மனிதனா? மருத்துவமா?

By நா. மகேசன் கனடா on Jan. 7, 2024

Card image cap

மனிதனா ?........மருத்துவமா ?...... 🥰
டீசல், மண்ணெண்ணை, பெற்றோல்,---- வாதம், சுரம், பித்தம் --- இது என்ன. இயந்திரத்திற்கு ஒப்பாக மனிதனை ஒப்பிடுகிறேன் என நினைக்கலாம். டீசல் இயந்திரத்திற்கு பெற்றோல் ஊற்றினால் இயந்திரம் வேலை செய்யமாட்டாது. பெற்றோல் இயந்திரத்திற்கு டீசல் ஊற்றினால் அதுவும் வேலை செய்யமாட்டாது. இதில் இருந்து நாம் புரிந்து கொள்வது என்ன? வாதம் உள்ளவர்கள் வாத உணவைத் தவிருங்கள். சுரம் உள்ளவர்கள் சுர உணவைத் தவிருங்கள். பித்தம் உள்ளவர்கள் பித்த உணவைத் தவிருங்கள். நான் சொல்வேன் எல்ல நோய்களுக்கும் முதல் மருந்து உணவுக் கட்டுப்பாடுதான். அதன் பிறகுதான் மருத்துவங்கள்.
மனித நாகரீகத்தில் கண்டுபிடிப்புக்களில் பயன் மிக்கதும், உபயோகம் உள்ளதும், தீங்கு இல்லாததுமான கண்டுபிடிப்பு மருத்துவம்தான் சில கண்டுபிடிப்புக்கள் மனிதனுக்கு மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்துகின்றது. உலகத்திலே எத்தனை மருத்துவமுறை இருந்தாலும் ( WHO ) வால் அங்கீகரிக்கப்பட்டது 124 மருத்துவ முறைகள்தான். ஆதிகாலத்தில் பல மருத்துவ முறைகள் இருந்தன, இவை எல்லாவற்றிலும் முக்கியமானது சித்தர் மருத்துவம்தான். இது எங்கள் தமிழர்களின் மருத்துவம். இந்த மருத்துவம் தோன்றி 20,,000 வருடங்கள் ஆகின்றது. அதன்பின் ரோமர் வேதம் கி.பி 300, யுனானி கி.பி 600, கிரேக்கம் மற்றும் ஆயுர்வேதம் கி.பி 900 வருடங்களாகின்றன. இன்று இரண்டு விதமான மருத்துவமுறைக:ள் மனிதர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆங்கிலேயர்களால் தோற்றுவிக்கப்பட்ட மெக்கலே கல்வித்திட்டம் கி.பி 1780 ல் தோன்றியது ஆகும்.கி.பி 1719 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட அலோபதி மருத்துவம்தான். இதுதான் ஆங்கில மருத்துவம். மற்றது பாரம்பரிய மருத்துவமுறை, நடைமுறைப் பகுத்தறிவு வேறு, அனுபவ அறிவு வேறு, புத்தக அறிவு வேறு இதை நன்றாக புரிந்து கொண்டவர்கள் பாரம் பரிய மருத்துவ முறைகளைக் குறைகூற மாட்டார்கள்.
இனி மருத்துவத்தைப் பற்றிப் பார்ப்போம். ஆங்கில மருத்துவ முறைகளில் சில பக்கவிளைவுகள் வரும். சில நேரங்களில் மரணம்கூட வரும் ஆனால் இவ் மருத்துவமுறையிலும் பல நன்மைகள் இருக்கின்றன விபத்துக்கள் எலும்பு முறிவுகள், இரத்தப்போக்கு போன்றவைகளுக்கு இது மிகவும் சிறந்த மருத்துவ முறையாகும்.
