By பொன். கந்தவேல் on May 9, 2024
சின்னத்தம்பி மகாலிங்கசிவம்
மண்ணில் 18.4.1948 விண்ணில் 09.4.2024
யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட அமரர் சின்னத்தம்பி மகாலிங்கசிவம் தன் பூவுலக வாழ்வை தன் 75ஆவது வயதில் நிறைவுசெய்து 09.4.2024 அன்று தன் மூச்ச்சை நிறுத்திக்கொண்டார்.
தனது கல்வியை இடைக்காடு மகாவித்தியாலயித்திலும் பின்னர் புத்தூர் சோமஸ்க்கந்தா கல்லூரியிலும் மேற்கொண்ட அவர் புத்தளம் மாவட்டம் வண்ணாத்திகல்லு பிரதேச நீர்ப்பாசனத்திணைகளத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தராக தன் கடமையை ஆரம்பித்தார். அவர் வேலை செய்த பகுதி சிங்களப்பிரதேசமாக இருந்தபடியால் சிங்கள மொழியை நன்கு பேச எழுதத் தெரிந்துகொண்டார். பின்பு கொழும்பு நீர்ப்பாசனத்திணக்களத்தில் மண்பரிசோதனை உத்தியோகத்தராக நியமனம் பெற்று தன் பணியை திறம்பட ஆற்றிவந்தார். இக்காலப்பகுதியில் 1978ம் ஆண்டு எம்மூரில் விவசாயச் செய்கையில் முன்னோடியாகத் திகழ்ந்துவந்த கணபதிப்பிள்ளை என்பவரின் சிரேஸ்ட புத்திரியான நாகேஸ்வரி என்பவரை தன் வாழ்க்கைத்துணைவியாகவும் தன் மனைவியின் சகோதரரான தங்கவேல் என்பவரை தன் சகோதரி கமலாம்பிகை என்பவருக்கும் மணமுடித்து தன் குடும்பப்பொறுப்பினை வெளிப்படுத்தினார்.
காலங்கள் ஓடின... தன் மைத்துனர் வெளிநாடு செல்ல அவரைதொடர்ந்து அவரின் சகோதரிய்ம் கணவருடன் இணைந்து சுவீடனில் குடியே|றினர்.
இவர்களின் இனிய இல்வாழ்வின் விளைச்சலாக குணன், பானுஜா என்னும் இரு பிள்ளச் செல்வங்களைப் பெற்று இனிதே தம் வாழ்வினை நடாத்தி வந்தனர் அப்போது கொழும்பு வெள்ளவத்தையில் எம் கிராமத்தவ்ர் தங்கியிருந்து வேலைபார்க்கும் கூட்டுவிடுதியில் என் சித்தப்பா மகாலிங்க சிவத்துடன் நானும் தங்கியிருந்து அனுபவித்த கொழும்பு வாழ்க்கை வாழ்வில் என்றுமே மறக்கமுடியாத அனுபவமாகும்.
நாட்டுநிலைமை நாளுக்குநாள் மோசமடைந்துவரும்வேளை 1990ம் ஆண்டி அரசு வெளியிட்ட சுற்று னிருபத்தின் பிரகாரம் கொழும்பில் இருந்து எடுக்கும் முழுச் சம்பளத்தியும் செலவுசெய்வதை விட ஓய்வூதியம் பெற்று ஊருக்க்கேபோய்விடுவோம் என்னும் முடிவெடுத்தெ பல தமிழ் உத்தியோகதளில் மகாலிங்கசிவத்துடன் நானும் சேர்ந்துகொண்டு உத்தியோகததை உதறிவிட்டு ஊருக்கு வந்துவிட்டோம். ஊரில் சும்மா இருக்கவில்லை முழுநேர தோட்டக்காரர் ஆகிவிட்டோம்.
காலம் ஓடியதே தவிர பிரச்சினை நம்மைவிட்டு ஓடுவதாய் இல்லை. தமிழ் இளைஜர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்னும் நிலையில் அவரது மகனான குமணன் புலம் பெயர்ந்து நோர்வேநாட்டில் குடியேறி உரிய வேளையில் சிவரூபி என்னும் பெண்ணை மணமுடித்து ஒரு மகனையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்துவருகின்றார். அவரது மகளான பானுஜாவும் சிறீபதி என்னும் பட்டதாரி ஆசிரியரை மணமுடித்து தன் இரு குழந்தைகளுடன் இனிதே வாழ்ந்து வருகின்றார்.
அமரர், அரச ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு இன்றுவஆரை தன் மாமனார்போல் சிறந்ததோர் விவசாயியாக வாழ்வதுடன் அனைவருக்கும் நண்பனாக உதவியாளனாக வாழ்ந்துவரும் வேளையில் சிறு சிறு உடல் உபதைகளை எதிர்கொண்டு அண்மைகாலமாக தன் அன்றாடக்கடமைகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர்கொண்டுவந்தார்.
என் தந்தையாரை மட்டுமல்ல என் தந்தையாரின் சகோதரரான அமரர் மகாலிகசிவத்தையும் என் தந்தைக்குச் சமமாகவே மதித்துப் பழகி வந்தேன். அவர் எனது சிறிய தந்தையார் என்றபோதும் நான் அவரைவிட இரு வயது மட்டுமே இளமையானவன். அதனால் என் நண்பன் போலவே நான் ஊருக்கு வரும்போதெல்லாம் அவரக்கண்டு அளவளாவி எம் உறவைப் பகிர்ந்துகொள்வோம். அண்மையில்கூட நான் கனடாவிலிருந்து ஊருக்கு வந்திருந்தவேளை உறவாடிச்சென்றேன்.
இவ்வளவு விரைவில் அவர் எம்மைவிட்டு, இவ்வுலகை விட்டுச் செல்வார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
இப்புவியில் பிறந்த எவருமே நாளய பொழுதில் இறந்துபோவது ஆச்சரியமானதல்ல.
உயிருடன் இருப்பதே ஆச்சரியமானது.
அந்தப் புனித ஜீவன் இவ்வுலகில் செவ்வனே வாழ்ந்ததற்கான பல அடையா|ளங்களை விட்டுச் சென்றுள்ளார்.
அவர் ஆன்மா நற் கதி அடைவதாக.
பொன் கந்தவேல்
பெறாமகன் - கனடா