இடைக்காடு மகா வித்தியாலயம்

By IMV OSA Canada on Aug. 29, 2024

Card image cap

நமசிவாயம் கட்டிட கட்டமைப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு, வகுப்பறைகள் மகிழ்ச்சியான கற்றல் செயற்பாடுகளுக்கு ஏற்ப மெருகூட்டப்பட்டு உத்தியோபூர்வமாக எழுத்து மூலம் மேற்படி அனைத்து கட்டிட புனர்நிர்மான வேலைகளும் இன்று பாடசாலை சமூகத்திடம் மாணவர்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்த செயற்திட்டத்தினை பூர்த்தி செய்ய 79 இலட்சம் ரூபாவிற்குமேல் செலவாகியது. இந்த நன்கொடையினை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களிற்கும் எமது நன்றிகள். அத்துடன் இந்த செற்பாட்டினை திறம்பட செய்துமுடிப்பதற்காக உழைத்த இடைக்காடு மகா வித்தியாலய நூற்றாண்டு செயற்குழுவுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்!