By J. S. R on Nov. 6, 2025
நூற்றாண்டு விழா
எமது கிராமத்தில் எம்முன்னோர்களான விவசாயப்பெருமக்கள் ,சமூக நலனின் அக்கறையுள்ளோர்கள், புத்தியீவிகள், கொடையாளர்கள் இன்னும் பல மதிப்புமிக்க மக்கள் என பெருந்தொகையாக உள்வாங்கிய அற்புதமான அழகிய கிராமத்தில் சைவ வித்தியாசாலை என்கிற உருவம் கொடுத்து அலைந்து திரிந்து கல்வி கற்றோருக்கு வழிசெய்து கொடுத்து மிக உன்னத கல்வியினை வழங்கி உன்னத நிலைக்கு உயர்த்தியுள்ள தற்போது மகாவித்தியாலம் என்கிற எமது கல்விக்கூடம் எமது ஊர் மத்தியில் பரந்த தேசத்தில் நிமிர்ந்து நிற்கும் காட்சி அற்புதமாக இருப்பினும் 100 வயதினை எட்ட இன்னும் சில நாட்களே உள்ளதாக உங்களுக்கு அறிவிக்கும் count Down தொழில் நுட்பரீதியாக அறிவியலினையும் உட்புகுத்தி உங்கள் கரங்களில் துள்ளி விளையாடும் கைப்பேசிகளில் காட்சிப்படுத்திக்கொண்டிருப்பது என்பது உங்கள் நினைவாற்றல் என்பதற்கு சவாலினை விடுக்கும் ஒரு போட்டியாக பார்க்கப்படும் இவ்வேளையில் இப்பாடசாலைக்கு 100 வருடங்களை அண்மிக்கும் இவ்வேளையில் அதன் அமைப்பில் ஏதாவது ஒரு பாரிய மாற்றத்தினை ஏன் எம்மால் செய்யமுடியவில்லையே என்கிற கேள்வி என் மனதில் வியாபிக்க பாடசாலை நிர்வாகம் , மற்றும்
பழையமாணவர் சங்கம் இவர்களிடம் கலந்தாலோசிக்கையில் கட்டிடங்களில் உள்ள குறைபாடுகள், கட்டிடங்களில் உள்ள சேதாரங்கள், போதிய இப்போதைய கல்வி முறைக்கு ஏற்ப வசதி இன்மை எனவும் இன்னும் நிறைய தேவையும் மாற்றங்களும் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாக மிகுந்த தயக்கத்துடன் இதனை முன்னின்று செய்யவும் நிதி திரட்டி ஒப்பேற்றவும் எவரும் திடகாத்திரமாக முன்வருவதில் சிறு தயக்கமும் இருப்பதாக தெரிவிக்கையில் முதலில் தரம் 5 இற் குட்பட்ட கட்டிட தேவையினை நிவர்த்தி செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளலாம் என அவர்களுடன் இணந்த கருத்தாடலில் முடிவு செய்து அதற்கான முதல் படிக்கட்டாக கட்டிட வரை படம் தயார் செய்த நிலையில் எமது பாரம்பரிய நிழல் தரும் இரு வேப்பமரங்களும் இவ் கட்டிடம் அமைக்கும் எல்லைக்குள் இருப்பதினால் என்ன செய்வது என்கிற அங்கலாய்ப்பு எம் எல்லோர் மத்தியிலும் ஒருமித்த கேள்விக்கணைகளாக குடையத்தொடங்கின !
வாழ்வியலையும் வாழ்வியல் தத்துவத்தினையும் பகுதி பகுதியாக பிரித்து 1330 குறளாக எமக்கு வகுத்து தந்த வள்ளுவனுக்கு வானுயர சிலைகளும் , ஆங்காங்கே சிறிய பெரிய சிலைகளும் அமைத்து கொண்டாடினாலும் வள்ளுவனின் குறளை கடலில் கரைத்து விட்டோமா என எண்ணத்தோன்றிய நிலையில் இக்கட்டிடம் கட்டாயம் கட்டிய ஆகவேண்டும் இந்த நூற்றூண்டு நிகழ்வினை தவற விட்டால் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது என்பது நிட்சயமற்றது என் எண்ணக்கருவில் அனைவருக்கும் ! நிழல் தந்த ஏன் மதிய நேரத்தில் இம் மரங்களின் கீழே நடத்திய பாடங்களுக்கு நிழல் தந்த மரங்கள் இவை, வேம்பம் பூ வடகம் செய்ய பூக்களை வாரி வழங்கிய மரங்கள் இவை, காலை வேளையில் பதிவாக உள்ள கிளைகளில் ஒன்றை ஒடித்து பல் விளக்க கிளைகள் தந்த மரங்கள் இவை, நூற்றாண்டு கடந்து வாழுகின்ற மரங்கள் இவை , எல்லோர் மனங்களிலும் உணர்வுகளிலும் ஒன்றிவிட்ட மரங்கள் இவை, தானாக முளைத்து முன்னோர்களினால் தகுந்த இடத்தில் நிற்பதாக கணித்து தவற விட்டபடியால் ஓங்கி படர்ந்து