By ந. உதயகுமார் (லண்டன் ) on Sept. 4, 2023
பிள்ளை திவானி நீர்த்தடாக பொங்கல்
எமது மகள் பிள்ளை திவானியின் 20வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மகளின் பெயர் என்றென்றும் அழியாத நினைவோடு பல நூற்றாண்டுகள் கடந்தாலும் நிலைத்திருக்க வேண்டும் என்பதினை மனதிற்கொண்டு இப் பிள்ளை திவானி நீர்த்தடாகம் எம்மால் அமைக்கப்பட்டு இன்று 03-9-2023 புது பொங்கல் நிகழ்வு மூலம் பாவனைக்கு அர்பணித்துள்ளோம்!
ஊருக்கு சென்று வரும் காலங்களில் கடும் கோடைகாலங்களில் மாடு, ஆடு, நாய்கள்,உட்பட சகல யீவராசிகளும் தாகத்தினால் கஸ்டப்படுவதினை அவ்வப்போது அவதானித்ததினை மனதிற்கொண்டு இப்படியான ஒரு தடாகம் எமது மகளின் பெயரினால் அமைக்கவேண்டும் என்ற எண்ணக்கரு மனதில் தோன்றியதினை எனது நண்பனும் சகோதரமுறையுமானவரான சிவகுமார் (சிவன்)அவர்களுடன் திடீரென கதைத்தபோது நீர் வரத்தேவயில்லை நானே ஆட்களை தமது இடத்திலிருந்து கூட்டிச்சென்று தானே கூட நின்று செய்து முடிப்பேன் என சொன்னது மட்டுமல்ல அவ்வாறே தமது வேலைகளையும் பொருட்படுத்தாது இரண்டரை மாதங்கள் இடைவிடாது தொடர்ந்து நின்று இவ் அரும்பெரும் பணியில் தம்மை முற்று முழுதாக அர்பணித்து யாவரும் வியந்து நோக்கும் வண்ணம் நேர்த்தியாக வடிமைத்து இன்றைய தினம் புது பொங்கல் நிகழ்வினையும் முன்னின்று நடாத்திப் பாவனைக்கு அற்பணிக்க மிகமிக உதவியாக நின்ற நல்ல உள்ளத்திற்கு என்றென்றும் நன்றியோடு கடமைப்பட்டுள்ளோம்!
இத்துடன் பண்டைய காலத்தில் பாவனையில் இருந்து தற்போது அழிவடைந்து காணக்கிடைக்காத சுமைதாங்கி,ஆவுரோஞ்சிக்கல்,என்றென்றும் தடாக நீர் சுத்தமாகவும் புனிதமாகவும் இருப்பதினை உறுதி செய்ய தடாக நீர் மத்தியில் கருங்கல்லினால் ஆன பிள்ளையார் சிலையும் நிறுவி மேலும் பொலிவுடன் பிள்ளை திவானி நீர்த்தடாகம் பாவனைக்கு இன்று மகள் சார்பில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதினை பணிவோடு அறியத்தருகின்றோம்! மேலும் எக் கோடை காலத்திலும் வற்றாத நீர் மேலாண்மையுடனும் உள்ளூர் கிணற்று நீரின் தரத்திற்கு எள்ளவும் குறையாத சுவையுடனும் ஆடு, மாடு, பறவைகள், மற்றும் சகலவிதமான ஊர்வன முதற்கொண்டு சுயமாக நீர் அருந்தக்கூடிய அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது !மேலும் நீர்த்தடாகத்தினை சூழ உள்ள பகுதியில் முற்று முழுதாக எக்காலத்திலும் இலை உதிர்க்காததும் உதிர்க்கும் இலைகளை ஆடு, மாடு விரும்பி உண்ணும் பலா மரக்கன்றுகளும் , ஆலமரம் மற்றும் தென்னம்பிள்ளை ஒன்றும் தகுந்த பாதுகாப்பு வேலி அமைத்து செம்மண் பரப்பி நாட்டப்பட்டுள்ளது என்பது வரும் இரண்டு மூன்று வருடங்களில் நிழல்சார்ந்த குளிர்ச்சியான பிள்ளை திவானி திடலாக அமையும் என்ற நம்பிக்கையுடன் !
பிள்ளை . திவானி,பிறேமளா. உதயகுமார் !