தை பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்

By வே. இளங்கோ. on Jan. 14, 2021

Card image cap

தை பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்

விடியற்காலை எழும்போதே
விளையும் நிலம் மனதில் கொண்டு….
தனித்து நின்று செய்யாமல்
தமிழர் கூடி ஒன்றினைந்து…
சேற்றில் காலை வைத்து என்றும்
சோற்றை நமக்குத் தருகின்ற
கண்ணில் காணும் கடவுள் என்றால்
உழவர் அன்றி உலகில் வேறு யார்…?
காலைக் கதிரவன் உதிக்கும் போதே
கவிழ்ந்த நெற்குளை நிமிர்ந்து ஆடும்
அழகு மணிகளால் அசைந்து பாடும்….
அவ்விளைந்த நெற்மணி வீடு சேற…
தைமகள் அவளைத் தாங்கிக் கொள்ள
மாக்கோலமிட்ட மண்மணப் பானை
மகிழ்ச்சியில் அவளை ஏந்திக் கொள்ள…
புத்தம்புதுப் பானையில் பால்போல
அவள் பொங்கி வர…
அவளைப் பார்க்க ஆசை கொண்டு
கொம்பு நிறைய பூ சுற்றி….
பட்டு வேட்டிக் கழுத்தில் கட்டி
நெற்றிச் சுட்டிப் பொட்டு வைத்து
எங்கள் வீட்டுச் செல்வமாக
ஏறுபூட்டி காளை நிற்க..
உழவு காக்கும் விவசாயி
உறக்கச் சொல்லிக் குலவையிட
பால்பானை மெல்லப் பொங்க
பொங்கலோ பொங்கல் என்று சொல்லி
தைமகளை வரவேற்போம்….

நன்றி
வரிகள்,
மாங்கனி சந்தோஷ்