பொறாமை, எரிச்சல், கோபம், சண்டை, அல்லது கண்ணூறு, சாபம்

By N. மகேசன் on May 15, 2024

Card image cap

ஒவ்வொரு நாளும் கனடியர்கள் தூங்குவதற்கு 70 லட்சம் தூக்க மாத்திரைகள் தேவைப்படுகின்றன. இதற்கு என்ன காரணம்! மற்றவர்களின் இடையூறு அளவுக்கு மிஞ்சிய சுமைகளை தலைக்கு மேல் ஏற்றுவதும் தான். என்ன பரிதாபம்! உறக்கம் என்பது நமது மனதையும்' உடலையும் நிம்மதியாக்குவதே; இதை பல மனிதர்களால் செய்ய முடிவதில்லை. நோய்களால் நித்திரை குறைவது குறைவு. ஆனால் வெறுப்பு; விரக்தி;குற்ற உணர்வு அல்லது மன அழுத்தம்; என்பவற்றால் தான் அதிகமாக வரும். சுய அறிவு பயிற்சி மூலம் தான் ஒவ்வொருவரும் இதை தவிர்த்துக் கொள்ளலாம் .எங்கள் நல்வாழ்வு மையத்தில் முக்கியமாக இடையூறு செய்வது பொறாமை என்ற விஷம் தான். இதனால் மனிதன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது தனி மனிதனின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மிகப் பெரிய முட்டுக்கட்டையாக அமைய இருக்கும். இதை குறைப்பதற்கு எளிய வழிகள் ஒன்று உண்டு ; எமது மனதை நிதானமான மனப்போக்கை பயிற்சி செய்வதுதான் .
நன்றாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் மீன் குமுளை சுற்றி பூச்சிகள் பிரகாசத்தை மழுங்கடைக்க செய்வது போல்; நல்ல நண்பர்கள் போலவும் விசுவாசிகள் போலவும் உங்களின் முயற்சி; முன்னேற்றத்தையும் மழுங்கடித்துக்
கொள்வார்கள். இவர்களை இனம் காண்பது மிகவும் கடினம். இவற்றிலிருந்து விலகுவதற்கு என்ன வழி; மனதை அமைதிப்படுத்தி பரபரப்பையும் பதட்டத்தையும் தவிர்த்து அமைதியாக இருப்பதற்கு பயிற்சி செய்வதுதான். இவர்கள் செய்யும் வீர! தீர !விளையாட்டுக்களை மற்றவர்களுக்கு சொல்லி எதுவித பயனும் கிடைக்காது. இதை நான் மற்றவர்களுக்கு கூறுவது இல்லை! இதைத்தான் நான் கடைப்பிடிக்கின்றேன். இதற்கு இரண்டாவது வழி நான் முன்பு கூறியதுதான்; உங்கள் !உங்களின் சிந்தனைகளில் இருந்து;மற்றவர்கள் ஏற்படுத்தும் கோபம் 'எரிச்சல்' ஏமாற்றங்கள்: வெறுப்புக்கள் என்பவற்றை உங்கள் மனதில் இருந்து வெளியேற்றுங்கள். இல்லாவிட்டால் உங்கள் மனங்களில் இருந்து மகிழ்ச்சியற்ற எண்ணங்கள் குவிந்து ஏதேனும் ஒரு பெரிய நடவடிக்கையில் கொண்டு போய் நிறுத்தும். இதற்கு மூன்றாவது வழி உங்களது மன நிலையை கடவுளிடம் கொண்டு போய் நிறுத்துவது தான். இதனால் உங்களது மனம் திசை திரும்பும்; இது மீண்டும் உங்களது மனதை அமைதியால் நிரப்பும். மன அமைதியையும் கவலையும் மாற்றுவதற்கு கனடா கையாள்வது கோடிக்கணக்கான $ கையாளும் தொழிற்சாலையாக மாறி உள்ளது நான் சொல்வது விதிவிலக்காக இருந்தாலும் கூட பொதுவாக மக்கள் சுயமதிப்பின் நேர்விகிதத்தில் தான் எதிர் விகிதத்தை சம்பாதிக்கிறார்கள்.
பல மக்கள் களைப்பாக இருப்பதற்கு என்ன காரணம்: அவர்கள் எதிலும் ஆர்வமும் அக்கறையும் இல்லாமல் இருப்பதுதான். இவர்களை எதுவும் ஆழமாக பாதிப்பது இல்லை இப்படிப்பட்டவர்களை தங்களுக்கு தங்கள் வாழ்க்கையில் என்ன நடக்குது என்று கூட தெரிவதுமில்லை. இவர்களின் வாழ்க்கை மனித வரலாற்றை விட மற்றவர்கள் மீது பொறாமை கொள்வதிலேயே முக்கிய பங்கு வகிப்பார்கள். பொறாமை கொள்வதனால் தங்களது முழு நேரத்தையும் பொறாமை கொள்வதிலேயே பயன்படுத்துவார்கள் . வீதி ஓரங்களில்இருந்து கொண்டு வீதி யின் இரு மருங்கையும்பார்த்துக் கொண்டு ஆரூம் வருவார்களா? பொறாமையை பற்றி பேசுவதற்கு என்று காத்துக் கொண்டிருப்பார்கள். நான் சொல்வேன் நாங்கள் பொறாமை கொண்டிருந்தால்? பொறாமை எங்களது நேரத்தை கட்டுப்படுத்தும் ;நாங்கள் பொறாமை விட்டு விலகினோம் என்றால்; நாங்கள் நேரத்தை கட்டுப்படுத்தலாம். நான் சொல்வேன் இவர்கள் தங்களுக்கு தாங்களே நல்ல ஒரு வழிகாட்டியாக "வழிகாட்டுதலை தேட வேண்டும். "இவர்கள் சுய சிந்தனை பிரார்த்தனையில் ஈடுபடுவது மிகவும் நன்று. அல்லது ; அல்லது சாலச்சிறந்தது. பிரார்த்தனை என்பது மனிதனின் ஆற்றலையும் அறிவையும் சக்தியையும் பெருக்கும் நான் சொல்வேன் ஒரு தனிப்பட்ட மனிதன் தனது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு தீர்வு மாபெரும் சக்திதான் பிரார்த்தனை.
