By நா. மகேசன். on Feb. 16, 2022
விமர்சனம் என்றால் என்ன ?. கேள்விகளின் அண்ணன்
1. நியாயமாகவோ அல்லது நியாயம் இல்லாமலோ நாம் விமர்சிக்கப்படும் நேரம் வரும். இந்த உலகில்பெரியவர்கள், முன்னேற்றவாதிகள், சமூக சேவர்கள் எல்லோரும் விமர்சிக்கப்பட்டு இருக்கிறார்கள். நியாயமான விமர்சனம் சமூகத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். அதை ஒரு உயர்ந்த கருத்தாகவே எடுத்துக் கொள்ளலாம். நியாயமற்ற விமர்சனம், நியாயமற்ற கேள்விகள் மாறுவேடம் கொண்ட பாராட்டாகும். சராசரி மக்கள் முன்னேற்றவாதிகளையும், சமூகசேவை செய்பவர்களையும் வெறுக்கின்றார்கள். முன்னேற்றம் அடையாதவர்களையும், சமூக சேவை செய்யாதவர்களையும் யாரும் விமர்சிப்பதும் இல்லை., கேள்வி கேட்பதும் இல்லை.
2. நீங்கள் ஒன்றுமே செய்யாமல், ஒன்றுமே பேசாமல், ஒன்றுமே இல்லாமல் இருந்தால் நான் சொல்வேன் உங்களை ஒருத்தரும் விமர்சிக்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் ஒன்றுக்கும் இல்லாதவர்களாகி விடுவீர்கள்.
நியாயமற்ற விமர்சனம், நியாயமற்ற கேள்விகள் இரண்டு காரணங்களால் வருகின்றது
1.அறியாமை ;- அறியாமையில் இருந்து விமர்சனம், அல்லது கேள்விகள் இருந்தால் அதற்கு விளக்கம் கொடுப்பதன் மூலம் அதனை திருத்திவிடலாம்.
2. பொறாமை ;- முன்னேற்றத்தில், சமூக சேவையில் விமர்சனம், கேள்விகள் வந்தால் அதனை மாறுவேடத்தில் வந்த பாராட்டாக ஏற்றுக் கொள்ளுங்கள். நியாயம் இல்லாத விமர்சனம், கேள்விகள் வந்தால், கேள்வி கேட்பவர்கள் நீங்கள் இருக்கும் இடத்தில் இருப்பதற்கு விருப்பப்படுகிறார்கள் என்பதுதான். கனிந்த மரத்திற்கே கல்லெறி விழும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
உண்மையான விமர்சனத்தை அல்லது கேள்விகளை, ஏற்றுக் கொள்ளும் திறமை இல்லாமல் இருந்தால், அது தாழ்வான சுய மதிப்பின் வெளிப்பாடே ஆகும். விமர்சனத்தை கேள்விகளை ஏற்றுக் கொள்வதற்கான சில விதி முறைகள்.
1. உண்மையான சிந்தனையோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.
2. அதில் இருந்து அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
3. அவர்களின் கேள்விகளுக்கும் விமர்சனத்திற்கும் நீதியான பதிலைக் கூறுங்கள்.
4. நல்ல விமர்சனத்தையும், நன்மை பயக்கக்கூடிய கேள்விகளையும் கேட்பவர்களுடன், மரியாதையுடனும்,நன்றியுடனும் இருங்கள். ஏன் என்றால் அவர்கள் உங்களது உண்மை நிலையை உணர்ந்தவர்கள்.
5. உயர்ந்த குணம் உள்ளவர்கள் நல்லவித விமர்சனத்தையும் , கேள்விகளையும் ஏற்றுக் கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள். வெறுப்பு அடைய மாட்டார்கள்.
பெரும்பாலான மக்களிடமுள்ள உணர்வு என்னவென்றால் முன்னேற்றவாதிகளையும், சமூக சேவை செய்பவர்களையும் பாராட்டுவதே அவர்களின் விருப்பமுமாகும்.
நா. மகேசன்.