கல்வி கரங்கள் கடந்த கால அறிக்கை

By கல்வி கரங்கள் on May 10, 2021

Card image cap

: பாடசாலைக் கல்வியை பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் வைகாசி மாதம் 2017 இல் "கல்விக்கரங்கள்" அமைப்பு உருவாக்கப்பட்டது. கல்விகற்பதற்காக பொருளாதார ரீதியில் இடர்படுகின்ற மாணவர்களுக்கு உதவுவதும், அதன்மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர் சதவீதத்தை அதிகரிப்பதும் இக்கல்வி திட்டத்தின் நோக்கமாக அமைகிறது. அதன் அடிப்படையில் இவ் அமைப்பிற்சகான திட்டங்கள், யாப்புகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த காலத்தில் கல்விகரங்கள் வேண்டுகோளுக்குகமைய புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட நிதியிலிருந்து பெறப்படும் வட்டிப்பணம் மாதாந்தம் மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஆரம்ப, இடைநிலை, உயர்தர பிரிவுகளில் கல்விபயிலும் 17 மாணவர்கள், 2020 இல், இதன்மூலம் பயன்பெறுகிறார்கள். ஆர்வமுள்ள கொடையாளர்கள் எமது அமைப்போடு தொடர்புகொள்ளவும்.


கடந்தகால கணக்கறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

"சமூகத்தின் விழிப்புக்கு கல்வியே மூலதனம்”

தொடர்புகளுக்கு

த.கிருபாகரன் (தலைவர்):- +94-718422397
செ.செல்வவேல்(செயலாளர்):- +94-772105354
ச.சுலக்சன்(பொருளாளர்):- +94-779440461
-நன்றி-