By செயற்குழு on Jan. 8, 2024
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா
யா/ இடைக்காடு ம .வி - நூற்றாண்டு விழா -2026
எமது பாடசாலை யா/இடைக்காடு மகா வித்தியாலயம், தனது 100வது ஆண்டினை 2026 ம் (1926 - 2026) ஆண்டு நிறைவு செய்யவுள்ளது.
இந்நிகழ்வை பாடசாலை சமூகம், பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து ஓரு இனிய விழாவாக நடாத்த முன்வந்துள்ளது.
அதன் பிரகாரம் கடந்த விஜயதசமி அன்று (24-10-2023) பாடசாலை அதிபரால் "நூற்றாண்டுவிழா பிரகடனம்" வைபவரீதியாக வெளியிடப்பட்டுள்ளது .
அதன் அடுத்த கட்டமாக 3-12-2023 அன்று நூற்றாண்டுவிழாவிற்கான விசேட செயற்குழு அதிபர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவினை திறம்பட நடத்துவதற்கும், அனைத்து பாடசாலை கட்டுமானங்களை புனர்நிர்மாணம் செய்யவும், கல்வி அடைவு மட்டத்தினை மேம்படுத்தவும் பாடசாலை சமூகம், கனடா வாழ் பழையமாணவர்களினதும், நலன்விரும்பிகளினதும் பங்களிப்பினை எமது சங்கத்தின் ஊடாக நாடியுள்ளது.
மேற்குறிப்பிட்ட திட்டங்களை திறம்பட நிறைவு செய்வதற்கு ரூபா 32, 769, 689 (3.28 கோடி) அளவில் தேவைப்படுகின்றது .
இத்தொகையின் ஒரு பகுதியாக குறைந்தப்பட்சம் 1 கோடி ரூபா (~CDN $50,000) பங்களிப்பினை கனடா வாழ் பழையமாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் அன்பளிப்பாக சேகரிக்க வேண்டியுள்ளது.
"அறிவு புகட்டிய அன்னைக்கொரு ஆராதனை" என்பதற்கு இணங்க உங்கள் அனைவரினதும் அன்பளிப்பினை அன்புடன் வரவேற்கின்றோம்!
நீங்கள் விரும்பிய தொகையினை கீழ் வரும் நூற்றாண்டு விழா நிதி சேகரிப்பு குழுவினருடன் தொடர்பு கொண்டு செலுத்தலாம்.
Selva Ratnasabapathy--------------------(647-407-8358 Brampton)
Ganesamoorthy Kandasamy--------------(437-970-2014 GTA)
Sivapalan Veluppillai----------------------(416-930-4026 GTA)
Uthayanan Ponniah -----------------------(647-297-6552 GTA)
Nageswaramoorthy Thampu--------------(416-805-6371 GTA)
Sivagnanaruban Sivagnanasundaram-----(416-566-6523 GTA)
Manoharan Ehamparam-------------------(647-240-4296 GTA)
Sivapalan Sinnathamby (Sivam)-----------(647-215-9130 GTA)
Navakumar Subramaniam-----------------(416-525-6299 GTA)
Thushyanthy Nadesapillai-----------------(514-238-3535 Montreal)
Subajini Kugathasan-----------------------(514-465-4138 Montreal)
Paramasivam Saravanamuthu-------------(514-617-3150 Montreal)
Mahendram Nagamuthu------------------(514-886-8659 Montreal)
Youth Committee:
Thushyan Navakumar
Sinthuyan Uthayanan
Kapilan Ratnasabapathy
Saruja Arunagiri
Saranya Uthayanan
Sujithan Navakumar
Ninthuyan Tharmalingam
Sajeesan Nageswaramoortrhy
நன்றி!
செயற்குழு
IMV -OSA Canada