்கைப் பயணத்திற்கு உதவுபவர்களையும், ஆதரவு தருபவரையும் அணைத்துக் கொள்வோம். ஆனால் சிலர் ஆதரவு தர தயங்குவார்கள். அவர்கள் சகோதரர்களாக அல்லது உறவினர்களாக அல்லது நீண்டகால நண்பர்களாகவும் இருக்கலாம். ஆனால் இவர்கள் எதிர்த்தாலும், நீங்கள் உங்கள் மனதை சரியான உறுதியாகவும் நான் சரியாகத்தான் நடக்கிறேன் என்னும் மன உறுதியுடன் இருங்கள். பின் நீங்கள் வெற்றியடையும் பொழுது எதிர்த்தவர்களே உங்களுக்குச் சொல்வார்கள் நீங்கள் வெற்றியடையப் போகிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும் என்று.
நான் எடுக்கும் ஒவ்வொரு விடயத்திற்கும், நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பும், விமர்சனமும் செய்பவர்களை நான் என்ன செய்யலாம் என்று நீங்கள் உங்களுக்குள்ளேயே கேள்வி கேட்பதும் உண்டு. ஆனால் இப்படிப்பட்ட மனிதர்களிடம் பழகும்போது பக்குவமாகவும், அவதானமாகவும்,எச்சரிக்கையாகவும் இருப்பது முக்கியம். உங்கள் பொதுப் பணிகள், தனிப்பட்ட முன்னேற்றம் போன்றவற்றிற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக சிலர் இருப்பார்கள். ஆனால் இவர்களைப்பற்றி அவசர முடிவு எடுக்காதீர்கள். அவர்களை விட்டு விலகி நில்லுங்கள். அவர்கள் உங்கள் பக்கம் வரும்வரை காத்திருங்கள்.
நீங்கள் உங்களது பழைய நண்பர்களைப் புறக்கணிக்கத் தேவையில்லை, ஏன் அவர்கள் உங்களுக்கு நன்மை செய்வது என்று தீமையைச் செய்த்திருக்கலாம். உங்களை ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றி இருக்கலாம். தங்கள் தேவைக்காக உங்களுடன் நண்பர் வேசம் போட்டு இருக்கலாம். தன் சொந்த இலாபத்திற்காக உங்களை நண்பனாக பாவித்து இருக்கலாம். இப்படி பலர் இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு உண்மை நிலையை விளங்கப்படுத்தி அவர்களையும் சந்தர்ப்பவாதி என்ற நிலையில் இருந்து மாற்றிக் கொள்ளலாம்.
நான் சொல்வேன் நீங்கள் ஒரு விடயத்தை வெற்றிகரமாக செய்ய வேண்டும் என்றால் அந்த விடயத்தில் திறமை வாய்ந்த அல்லது திறமையானவர்களின் ஆலோசனையைக் கேட்க வேண்டும். அவர் சாதாரணமாகச் சொல்வார், அவரின் ஆலோசனையால் நாம் வெற்றியடையலாம், ஆனால் சிலரின் மனம் அதற்கு அனுமதிப்பது இல்லை. இதனால் இவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையில் பயணிக்காமல், இருந்த நிலையிலேயே இருக்கிறார்கள்.
வெற்றிகரமாகப் பொதுப்பணிகளையும் செய்பவர்களை பொதுவாக ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் ஆதரவு வழங்குவதையும் காண்கிறோம்.ஆனால் சில எதிர்ப்புக்கள் இருக்கத்தான் செய்யும் இது புறக்கணிக்கத்தக்கது. இதுவும் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சாதாரண விடயம் தான். என்னை யாரும் ஊக்குவித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பொதுப்பணிகள் சமூகப்பணிகள் செய்பவர்கள் சிந்திப்பதுண்டு. ஆனால் அவர்கள் ஏதோ ஒன்றால் ஊக்குவிக்கப் பட்டுள்ளனர் என்பதுதான் . ஆனால் அவர்கள் ஏன் சமூகத்தால் ஆதரிக்கப்படவில்லை, எதிர்ப்புக்கள் தான் காரணம். அனைத்து எதிர்ப்புக்களிலும் பயம்தான் மிகவும் சக்தி வாய்ந்தது என்று நான் சொல்வேன். மன உளைச்சலையும் அச்ச உணர்வுகளையும் தோற்றுவிக்கின்றது. உங்களது சமூகப் பணிகளையும் அதை அழிப்பதற்கும் அது வழிவகுக்கின்றது. இதற்கு நேர் எதிர்மாறானது எதுவென்றால் சாதிக்கும் திறமைதான் அது.
நாம் வெறுமனே நண்பர்களை மயக்கி அவர்களை எங்கள் மீது கவர்ச்சி அதிகம் ஏற்படுத்தி அவர்களை, எங்கள்மீது நம்ப வைத்தோம். ஆனால் உண்மையான, நேர்மையான நண்பர்கள் நம்பி இருக்க மாட்டார்கள். இப்படி நண்பர்களை அடையவும் முடியாது. இப்படிப்பட்ட நண்பர்களினால்தான் வாழ்க்கையில் சிரமங்களும் பல சங்கடங்களும் ஏற்படும். இப்படிப்பட்ட மனிதர்களிடம்தான் பல தோல்விகள் நிறைந்து கிடக்கும். உங்களது நண்பர் உங்களிடம் கதைத்துவிட்டு கடைக் கண்ணால் உங்களைப் பார்த்தால் அந்த நண்பர் எப்படிப்பட்டவர் என்று உங்களுக்கு சுலபமாகப் புரியும் என்று நான் சொல்வேன்.
ஒருவரை பொதுப்பணிகளையோ, சமூகப் பணிகளையோ செய்யத் தூண்டுவதற்கு என்ன வழிகள் உண்டு என்று நீங்கள் சிந்தித்ததுண்டா?. அதற்கு ஒரே வழிதான் உண்டு. அது என்ன வழி, அவருக்கு அச் செயலில் ஆர்வத்தையும், அனுசரணையும் ஒத்துழைப்பையும் வழங்குவதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால் பாருங்கள் நாங்கள் ஒரு துப்பாக்கி முனையில் ஒருவரிடம் பணம் பெற்றுக் கொள்ளலாம். வேலைத் தலத்தில் வேலையால் நிற்பாட்டி விடுவேன் என்று எமது காரியத்தை நிறைவேற்றலாம். ஒரு குழந்தையை மிரட்டி அல்லது அடித்து ஒரு செயலைச் செய்விக்கலாம். ஒருவருக்கு தண்டனை கொடுத்து அடிபணிய வைக்கலாம், ஆனால் இதுவெல்லாம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
நான் சொல்வேன் சமுதாயத்தில் நல்லவர்களை காண்பதே அரிது, ஏன் என்றால் எல்லோரும் நல்லவர்கள் மாதிரி நடிப்பதால்.
பிள்ளைகளைப் பற்றியும் சிந்தியுங்கள், பிறரைப் பற்றியும் சிந்தியுங்கள்

நா. மகேசன்
கனடா.