இனி விடியத்துக்கு வருவோம், பொறாமை ஏன் வருகின்றது என்ன காரணம் (மற்றவர்களால் செய்ய முடியாத வேலையை வேறு ஒருவரால் செய்து காட்டினால் அவர் மீது செய்த செய்ய ஆற்றல் இல்லாதவர்களுக்கு பொறாமை வரும்) இதுதான் வரவிலக்கணம். இது எந்த விடயமாகவும் இருக்கலாம் கல்வி பொருளாதாரம். தனிப்பட்ட வாழ்வு பொதுவாழ்வு அறிவு ஆற்றல் திறமை இப்படியே கூறிக்கொண்டு போகலாம். ஊருக்கு போற காரணங்களும் உண்டு எங்களை விட சிலர் உயர்ந்து இருந்தால் அவர்கள் மீது எங்களுக்கு பொறாமை வரும் எப்படி என்னை விட அவன் பணம் வைத்திருக்கிறான் 'என்னை விட கல்வியில் உயர்ந்திருக்கின்றான்' பெரிய வீடு வைத்திருக்கின்றான்' போன்ற தனி நபரின் பின்னணி தெரிந்திருந்தால் அவர்கள் மீது மற்றவர்களுக்கு பொறாமை வரும். இதை நாங்கள் எப்படி தவிர்க்கலாம். அது எப்படி; அதாவது (background) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது. நான் ஒரு முக்கியமான விடயத்தை உங்களுக்கு கூற விரும்புகின்றேன். பாருங்கள் பொறாமை ஏன் எங்கள் மீது மற்றவர்களுக்கு வருகின்றது நாங்கள் மற்றவர்களை விட ஏதோ ஒரு விடயத்தில் உயர்ந்து இருப்பது தான். இதனால் அவர்களுக்கு எங்கள் மீது பொறாமை வரும். இதற்குக் காரணம் எங்களது பின்னணி தான் எங்களது பின்னணி அவர்களுக்கு தெரிவதால் தான் அவர்களுக்கு எங்கள் மீது பொறாமை வருகின்றது. கவனத்திற்கு "கவனித்துப் பாருங்கள் எங்களுக்கு முன்பு தெரியாத ஒருவர் மீது ஒரு காலம் பொறாமை வராது ஏன் அவரின் : அவரின் பின்னணி தெரியாது அதாவது கொழும்பில் இருப்பவர் ஒருவரின் மீது எங்களுக்கு பொறாமை வருமா வராது ஏன் அவரைப் பற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாது அது போல எங்களுக்கு முன்பின் தெரியாதவர்கள் மீது பொறாமை வருமா இல்லை ஏன் அவரைப் பற்றியும் பின்னணி எங்களுக்கு தெரியாது அப்ப நாங்கள் ஏன் தடுப்பதற்கு என்ன வழி நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நாங்கள் எப்படி வாழ்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு நீங்கள் கூறாமல் இருந்தால் நாங்கள் மற்ற இடமிருந்து பொறாமையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
இனி நான் உங்களுக்கு ஒரு முக்கியமான விடயத்தை கூறப்போகின்றேன் என்ன! ஒருவர் உங்கள் மீது பொறாமை கொண்டால் கொண்ட அவர் உங்கள் மீது எரிச்சல் படுவர்! அது கோபம் என்ற குழந்தையாக உருவெடுக்கும் பின் இது வளர்ச்சி அடைந்து சண்டை என்ற இளைஞனாக மாறும் !இது முதிர்ந்து பிரிவு என்ற முடிவில் முடியும் !
இதை உங்களுக்கு எளிதாக செய்யவும் அல்லது ஆற்றல் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் கண்ணூறு பார்ப்பார்கள் அல்லது சாபம்( 1975 )ஆண்டு ஆஸ்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களிடம் நடத்திய புள்ளி விவரத்தில் இரண்டும் மனிதனை பாதிக்கும் என்று நிரூபித்து இருக்கிறார்கள் இதற்கு தீர்வு என்ன நான் சொல்வேன் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது பின்னணியை மற்றவர்களுக்கு கூறாமல் இருக்க கடைப்பிடியுங்கள் பொறாமையை தவிர்க்கலாம்
இப்படிக்கு
N. மகேசன் கனடா
பாருங்கள் உலகிலே அதிக சக்தி வாய்ந்த கோள் சூரியன் தான் சூரியனிலிருந்து பூமி அதிக தூரத்திலும் இல்லை. மிக அருகாமலும் இல்லை. ஏன் மிக தூரத்தில் இருந்தால் பூமி குழிரால் சூழப்பட்டு மனிதன்' வாழ முடியாது .அது கிட்டவாக இருந்தால் அதிக வெப்பத்தால் பூமியில் மனிதன்' வாழ முடியாது .இது போல தான் பூமி இருக்கிற இடத்தில் தான் இருக்க வேண்டும் இதுபோல நாங்கள் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். (மிகப்பெரிய தத்துவம் அடங்கியுள்ளது இதை புரிந்து கொள்ளுங்கள்._)