By நா. மகேசன். கனடா on June 11, 2024
எல்லோரும் இந்த ஒன்றைத்தான் முதன்மையாக விரும்புவார்கள்
நாம் எல்லோரும் ஒர் உண்மையான கருத்தை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.. அது என்ன?. மக்கள் எல்லோரும் என்னை விரும்ப வேண்டும் என்பதுதான் எவ்வாறாயினும் மக்கள் என்னை விரும்பி இருக்கிறார்களா?, இல்லையா என்பது பற்றி எனக்கு அக்கறை இல்லை என்று சொன்னால் அவர் நேர்மறையில் எதிர்மறையாகப் போகிறார் என்றுதான் அர்த்தம். அவர் உண்மையைக் கூறவில்லை என்று அர்த்தம்.
பிறரால் பாராட்டப்பட வேண்டும் என்பது மனிதனின் முதன்மையான விருப்பமாகும். பிறரால் நான் மதிக்கப்பட வேண்டும், பிறருக்கு நான் உதவி செய்ய வேண்டும் என்ற மனித குலத்தின் அடிப்படையான குணமாகும். நீங்கள் எவரிடமும் கேளுங்கள், நீங்கள் எதனை உயர்வாக மதிக்கிறீர்கள் என்று. நான் பிரபலமாக மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்றுதான் விடைவரும். வயது முதிர்ந்தவர்கள் இதைத்தான் முதன்மையாக விரும்புவார்கள். நாங்கள் பொதுப்பணி செய்தவர்களை உயர்வாக மதிக்க வேண்டும், அவர்களுக்கு உகந்த மரியாதை கொடுக்க வேண்டும்.
நீங்கள் பிரபலமாக வரவேண்டும் என்றால் நீங்கள் இயல்பாக இருங்கள். நீங்கள் பிரபலமாக கடுமையான முயற்சி எடுத்தால் நீங்கள் அதனை அடைவதற்கான வாய்ப்புக்களைக் குறைத்துக் கொள்வீர்கள். அவரிடம் ஏதோ ஒரு திறமை இருக்கின்றது என்று மற்றவர்கள் கூறும்படியாக மனிதனாக வாழுங்கள். இப்படியானால் மக்கள் உங்களை பெரிதும் மதிப்பார்கள், விரும்புவார்கள்.
எப்படி ஆனாலும் நீங்கள் மக்கள் உங்களை விரும்பும் படியாக வைத்து இருக்க முடியாது என்று நான் எச்சரிக்கையாகச் சொல்வேன். சில மக்களுக்கு இயல்பாகவே உங்களைப் பிடிக்காமல் போகலாம். இது மனித குலத்தின் வித்தியாசமான பண்பு. இதற்கு என்ன காரணம் உங்களிடம் உள்ள ஏதோ ஒன்று அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இதனால் அவர்களுக்கு உங்களைப் பிடிக்கவில்லை. சில நேரங்களில் சிலரிடம் எங்களுக்கு திடீர் என விருப்பம் வருகின்றது அல்லது வெறுப்பு வருகின்றது. இது ஒரு குழப்பமான உண்மைதான். உங்களில் ஒருவருக்கு விருப்பம் இல்லை என்றால் நீங்கள் அவர்களை உதறித்தள்ளி, விலகி நடவுங்கள் என்று இதிகாசங்கள் கூறும் முதன்மை உண்மைகளில் ஒன்று. இருந்தாலும் சில கொள்கைகளை, நீங்கள் கடைப்பிடித்தால் உங்களை மற்றவரகள் மதிப்பவராக மாற்றப்படலாம்.
விசுவாசமானவராக இருங்கள்
பழகுவதற்கு சாதாரணமாக இருங்கள்.
இனிமையாக மற்றவர்களுடன் பழகுங்கள். .
மற்றவர்களின் மனதைத் திருப்திப்படுத்தும் மனப் பக்குவம் கொண்டு இருங்கள்.
இவைகளை கடைப்பிடித்து திறமைசாலியாக முன்னேறுங்கள். பிறர் தன்னை விரும்பவில்லை அல்லது நான் மற்றவர்களுக்குத் தேவையில்லை என்ற எண்ணம் ஒரு தனி மனிதனுக்கு எல்லாவற்றையும் விட அதிக கவலை தரும் விடயமாகும். நீங்கள் பிறரால் எந்தளவிற்கு விரும்பப் படுகின்றீர்களோ, எந்த அளவிற்கு தேவைப்படுகின்றீர்களோ, அந்த அளவிற்கு நீங்கள் பூரணத்துவம் அடைவீர்கள் .தனிமையில் உழலும் மக்கள் படும் துயரை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் அவர்கள் தங்களை அதிகமாக பிறரிடமிருந்து தனிமைப் படுத்திக் கொள்கின்றனர். பிறரோடு நன்றாகக் கலந்து பழகும் சுயநலமற்ற நபரின் இயல்பான வளர்ச்சியானது, தனிமையில் தவிக்கும் இந்த சுயநலமிக்க நபருக்கு மறுக்கப்படுகின்றது. அவர் தன் கொள்கையை விட்டு வெளியே வந்து பிறரோடு கலந்து பழகி மற்றவருக்குப் பயன்படுபவராக மாறவேண்டும் என்பதே!
