By Yogeswari Sivapalan on Jan. 25, 2021
கண்ணகை ஆழ்வார் ஆசிரியை100வது பிறந்த நாள் 17January 1921 -இடைக்காடு (மாதர்சங்கம்). ❤️இவர் சிறுவர் பாடசலை, தையல் வகுப்பு அன்பான ஆசிரியையாக கடமை ஆற்றினார்.
எங்கள் ஊர் மக்களுடன் அன்பானவராகவும் மிகவும் தெரிந்தவராகவும் அறியப்பட்டார். எங்களது உறவிரானதும் ஆசிரியையும் ஆசையம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இவர் மறைந்தாலும் இவருடைய புகழ் மறையாது.
எமது ஊரில் முதன்முதலாக முன்பள்ளியைத தொடங்கி நடத்தியவர். பெண்களுக்கு தையல் பழக்கியவர். மாதர் சங்கத்தை அங்குரார்ப்பணம் செய்து நடத்தியவர்.
நித்திய சாந்தி அளித்தருளும் இறைவா!ஓம் சாந்தி ஓம் சாந்தி
கண்ணகை உந்தன் பெயர்
என்றும்
கண்டதில்லை உன்கையில்
பொன்னகை – நாளும்
கண்டோம் உன் வதனத்தில்
புன்னகை
வெள்ளை மனதுடனும்
வெண்ணரைத் தலையுடனும்
வெண்ணிற உடையும் கொண்டு
அகர முதல எழுத்தும்
ஆத்திசூடியும்
மருதமலை மாமணியும்
எமக்களித்த ஔவை
நம் கரம் பிடித்து
விரல் மடித்து
கரும்பலகையிலும்
கற்பலகையிலும்
கன்னித்தமிழ் அளித்த
கலையரசி
பல்துலக்கி முகம் கழுவி
பாங்காய் மடியிருத்தி
பாடம் புகட்டிய
தமிழ்த்தாய்
நாம் பேசும் தமிழுக்கும்
எழுதும் எழுத்துக்கும்
ஏகபோக சொந்தக்காரி
அகரம் அறியவைத்த சிகரமே
எழுத்தறிவித்த தெய்வமே
ஏடுதந்த ஏந்தலே
என்றும் உன் நினைவு
எங்களுள் வாழும்
அன்னாரின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட அஞ்சலி
கவிதை உதவி_ வை. பவான்