இடைக்காடு மஹா வித்தியாலயம் புதிய அதிபர் நியமனம்.

By பழைய மாணவர் சங்கம். on Jan. 11, 2023

Card image cap

யா/இடைக்காடு மஹாவித்தியலயத்திற்கு புதிய அதிபராக திரு. குமாரசாமி அகிலன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை வரவேற்கும் நிகழ்வு 19.12.2022 திங்கட்கிழமை காலை 7:30 மணிக்கு ஆரம்பமானது.

நிகழ்வினை பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஒழுங்கு படுத்தி நெறிப்படுத்தியிருந்தது.
பாடசாலை அபிவிருத்திச்சங்கம் மற்றும் பெற்றோர்கள், முன்னை நாள் அதிபர்கள், வெளி நாட்டு வாழ் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

வரவேற்பு உரையினை தொடர்ந்து, பாடசாலையின் பிரதி அதிபர், திருமதி க. லலீசன், ஓய்வு நிலை கல்வி பணிப்பாளர் திரு க. முருகவேல், எமது பாடசாலையின் ஓய்வு நிலை அதிபர்களான திரு. அ. அருந்தவனேசன், திரு. கு. வாகீசன் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு. நா. சுவாமினாதன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு. ச. ஶ்ரீபதி, பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் திரு. கஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றியிருந்தனர்.

இறுதியாக புதிய அதிபரின் ஆரம்ப உரையுடன் நிகழ்வு காலை 8:30 மணிக்கு நிறைவடைந்தது.