நான் பிறந்ததில் இருந்தே என்னை யாரும் விரும்பவில்லை என்று ஒருவர் என்னிடம் கூறுவதாக இருந்தால், அவருக்கு யாரோ ஒருவர் இந்த எண்ணத்தை உருவாக்கி இருக்கிறார் என்றுதான் அர்த்தம். இந்த ஆபத்தான யோசனை அவரின் ஆழ்மனதில் சென்று பதிந்து விடுகின்றது இது தாழ்வு மனப்பன்மை என்ற அத்திவாரத்திற்கு அடிப்படையாக இருக்கின்றது. அத்தோடு அவர் தன்னை குறைவாகவும் மதிப்பிடுவதற்கு அடிப்படையாக அமைந்து விடுகின்றது. இவர்கள் எப்பொழுதும் பிறருடன் பழகாமல் தனிமையில் ஒதுங்கி வாழ்வார்கள். இவர் தன்னை ஒரு முழுமையான மனிதனாக கருதவில்லை. இவர் இந்த கொள்கையில் இருந்து முழுமையாக மாறவேண்டும். காலப் போக்கில் மற்றவர்கள் மதிக்கப்படும் மனிதனாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
சிலர் எந்தவிதமான உளவியல் ரீதியான பிரச்சனை இல்லாவிட்டலும் கூட எண்ணற்ற மனிதர்கள் தாங்கள் பிரபல்லியமாக வர வேண்டும் என்று முயற்சித்து அதில் தேர்ச்சி பெறமுடியாமல் இருந்து வருகின்றார்கள். இவர்கள் தங்கள் சக்திக்கும் ஆற்றலுக்கும் மேலாக முயற்சிக்கின்றனர். இவர்கள் சில நேரங்களில் தங்களுக்கு அப்பாற்பட்ட விடயங்களில் கூட முயற்சித்துப் பார்க்கிறார்கள். தாங்கள் பிரபல்லியமாக வரவேண்டும் என்ற தணியாத விருப்பத்தால் மக்கள் போலித்தனமாக நடந்து கொள்வதை நாம் எல்லா விடயங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. உண்மை என்னவென்றால் ஒரு கெளரவமான, உண்மையான உத்தி ஒன்றைக் கடைப்பிடித்தால் நீங்கள் நிச்சயமாக பிரபல்லியமாக முடியும். மற்றவர்களை மழுங்கடித்துப் பேசுவதை நிறுத்துவதுதான், இதை நீங்கள் கடைப்பிடித்தால் எல்லா மக்களும் உங்களை விரும்புவார்கள்.
முதலில் நாம் எல்லோரிடமும் சகக்ஷமாகப் பழகக் கூடியவராக மாற வேண்டும் எல்லோரும் எந்தவித தடையும் இல்லாமல் தங்களை எங்களுடன் இணைத்துக் கொள்ளக்கூடிய மனிதனாக உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். சில மனிதர்களை பார்த்து சிலர் கூறுவார்கள் அவர்களிடம் கிட்டக்கூட நெருங்க முடியாது என்று. இப்படிப்பட்டவர்களைச் சுற்றி தகர்க்க முடியாத தடை ஒன்றை எற்படுத்தி இருக்கும். சகக்ஷமாகப் பழகும் நபர் எப்பொழுதும் ஆதரவாகவும், இயல்பானவராகவும் இருப்பார். இவர் எப்பொழுதும் அன்பானவராகவும், இனிமையானவராகவும் விளங்குவார். சகக்ஷமாகப் பழகாத நபர் எப்பொழுதும் உங்களுடன் எப்படி நடந்து கொள்வார் அல்லது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உங்களால் எப்பொழுதும் புரிந்து கொள்ள முடியாது அவர்களுடன் நீங்களும் சகக்ஷமாக பழக முடியாது.
பிழைகளை மூன்று வகையாகப் பிரிக்கலம்.
1. செய்த பிழைகளைப் பற்றி அக்கறை இல்லாமல் இருத்தல்.
2. செய்த பிழைகளை மறுத்துப் பேசுதல்.
3.செய்த பிழைகளை ஏற்று அதில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு அதை மீண்டும் செய்யாது திருத்திக் கொள்வது.
இதில் நீங்கள் எந்த வர்க்கம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களே உங்களை எப்படிப்பட்ட மனிதர் என்பதை அறிந்து இருந்தால் அதை நீங்கள் அடைய உங்கள் அறிவு உதவி செய்யும்.
நல்ல சூரிய ஒளியை குவிவில்லை (LENCE ) ஒன்றினூடு ஓர் தாளின்மீது அசைத்துக் கொண்டு பாய்ச்சும்போது அது தீப்பற்றி எரியாது. ஆனால் அதை ஒரு புள்ளியின் மேல் பாய்ச்சும்போது அதில் தீ பற்றிக் கொள்ளும். இதுவே மற்றவர்களிடம் இருந்து நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எம்மை விலத்திக் கொள்ளும் ஒரு பண்பு முறையாகும் மற்றவர்கள் எமக்கு செய்யும் கொடுமைகளிலும், தீமைகளிலும் இருந்து எம்மைப் தக்க வைப்பதற்கான உத்தி இதுவாகும். இது வாழ்க்கை என்ற வீதியில் பயணிக்கும் பொழுது நீங்கள் போக வேண்டிய இடத்தையே இலக்காகக் கொண்டு இருங்கள்., பாதையில் உள்ள பள்ளம் மேடுகளை அல்ல.
நா. மகேசன்.