சித்த மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்ல ஆனால் அனுபவமிக்கவர்கள் அல்லது சித்த மருத்துவர்களின் ஆதரவுடன் பயன்படுத்துவது சாலச் சிறந்தது. உதாரணமாக 5 கிராம் உப்பை நீரில் கரைத்துக் குடித்தால் பசி எடுக்கும், 10 கிராம் உப்பை குடித்தால் வாந்தி எடுக்கும். 20 கிராம் எடுத்தால் பேதியாகும். உலகத்திலே 20 இலட்சம் மூலிகைகள் இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளார்கள். மனிதனுக்கு 4448 நோய்கள் இருப்பதாக கூறுகிறார்கள் ஆனால் இவை அத்தனை நோய்களுக்கும் மருந்துகள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்/ இதில் 500 விதமான நோய்களுக்கு சிறந்தது பட்டிணி ( உணவை தவிர்த்தல் ) மருத்துவம்தான் என்கிறார்கள். அதாவது பைத்தியம் என்ற நோய்க்கு மருத்துவம் பட்டிணி மருத்துவம் தான். பட்டிணி போட்டால் பைத்தியம் நீங்கிவிடும் என்கிறார்கள். இந்த சித்த மருத்துவத்தின் சிறப்பைப் பாருங்கள். ஆங்கில மருத்துவத்தில் நீரிழிவு என்ற நோயை மூன்று வகைப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் சித்த மருத்துவத்தில் இருபத்தி இரண்டாக வகைப் படுத்தி இருக்கிறார்கள். இதில் நான் முக்கியமாக குறிப்பிட வேண்டியது எங்களது மருத்துவர் திரு நாராயணபிள்ளை கந்தசாமி அவர்கள் இந் நோயைப்பற்றி விபரமாக ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அப்புத்தகத்தை எல்லோரும் பெற்று வாசித்துக் கொள்ளுங்கள் அது மிகவும் அறிவு பூர்வமான புத்தகம்.
சரி இனி சில சித்த மருத்துவர்களைப் பற்றிப் பார்ப்போம். 7ம் அறிவு படம் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் அவரைப்பற்றி நான் கூற வேண்டியது இல்லை இவர் சீன தேசம் சென்று சீன வைத்தியம் மற்றும் வெடிமருந்து, பிக்கான் என்பவற்றையும் செய்து காட்டினார். இது போன்று இன்னும் ஒரு சித்தர் இருந்தார், அவர் மதுரையைச் சேர்ந்தவர், அவர் பெயர் இராமதேவர். இவர் அரபு நாட்டிற்குச் சென்று முகமது நபியைச் சந்தித்து முகமது நபிக்குச் சொன்னது தமிழ்தான் அவர் “ அழைக்கும் சலாம் “ என்றார். முகமது நபியும் “ சலாம் அழைக்கும் “ என்றார். இன்றும் தமிழின் பெருமையை அரபுநாடுகள் முழுவதும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கூறுவது முதல் தமிழ் தான். (அழைக்கும் சலாம், சலாம் அழைக்கும் ). இந்த இராமதேவர் தான் அரபிக் மருத்துவமான யுனானி மருத்துவத்தைப் பற்றி எழுதியவர். இவர் தனது இராமதேவர் என்ற பெயரை மாற்றி யக்கோபு என்ற பெயருடன் யுனானி மருத்துவத்தை எழுதினார்.
நான் ஏன் இந்த இரு சித்தர்களையும் உதாரணமாக எடுத்துக் கொண்டேன் என்பதற்கு சிறு விளக்கம் தருகின்றேன் .திறமைசாலிகள், அறிவார்ந்தோர், ஆற்றல் மிகுந்தவர்கள் தங்களது திறமைகளை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்ல எண்ணமும், நல்ல நோக்கமும்தான். ஆனால் இவர்களின் திறமைகளை அவ்வூரவர்கள் மதிப்பளித்து அவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்வது இல்லை. இதனால்தான் இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தங்களது திறமைகளைக் காட்டினார்கள். போகர் சொல்வதை தமிழ் மக்கள் கேட்டு இருந்தால் இன்று வெடிமருந்து கண்டுபிடித்த பெருமை தமிழருக்கு இருந்திருக்கும். இதே போன்றுதான் நம் ஊரிலும் பொதுப்பணிகள், சமூகப் பணிகள், செய்தவர்களையும், செய்பவர்களையும் செய்யப் போகின்றவர்களையும் அங்கீகரியுங்கள். இல்லையென்றால் அவர்களது சேவைகள் வேறு ஊர்களுக்குச் சென்றுவுடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இனி, பல பேரின் வேண்டுகோளுக்கு இணங்க சில சித்தர்கள் கூறிய மூலிகைகளின் பயன்களைக் கூறுகின்றேன்.
