மச்சங்களும் அதன் பலன்களும்

By N. Mahesan on Aug. 24, 2021

Card image cap

மச்சங்களும் அதன் பலன்களும்

தற்போது கனடாவில் தேர்தல் திருவிழா ஆரம்பமாகி இருக்கும் சூழ்நிலையில் covid-19 தாக்கத்தின் பாதிப்புகளும் குறைவதுமாக பின்னர் கூடுவதும் ஆக அதை கட்டுப்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது மாக தினந்தோறும் நமது வாழ்க்கையை மென்மேலும் துன்ப படுத்திக்கொண்டு அனைத்து துயரங்களையும் துன்பங்களையும் கடந்து வாழ்க்கை என்னும் பாதையிலே நீண்ட தூர பயணத்தை பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் இப்போது நமது முன்னோர்களான சித்தர்கள் சில கருத்துக்களை வாழ்வியலுக்கு விட்டுச் சென்ற காரணத்தை எனது அறிவியலோடு அலசி ஆராய்ந்து கருத்துக்களை உங்கள் முன் அனைவருக்கும் வைக்கின்றேன். இவ்வண்ணம் நன்றியுடன் மகேஸ்.

நமது சித்தர்கள் உடலில் தோன்றுகின்ற மச்சங்களை அடிப்படையாக வைத்து மனிதர்களுடைய குணா அம்சங்களையும் அதன் பலாபலன்களையும் நமக்காக அருளிச் சென்றிருக்கிறார்கள்.

உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் துயரங்களும் துன்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன , குறிப்பாக சிலருக்கு போராட்டமாகவே வாழ்க்கை அமைகின்றது.

மனிதர்களின் குணங்களை காட்டுவது அவர்கள் உடம்பில் இருக்கும் மச்சங்கள் ஆகும். மச்சங்கள் பற்றிய நமது முன்னோர்கள் எழுதிச் சென்ற குறிப்புகளை பற்றி குறிப்பாக பார்ப்போம்.

மச்சங்கள் கருப்பு நிறத்தில் அல்லது பழுப்பு நிறத்திலோ அல்லது சிவப்பு நிறத்திலோ சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ காணப்படுகின்றன

மச்சங்கள் பொதுவில் ஆண்களுக்கு ஒரு மாதிரியாகவும் பெண்களுக்கு இன்னொரு மாதிரியாகவும் பல வளங்களை கொடுப்பதாக சித்தர்கள் எழுதியுள்ளார்கள் சித்தர்களில் இடைக்காட்டு சித்தரின் கருத்தை நான் உங்கள் முன் வைக்கின்றேன்.

நெற்றியில் மச்சம்

தைரியம், பிறருக்கு பணிந்து போகாத தன்மை.பொறாமை குணம் கொண்டவர்கள்.

கண்கள்

அதிக நண்பர்கள், பெரும்புகழ், இறையருளில் நாட்டா.

புருவம்

வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் ஊதாரித்தனமான செலவாளியாக இருப்பார்.

மூக்கில்

இறையருளில் அதிக நாட்டம் இரக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

உதட்டில்

அதிக செல்வம் ,அறிவில் உச்ச நிலை அடைதல், கலைகளில் அதிக நாட்டம்.

கன்னம்

ஏற்றத்தாழ்வான வாழ்க்கை வசீகரமான உடலமைப்பு பிறருக்கு உதவுகின்ற மனப்பான்மை.

வலது கண் கீழே

தந்தையை அவமதித்தல்

நாடி

பிறரைப் பற்றி உண்மைக்கு புறம்பாக புறம் கூறுதல் மற்றவர்களின் வாழ்க்கையில் இடையூறுகளை செய்கின்ற கீழ்த்தரமான குணம் கொண்டவர்கள்.

செவிகள்

பெற்றோரிடமும் கணவரிடமும் மிகவும் அன்பாகவும் சாதுர்யமாகவும் இருப்பார்கள் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் பாசமாக இருப்பார்கள்

நாக்கில்

தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். அனேகமாக இவர்கள் அறிஞர்களாக கலைஞர்களாக தத்துவ ஞானிகளாக விஞ்ஞானிகளாக இருப்பதற்கு சாத்தியங்கள் அதிகம்.

கழுத்தில்

ஆரோக்கியமானவர்கள், திடகாத்திரமானவர்கள், மகிழ்வான வாழ்க்கையை கொண்டு செல்பவர்கள்.

வலது காலின் கீழ் பகுதி

கணவனுடன் அதிக பாசமாக இருத்தல் அதை வழிகாட்டுவது அல்லாத குணம் கொண்டவர்கள்.

முதுகில்

கடின உழைப்பாளிகள், இலட்சியவாதிகள்.

வயிற்றுக்கு மேல் மார்பின் கீழ் பகுதியில் மச்சம் உள்ளவர்கள் பாசமாக இருப்பார்கள் பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள் நல்ல சமூக சிந்தனை உள்ளவர்களாகவும் துடி துடிப்பா நினைத்த காரியங்களை நிறைவேற்றுவார்கள் ஆகும் இருப்பார்கள்.

காராம் பசு பற்றிய சில குறிப்பு : இவ்வகை பசு மாடு கருப்பு நிற முகமும், கருப்பு நிற கொம்புகளும், பால் தரும் காம்புகள் கருப்பாகவும், குழம்பு என்கின்ற பகுதி கருப்பு நிறமாகவும் இருக்கின்றது. இவை கூடுதலாக நமது ஊரில் இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இப் பலன்கள் பல வகையாக இருப்பினும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களுடைய திறமையும் அவர்களுடைய பண்புகளும் மாறுபட்டே காணப்படுகின்றன இருப்பினும் என்னால் அறிந்துகொண்ட கற்றுக்கொண்ட சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நன்றியுடையவனாக இருக்கின்றேன் இவைகள் எனது வாழ்விலும் புற வாழ்விலும் நடந்த சில விஷயங்களை ஒப்பிட்டு இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன்.

நன்றி

நா மகேசன்