சிறுவர்களை கவுரவிப்பதற்கான சீருடை உதவி

By க. வீர சிவாகரன் (வீரா ) on Nov. 3, 2021

Card image cap

சிறுவர்களை கௌரவிப்பதற்கான கௌரவிப்பு சீருடை உதவி
.......................
லண்டனை சேர்ந்த திரு. இளையதம்பி செல்வக்குமாரன் என்பவர் மறைந்த பெற்றோர்களான அமரர் சுவாமிநாதர் இளையதம்பி,அமரர் செல்லம்மா இளையதம்பி நினைவாக 35800/= பெறுமதியான 25 செட் சிறுவர்கள் கௌரவிப்பு சீருடை மற்றும் அதனை பாதுகாத்து வைப்பதற்கான பிளாஸ்ரிக் பெட்டி ஒன்றினையும் சேர்ந்து இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளிக்கு அவரது மூத்த சகோதரரான திரு.இ.மகேசன் ஊடாக அன்பளிப்பு செய்துள்ளார். அவ் அன்பளிப்பு உதவியை செய்த நல்லுள்ளம் கொண்ட திரு.இளையதம்பி செல்வக்குமாரன் குடும்பத்தினருக்கு இடைக்காடு புவனேஸ்வரி முன்பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 🙏