வார்த்தைதான் வாழ்க்கையா ?

By N. Mahesan on Dec. 18, 2024

Card image cap

வார்த்தைதான் வாழ்க்கையா ?
நாம் நினைப்பது, நாம் பேசுவது, நாம் விரும்புவது எல்லாம் மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும், அவர்களைக் கவர வேண்டும், இப்படி இருந்தால்தான் மற்றவர்கள் எங்களை ஏற்றுக் கொள்வார்கள். மனிதன் தோன்றியபோது அவனின் உயரம் 22 அடி, இப்பொழுது 6 அடி. அப்போது மனிதன் காட்டில் வாழ்ந்தான், இப்பொழுது வீட்டில் வாழ்கிறான். ஆனால் எந்த விலங்கினங்களுக்கும் இல்லாத சிறப்பு மனிதனுக்கு உண்டு. அது என்ன? .வார்த்தை, ஆனால் இந்த வார்த்தை பிரயோகம்தான் எங்களின் தரத்தை நிர்ணயிக்கிறது என்பதைப் பெரும்பாலனவர்கள் புரிந்து கொள்வது இல்லை வார்த்தையை அள்ளி வீசிவிடுவார்கள். இதனால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
நாங்கள் வார்த்தைகளைப் பேசும்போது அவதானிக்க வேண்டியவை
கண்ணுக்கு நேர் பார்த்துப் பேச வேண்டும்
தலையை அங்கும் இங்கும். நிலத்தை அல்லது ஆகாயத்தை பார்த்துக் பேசினால் அவர் பொய் சொல்கிறார் என்று அர்த்தம்.
நம்மிடம் பேசுபவர் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு பேசினார் என்றால் அவருக்கு குழப்பம் இருக்கு என்று அர்த்தம்.
தலையில் கையை வைத்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து கொண்டு பேசினால் அவருக்கு தன்னம்பிக்கை அதிகம்.
ஒருவர் உள்ளங்கைகளை விரித்துக் கொண்டு பேசினால் அவர் நேர்மையானவர்.
நாம் பேசும்போது ஒருவரும் பதில் இல்லாமல் இருந்தால் என் பேச்சில் அவருக்கு சம்மதம் இல்லை என்று அர்த்தம்.
கொட்டாவி விட்டால் என் பேச்சில் சலிப்புத் தன்மை என்றென அர்த்தம்.
மனிதனின் வாழ்க்கையில் 90 வீதத்தை நிணயிப்பது வார்த்தைப் பிரயோகம் தான் என்று நான் சொல்வேன். பணமும். குணமும் அல்ல. சொல்வாக்கு பிழைத்தால் செல்வாக்குப் பறக்கும் என்பார்கள். வார்த்தை பிழைத்தால் வாழ்க்கையே பிழைத்துவிடும் என்பார்கள். சில நேரங்களில் வார்த்தை திரிவுபடும். அது எப்படி ஒரு 200 மனிதர்களை வட்டவடிவில் விட்டு ஒரு காகம் பறக்கிறது என்று சொல்லி ஒவ்வொருவரிடமும் சொல்லுங்கள் என்று கூறுங்கள். கடைசி மனிதனிடம் கேளுங்கள் நான் என்ன சொன்னேன் என்று. அவர் சொல்வார் காகம் இறந்து விட்டதென்று, இப்படி தகவல் சொல்லும்பொழுது நான் சொன்னதைவிட மிக பாரதூரமான விடயமாக திரிவுபடும் அவதானமாக இருங்கள்.
நான் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் முதலில் மக்கள் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு மாற்றுக் கருத்தே கிடையாது. தனிப்பட்ட முறையிலே அல்லது பொதுரீதியாகவோ என்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என் திட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தேவையில்லாத திட்டங்களை தேவையான திட்டங்களாக மாற்ற முடியாது. திட்டங்கள் என்பது ஆக்கங்களை ஏற்படுத்த வேண்டுமே தவிர இழப்புக்களையும். செலவுகளையும் ஏற்படுத்துவதற்கு அல்ல என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். புதிய திட்டங்கள் என்பது பழைய திட்டங்களை அழிப்பதற்கு அல்ல, பழைய திட்டங்களை புனரமைப்பதற்கும் அவைகளை பாதுகாப்பதற்குமாக இருக்க வேண்டும்

சில வார்த்தைகளின் வெளிப்பாடுகளை நான் இப்படிச் சொல்கிறேன்
1 வார்ததையை விட செயல் பலமானது.
2. ஒருவன் மற்றவர்களை ஏமாற்றுகிறான் என்றால், பெரும்பகுதி அவன் தன்னைத்தானே ஏமாற்றுகிறான் என்று அர்த்தம்.
3. எதிர்ப்பே மனிதனைப் பலசாலி ஆக்குகின்றது
4. பிறருக்கு நல்லஆலோசனை கூறுகிறவர்கள், தாங்கள் அதனைக் கடைப்பிடிக்க மாட்டார்கள்.
5. பிழைகளைக் கண்டு பிடிப்பவனே, மிக பெரிய பிழைகளைச் செய்கின்றான்.
6. சிலரின் வார்ததைகளைக் கொண்டே அவர்களின் குணத்தை அறிந்து கொள்ளலாம் .பாருங்கள் சிலர் சொல்வார்கள் அவர் ஏழை என்று, ஆனால் சொன்னவர்கள் ஏழையாக இருப்பார்கள்.
இனி நான் வார்த்தையின் நிலை, உங்களை எவ்வாறு மதிப்பீடு செய்கின்றது என்று சொல்வதற்கு மனிதனையும் நீரையும் உதாரணமாகக் கொள்கின்றேன். நீரைப் பாருங்கள். நாங்கள் குடிப்பதும் நீர்தான், குளிப்பதும் நீர்தான். ஆற்றில் ஓடுவதும் நீர்தான், குளத்தில் இருப்பதும் நீர்தான். சாக்கடை, குட்டையில் இருப்பதும் நீர்தான், ஆனால் முக்கியமான விடயம் எல்லாம் நீர்தான். நீரின் தரத்தை நிர்ணயிப்பது அது தேங்கி இருக்கும் நிலை அல்லது இடம்தான்.. அதுபோல் மனிதனின் தரத்தை அவர்கள் பேசும் வார்த்தைதான். நீங்கள் பேசும் வார்த்தைதான் உங்களின் வாழ்க்கைத் தரத்தை நிலை நிறுத்துகின்றது. நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று நீங்களே உங்களை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
நா. மகேசன்
கனடா.