எங்கள் மேனி ( உடம்பு ) குப்பையாகிவிட்டால் மிகச் சிறந்த மருந்து குப்பைமேனி தான். இது அரும் பெரு மருந்து. இது காரண இருகுறிப் பெயர் ,உலகத்திலே பல மருத்துவ முறைகள் இருக்கின்றன. எல்லா மருத்துவத்திற்கும் ஆய்வுகூடங்கள் உள்ளன. எங்கள் சித்த மருத்துவத்திற்கு ஆய்வுகூடம் இல்லை. வீட்டில் , முற்றத்தில், தெருவில், வயல்வெளிகளில் காடுகளில்தான் மூலிகைகள் இருக்கின்றன. உதாரணமாக தேள் கொட்டிவிட்டது என்றால், உடன் வீட்டு முற்றத்தில் உள்ள காய்ந்த கோழி எச்சத்தை வெற்றிலையுடன் மடித்து மின்னிச் சாப்பிட்டால் விடம் எமது உடம்பில் ஏறாது. எலி கடித்துவிட்டால் புறாவின் எச்சத்சதை எருக்கை இலையும், தேனும் கலந்து உட்கொண்டால் எலியின் விடம் இறங்கும். எந்த பாம்பு கடித்தாலும் உடலின் இடது புறம் கடித்தால் வலது கண்ணுக்கும், வலதுபுறம் கடித்தால், உடலின் இடது கண்ணுக்கும் செறிவாக உப்பைக் கரைத்து கண்ணுக்குள் ஊற்றி விட்டால் மூளைக்கு விடம் ஏறாது. எனவே மரணத்தை தவிர்க்கலாம். ஆனால் இதனை பாம்பு கடித்து 5 நிமிடங்களுக்குள் செய்ய வேண்டும்.
இனி முக்கியமாக நான் கூற வேண்டியது வெறிநாய்க்கடி, எங்கள் ஊரில் விசர்நாய்கடி என்று கூறுவர். யுத்த காலங்களில் மருந்து இல்லாமையால் வெறிநாய் கடித்து 620 க்கு மேற்பட்டோர் மாண்டார்கள். இவர்களுக்கு இந்த சித்தர் மருத்துவமுறை தெரிந்து இருந்திருந்தால் அனைவரும் உயிர் பிழைத்து இருப்பார்கள். நாய்கடி விடத்திற்கு இந்த மூலிகைகளைப் பயன்படுத்தி இருந்திருந்தால் இறப்பைத் தவிர்த்திருக்காலாம்.
நன்னாரி இலை, சென்நாயுருவி, நாரத்தை இலை இவற்றுடன், எள்ளு, புகையிலை இவைகளை அரைத்து கடிவாயில் தடவிவிட அந்த விடம் இறங்கிவிடும்.
வெறிநாய் கடித்த இடத்தைச் சுத்தம் செய்து, கடிவாயில் கத்தியால் கீறி இரத்தத்தை வெளியேற்றி கடிவாயில் இலவம் பிசினையும், சுண்ணாம்பையும் அரைத்துக் கட்டிவிட்டால் விடம் இறங்கிவிடும்.
அவுறிவேரை அரைத்து பசும்பாலில் கரைத்து குடித்துவர 10 நாட்களில் விடம் இறங்கும்.
பிரண்டை செடியையும், சின்ன வெண்காயத்தையும் சம அளவில் எடுத்து, வெற்றிலையில் வைத்து கட்டிவர மூன்று நாட்களில் விடம் இறங்கிவிடும்.
விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் , பரிசோதனைகள் மூலம் மருந்துகளை கண்டு பிடிப்பவர்கள். எங்கள் சித்தர்கள் மெய்ஞானிகள். எங்கள் எல்லோருக்கும் ஆறு அறிவு. ஆனால் இவர்களுக்கு ஒரு அறிவு. அது என்ன? குறிப்பு என்ற அறிவு. ஒரு மரத்திற்கு அருகில் அல்லது விலங்கிற்கு அருகில் அவர்கள் சென்றால் அவைகளில் குணத்தை அறிந்து விடுவார்கள். அதுபோல மூலிகைச் செடிகளின் மருத்துவக் குணம் அறிந்து அதை எழுதி வைத்துக் கொள்வார்கள்.

நா. மகேசன்.
கனடா.