முன் பள்ளி செய்யற் ப் பாடுகள்

By முன் பள்ளி நிர்வாகம் on Oct. 22, 2024

Card image cap

முன்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிள்ளைகளின் தேவைக்காக மேடை ஒன்று ரூபா 80000 பெறுமதியில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கலை விழாக்கள்,விளையாட்டு போட்டி மற்றும் பொது விழாக்களின் போது இவை பெரும் உதவியாக இருக்கும் அதே வேளை பிள்ளைகளுக்கும் இது ஒரு உத்வேகத்தை அளிப்பதாக ஆசியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

மேலும் இவ் மேடையை ஊரில் நடைபெறும் திருமணம்,பிறந்த நாள்,பூப்புனித நீராட்டு விழா போன்ற விழாக்களுக்கும் வாடகைக்கு விட தீர்மானித்துள்ளோம்.
அதில் வரும் வருமானம் முன்பள்ளி தேவைகளுக்கு பயன்படுத்தப்படும்

அதே போன்று ஆசிரியர்களின் கோரிக்கைக்கு அமைவாக அலுமாரி ( steel), பித்தளை குத்து விளக்கு ,பெரிய பானை ஒன்று மற்றும் அதனோடு இணைந்த பொருட்கள் முன்பள்ளியின் தேவைக்கு வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.இவற்றின் பெறுமதி கிட்டத்தட்ட ரூபா 70000 ஆகும்.
பொதுவாக நாங்கள் முன்பள்ளிககான தேவைகளுக்கு இடைக்காடு மகா வித்தியாலயத்தில் இருந்து எடுப்பது வழமை.

*அதே போன்று பேச்சு மேசை (speech table) ஒன்று செய்ய வேண்டும்* என்று விருப்பம் ஒன்று உள்ளது யாராவது ஆர்வம் உள்ளவர்கள் அவற்றை செய்து தர முன்வந்தால் பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும் குறிப்பாக பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிள்ளைகளின் பாதுகாப்பின் நிமிர்த்தம் முன்பள்ளியின் முன்பக்கத்தில் சறுக்கி விளையாடும் பகுதிக்கு மணல் மண் போடப்பட்டுள்ளது.பிள்ளைகள் ஓடி விளையாடும் போது பிள்ளைகள் விழும்போது காயம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது .
அதே போல் சருக்கீஸ் ஏறும் பகுதியில் கதவு(gate) ஒன்று போடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

தொடர்ந்து இந்த நிர்வாகம் சார்பில் பெரும்பாலான வேலைகள் நிறைவு செய்யப்பட்டு அடுத்த நிர்வாகத்திற்கு பாரப்படுத்தபடும்போது அவர்களுக்கான சுமையை நாங்கள் குறைத்துள்ளோம் என நினைக்கிறேன்.
அதே வேளை முன்பள்ளி விளையாட்டு போட்டியும்இந்த முறை புதிய மைதானத்தில் நடத்தப்பட்டு தொடர அடித்தளம் இடப்பட்டுள்ளது.

மிக விரைவில் புதிய நிர்வாக தெரிவுக்காக பொதுக்கூட்டம் கூட்டப்பட உள்ளது.
நன்றி...