By க.சஞ்சீவன்.( இடைக்காடு ) on Jan. 26, 2022
இடைக்காடு சாமித்திடல் இந்து மயானம் புனமைப்பு
இடைக்காடு மக்கள் நலன் புரிச் சங்கத்தின் முயற்சியின் பயனாக, சாமித்திடல் இந்து மயானத்தை புனரமைப்பதற்கும், பராமரிப்பதற்கும், அச்சுவேலி பிரதேசிய சபையின் அறிவுறுத்தல்களுக்கு அமைய புதிதாக அமைக்கப்பட்ட இடைக்காடு சாமித்திடல் மயான அபிவிருத்திக்குழு அதன் செயற்பாட்டினைத் தொடங்கியுள்ளது. இனி வருங்காலத்தில் மரணச் சடங்குகள் யாவும் சம்பந்தப்பட்ட இடைக்காடு இந்து மயான அபிவிருத்திக்குழுவின் அனுசரணையுடன் நடாத்தப்படும்.
இடைக்காடு மக்கள் நலன் புரிச் சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய சுவிஸ் வாழ் எம்மவரான சிறீச்ச்சிதானந்தம் அவர்களால் கட்டடங்கள், சுற்றுமதில் என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எமது ஊர் மக்கள் சார்பாக நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதுடன், மயானத்தின் மற்றைய பக்கங்களுக்கு முள் கம்பிவேலி போடப்பட வேண்டியுள்ளது. இதற்கு புலன் பெயர் வாழ் எம் மக்களிடம் உதவியினை வேண்டி நிற்கின்றோம்.
நன்றி
இடைக்காடு சாமித்திடல் இந்து மயான அபிவிருத்திக்குழு