கோலோச்சும் மரங்கள் இவை என்கிற எண்ணம் பாடசாலை நிர்வாகம் , பழைய மாணவர் சங்கம் மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்ட எல்லோர் மனதிலும் ஏற்பட ஒரு பரிதவிப்பு,ஒரு ஏக்கம் , ஒருவித மன உளைச்சல் என எல்லோருக்கும் ஏற்பட கட்டிட வரைபடத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கையில் அவர்கள் மரத்தினையும் இடத்தினையும் ஆராய்ந்து இதற்கான முடிவினை எட்டுவோம் என்பதாக சொல்லி மரத்தினை ஆராய்கையில் ! இம் இன்னும் 5 / 10 வருடங்களில் சிறிது சிறிதாக தம் ஆயுளை முடித்துக்கொள்ளும் ! அதன் காரணிகளக இதன் வேர்த்தொகுதிகளை கற்பாறைகள் இறுக்கிக்கொண்டு விட்டன ! அதனாலே இம் மரங்களின் கிளைகள் நீண்டு வளராமல் சிறு சிறு வளைவுகளோடு படர்ந்து செல்கின்றன ! இதன் கிளைகள் செழிப்பில்லாது ஆக்ரோசமாக நேராக வளராது மொக்கு மோறைகளுடன் காணப்படுகின்றது! அத்துடன் எக்காலத்திலும் இம் மரங்களில் காணப்படும் கூடியளவு குருவிச்சை என்கிற ஒட்டுண்ணித்தாவரம் எந்த சமூக நலன், பசுமை புரட்சியாளர்கள், மரத்தின் மீது அக்கறை கொண்டோர் என பலவகைப்பட்டோர்கள் எவரினாலும் அக்கறையில்லாததினலோ அல்லது பெரிதுபடுத்தாதுவிட்டதினாலோ மரக்கிளைகள் பலமிழந்து காற்று, மழை,சிறுபுயல்களுக்கு முறிந்து விழக்கூடிய நிலையினை மிக அண்மித்த நிலையினை அடைந்து விட்டபடியினால் இம்மரங்களை அகற்ற நாம் சிபார்சு செய்வதுடன் அனுமதியும் தருகின்றோம் என அனுமதி தந்திருந்தாலும் எமது மன நிலையின் ஓரத்தில் அல்ல மனம் முழுவதும் கனத்த நிலையிலேயே ! யோசித்தோம்! யோசித்தோம் பலமுறை ஏதாவது மாற்றீடு உள்ளதாக என கலந்துரையாடினோம் ! அப்போது ஒருவரிடமிருந்து கடினமான ஆனால் எம் மனதினை ஓரளவு சமாதானடைய வைக்க்கக்கூடிய செய்திகள் ! எமது கிராமம் மின்சார வசதி கிடைக்கும் முன்பாக இத்தியடி மாபெரும் நிழல் மண்டபம்போல் நிறைந்த பயன் தரு நெடிதுயர்ந்த பல மரங்களினால் சூழ்ந்து வழிப்போக்கர்கள், சிறு வியாபாரிகள்,வாடகைக்கார் உரிமையாளர்கள் என்போரினது பகல் நேர முழுவதுமாக மக்கள் சராசரியாக தங்கி இளைப்பாறுவதுடன் மாலை நேரமும் பறவைகளின் நிறைந்த ஒலியும் இரவு நேரம் குருவிகள் , மைனா, காகம், குயில் போன்ற இன்னும் ளல பறவைகளுக்கு நிரந்தர தங்குமிடமாக இருந்த இப்பாரிய மரங்கள் எவ்வித தயவு தாட்சயணமின்றி மரங்களை வெட்டுங்கள் மின்சாரத்தினை ஊருக்குள் கொண்டு வாருங்கள் என எவ்வித எதிர்க்கருத்தின்றி ஏகோபித்த நிலையில் மின்சாரமே எமக்கு முக்கியம் எனக்கொண்டு கருக்கொண்ட மேகம்போல் படர்ந்து பரவி ஓங்கி மதாளித்து வளர்ந்த அதனை மரங்கள் பலவற்றினையிம் ஒரு கிழமைக்குள் வெட்டிச்சாய்த்து மின்சாரத்தினை கொண்டு வந்தனர் ! அப்போது மக்களுக்குக்கு மின்சாரமே தேவைப்பட்டது ! இப்போது இங்குள்ள
மாணவர்களுக்கு பாதுகாப்பாக கல்வி கற்றிட பாதுகாப்பான கட்டிடம் , அதற்கான சூழலினை ஏற்படுத்திக்கொடுப்பது எம் கடமை , எனவே தளர்வில்லாது பணிகளை ஆரம்பியுங்கள் என கருத்துரைக்க ஓரளவுக்கு மனது சாந்தியடைய அதன்படியே துரிதகதியில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு சிறந்த அழகான வசதியான உருவகத்துடன் 26/1/26 எங்கள் மாணவச்செல்வங்களின் பயன்பாட்டிற்கு இம் மண்டபம் கையளிக்கப்படுகின்றது
நன்றி
உங்களுடன் உங்கள்u கருத்துக்கு எப்போதும் ஒத்திசைவாக
Chief Executive Officer Jayakumar