Card image cap

நீத்தார் நினைவு - சின்னத்தம்பி தருமராசா, இடைக்காடு

Informed by கந்தவேல் on Oct. 14, 2022

Card image cap

நீத்தார் நினைவு - சின்னத்தம்பி தருமராசா, இடைக்காடு

இப்புவியில் பிறந்த ஒவ்வொருவரும் என்றோ ஒருநாள் போய்த்தானே ஆகவேண்டும். எம் வாழ்வு நிரந்தரமானதல்ல. ஆக மிஞ்சி மிஞ்சிப்போனால் நூறு ஆண்டுகள். வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ? எம் வாழ்க்கையின் தத்துவத்தை நான்கு வரியில் சொல்லிச் சென்ற கண்ணதாசனின் வரிகள் இவை. மற்ற உயிர்களைவிட கடவுள் மனிதனுக்குக்கொடுத்த பாச உணர்வு, நீ இன்றி நான் வாழமுடியாது என்னுமளவுக்கு ஒரு சிலரை பாசத்தால் கட்டிப்போட்டுவிடுகின்றது.

உண்மைதான். எம் இரத்த உறவுகளைவிட ஏதோ ஒருவகையில் சில நண்பர்களை எமக்குப் பிடித்து விடுகின்றது. சிலருடன் ஏற்படும் நட்பு சிலகாலத்தில் அறுந்துவிடுகின்றது. சிலருடன் ஏற்படும் நட்பு உயிருள்ளவரை உயிர் வாழ்வது ஆச்சரியம்தான்

அந்தவகையில் அண்மையில் இவ்வுலகைவிட்டுப்பிரிந்த சின்னத்தம்பி தருமராசா இளமை தொடங்கி இன்று வரை என் ஆருயிர் நண்பனாய் வாழ்ந்தவர். ஒரே ஊர், ஒரே பாசாலை, ஒரே வகுப்பு, ஒரே வீதி, ஒரே மனப்பாங்கு, மாறுபாடற்ற மசிந்தனை. பள்ளிப்படிப்பை பத்தாம் ஆண்டுவரை ஒன்றாக கல்விகற்று வெளியேறினோம்.. எம்மைத் தோட்டம் வரவேற்றது. எம் முயற்சிக்கு தீனிபோட எம்ஊர் தோட்ட நிலம் போதவில்லை. வன்னிமண் விசுவமடு எம்மை வரவேற்றது. வாலிப மிடுக்கு வன்ன்னி மண்ணில் களமாடியது. உளைப்புக்கேற்ற பலன் நிறையவே கிடைத்தது.

காலம் ஓடியது. எமக்கான வாழ்க்கைத்துணயையும் தேடிக்கொன்டோம். இல்லறத்தின் விளச்சலாக கையில் குழந்தைகள் தவழ்ந்தனர். இன்பமும் துன்பமும் மாறி மாறி வதுபோயின. நாளுக்குநாள் நாட்டு நிலைமை மோசடைந்து வந்தது வாழ்வுதேடி வன்னியில் வாழ்ந்துவந்த என் உயிருக்குயிரான தம்பியர் இருவரை ஒரேநாளில் இலங்கை இனவெறி இராணுவம் பலிகொண்டது. நண்பனின் மூத்த மகனை.வெறிகொண்ட உள்ளூர் இனவெறிக்கும்பல் பலிகொன்டது. இழப்பு என் நண்பனுக்கு பட்டுமல்ல எம் ஊருக்கே கல்வி ஒளி பாச்சக் காத்திருந்த ஆனந்தனின் இழப்பு எம் ஊருக்கும் கல்வி உலகத்துக்கும்தான்.

கால ஓட்டம் பல மாறுதல்களை செய்து விடுகின்றது. எம் நாட்டில் நிம்மதியாக வாழமுடியாத நிலை. பலரும் வாழ்வுதேடி அந்நிய தேசம் படைஎடுத்தனர். நண்பனின் பிள்ளைகளும் வாழ்வுதேடி அந்நிய மண்ணில் குடியேறினர். நானும் என் பிள்ளைகளுடன் கனடிய மண்ணில். நான் தாயகம் வரும்போதெல்லம் யாரைச் சந்திக்காது விட்டாலும் நண்பன் தருமுவை தவறாது சந்தித்து அளவளாவுவதில் ஓர் மன நிறைவு.

கடந்தவருடம் ஊருக்குச் சென்றிருந்தபோது அவரைச் சந்தித்தேன். உடல் பலவீபனமுற்றிருந்தது. இதயம் பாதிக்கப்பட்டிருந்தது வழமையான தோட்டச் செய்கயை செய்யமுடியாமலிருந்தார். எனினும் மனைவிக்கு வேண்டிய அன்றாட வேலைகளை செய்துகொண்டிருந்தார். ஜேர்மனியிலும் கனடாவிலும் வாழும் பிள்ளைகளுடனும் பேரப்பிள்ளைகளுடனும் தொடர்பில் இருப்பதால் காலம் கவகலையின்றிக்கழிவதாக திருப்திப்பட்டுக்கொண்டார்.

எவருக்கும் நாளை என்ன நடக்கும் என்று எவர்தான் அறிவார். அன்றைய பொழுதில் வெளியே போவிட்டு வீட்டே வந்து நாற்காலியில் சாய்ந்தவருக்கு நாற்காலியே காலனாகுனெ யார்தான் அறிவார்.

இறப்பு ஏமாற்றமாதல்ல. இன்றைய இறப்பே ஏமாற்றமானது. அதைத்தன் ஜீரணிக்கமுடியவில்லை.

இன்று நீ என்றால் நாளை நாம் என்பதே நியதி..

உயிருடன் இருக்கும்போது நீ என் உயிர் நண்பன்.

உயிருடன் இல்லாதபோதும் நீ என் உயிர் நண்பனே.

இது, இன்று
கந்தவேல்
12.10.2022