Informed by Web. Admin on Aug. 10, 2025
தருமராசா சிவானந்தத்தின் 20 ம் ஆண்டு நினைவலைகள்
நண்பா ஆனந்தா உன் இனிய பண்பும்
உன் அறிவை மற்றவர்களுக்கு பகிர்நதளிக்கும் பண்பும்
உன் இனிமையான பேச்சாற்றலும்
இறைவனுக்கும் கவர்ந்ததாலோ
உன்னை தன்னுடன் இணைத்தான்
எம் அன்பு நண்பா ஆனந்தா...
உன்னது இனிய நினைவுகளுடன்....
கண்களில் நீர்மல்க உன்னை மனதில் சுமந்து
வேதனைகளுடன் வாழும் நாம் உன்னை நினைத்து...
நண்பா உன்னை எம்மை விட்டு பிரித்த கயவர்களுக்கு
நல்ல தீர்ப்பு கிடைத்தது நீதி தேவதையிடம் இதை நீ அறிந்ததும்
நண்பா உன் ஆத்மா இப்பாதான் சாந்தியடைந்திருக்கும் இது எனக்குத் தெரியும் நண்பா......
நண்பா இறைவனின் தீர்ப்பிலிருந்து யாரும் தப்பமுடியாது....
நண்பா உன் கனவு நனவாகும் காலம் கனிந்துவிட்டது
நண்பா துரோகங்கள் நிலைக்காது என்று உனக்கு புரிந்திருக்கும்..
நண்பா உன் மறுபிறப்பை எதிர்பார்த்து வேதனையுடன் காத்திருக்கும்
உனதருமை நண்பர்களை எமாற்றிவிடாதே நண்பா.....
08/08/2025