By Kamal on Sept. 10, 2024
திருமதி சண்முகநாதன் புவனேஸ்வரி
தோற்றம்: 05.05.1935 மறைவு: 09.09.2024
பெருமளவு இடைக்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி சண்முகநாதன் புவனேஸ்வரி அவர்கள் 08/09/2024 ஞாயிற்றுக்கிழமை கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் இரண்டாவது மகளும் காலஞ்சென்ற சண்முகநாதனின் அன்பு மனைவியும் நடேசப்பெருமாள், கருணாமூர்த்தி(கிளி), கமலேஸ்வரன் கமலேஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரி, தவமணி பொன்னம்மா ஆகியோரின் சகோதரியும் அருந்ததி, தங்கமணி சரவணபவான், பராசக்தி மற்றும் காலஞ்சென்றவர்களான கந்தசாமி, மயில்வாகனம், குகதாசன் ஆகியோரின் மைத்துனியும் பாமினி (லண்டன்), சிவநாதன் (ஆசிரியர், யாழ்ப்பாணம்) சுபாஜினி சிவகுமார் (அதிபர் நீர்வேலி) சிவதர்ஷினி (பிரதேசசபை ஊழியர்,மல்லாவி) சியாம் (பொறியியலாளர் புத்தளம்) கௌதமி, பிரேமி (கனடா) மற்றும் காலஞ்சென்ற சிவாகரன் ஆகியோரின் மாமியும் சாந்தரூபி(ஜெர்மனி) மிதிலா(சுவிஸ்) குறிஞ்சி (ஆசிரியர் வட்டக்கச்சி) பார்த்திபன் (ஆசிரியர் மல்லாவி) முல்லை, செல்வன் மற்றும் காலஞ்சென்றவர்களான சந்திரன், சாந்தி, தங்கமணி ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 10.09.2024 அன்று அன்னாரின் இல்லத்தில் காலை நடைபெற்றது,
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கமல்: +1 514 7314 805 (Canada)
செல்வன்: +94 774 152 772 (Sri Lanka)