By நிதி ஆளுகைக்குழு on April 3, 2021
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலை
கிடைக்கப் பெற்ற நிதியினை கையாள்வதற்கான உத்தேச செயற் திட்டம்.
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாடசாலை நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக் கிணங்க , இடைக்காடு இணையம் அதற்கான முன் முயற்சிகளை மேற்கொண்டு புலம்பெயர் வாழ் எம் உறவுகளுடன் தொடர்பு கொண்டதன் பயனாக ,கனடா, லண்டன், சுவிஸ் ,டென்மார்க் போன்ற நாடுகளில் வாழும் எம் உறவுகள் கணிசமான நிதியினை வழங்கி உதவியிருக்கிறார்கள். முதலில் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள். இனி கிடைக்கப் பெற்ற நிதியினை எவ்வாறு மிகக் கவனத்துடன் பாவிப்பது என நாம் ஓர் திடமான திட்டத்துடன் செயலாற்றுவது அவசியமாகும். எனெனில் இதுவே இறுதியாக கிடைக்கும் நிதியாகும். இதற்கு மேல் எம்மால் இன்னொருமுறை நிதி சேகரிப்பில் ஈடுபட முடியாது, மக்களாலும் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்க முடியாது, எனவே கிடைக்கப் பெற்ற நிதியினை நீண்ட காலத்திற்கு பயன் படும் முறையில் அதற்கான திட்ட வரைபு ஒன்றை நாம் உருவாக்கி அதனை செயல் படுத்த வேண்டியது அவசியமாகும்.
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலை
இன்றைய கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கான முன்மொழிவுகள்.
1. இடைக்காட்டில் உள்ள விசேட கல்வியை பெற்றுக் கொண்ட பெண் பிள்ளை ஒருவரை தெரிவு செய்து அவருக்கு பாலர்பாடசாலை சம்பந்தமான மூன்று மாதகால விசேட பயிற்சி ஒன்றினை எமது செலவில் வழங்கல். அவர் இரண்டு வருட காலம் கட்டாயமாக இப் பாலர் பாடசாலையில் பணி புரிதல் அவசியம். அத்துடன் மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தினையும் செயற்படுத்தல் வேண்டும்.
2. மாணவர்களுக்கு கல்வி மட்டும் கற்பித்தலுடன்நிற்காது, சுற்றாடல் அறிவியல் போன்ற விடயங்களுக்கான சுற்றுலாவுடன் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் வேறு பாலர் பாடசாலை மாணவர்களுடன் இணைந்து பயனுள்ள விடயங்களை பகிர்ந்து கொள்ளல்
3. மாணவர்களுக்கான சீருடை ஒன்றினை அவர்களுக்கு வழங்கல். புற களப் பயிற்சிக்கான வளங்களை பெற்றுக் கொடுத்தல். வர்ணம் தீட்டுதல். மாதிரி வடிவங்களை பொருத்துதல், வடிவமைத்தல் போன்றவை.
4. பழுதடைந்திருக்கும் வெளிக்கள விளையாட்டு உபகரணங்களை திருத்தியமைத்தல்.
5. கிடைக்கப் பெற்ற நிதியினை அதியுயர் வட்டியை பெறுவதற்காக 60 வயதிற்கு மேற்பட்ட மூவரை தெரிவு செய்து அவர்களின் பெயரில் வைப்பில் இடப்படுகிறது. அவர்களின் மனமுவந்த ஒத்துழைப்பிற்காக மாதாமாதம் அவர்களுக்கு ஒரு சிறு தொகை பணத்தினை கிடைக்கப் பெறும் வட்டியில் இருந்து வழங்கல்.
மேற்படி அலோசனைகளை பாலர் பாடசாலை நிர்வாக செயற்குழுவும், இடைக்காட்டில் உள்ள விசேட செயற்குழு உறுப்பினர்களும் கூடி அவற்றை முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்து புலம்பெயர் விசேட செயற்குழுப்பினர்களுடன் இணைந்து அவற்றை செயற்படுத்தப்படும்
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலை
கிடைக்கப் பெற்ற நிதியினை கையாள்வதற்கான விசேட செயலணியானா நிதி ஆளுகைக்குழு
லண்டன்
1. வைரமுத்து பவன்
2. கிருஸ்ணானந்தன் கேதீஸ்வரன்
3. கதிர்காமு ஆறுமுகசாமி
கனடா
1. வேலுப்பிள்ளை இளங்கோ
2. நாகமுத்து மகேசன்
3. இரத்தினசபாபதி செல்வறாஜ்
சுவிஸ்
1. சிவனடியான் குணசீலன்
2. கந்தையா கண்ணதாசன்
3. சிவசுப்ரமணியம் சுயாகரன்
இலங்கை
1. கந்தசாமி முருகவேல்
2. வைரமுத்து கதிர்காமநாதன்
3. செல்வரட்ணம் மதியழகன்
4. செல்லத்துரை செல்வவேல்