திட்டமிடுவதும், அதை செயல்படுத்துவதும், நிறைவேற்றி முடிப்பதும்.

By N. Mahesan on Nov. 22, 2024

Card image cap

திட்டமிடுவதும், அதை செயல்படுத்துவதும், நிறைவேற்றி முடிப்பதும்.

திட்டமிடல் என்றால் என்ன?. அது ஒரு தர்க்கரீதியான கேள்வியாகும், செயல்படுத்துவது என்றால் என்ன? திட்டங்களை வகுப்பதும் அதனை எழுச்சியூட்டுவதும், ஊக்குவிப்பதுமாகும் என்பது அர்த்தமாகும். நிறைவேற்றுதல் என்றால் என்ன. திட்டங்களை நிறைவேற்றி செயல் திட்டங்களை பூரணமாக முடிப்பதுமாகும். திட்டமிடல் சக்தி வாய்ந்தது. அது உங்களை செயல்படுத்தலில் உந்தப்படுத்துவது. எதற்கும் திட்டங்களே ஒரு மனிதனின் வாழ்வையும், முன்னேற்றத்தையும் நிர்ணயிப்பது. திட்டங்கள் இல்லாதவனின் வாழ்வு, பாதை தெரியாது பயணிப்பவனுக்குச் சமம் வேலையிலோ அல்லது வீட்டிலோ திட்டமில்லாமல் காரியத்தைச் செய்வது கரடுமுரடான பாதையில் மாட்டுவண்டிச் சவாரி செய்வதைப் போன்றது. இது தோல்வியில்தான் முடியும்.
உங்கள் உள் மனதில் இருந்து செயல் திட்டங்களை உருவாக்கினால் அது உங்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் தரும். இல்லையேல் அது உங்களை அதிருப்தி நிலைக்குக் கொண்டு செல்லும். இது அவர்கள் செய்து கொண்டிருக்கும் செயல்திட்டத்தை நிறுத்திவிடும். ஏன் இதன் முக்கியத்தை அறிந்து கொள்ள முடியாது. பணம் உங்களுக்கு அதிகாரத்தைத் தருகின்றது, புகழ் உங்களுக்கு அங்கீகாரத்தைத் தருகின்றது. பெற்றோரிடம் இருந்து அடிவாங்கி விடுவேன் அல்லது வேலையை இழந்து விடுவோமா என்பது எமது புறத்தூண்டலின் வெளிப்பாடு ஆகும். இப்படிப்பட்ட காரணங்களால் எல்லோரும் நேர்மை, நீதியாக செயல்திட்டங்களை நிறைவேற்றி முடிக்கிறார்கள்.
திட்டங்களைச் செயல்படுத்தும்போது பயம் சார்ந்த செயல் தூண்டல்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றது அவையாவன;-
வேகமாக வேலையை முடிக்க வைக்கின்றன
இது துரித வேகத்தில் நடக்கின்றது
காலதாமதமில்லாமல் காரியத்தை முடிக்க வைக்கின்றது
குறுகிய காலத்தில் நிறைவேற்றி முடிக்கப்படும்.
ஆனால் பயம் சார்ந்த திட்டங்களினால் சில பல இழப்புக்களையும் தடைகளையும் நாம் எதிர் நோக்க வேண்டிவரும்
திட்டங்களை ஆரம்பித்தவர் அதனைவிட்டு விலகிப் போகும் நிலைவரும்.
நாளுக்கு நாள் செயல்பாடுகள் குறைந்து கொண்டுவரும்.
இது நிறைவேற்றலை நிறுத்தி விடுகின்றது
சிறிய குற்றம் குறைகளை அனுபவித்தவருக்கு பெரிய குற்றம் குறைகளைக் கேட்க வைக்கின்றது.
ஊக்கம் சார்ந்த செயல்தூண்டல்கள் உங்களுக்கு பூரண அங்கீகாரத்தைத் தருகின்றது. இதன் நன்மைகள் என்ன. இது மிக நன்றாகவே நடக்கும். பூரணமாக உணவை உட்கொண்ட மாடுகள் வண்டிகளை இழுப்பதுபோல. சோர்வில்லாமல் செயல்திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்படும்.
சில மனிதர்களை சில பல செயல் தூண்டல்கள் திட்டங்களை நிறைவேற்றி முடிக்க வைக்கின்றது.
பெருமை, சாதனை, உணர்ச்சி, பொறுப்பு, நம்பிக்கை போன்ற உள் மனதில் இருந்து வருகின்ற உள்ளார்ந்த தூண்டுதல்கள் ஆகும். இதற்கு உதாரணம் ஒரு மட்டைப் பந்து வீரன் ஒரு காலமும் மட்டைப்பந்து விளையாடியது இல்லை. ஆனால் அவன் பயிற்சியாளரிடம் சென்று தனக்கு ஒரு சந்தர்ப்பம் தரும்படி கேட்டான். ஆனால் பயிற்சியாளார் சம்மதிக்கவில்லை. இங்கு எல்லோரும் நன்றாக மட்டைப் பந்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் விளையாடமாட்டீர்கள் என்றார். அவன் கேட்டான் எனக்கு ஒரு சந்தர்ப்பம் தந்து பாருங்கள் என்று. அப்போது பயிற்சியாளர் சொன்னார், தம்பி! ஒன்றை மட்டும் மறந்துவிடாதே! பாடசாலையின் மானம், உன்கையில் என்பதை மறந்துவிடாதே, என்னை ஏமாற்றி விடாதே என்றும் சொன்னார்.
ஆட்டம் தொடங்கியது. அந்த சிறுவன் மிகவும் ஆவேசமாக ஆடினான். ஒவ்வொரு பந்திற்கும் 6 ஓட்டங்கள் எடுத்தான் இதனால் அவனுக்கும், பாடசாலைக்கும் பாராட்டுக் கிடைத்தது. பயிற்சியாளர் அவனைக் கூப்பிட்டு தம்பி! என்வாழ்க்கையில் இவ்வளவு மோசமான கணிப்பை செய்திருக்கின்றேனே என்று அவனிடம் மன்னிப்புக் கேட்டார். இதுபோலத்தான் எல்லோரும் பொதுப்பணிகளில் ஈடுபடுங்கள். உங்களது திறமைகளை வெளிக் கொண்டுவந்து சமுதாயத்திற்கு பயன்பாடு உள்ளவர்களாக வாழுங்கள்.

நா. மகேசன்
கனடா.