இடைக்காடு முன்பள்ளி செயட்குழு கூட்ட தீர்மானங்கள்

By க. வீரசிவாகரன். (வீரா) on Sept. 14, 2021

Card image cap

இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் முன்பள்ளி

செயற்குழு கூட்ட தீர்மானங்கள்
18-09-2021 சனிக்கிழமை இடம்பெற்ற இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் முன்பள்ளி செயற்குழு கூட்டத்தில் பின்வரும் முடிபுகள் எடுக்கப்பட்டன.
சிறப்பாக இயங்கி வந்த இடைக்காடு கலை இலக்கிய மன்றம் covid -19 காரணமாக பிள்ளைகளின் வரவில் ஏற்பட்ட குறைவும் மற்றும் பிற காரணிகளாலும் நிதிப் பற்றாக் குறைவு ஏற்பட்டதால் அதனைத் தொடர்ந்து நடாத்த சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து அதனை இயக்குவதற்கான நிதிக் கோரிக்கை ஒன்றை கலை இலக்கிய மன்ற செயற்குழு இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் முன்பள்ளியிடம் முன் வைத்துள்ளது. அதனை ஆராய்ந்த செயற்குழு புலம்பெயர்ந்து வாழும் நிதி ஆளுமைக் குழு உறுப்பினர்களிடம் கலந்துரையாடி, முன்பள்ளிக்கு கிடைக்கும் வட்டிப் பணத்தில் ஆசிரிய வேதனம், மற்றும் பிற செலவுகள் தவிர்த்து மேலதிகமாக உள்ள பணத்தில் ரூபா பத்தாயிரம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன் பள்ளியில் அமைக்கப்பட்ட தண்ணீர் தாங்கிக்கு சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப மூடி போடுதல்.
முன்பள்ளிக்கான பற்றுச் சிட்டையில் முன்பள்ளியின் அடையாளமாக முத்திரையை ( LOGO ) பதிப்பது.அதன் பின் சரியான பற்றுச் சிட்டையை நிதி வழங்குனர்களுக்கு வழங்குதல்.
நன்றி
செயற்குழு- இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் முன்பள்ளி
14-09-2021