By செயலாளர் - on July 11, 2022
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன் பள்ளி
📠 நிர்வாகக் கூட்டம்
- 2022 ஆனி -
இடம் - புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளி மண்டபம்.
# திகதி - 12/06/2022(ஞாயிற்றுக் கிழமை)
நேரம் - பி.ப2.30 -பி.ப3.30 வரை
🌺விடயம் 🌺
1) நடை பெற்ற கலைவிழா பற்றியது.
2) கலை விழாச் செலவு விபரம் மற்றும் ஏனைய அபிவிருத்தி தொடர்பாக செலவாகும் நிதி நிலமை தொடர்பாக கலந்துரையாடல்.
3) மாதர் சங்கத்திற்கும் முன் பள்ளிக்கும் இடையிலான எல்லைக்கு அத்திவாரத்துடன் கம்பி வலை வேலி அமைத்தல்.
4)சிறு திருத்த வேலைகள் செய்தல். மலசலகூட பாதுகாப்பு மதிற் சுவர் அமைத்தல்.(சிறுவர் பாது காப்பை உறுதிப் படுத்துவதற்காக)
5)சிறுவர் அசையா விளையாட்டு உபகரணங்களை தற்காலிகமாக இடம் மாற்றல்.
6)நீர்க்குழாய் இணைப்பு வேலைகள் .
7) முன் பள்ளியை பசுமைப் படுத்தல்திட்டம்.(மரக் கன்றுகள் நடல்.
8) முன் பள்ளிக்கான முகாமைத்துவ அணி தொடர்பாக கலந்துரையாடல்.
9)அரசியல் கட்சியினர் (அங்கயன் அணி சார்பாக திரு த.ஜீவாகரன் அவர்கள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்தல்.
10)ஏனைய விடயங்கள்
👉 குறிப்பு - அனைத்து அங்கத்தவர்களும் தவறாது கலந்து கொள்ளவும்.
நன்றி🙏
- செயலாளர் -
நன்றி நவிலல்🙏
🔈அமரர்களான நாகலிங்கம் - தங்கரத்தினம் ஞாபகார்த்தமாக அவர்களது பேரன் குடும்பம் திரு.திருமதி கேதீஸ்வரன் (லண்டன்)அவர்களால் வழங்கப்பட்ட பெறுமதியான கற்றல் சாதனம்(BOX SET) மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதுடன்.நாமும் பெருமகிழ்வடைவதுடன். முன் பள்ளி சமூகத்தின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
🌷நாட்டின் பேரிடர் நிலமையிலும் பலத்த சிரமத்தின் மத்தியில் குறித்த சாதனத்தை முன்பள்ளி சமூகத்திடம் கையளித்த திரு திருமதி சரவணபவான் தம்பதிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
🌴முன்பள்ளியை அழகும் பசுமையாக்கும் திட்டத்தின் அடிப்படையில்
ஆலோசனை , நிதி அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கும் இடைக்காடு நம்பிக்கை நிதியத்தினருக்கும் எமது முன்பள்ளி சமூகத்தின் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
நன்றி
🙏🙏🙏
இவ்வண்ணம்
-முன் பள்ளிச்சமூகம்-