By செயலாளர் on June 28, 2021
சமூகத்தொற்று நோய் காரணமாக கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டிருக்கின்ற பொழுதிலும் முன்பள்ளிச் சூழல் இடையிடையே மூன்று ஆசிரியர்களும் இணைந்து துப்பரவுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த காலங்களில் தவணை விடுமுறை முடிந்து பாடசாலை ஆரம்பிக்கும் போது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணனந்து இவ் துப்பரவு பணிகளை செய்து வருவது வழமை..
இடர்காலத்திலும் முன்பள்ளி சூழலை துப்பரவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்படும் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதுடன்..முன்பள்ளியில் சில மாற்றங்களை கொண்டுவருவதற்காகவும் மற்றும் இவ் இடர் நிலமையிலும் பொருளாதாரரீதியில் மிகவும் நலிவுற்ற அவ் மூன்று ஆசிரியர்களுக்குமான கொடுப்பனவுகளை தடையின்றி மேற்கொள்வதற்காகவும் எம்மோடு இணைந்த புலம்பேர் உறவுகளை இத் தருணத்தில் மீண்டும் நன்றியுடன் நினைவுகூறுகின்றோம்
செயலாளர்
( தகவலுக்காக பதிவு செய்யப்பட்டது)