By செல்வி. க. சுஜிதா யா/ இடைக்காடு ம.வி. on June 22, 2022
மணிவிழா காணும் எங்கள் அதிபர் வாகீசன் குழந்தைவேலு அவர்களுக்கு தரம் 11 ல் கல்வி பயிலும் மாணவி க. சுகிதா அவர்களின் வாழ்த்து மடல்.
அறிவார்ந்த அதிமேதகு ஆசானே ....
ஆதிபரன் அருளாற் கிடைத்த அதிபரே .....
இதயமுருகி, இடைவிடாது, இனிதாக....
ஈகைதனைச் சொரிகின்ற இங்கிதரே ....
உன்னதராம் உம் பிள்ளைகள் நாம்,
ஊக்கம் தளரா உறுதியுடன் கற்போம் ....
எங்கும், எதிலும், எப்போதுமே தோல்வியுறாமல்,
ஏற்றமிகு வாழ்நெறியில் நிமிர்ந்தே நிற்போம் ...
ஜயனே .. ஜயமேதுமில்லை இதில் ...
ஒப்பிலாப் பணிதனை ஒழுங்கமைத்த பின்னர்,
ஓய்வு நிலை பெறும் தாங்கள்,
ஒளவையின் அருந் தமிழ் வீச்சாய்,
எஃகதன் வலிமையோடு,
என்றென்றும் வாழியவே!
சுபம்.
அகர வரிசையில் அணிசெய்து
பகரவென, பைந்தமிழ் மலர் கொய்து
தொடுத்திருக்கும் –
-பணிநிறை நயப்புப் பாச்சரமிதனைப் பணிவோடு
மணிவிழா நாயகருக்கு மனமுவந்து அணிவிப்பவர்;
தரம் 11 மாணவி
செல்வி. க. சுஜிதா
23 – 04 – 2022. யா/ இடைக்காடு ம.வி.