By நா. மகேசன். கனடா. on Dec. 24, 2022
நாங்கள் பிள்ளைகளை எப்படி வளர்த்தோம், எப்படி வளர்க்கின்றோம், எப்படி வளர்ப்போம். கழுகு மாதிரியா ?. கங்காரு மாதிரியா ?.
மனிதனின் வாழ்க்கைமுறை இரண்டு வகைப்படும்.
1. குடும்ப வாழ்க்கை.
2. கூட்டுக் குடும்ப வாழ்க்கை.
குடும்ப வாழ்க்கைக்கு கழுகையும், கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு கங்காருவையும் உதாரணமாக எடுத்து உவமாயம் உவநேயத்துடன் இதனை எழுதுகின்றேன். உயர்திணையில் உள்ள மனிதர்களின் பிள்ளை வளர்ப்பை எழுதுவதற்கு என் மனதில் எண்ணம் தோன்றவும் இல்லை. இதை மனிதரை உதாரணம் காட்டி எழுத என் சிந்தனை இடம் கொடுக்கவும் இல்ல. குடும்ப வாழ்க்கைக்கு கழுகையும், கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு கங்காருவையும் எடுத்துக் கொள்கிறேன். இதற்கு ஒரு பறவையையும், ஒரு விலங்கையும் எடுத்துக் கொள்கிறேன்.
சரி முதலில் குடும்ப வாழ்க்கையைப் பார்ப்போம். கழுகு ஆணும், பெண்ணும் ஒன்றாகத்தான் வாழும். மிகவும் அன்பாகவும் ஒற்றுமையாகவும் வாழும். இவைகளிடம் கருத்து வேற்றுமை உருவாவது இல்லை. சரி இவை இரண்டும் தங்கள் வாரிசை எப்படி வளர்க்கும் என்பதைப் பார்ப்போம். மிகவும் கவர்ச்சியாக இருக்கும். முதலில் மிகவும் பாதுகாப்பான இடத்தில் கூடு கட்டும். எப்படி கூடு கட்டும்
1. முதலில் பெரிய நீளமான முட்களைப் போடும்
2. மரக் கொப்புகளைப் போடும்
3. இலைகளைப் போடும்
4. தும்புகளைப் போடும்
5. கடைசியாக பஞ்சைப் போட்டு முட்டை இடும்.
முட்டை இட்டு குஞ்சு பொரித்து 20 ம் நாள் பஞ்சை நீக்கி விடும். அதன் பிறகு ஒவ்வொன்று ஒவ்வொன்றாக நீக்கி விடும் ஆனால் கழுகு குஞ்சுகள் மிகவும் சோம்பேறி. தாய் தந்தையர் கொடுக்கும் உணவை உட்கொண்டுவிட்டு நன்றாக உறங்கும். தாய் தந்தையருக்கு எப்படி பிள்ளைகளை வளர்ப்பது என்பது தெரியாதா ?. நன்றாகத் தெரியும். அதனால்தான் நான் முன்பு கூறியது போல் கூட்டைக் கட்டும். கூட்டில் எல்லாவற்றையும் நீக்கிவிட்டபின் கடைசியில் மிஞ்சுவது நீளமான முட்கள்தான் கூட்டில் கழுகு குஞ்சு இருக்க முடியாது முட்கள் குத்தும். இதனால் கூட்டின் கரைக்கு வரும். வந்தவுடன் வெளியில் விழாமல் இருக்க சிறகை முதலில் அசைத்சு தன்னை கூட்டில் இருந்து விழாமல் பாதுகாத்துக் கொள்ளும். இறகுகளை அடித்து தங்களது இறகுகளைப் பலப்படுத்தியதை அறிந்த கழுகு குஞ்சை பறக்க பழக்கும். ஆனால் குஞ்சு பழகுவதே இல்லை. தாய் தந்தையர் கொடுக்கும் உணவை உண்டு வாழத்தான் விரும்பும்
ஓர்நாள் தாய்பறவை தன் குஞ்சை காலால் தூக்கி கொண்டுபோய் மிகவும் உயரத்தில் கொண்டுபோய் கையை விடும். ஆனால் குஞ்சு நிலத்தில் விழமுன் ஏந்திவிடும். இப்படி பலமுறை செய்தபிறகு குஞ்சுக் கழுகு தன்பாட்டிலேயே பறக்க ஆரம்பித்து தாய் தந்தையரை விட்டு அவர்களின் ஆதரவு, அனுசரணை இல்லாமல் மிகவும் உறுதியாக தனது தனிப்பட்ட வாழ்க்கையை வெற்றிகரமாக வாழும்.
