இடைக்காடு மழலைகளின் நிகழ்வுகள்

By இடைக்காடு முன் பள்ளி நிர்வாகம் on May 18, 2022

Card image cap

💐மழலைகளின் கலைநிகழ்வும் பரிசளிப்பு விழாவும் - 2022 (வைகாசி )🌷

மேற்படி தினத்திற்க்கு தாமாக முன்வந்து உதவிய

👫திரு திருமதி - சிறீ சத்தியானந்தம் (சுவிஸ்)

அவர்கள் 40 முன்பள்ளி மாணவர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்கியதுடன்.கடந்த வருடம் (2021) சிறார்களுக்கான
60 ,000/= பெறுமதியான கதிரை,மேசைகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

💁திரு திருமதி - முத்துலட்சுமி சிறீஸ்கந்தராஜா (ஓய்வு பெற்ற ஆசிரியர்) இடைக்காடு -25000 ரூபாவினை முன் பள்ளி வளர்ச்சிக்கென பெருளாளரிடம் கையளித்திருந்தார்.

👱திரு இளையதம்பி மகேசன் அவர்கள் ஊடாக அவரது சகேதரர் லண்டனை சேர்ந்த இளையதம்பி செல்வகுமாரன் என்பவர் மறைந்த பெற்றோர்களான அமரர் சுவாமிநாதர் இளையதம்பி நினைவாக
35800/=பெறுமதியான 25 செட் சிறுவர்களுக்கான கெளரவிப்பு சீருடை மற்றும் அதனை பாதுகாத்து வைப்பதற்கான பிளாஸ்ரிக் பெட்டி ஒன்றினையும் சேர்த்து கடந்த வருடம் முன் பள்ளிக்கு கையளித்தனர்.

🌺நாட்டின் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக பயன் படுத்த முடியாமையால் போக அதனை 2022 பரிசுத்தின விழாவில் முதன் முதலாக பயன் படுத்தப்பட்டது.

🍂மேற்படி நன்கொடைகளை கொடுத்து உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் முன் பள்ளி சமூகம் நன்றிகளை தெரிவிப்பதுடன்.

👉அவர்களும் அவர்களது உறவுகளும் ஆரோக்கியமாகவும், சகல செளபாக்கியதுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பாராக!

-நன்றி-