Informed by Keathewaran on Dec. 14, 2022
நாகலிங்கம் கிருஸ்ணானந்தன்
மலர்வு -14.11.1946 உதிர்வு -14.12.2022
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கிருஸ்ணானந்தன் இன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் - தங்கரத்தினம் தம்பதிகளின் பாசமிகு புதல்வனும் காலஞ்சென்ற கந்தசாமி - மாணிக்கம் தம்பதிகளின் மருமகனும் சிவபாக்கியம் அவர்களின் அன்புக்கணவரும் அனுசா, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு தந்தையும்,நாகீசன் அவர்களின் சித்தப்பாவும், ரதீஸ்வரன் ,கெங்கா,சித்திரா அவர்களின் பாசமிகு மாமானாரும் காலஞ்சென்ற விவேகானந்தனின் அன்பு சகோதரனும் இரத்தினபூபதியின் மைத்துனரும் , திவாகர், திவ்வியா, கிருசாந், கிருத்திகா ,கிஷாந், அபிராமி ,விஷாந்த்,திவியா ஆகியோரின் பேரனும் இதழ்யா ,அகனிதன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (18.12.2022)அன்று முற்பகல் 9.00மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக 11.00மணியளவில் இடைக்காடு சாமித்திடல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் .
இந்த அறிவித்தலை உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கேதீஸ் (மகன்)- +447961929197
ரவி (மருமகன்) -0774195961