சரி, நான் ஏன் கங்காருவை உதாரணமாக எடுத்தேன். மற்ற் விலங்களுக்கு இல்லாத மூன்று சிறப்புக்கள் கங்காருவிடம் உண்டு.
1. சுகப்பிரவசம் (ஒரு அங்குலத்தில் உள்ள இறைச்சித்துண்டுபோல் குட்டி இருக்கும் )
2. உடலில் ஒரு பை ( குட்டியை வளர்ப்பதற்கு )
3. உடன் ஈன்ற குட்டிக்குப் பால் கொடுக்கும், அதற்கு முன் ஈன்ற குட்டிக்கும் பால் கொடுக்கும். ஆனால் பாலின் தன்மையை மாற்றிக் கொடுக்கும். இத் திறமை வேறு எந்த விலங்குகளுக்கும் இல்லை. இதற்கு மட்டும்தான் உண்டு.
சரி, இவைகளின் வாழ்க்கை முறையைப் பார்ப்போம். இனங்கள் கூட்டமாகத்தான் வாழும். தாய், தந்தை.குட்டிகள். பேரக்குட்டிகள் என்று எல்லாம் ஒன்றாக வாழும் அவர்கள் அளவிற்கு மிஞ்சிய பாதுகாப்புடனும்,ஆதரவுடனும் வாழும். கஸ்டத்தை அறியாமல் குட்டிகள் வாழும். ஆனால் துர்ரதிஸ்டவசமாக தாய் இறந்தால் குட்டிகள் சிலகாலம் மிகவும் சஞ்சலத்திற்கு ஆளாகி, பின் சில காலத்தில் தமது இயல்பு வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடும். இப்படித்தான் மனிதனின் வாழ்விலும் அதிகமான காலம் தாய் தந்தையரின் ஆதரவுடனும் வாழும் பிள்ளைகள், துர்ரதிஸ்டவசமாக தாயையோ, தந்தையையோ இழந்துவிட்டால் சிலகாலம் சஞ்சலப்பட்டு பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்கள், இதப்பற்றி கவலைப்படத்தேவையில்லை. இவை எல்லாம் நமது வாழ்க்கையில் வந்து கடந்து செல்பவையே!. நாங்கள் இறவாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு வழிதான் இருக்கின்றது. அது என்ன. பிறவாமல் இருப்பதே!.நான் சொவேன் ஒன்றைத்தான். யாருக்கும் எப்பொழுதும் என்னவும் நடக்கலாம் ஞாபகத்தில் வைத்திருங்கள், மற்றவர்களை ஏளனம் செய்யாதீர்கள். ஒருதரின் வாழ்க்கைக்கு ஒளி விளக்கு ஏற்றிவிடுங்கள். ஏனையோருக்க உதவுங்கள் அவர்களின் மனதில்தான் தெய்வம் இறைஞ்சு இருக்கும். அதனால்தான் நாங்கள் கடவுளை இறைவன் என்றும் அழைக்கின்றோம்.
நான் குழந்தை வளர்ப்பதற்கு அஃறிணையில் உள்ள ஒரு பறவையையும், விலங்கையும் எடுத்து உதாரணமாக்க் கொண்டேன். இவைகளின் பிள்ளை வளர்ப்பில் இருந்து மனிதன் எவ்வாறு உயர்திணையாக மாறுகின்றான் இந்த மூன்று காரணங்கள்தான்.
1. புலி குட்டிக்கு இறைச்சி அடித்து சேமித்து வைப்பதில்லை.
2. மாடு கன்றுக்கு புல் சேமித்து பைப்பதில்லை.
3. பறவைகள் குஞ்சுகளுக்கு இரை சேர்த்து வைப்பதில்லை
ஆனால் மனிதன் தனது குழந்தைகளுக்கு செல்வங்களை சேர்த்து வைக்கின்றான். இந்த ஒரு முக்கியமான காரணத்தால்தான் மனிதன் உயர்திணையாகின்றான், நல்ல விடயம்தான். நான் சொவேன், இத்துடன் பிள்ளைகளுக்கு நல்லவைகளையும் சேர்த்து வையுங்கள். நல்லவைகளை எப்படி சேர்ப்பது இரண்டே வழிகள்தான் .
1. தானம் செய்வது.
2. தர்ம்ம் செய்வது.
மிகச் சிறப்பாக பிள்ளைகளின் வாழ்க்கை அமையும்.
மீண்டும் ஒரு பொழுதில் சந்திப்போம்.
நா. மகேசன்.
கனடா.